Search This Blog

Monday 18 February 2019

நூல் - காஷ்மீர்


நூலாயுதம்
நூல் - காஷ்மீர்
ஆசிரியர் - சந்திரன்
வெளியீடு - ஆழிப்பதிப்பகம்

காஷ்மீர் என்றவுடன் தமிழகத்து மக்களுக்கு 'என் தாய்திருநாட்டின் வாசல் இது காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்' எந்ற திரைப்படல்களே நினைவுக்கு வரும்.
சமூக செயல்பாட்டளர்களுக்கு - ஜனசங்கம் அமைப்பாக துவக்க காரணமாக பூமி என நினைவுகொள்வார்கள்.
வடநாட்டு அரசியல்வாதிகளுக்கு - காஷ்மீர் இல்லையென்றால் அரசியல் செய்திடவே என தங்களது குலதெய்வம் இருக்கும் இடமகாவே நினைப்பார்கள்.
காங்கிரஸ் கட்சிக்கு பெருத்த வரலாற்று காயத்தை ஏற்படுத்தியதாகவும், பாரதிய ஜனதாவைப் பொறுத்தமட்டில் காஷ்மீரை வைத்து தேசபக்தி என்ற போர்வையில் இந்துத்துவா வளர்த்து தனது வாக்கு வங்கியை சமப்படுத்த முயற்சிக்கும் இடம்.
காஷ்மீர் குறித்து சினிமாவில் பத்திரிக்கையில் ஒருபத்தி செய்தி படிப்பவர்கள் அது ஏதோ இசுலாமியர்கள் ஆக்கிரமித்த பகுதி என்றும் அங்கலாய்ப்பார்கள். இந்துவவாதிகளுக்கு ஏதோ இசுலாமியர்கள் ஆக்கிரமித்த பகுதி என்ற தோற்றத்தை நம்பியபடி இருப்பார்கள்.
இப்படிப்பட்ட பார்வைகள் இருந்தாலும், அந்த காஷ்மீரில் தான் முதன் முதலாக உழுபவனுக்கு நிலம் கொடுக்க சட்டம் கொண்டு வந்த பெருமைக்குறிய வரலாற்றை தக்கவைத்துள்ள பூமி.
 இப்படிப்பட பூமியில் ஏன் தினமும் துப்பாக்கி சத்தம் கேட்கிறதே இதற்கு உண்மையான காரணம் என்ன. ஒருவன் தனது நிலத்திற்காக உயிரை துறக்க உடல் உறுப்பை இழக்க துப்பாக்கி தூக்குறான் என்றால் அவனது பக்கம் நியாயம் இல்லாமலா இருக்குமா? இந்த கேள்விகளுக்கு ஆதிமுதல் அந்தம் வரை தரவுகளோடு சொல்லியுள்ளது நூல் காஷ்மீர்.
எழுத்தாளர் அக்பர் எழுதிய 'தீ காஷ்மீர்' என்ற நூலை வாசித்ததை விட அதிக தரவுகள் இருக்கிறது. மாமன்னன் அசோகர் காலத்திலிருந்து காஷ்மீரின் மூலவரலாறு சொல்லும் 10ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ராஜதரங்கனி. அதன் பின்  சீன மன்னரான கனிஷ்கர் அங்கு ஆட்சியை பிடித்தது. அதன் நீட்சி அடுத்து 12ஆம் நூற்றாண்டில் லடாக் பகுதியில் ஆண்ட பவுத்த மன்னன் ரிஞ்சித் காஷ்மீரை கைப்பற்றியது குறிப்பிடுகிறது இந்த நூல். மன்னர் ரிஞ்சித் வாழ்க்கையில் நடந்த நிகழ்வை குறிப்பிடும் நூல் ''இந்து மததற்கு மாற நினைத்து காஷ்மீர் பண்டிட்டுகளிடம் (பார்ப்பனர்கள்) ஆலோசனை கேட்டார் மன்னர். 