Search This Blog

Showing posts with label சமூகம் அரசியல். Show all posts
Showing posts with label சமூகம் அரசியல். Show all posts

Friday, 12 November 2021

ஜெய் பீம் சொல்லுவது என்ன?


 

                                     ஜெய் பீம் சொல்லுவது என்ன?
 
                      (இந்துதமிழில் வந்த கட்டுரை Published : 09 Nov 2021 03:08 am)


பழங்குடி இருளர் மக்களின் அவலத்தைச் சொன்ன ‘ஜெய் பீம்’ திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இக்கதைபோல் பல நூறு விளிம்புநிலைக் குழுக்கள் சமூகச் சட்டங்களாலும், அரசின் அலட்சியத்தாலும் அன்றாடம் பந்தாடப்படுவது நிதர்சனம். இம்மக்களின் கோரிக்கைகளைச் சட்டமன்றத்தில் ஒலித்திட முடியாத நிலையிலே இவர்களின் மக்கள்தொகை உள்ளது.

தமிழகத்தில் சொற்ப எண்ணிக்கையில் உள்ள ஆங்கிலோ-இந்தியர்களுக்கு வழங்கப்படும் சட்டமன்ற நியமனப் பிரதிநிதித்துவம்போல் இந்தக் குழுக்களுக்கும் கொடுத்திட சட்ட வழிவகை செய்திட வேண்டிய காலக் கட்டாயத்தை ‘ஜெய் பீம்’ திரைப்படம் வலியுறுத்துவதாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
 
 
 ‘பல்லாண்டு காலமாக எஸ்.சி./ எஸ்.டி. ஒதுக்கீடு உள்ளது. இதன் மூலம் பிரதிநிதித்துவம் பெறுகிறார்களே’ என்ற பதில் போதுமானதாக இல்லை என்பதற்கு ‘ஜெய் பீம்’ திரைப்படம் மூலம் நடக்கும் விவாதமே சாட்சி.
மேற்குத்தொடர்ச்சி மலையில் வாழும் பளியர், முதுவர், காடர், மலசர், இரவாளர், மலை மலைசர், காணி போன்ற சாதியினர் அரசின் கணக்குப்படி 25 ஆயிரம் பேர்தான். இவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்வதால் பஞ்சாயத்தில் வார்டு உறுப்பினர் பதவிக்குக்கூட போட்டியிட முடியாத நிலை. இந்தச் சாதியினருக்கான ஒதுக்கீடுகூட நிரப்பப்படாமல் விடுபட்டதற்கான பதிவுகள் உள்ளன. கோத்தர், குறும்பர், இருளர், பனியர், வேட்டுவநாயகர், சேலம் மாவட்டத்தில் ஊராளி, சோளகர் போன்ற குழுக்கள் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களாகவும், இரண்டு பஞ்சாயத்துகளில் பஞ்சாயத்துத் தலைவர்களாகவும் மட்டுமே வந்துள்ளனர். அதுவும் இவர்கள் ஒரு இடத்தில் மொத்தமாக வாழ்வதால் கிடைத்தது. தரைப் பகுதியில் குறவர், நாவிதர், வண்ணார், பூப்பண்டாரம், வில்லியர் என்ற இருளர், காட்டுநாயக்கர், ஜோகி, தொம்பர், ஒட்டார், புதிரை வண்ணார் போன்றோர் பஞ்சாயத்து உறுப்பினர் பதவியை எந்தத் தலைமுறையிலும் பெற முடியாத நிலையில் அங்கொருவரும் இங்கொருவருமாக வாழ்கின்றனர்.

சேலம் மாவட்டத்தில் மலையாளி சாதியினர் பெரும்பான்மையாக இருப்பதால் இவர்கள் மட்டுமே சட்டமன்ற உறுப்பினர் பிரதிநிதித்துவத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்கிறார்கள். இதே போல் மீனவக் குழுக்களில் பட்டினவர், பரதவர் சாதியினர் பரவலாக உள்ளதால் இவர்களும் தொடர்ந்து சட்டமன்றத்தில் கால்பதித்துவருகிறார்கள். ஆனால், கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள கடற்கரையில் முக்குவர், கடையர் போன்ற மீனவர்கள் சொற்ப எண்ணிக்கையில் சிதறிக்கிடப்பதால் இவர்களுக்கான பிரதிநிதித்துவம் கனவில்கூடக் காண இயலாத ஒன்று. இதில் விதிவிலக்காக காமராசர் ஆட்சியில் முக்குவர் சமூகத்தைச் சேர்ந்த லூர்தம்மாள் சைமன் மீன்வளத் துறை அமைச்சராக இருந்தார்.

