Search This Blog

Monday 23 May 2022

நூல்; இந்திய சினிமாவில் முஸ்லீம்கள்

 

                                                 நூலதிகாரம்

நூல்; இந்திய சினிமாவில் முஸ்லீம்கள்

ஆசிரியர்; அப்சல்

பதிக்கம்; கோதை

விலை;250

தொடர்பு எண்; 978939247137 

தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் இறந்த 1988 ஆண்டு ‘நாளை மறுநாள் மதுரையில் திராவிடர் கழகத்தின் சார்பாக இடஒதுக்கீட்டு ஆதரவாக ஆர்ப்பாட்டம் தோழர்கள் கலந்து கொள்ள வேண்டும்’ என மதுரை யாதவர் கல்லூரி முதல்வரான மறைந்த அமைச்சர் தமிழ்குடிமகன் அறிவிக்கிறார். முதல்வரே அறிவித்த பின்னர் கல்லூரிக்கு கட் அடித்து விட்டு வடக்குமாசி வீதி சந்திப்பில் நடக்கும் ஆர்பாட்டத்திற்கு பலரும் கலந்தார்கள். போனப்பின்னால் தான் தெரிந்தது ‘ஒரே ஒரு கிராமத்திலே’ என்ற சினிமாவில் இட ஒதுக்கீட்டை எதிர்த்து இழிவாக கதை அமைத்துள்ளார்கள் ஆகவே இந்த திரைப்படம் வெளியிட்டுள்ள தியேட்டரை முற்றுகை இடுவோம்’’ என திராவிட கழகத்தோழர் வரதராசன் அவர்களும் மதுரை யாதவர் கல்லூரி பேராசிரியர் இ.கே. இராமசாமி ஐயா உள்பட பல தோழர்கள் பேசினார்கள். இளைஞர்களுக்கு சொல்லவா வேண்டும் ஆர்பாட்டம் என்ற பெயரில் அந்த திரையரங்கில் கல்லெறிந்தார்கள். டிக்கட் கொடுக்கவே இல்லை. படம் திரைப்படவில்லை. 


இப்படத்தை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. பின்னர் அப்படம் ரிலீஸ் ஆனதா எனக்கூட தெரியாது. ஆனால் அப்படத்திற்கு ஜனதிபதி வெங்கட்டராமன் அவர்கள் தேசிய விருது வழங்கினார்கள். இந்த படத்தின் கதை வசனம் திராவிட கவியாக திராவிட சிசுவாக முன்னால் முதல்வர் அமரர் கலைஞர் அவர்களால் கொண்டாடப்பட்ட கவிஞர் வாலி அவர்கள். இந்த படத்திற்கு முதலீடு போட்டவர் இந்து குழும முதலாளி ரங்கராசன்.

 

அதன் பின்னர் மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் திடமான முடிவால் 69 விழுக்காடு இடஒதுக்கீடு வரை சட்ட வரையரை கிடைத்தது. நீண்ட இடவெளிக்கு பின்னர் எழுத்துலக பிதாமகன்கள் எனக்கொண்டாடப்படும் பாலகுமாரன் எழுத்தில் வந்த ‘ஜெண்டில் மேன்’ என்ற படம் ஒரே ஒரு கிராமத்திலே என்ன கருவோ அதே கருவை வைத்து படம் எடுத்தார்கள். எங்களுக்கு வயதாகி ? கருத்தியலாக இயங்கவில்லையா எனத்தெரியவில்லை திராவிடர் கழக ஏடு மட்டும் கண்டித்து எழுதியது. அப்படம் திரையில் ஜோலித்தது. இப்படத்திற்கு டெல்லியில் பாரட்டு விழா தலைமை அப்போதைய எலெக்சன் கமிஷனராக இருந்தவரும் கொலை வழக்கில் காஞ்சி மடத்தின் சங்கராச்சாரியார் கைது ஆன போது உண்ணாவிரதப்போராட்டத்தில் கலந்துகொண்ட டி.என். சேஷன் தலைமையில் நடந்தது.