'உன்னை இந்துவாக சேர்த்தால் எந்த குல (சாதி) மென அறிவிப்பது'' என பண்டிட்டுகள் கேட்டுள்ளனர். இதனால் கோபமான மன்னர் இசுலாத்திற்கு மாறினார். இந்தப்புள்ளியிலிருந்தே காஷ்மீரில் இசுலாத்தின் வளர்ச்சி துவங்கியது. அக்பர் காலம் தொட்டு ஜகாங்கீர் வரை காஷ்மீர் மன்னர்களின் காதல் தேசமாக இருந்தது. (ஷாலிமர் தோட்டம் உள்பட) இமயமலையில் பனி உருகி ஹரப்பா மொகஞ்சதுரா அழிந்ததோ அதைப்போல காஷ்மீர் டோக்ரா வம்சத்தவரான பஞ்சாப் மன்னர் ரஞ்சித்சிங் வசம் 1918 காலங்களில் போனதிலிருந்து  பனியை சுமந்த பூமிக்குள் நெருப்பு குழம்பு ஓடியது.
 காஷ்மீர் சிங்கம் என அழைக்கப்படும் சேக் அப்துல்லா மெத்தப்படித்தவர் காஷ்மீர் இசுலாமியர் என்பதால் சிவில் சர்வீர் தேர்வில் வெற்றிபெற்றும் பணிக்கிடைக்காத வெறுப்பு ''விடுதலை'' மனிராக்கியது (இவரது காம்பர்மைஸ் அரசியலும் அதிகம் உண்டு)
காஷ்மீர் தனிநாடு கோரிக்கைக்கைக்கு மய்யக் காரணம் நிலம் அனைத்தும் அரசின் சொத்தாக இருந்ததும், பெரும்பான்மை இசுலாமிய மக்கள் நெசவு தொழில் செய்து வந்ததும் ஒரு முக்கியக்காரணம். அவர்களுக்கு கூலி உயர்வு கொடுக்க மறுத்த மன்னர் ஹாரிசிங்கின் முடிவால் ஏற்பட்ட விளைவு தனிநாடு கோரிக்கை  வழுத்தது. இந்தக்கோரிக்கையின் போராட்டம் ரத்த வாடையை கொண்டு வந்தது. மன்னரை எதிக்கும் மக்களை, காஷ்மீரின் பூர்வ இசுலாமிய பழங்குடி மக்களான ''சுதான்'' என்ற குலத்தினரை மட்டும் மன்னரின் படையில் சேர்த்தனர். இவர்களைக்கொண்டு போராடும் மக்களை ஒடுக்கினார்கள். இதனால் போராடும் மக்களிடம் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தி, மக்கள் அனைவரும் துப்பாக்கி தூக்க காரணமாக அமைந்தும், காஷ்மீருக்கு சிறப்பு தகுதி (அந்தஸ்த்து) பெறவும் காரணமாக அமைந்தது.
இந்தியாவை ஒரே ஒன்றியமாக (யூனியன் கவர்மெண்ட்) அறிவிக்க மன்னர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது பிரிட்டீஷ் அரசு. இதை காஷ்மீர் மன்னர் அரசு எதிர்த்தது. மன்னர் மீதிருந்த கோபத்தில் பிரிட்டீஷாரின் கோரிக்கையை மக்கள் ஆதரித்தனர். இதன் விளைவு இந்தியா முழுவதிலும் ''வெள்ளையனே வெளியேறு' இயக்கம் நடந்தது போது காஷ்மீர் 'மன்னரை வெளியேற' இயக்கம் நடந்தது. இந்தியாவுக்கு சுதந்திரம் அறிவிக்கும் முன்னரே காஷ்மீருக்கு தனி சுதரந்திரம் கொடுக்கப்பட்டது. இந்த சுதந்தரமே சிக்கலை உண்டாகியது.
பாகிஸ்தான் தனது தனி தன்மையை காட்டி பிரிந்தனர். இதனால் பெரும்பான்மை இசுலாம் மக்கள் உள்ள காஷ்மீர் மக்கள் தனிநாடு என்றும் பாக்கிஸ்தான் பக்கம் போவதென்றும் குழம்பினர். (இக்குழப்பத்தை இந்தியாவும், அண்டை நாடுகளும் மறைமுகமாக ஆதரரித்தது) இந்த நேரத்தில் தான் பாக்கிஸ்தானுடன் இந்தியா யுத்தம். சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவு நீட்டியது.