‘‘வாகனப் போக்குவரத்து குறைவாக இருந்த காலத்தில் மீன்பிடித் தொழில் என்பது கருவாட்டுக்கு மட்டுமே. பவளம், சங்கு, பாசி, கடல் நுரை, சிப்பி போன்றவை சித்த மருத்துவத்தில் ரத்த அழுத்தம், சன்னி, விடாத காய்ச்சல், குளிர் காய்ச்சல் போன்றவற்றுக்கு மருந்துகளாகப் பெரிய அளவில் பயன்பட்டன. சேங்கொட்டை மரம் கடல் பரப்பிலும் தீவுகளுக்குள்ளும் வளர்வதால் இதன் கொட்டைகளைச் சேகரித்து, மருத்துவத்துக்கும் சாயம் ஏற்றவும் பயன்படும் வகையில் விற்றுவந்தனர். சங்கு வளையல் செய்தும், பவளம் போன்றவை மாலையாக அழகு சாதனமாகவும் பயன் பட்டவை. இவற்றையெல்லாம் தடைசெய்ததால் கடல் என்பது மீன்பிடித்தலுக்கு மட்டுமே என்று மாறிவிட்டது. 

தமிழ்நாட்டுக் கடல் எல்லை சிக்கலைத் தீர்ப்பதற்கு அரசிடம் தீர்க்கமான செயல்திட்டம் இல்லை. எங்கள் கோரிக்கைகளைப் பேசும் சட்டமன்றப் பிரதிநிதிகள் மீன்கள் தொடர்பாக மட்டுமே பேசுகிறார்களே தவிர, கடல் வளம் சார்ந்த கோரிக்கைகள் குறித்து இதுநாள் வரையில் யாரும் பேசவில்லை’’ என்று மீனவர்கள் கொதிப்புடன் பேசுகிறார்கள்.

‘‘மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள நாவிதர், சலவைத் தொழிலாளர்கள்,எஸ்.சி பட்டியயலில் உள்ள புதிரை வண்ணார், போன்றோரைப் பொதுச் சமூகம் கீழ்நிலையில் வைத்தே பார்க்கிறது. இவர்களின் கோரிக்கை, தனி ஒதுக்கீடு அல்லது உள் ஒதுக்கீடுதான். நகரங்களில் அமைந்துள்ள உயர்தர அழகு நிலையங்களில் நாவிதர்களும், புதிரை வண்ணார்களுமே பெரும்பான்மையாகப் பணியில் உள்ளார்கள். ஆனால், அவற்றின் உரிமையாளர்களில் பெரும்பாலானோர் முன்னேறிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள். இத்தொழில் மீது சுமத்தப்படும் சமூக இழிவைக் கடை உரிமையாளர் சுமப்பதில்லை. இது போலவே சலவைக் கடைகள். இவர்கள் மேல் சுமத்தப்பட்ட இழிநிலையைப் போக்குவதற்காகச் சட்டமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டிய மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து சென்ற பிரதிநிதிகள் குரல் எழுப்பவில்லை’’ என்ற இம்மக்களின் ஆதங்கம் கூர்ந்து கவனிக்க வேண்டியதாக உள்ளது.

“வன நில உரிமை அங்கீகாரச் சட்டம்-2006-ன்படி வனத்தைச் சார்ந்த மக்களுக்கு வழங்க வேண்டிய 10 ஏக்கர் நிலம், மேய்ச்சல் தரிசு, குடியிருப்பு, வனத்தினுள் விளையும் சிறு மகசூல்களை அனுபவிக்கும் உரிமை, மருத்துவ மூலிகை சேகரிக்க போன்றவற்றிக்கு வரையறுத்துக் கொடுக்க வேண்டிய அரசு இன்றுவரை வழங்கவில்லை. ஆனால், இம்மக்களைக் காட்டை விட்டு வெளியேற்றும் முகாந்திரமாக வனத் துறை, காவல்துறையினர் ஏற்படுத்தும் நெருக்கடியால் காட்டுக்குள் வாழும் இம்மக்களின் வாழ்க்கை மிகுந்த போராட்டமாக மாறிவிட்டது. குறிப்பாக சொன்னால் இவர்கள் காட்டுக்குள் வாழும் மிருககாட்சி சாலையில் வசிக்கும் காட்சிபொருள் மனிதர்களாக்கி விட்டதால் இவர்களின் மக்கள்தொகை நாளுக்கு நாள் குறைந்து வருவது இதற்குச் சான்று. இவர்களது வேதனையைக் வெளிப்படுத்தும் வகையில் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்களின் குரல் இல்லை’’ என்பது பழங்குடி மக்களின் அழுகுரல்.