இலங்கை தமிழகளுக்காக மதுரையில் நடந்த போராட்டத்தில் தமிழ் குடிமகன் தலைமையில் நடந்த போராட்டத்தில் பேருந்தை எரியூட்டப்பட்டது. பலரும் கைதானார்கள். தேசிய கொடிகளை மாணவர்கள் எரித்தார்கள். 

இந்தி எழுத்துக்களை தார்பூசி அழிக்கும் போராட்டத்தில் தி.க தோழர்கள் கலந்து சிறை சென்றார்கள். ஆனால் அதே காலத்தில் இந்தி படங்கள் தமிழகத்தில் எங்கும் ஓடியது. இந்தியை தார்பூசி அழித்தவர்கள் இந்தி சினிமாவவை கலையாக நினைத்தார்களோ என்னவோ முரண்பாடான கருத்தாக இருந்தாலும் அப்படங்களை பார்த்து ரசித்தார்கள் என்பதே உண்மை. இதைப்புரிந்து கொண்ட மைய அரசு சினிமாவை வைத்து இந்தியை திணிக்க நினைத்து நடிகர் கமலகாஹசனை இந்தி படங்களில் நடிக்க வைத்து தமிழகத்தில் திரையிட்டார்கள். என்ன நடந்தோ இவரின் உயிருக்கு ஆபத்து என பொய் பிரச்சாரம் செய்தனர். 

ஆனால் திராவிடர் கழகம் தொடர்ந்து சினிமா மூலம் இந்தியை திணிக்கிறார்கள் என ஆர்பாட்டம் தெருமுனை பிராச்சாரங்களை நடத்தியது. தமிழியக்கத்தினரும் தனித்தமிழ் நாடு கேட்ட தோழர்களின் வைராக்கிய சினத்தால் அரசு இந்த திட்டத்தை கைவிட்டது என்றே சொல்ல வேண்டும். தமிழகத்தின் உள்ள இருமொழிக்கொள்கையால் என்பது அடுத்த பார்வை. சினிமா என்ற ஆயுத்ததை வெங்காயம் வெட்ட பயன்படுத்தாமல் வெங்காயம் விற்க பயன்படுத்த முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு அணிகலன், ஆடை, அலங்காரபொருள்களான சோப்பு போன்ற கேனத்தனமான பொருள்களை அறிவியலாக விற்க முடியும் என கண்டறிந்து தான் சினிமா திரையரங்குகளில் பெண்களுக்கு குறைந்த விலையில் டிக்கெட் கொடுத்தார்கள் என்பது சமூகத்தை கூர்ந்துபார்க்கும் அரசியல் பார்வையாளர்கள் தொடந்து சொல்லும் அறிவியல் பூர்வான மதிப்பீடு. 

 

இதே காலகட்டத்தில் தனித்தமிழ் நாட்டு கேட்டுப்போராடிய தோழர்கள் இலங்கையில் தமிழர்களை இழிவு படுத்தும் அரசுக்கு மைய அரசு துணைபோகிறது என்பதை அரசுக்கு அறிவுறுத்த இன உணர்வை வெளிக்காட்ட கொடைக்கானல் வானொலி நிலைய கோபுரத்தில் குண்டு வைக்க சென்ற போது இறந்தார்கள். பலர் கைது செய்யப்பட்டனர். இந்த குண்டு வெடிப்புடன் இந்தி சினிமா தமிழகத்தில் ஓடியது இன்று வரை காலடி வைக்கவில்லை. ஆனால் இந்தியை பள்ளிகளின் கொண்டு வந்தார்கள் என்பதே அவர்களின் வெற்றி. இப்படியான செய்திகளெல்லாம் நினைவில் உள்ள செய்திகளிய நூலாக படிக்கும் போது எப்படி இருக்கும். நூலுடன் ஒன்றிவிடுவார்கள் அதுவே எனக்கும் நடந்தது.