சீனாவுக்கு காஷ்மீர் நிலத்தை பாகிஸ்தான் வழங்கியது. (இங்கு சீனாவின் ஆயிரத்தி முன்னூறு ஏக்கரில் உளவு தளம் இயங்குகிறது) இந்த நிலையிலே காஷ்மீர் விவகாரம் ஐக்கிய நாடுகள் சபைக்கு போனது. மக்களின் விருப்பம் அறிய வாக்கெடுப்பு நடத்த இந்தியா சவடால் விட்டது. இதனால் பெரும்பான்மை இந்து மக்களும், மன்னர் இசுலாமியராக உள்ள சுனேகரிலும் (சௌராஸ்டரம்  - குஜராத்), பெருபான்மை இசுலாமியர், இந்து மன்னர் உள்ள காஷ்மீரிலும் வாக்கெடுப்பு நடத்த இந்தியா ஒத்துக்கொண்டது. இங்கிருந்து தான் சிக்கலின் சமிக்கை துவக்கியது. இதன் காரணமாக ஜனசங்கம் பிறந்தது.
சுதந்தர இந்தியாவில் சேக் அப்துல்லா காஷ்மீரின் பிரதமரானர். (அங்கு பிரதமர் என்ற சொல்லே வழக்கமாக உள்ளது) நிலம் உழுபனுக்கு சொந்தம் என இவர் அறிவிக்க, இதை பவுத்த பிச்சுக்கள் ஜனசங்கம், காஷ்மீர் பண்டிட்டுகள் என அழைக்கப்படும் பார்ப்பனர்கள் இசுலாமிய ஜமீன்களான ஜாகீர்கள் எதிர்த்தனர். (மதவாதிகள் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதை உள்வாங்கிக்கொள்ள வேண்டும்)
பிரதமர் நேரு காலத்தில் சீன யுத்தம். (சீனா காஷ்மீரை கையப்படுத்த ஏற்பட்ட யுத்தம் என்றும், இந்தியாவில் பொதுவுடமை சித்தாந்தம் வளர்வதைத் தடுக்க பொதுவுடமை நாடான சீனாவுடன் யுத்தம் செய்வதன் மூலம் பொதுவுடமை வளர்ச்சியை இந்தியாவில் தடுக்க போட்ட திட்டம் என்ற விமர்சனமும் உண்டு). இந்த யுத்தத்தில் இந்தியாவுக்கு பலத்த அடி நேரு மறைந்தார். சாஸ்திரியும் இந்த விசயத்தில் பெரிய முடிவெடுக்கும் முன் அதே எல்லையிலே உயிரை நீர்த்தார். அடுத்து பிரதமராக வந்த திருமதி இந்திரா காந்தி காஷ்மீரை எப்படி கையாண்டார் அவரது காலத்தில் நிகழ்ந்த நிகழ்வான பிந்தரன்வாலே போல தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட ''மகப்பூர் பட்'' என்பவரை சிறையிலிருந்து தப்பவிட்டது. இந்திராவை எதிர்த்து உருவான ஜனதா கட்சியில் ஜனசங்கத்தினர் இணைந்தது. இக்கட்சிக்கு பொதுவுடமை கட்சியினரே ஆதரவு கொடுத்தது. இப்படியாக வளர்ந்த வளர்க்கப்பட்டது தீவிரவாத முகாம்கள்.