வியாபாரக் குழுக்களாக இருந்த குறவர் சமூகம் குற்றப்பரம்பரை சட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்டதால் அவர்களில் கணிசமானோர் பல மாவட்டங்களில் மலம் அள்ளும் துப்புரவுத் தொழிலாளர்களாக உள்ளனர்.
விளிம்புநிலை மக்களின் உணர்வுகளையும் சமூகத் தேவைகளையும் அந்தந்தப் பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் பேசுவதற்கு நியமன உறுப்பினர்களை நியமிக்கப் புதிய சட்டம் கொண்டுவர வேண்டிய காலத் தேவை இருப்பதை இந்த அரசு புரிந்துகொண்டு செயல்படும் என்று நம்புவோம்.
 
 
இரா.முத்துநாகு, ‘சுளுந்தீ’ நாவலின் ஆசிரியர்.

Sunday, 7 June 2020

பொதுவுடமை சிந்தனையை அழிப்பதே இலக்கு




                            பொதுவுடமை சிந்தனையை அழிப்பதே இலக்கு
********************************************************************************
வணக்கம் நண்பர்களே தோழர்களே, 
எழுத்தாளர் சூரியதீபன் என்ற செயப்பிரகாசம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் என்பவர் தனது வலை பக்கத்தில் எழுதிய கட்டுரை குறித்து கண்டணம், கிண்டல் பதிவுகளும் எதிர்ப்பு குரல்களும், ஆதரவு குரல்களும் வந்துள்ளது. ஜெயமோகன் என்பவர் எழுதியுள்ளதின் சாரம் ''அரசுப்பணியில் உள்ளவர் எப்படி தீவிர பொதுவுடமை சிந்தையாளராக இருக்கலாம். இருந்தவர்கள் ஏன் சட்டப்பிடியில் சிக்கவில்லை'' என்பதே.

பொதுவுடமை கொள்கைகளை முதன்மையாக வைத்து ஆயுதம் மூலம் அரசினை கட்டமைக்க ''நக்சல்பாரி'' என்ற இடத்தில் கூடியதால் அவர்களை ''நக்சலைட்'' என  அரசின் மைய எந்திரமான காவல் மற்றும் உள்துறை உயர் அலுவர்கள் பெயர் வைத்தனர். பொதுவுடமையை ஏற்றவர்களை,  தீவிர, கொஞ்சம், பரவாயில்லாத, சுமார் பொதுவுடமைவாதி வலது இடது என்பதெல்லாம் என்ன மொழி எனப்புரியவில்லை.

''சீன நாட்டில் பொதுவுடமை ஆக்கத்தின் தலைவனாக மாவோவின் பெயரில் இந்தி ஒன்றியத்தில் இயக்கும் அமைப்பின் ஆதரவாளர், தடை செய்யப்பட்ட இந்த அமைப்புடன் தொடர்பில் இருந்தார்'' என்ற குற்றத்திற்காக பேராசியரியர் ஆனந்த் டெல்டும்டே மே 2020ல் கைது செய்யப்பட்டார். ஆனந்த் டெல்டும்டே கைது செய்யப்பட்டதன் காரணம் என்ன என பொதுவெளியில் விவாதிக்கவே யாரும் தயாராக இல்லை. இந்தியாவில் வெளிவரும் ஆங்கில தினசரிகள், ஒரு சில வார இதழ்கள் தவிர தமிழ் பத்திரிக்கைகளில் ஒரு பத்தி செய்தியாக வெளியிட்டது. பாரளுமன்ற வாக்கு அரசியலை ஏற்ற பொதுவுடமை கட்சிக்களும் இது குறித்த விவாதத்தை பெரிதாக முன்னெடுக்காததை எளிதாக கடந்து விட இயலாது. இலக்கியம், அரசியல், சமூகம் சார்ந்து இயக்கும் அமைப்புகளே இது குறித்து பேசியும், எழுதியும் வருகிறது. 

 