பாரசீக மொழியின் இந்திய வடிவமான உருது மொழி இசுலாம் மார்க்கத்தின் ஆழ்வார்கள் எனக்ருத்தப்படும் சூஃப்பிகள், ஆவுலியாக்கள், ஃப்பகீர்கள் மூலம் இந்திய கலைக்கு வாரி வழங்கிய கொடை குவாலியா, கஜல், இதை விட முக்கியமானது ‘ஆர்மோனியம்’, ரிபெல் நடனம் என பட்டியல் போடலாம். உருது மொழி கலந்த மொழியான இந்துஸ்தானியை திரு.காந்தியார் அவர்கள் இந்தியாவின் மொழியாக இருக்க வேண்டும் விரும்பினார்.

வட இந்திய வரலாற்றில் 10ம் நூற்றாண்டு முன்பிருந்தே மொகலாயர்கள் ஆண்ட வரலாறு நெடுக உள்ளது. இந்த இனத்தை ஒரு கொடூரனாக காட்டியது சினிமா அதுவும் தமிழகத்தில் பிறந்த மணிரத்தனம்தான். இவரது இனத்தை சார்ந்தவர்களால் மட்டுமே தமிழர்கள் பிற கோட்பாட்டாளர்களை (மதம்) இழிவாக சித்தரிக்க முடியும் என்பதற்கு கமலஹாசனின் இறுதி காலப்படங்களான விஸ்பரூபங்கள். சினிமா சொல்லுவதை மக்கள் நம்பி விடுவார்களா ? என்ற ஐயப்பாடு இருக்கலாம். இது அறிவியலற்ற ஐயப்பாடு என்றே சொல்ல வேண்டும் கதை எழுதும் கதையாசிரியர்கள் சொல்லுவதை தத்துவமாக கோட்பாடாக நம்பும் வாசிப்பு தளம் உள்ளபோது சினிமா என்ற கதைசொல்லிகள் ஒரு கருத்துவாக்கத்தை உருவாக்க முடியும் முடிந்தது என்பது வரலாறு என்பதை நூலில் மெய்பித்துள்ளார் நூல் ஆசிரியர்.

ஒவ்வொரு நடிகனும் என்படி இந்து மதக் கோட்பாட்டுக்கு வெளியே சிந்தித்து படத்தில் நடித்தார்கள் பின்னர் ஏன் மாறினார்கள் மாறுகிறார்கள் என்பதற்கு நடிகர் திரு.விஜயகாந்த் அவர்கள் படங்களை மேற்கோள் காட்டுகிறார். ரோஜா திரைப்படம் இசுலாமியர்களை தவறாக பார்க்க வைத்த படம் என்பதை பல பக்கங்களில் வாதமாக வைத்து வாசகனை நேர்மையாக சிந்திக்க வைக்கிறது இந்த நூல்.

பல அரசியல் செய்திகள் திரைகதைக்காக எப்படியெல்லாம் மாற்றி திரித்தனர் இதனால் மக்களிடன் ஏற்பட்ட விளைவுகள் என்ன மாதிரியாக உள்ளது சமூக இயங்குதளத்தின் நாடியை தொட்டு பட்டியல் போடுகிறது நூல்.

தென் தமிழகத்தில் சாதி மோதல்கள் நடந்தபோது எழுத்தாளர்கள் மூலம் பிற்படுத்தப்பட்டோர் ஒடுக்கப்பட்டோர் கூட்டமைப்பை உருவாக்கினார்கள். அது போல பாபரி மஜூத் இடித்து தரைமட்டமாக்கப்பட்டபோது கமலஹாசன் இந்து ஆங்கிலப்பத்திரிக்கை திரு இராம், ஆற்காடு நாவாப்களின் வாரிசுகள் சேர்ந்து 'ஆர்மோனியம்' என்ற அமைப்பை நடத்தினார்கள். இப்படியாக நினைவில் தப்பிய செய்திகளை குறிப்பிட்டு இப்படிப்பட்ட கமலஹாசன் தான் விஸ்பரூபங்களும், குருதி புனலும் எடுத்து இந்து தேசத்தின் கட்டுமான தூண்களாக காட்டிய சங்பரிவாராக மாறிவிட்டனர்.