1989ல் ஆங்கிலம் ஏடுகள் படித்தவர்களுக்கு தெரிந்த செய்தி ''இல்லுஸ்டேட் வீக்கிலி'' பத்திரிக்கையின் நடுப்பக்கத்தில் பிணக்குவியலை பொக்லின் எந்திரம் மூலம் தள்ளுவது போலவும், ரத்தம் ஆறாக ஓடும் கட்சியை ஆயில் பிரிண்டில் பார்த்திருப்பார்கள். இந்தக் காட்சிக்கு சொந்தக்காரர் அங்கு கவர்ரனாக இருந்த புண்ணியவான் திரு. ஜக்மோகன் இ.ஆ..ப. இவர் பண்டிட்டுகளுக்கு தனிப்படை வைக்க அனுமதி கொடுத்து இசுலாமியர்களுக்கு எதிராகக் கிளப்பி விட்டார். இசுலாமியர்கள் இறைநாளான நாளில் ஆடு வெட்டு தடைபோட்டார். இதனால் சமூக இலக்கம் கெட்டது. பண்டிட்டுகள் தோட்டத்தில் வேலைப்பார்த்த இசுலாமியர்கள் எதிரிகளாக பார்கப்பட்டார்கள். இந்த சூழலை பிழையாக அல்லது மேதாவித்தனமாக திரு. ஜக்மோகனின் தன்னிச்சையான முடிவால் ஜக்மோகனும், ஜனசங்கமும் சேர்ந்து 1.5 லட்சம் பண்டிட் பார்ப்பனர்களை அகதிகள் முகாமில் அடைத்தனர். பின்னர் இவரே இவர்களை நாடுதிருப்ப அழைத்தார். சொந்த நிலத்தை விட்டு வெளியேறிய பண்டிட்டுகள் தோட்டத்தை எதிரியகளான சித்தரிக்கப்பட்ட இசுலாமியர்கள் சீந்திக்கூட பார்க்கவில்லை.
ஜக்மோகன் காலத்தில் தான் நபிகளின் முடி இருப்பதாக நம்பப்படும் ''ஹசரத்பால்'' இறைத்தளத்தில் இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கை இசுலாமியர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்து  - இசுலாமியர் என்ற கீரல் விழுந்த இடம் இந்த மயிர் பிரச்சனை என்றே சொல்லலாம். 
இப்படியாக அதிகாரிகள் அரசியல்வாதிகள் கையால்வதில் ஏற்பட்ட சிக்கல், மனித உடல்கூறு சிக்கல் போல காஷ்மீர் மாறியது.
 1990 அரசு படைகளால் காஷ்மீர் நூலகம் தீக்கரையாக்கப்பட்டது, பெண்களை கற்பழித்தது (விசாரணிய குழுவின் நிருபனம் ஆனவை) அரசு மருத்துவரை சுட்டு கொன்றது,(மருத்துவரின் நினைவுத்தூணில் போலீஸ்தான் இவரைக்கொன்றது என பொறித்துள்ளனர்) சோக்பூர் நகரத்தையே தீ வைத்து எறியும் வரை காவல்காத்தது. இவைகளெல்லாம் சர்வதேச மனித உரிமை ஆணையம் (இன்டர் நேசனல் அம்னிட்டி செண்டர்) அம்பலப்படுத்தியது. (இலங்கையில் உள்ள ஈழத்தில் கூட இப்படித்தான் நடந்தது என்ன நடந்து விட்டது)
இப்படியாக வரலாற்றின் போக்கில் ஐ.ஜெ குஜரால், அடுத்து பாஜவின் பெருமிதமான ? கார்க்கில் யுத்தம் வரை அனைத்து செய்திகளையும் உள்ளடக்கி பாகிஸ்தான் இந்தியா காஷ்மீர் என்ற மூக்கோணத்தை கையால்வது எப்படி என்ற தீர்வை மட்டும் நூலாசிரியர் சொல்லாமல் நழுவியுள்ளார். மொத்தத்தில் காஷ்மீர் குறித்து ஆங்கிலத்தில் வந்த நூல்களைவிட தமிழில் சிறந்த நூல் வந்துள்ளது என நம்புகிறேன். 

Wednesday 13 February 2019

எனது (பெருங்கதை) சுளுந்தீ கதை குறித்தும் தினமணி சென்னை பதிப்பில் வந்த செய்தி. தினமணி மற்றும் நூல் குறித்து குறிப்பிட்ட சுப்பிரபாரதி மணியன் அவர்களுக்கும் நன்றி
Image may contain: 1 person, text

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...