தற்போது வெளிவரும் படங்களில் 'தேவர்' என்ற கேரைக்டர் அதில் பெரிய மீசை இரண்டு அடியாள் முன்னும் பின்னும் என காட்சிகள் வருவது போல 90 காலங்களில் கற்பழிப்பு கொலை காட்சிகளுக்கு இசுலாமிய பாத்திரங்களை காட்டி மக்களது மனதை கெடுத்துள்ளனர். என்பதற்கு எடுத்துக்காட்டாக ‘சிலிப்பர் செல்’ என்ற சொல் கூட சினிமா மூலமே பாப்புலர் ஆனது என்கிறது இந்த நூல்.                

இந்திய சினிமா என்ற தலைப்பை மட்டும் கொடுத்து விட்டு வட இந்தி படங்களை மட்டுமே சொல்லியுள்ளார் ஆசிரியர். முப்பதற்கு மேல்பட்ட மாநிலங்களில் உள்ள மொழிகளில் இசுலாமியர்களின் பங்கு என்ன என குறிப்பிட வில்லை என்பது நூலில் பெருங்குறை. இதை முழுமைப்படுத்தி இருந்தால் களஞ்சியமாக உள்ள இந்த நூல் இந்திய திரைக்களஞ்சியமாக மாறியிருக்கும். 

'காஷ்மீர் பண்டிட்டுகளை இசுலாமியர்கள் அடித்து விரட்டினார்கள்' என்ற பொய்யான குற்றச்சாட்டை பல நூல்கள் சான்றுகளுடன் சொல்லியும் தவறான பரப்புரையை சங்பரிவார்கள் தொடர்ந்து பரப்பி வருவதற்கு தமிழகத்தில் தினமலர் போன்ற நாளிதழ்கள் தூபம் போடுகிறது. இவை குறித்த மெய்யான படங்கள் எவை. காஷ்மீர் மக்கள் ஏன் தீவிர போக்கை கையில் எடுக்கிறார்கள் என்ற உண்மை தன்மையை சொல்லும் படங்களை சுட்டிக்காட்டுகிறது நூல். 'ஓ மை காட் (o my god)' என்ற பகுத்தறிவு சினிமா போன்ற படம் ஏன் தமிழில் வரவில்லை என குட்டும் வைக்கிறார் நூலாசிரியர். தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியிலும் 1980 வரை இசுலாமிய பெண்கள் ஆண்கள் சினிமாவிற்குள் வந்தாலும் இந்து பெயர்களிலில் தான் நூழைய முடியும் என்ற பட்டியலில் திலிப்குமார், மதுபாலா உள்பட தமிழக கலைஞர்கள் பலரை பட்டியல் போட்டு இது முடிவிற்கு வந்தது அமிர்கான் சல்மான்கான் போன்ற கான் களால் என பதிவிட்டுள்ளது நூலாசிரியரின் ஆழ்ந்த பார்வையை பாராட்டித்தான் ஆகவேண்டும்.

இவையெல்லாம் தாண்டி உருது மொழியின் இசை கவிதை வடிவமே இந்தி சினிமாவில் பல்லாண்டுகாலம் ஆட்சி செய்தது. இதனை காலி செய்து விட்டார்கள். இந்தி மொழியினை இந்திய ஒன்றியம் முழுவதும் கொண்டு வர தடையாக இருப்பது உருது என்பதை போகிற போக்கில் எழுதியுள்ளதையும் திரு. காந்தியாரின் மொழிக்கொள்கையும் நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டியதாக உள்ளது. மகாபாரத தொடருக்கு வசனம் எழுதியவர் பேராசிரியர் ராஹி மாஸிம் ரெஸா அவர்கள் என்ற செய்தி முக்கியமானது. இது தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் அப்போது வந்தது என்பது இன்றைய தலைமுறைக்கு கட்டுரைகளில் தான் வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

சீலம் நதிக்கரையே இந்திய ஒன்றியத்தையும் பாகிஸ்தானையும் பிரிக்கிறது. பாகிஸ்தான் பிரிவினை எப்படியெல்லாம் இசுலாமிலாமியர்களை பந்தாடியது என்ற செய்திகள் இதனை வைத்து கேலி கிண்லாக எடுத்த படங்கள் மூலம் இசுலாமியர்களை சீண்டிப்பார்த்தது போன்ற செய்திகள். 'இந்திய ஒன்றியத்திலுள்ள இசுலாமியர்களும் இந்துக்களும் குடும்ப சண்டை தினமும் வரும் ஆனால் எளிதாகப் பிரியமாட்டார்கள்’ என ஓசோ சொல்லுவதை குறிப்பிடும் நூல் தலாக் விசயத்தை மையமாக வைத்து 1982 வந்த இந்தி திரைபடத்தை குறை சொல்லியுள்ளது. ஆனால் சங்பரிவார் ஆட்சியில் கொண்டு வந்த தலாக் சட்டத்தை இசுலாமிய பெண்கள் பெரும்பான்மையோர் ஆதரித்ததன் விளைவாகவே வட இந்திய ஒன்றிய மாநிலங்களின் சங்பரிவார் ஆதரவு பெற்ற பா.ஜா வெற்றி பெற்றது என்ற பார்வையை மறுதளிக்க முடியவில்லை.

இந்து முஸ்லீம் சண்டையின் குறியீடாக இருப்பது பாபரி மஹூத். இந்த செய்தி முடிவுக்கு வந்தாலும் ‘1855 உ.பியில்  அவத் என்ற நிலப்பரப்பில் வாஹித் அலி ஷா என்ற மன்னன் ஆட்சி செய்கிறான். இவன் ஜியா பிரிவினை சேர்ந்தவன். இவரது ஆட்சிக்கு ஆதரவு கொடுப்பவர்கள் வைவணத்தை ஏற்றுக்கொண்ட மக்கள். இவர்கள் பாபரி மஜித் அமைந்த இடத்திற்கு நேர் எதிரில் இருந்த தர்ஹாவை கோயில் இருந்த இடம். அதை இடித்து அங்கு அனுமன் கோயில் கட்டிக்கொடுக்க சொல்லுகிறார்கள். மன்னரும் இடித்து கட்டிக்கொடுக்கிறான். இதனால் ஆத்திரம் கொண்ட சன்னி இசுலாமியர்களின் மதத்தலைவர் மௌலானா ஜிகாத் போர் அறிவிக்கிறார். வைணவர்கள் சன்னி இசுலாமியர்கள் இருதரப்பிலும் 150 பேர் சண்டையில் மாண்டனர். இந்த விவகாரத்தை எப்படி பார்ப்பது என்ற போன்ற வரலாற்று செய்திகளை சினிமாவிற்குள் எப்படி திரித்து கையாண்டார்கள் என்ற கேள்வியை வைக்கிறார் நூலாசிரியர்.

பல அரண்மனை மன்னர் வாரிசுகள் நடிகையாக நடிகராக வந்துள்ளனர். இந்தியில் முக்கியமான செய்தி பாகிஸ்தான், இந்திய ஒன்றியம் பிரிந்த போது சுனேகத் என்ற பகுதி காஷ்மீரும் இந்திய ஒன்றியத்தில் இருப்பதா வேண்டாமா என வாக்கு எடுப்பு நடத்த திட்டமிட்டார்கள். இதில் சுனேகத் பக்தியை 12ம் நூற்றாண்டு முதல் ஆண்டு வந்தவர்கள் இசுலாமியர்கள். மக்கள் பெரும்பான்மை இந்துக்கள். இதனால் அங்கு வாக்கெடுப்பு நடத்தினார்கள். காஷ்மீர் இன்றுவரை ? . இங்கு இதுவல்ல செய்தி. சுனேகத் மன்னரின் வாரிசு பர்வீன். அவர் பிரபலமான நடிகையாக இருந்தார் என்பதே செய்திகளுடன் மணிரத்னம் துவக்கி வைத்த இசுலாம் எதிர்ப்பு கருவாகி இன்று வரை தொடர்கிறது என்பதை தெளிவாக பதிவு செய்த நூல்.              

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...