எழுத்தாளர் ஜெயமோகன் என்பவர் ''பொதுவுடமை சிந்தனையாளரான சூரியதீபன் என்ற செயப்பிரகாசம் அரசுப்பணியில் எப்படி சேர்ந்தார் ? ஓய்வு பெரும் வரை பொதுவுடமை சிந்தனையாளரான அதுவும் தீவிர பொதுவுடமை சிந்தனையாளரான ஏன் காவல்துறையின் மூலையான உளவுப்பிரிவுக்கு தெரியாமல் போனது?. அவர் அரசிடம் ஓய்வு ஊதியம் பெறுகிறார் ? அதை ஏன் நிறுத்தவில்லை'' என்ற சொற்களை மறைமுகமாக பயன்படுத்தி எழுதியுள்ளார். இவரின் கட்டுரையின்படி ''வாக்கு அரசியலை ஏற்காது ஆயுதம் மூலம் அரசினை கட்டமைக்க நினைக்கும் (இத்திட்டம் இந்திய ஒன்றியத்தில் கனவாகவே போகலாம், பல்நூறாண்டு கருத்தியலாக நீடிக்கலாம், அல்லது நீர்த்து மீண்டும் முளைக்கலாம். நீர்த்தும் கூடப்போகலாம்) நபர்கள் அரசின் பதவிக்கு வரக்கூடாது'' என்பதுதான் கருப்பொருளாக உள்ளது.

ஒருவர் அரசு பதவியில் சேரும் முன், அரசின் மூலையாக உள்ள காவல் துறையின் உளவுப்பிரின் மூலம் பணியில் சேர்பவர்கள் ''அரசியல் கட்சி சார்புடையவரா? அவர் மீது வழக்குகள் உள்ளனவா?, வாக்கு அரசியலை ஏற்ற பொதுவுடமை கட்சி ஆதரவாளனக இருந்தால் ''இனி மேல் ஒழுங்கா இருந்துங்கக்கோ உன் வாழ்க்கை பிரச்சனை என்பதால் உங்களுக்கு சாதமாக அறிக்கை எழுதுகிறேன்'' என காவல்துறை அலுவலர் சொல்லுவார். ஆனால் வாக்கு அரசியலை ஏற்காத அமைப்பின் ஆதரவாராக இருந்தால் இப்பேச்செல்லாம் இல்லை. ஒற்றை வரியில் சொல்லுவதென்றால் வேலை கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் புகார் மேல் புகார் கொடுத்து விரட்டி விடுவார்கள்.

அரசியல் சாசன வழிக்காட்டுதலில் உருவாக்கப்பட்ட அரசு பணியாளர் விதி வரைமுறை சட்டக்கையேடுகள் விதிகளின்படி ஜெயமோகன் என்பவர் கட்டுரை எழுதியிருக்கலாம். ஆனால் .... இவர் நாடறிந்த எழுதாளர் இவர் எழுதியதில் உள்நோக்கம் தவிர வேறு என்னவாக இருக்கும். இவரின் இலக்கு என்பது ''பொதுவுடமை சிந்தனை என்பது எந்தத்தளத்திலும் இருக்கக்கூடாது'' என்பதானே தவிர வேறு எதுவும் இல்லை என்பதையே உணர்த்துகிறது.

ஆளும் பாரதீய ஜனதா அரசின் அரசியல் மூலையாக உள்ள சங்பரிவார் அமைப்புகளின் இலக்கும், ஜெயமோகன் என்பவர் இலக்கும் ஒன்றே. ஆனால் .... , ''இன்று தீவிர பொதுவுடமையை எதிக்கிறேன் என சொல்லும் ஜெயமோகன் என்பவர் அடுத்து பொதுவுடமையை எந்த வடிவத்தில் இருந்தாலும் எதிர்க்க தொடர்ந்து எழுயும் வருகிறார். என்பதை பொதுவுடமை அமைப்புகள் தெரியாதா?  இவர் எழுதுவதால் பொதுவுடமை சிந்தனை இல்லாமல் போய்விடப்போவதில்லை. இப்படி தனது கொள்கையை அறிவித்த நபரரான நபருடன் தனிப்பட்ட உறவு வைத்துக்கொள்ளுவது மானுட தன்மை ஆனால் இயக்க உறவு வைத்துகொண்டுள்ளவர்களை குறிப்பாக பொதுவுடமை அமைப்பில் உள்ளவர்களே அவரை ஏற்றுக்கொண்டாடும் கேவலநிலையை என்ன சொல்லுவது. 

இந்து அறநிலைய சட்டப்படி அத்துறையின் பணியில் சேருபவர், 'இந்துவாக, ஆன்மீகவாதியாக'' இருந்த்தல் கட்டாயம். அதைப்போல அரசுப் பதவியில் இருப்பவர்கள் 'பொதுவுடமை எதிப்பாளர்களாக இருக்க வேண்டும்' என திட்டமும் சங்பரிவார் அமைப்புகளில் பல்நெடும் காலமாக பேசப்படுகிறது. அவர்களின் வெளியீடுகளில் வெளிப்படையாகவே எழுதியும் வருகிறார்கள். இதை பொதுத்தளத்தில் இயங்கும் எழுத்தாளர்கள் துணிந்து எழுதுகிறார்கள் என்றால்... இவர்களை என்ன செய்ய வேண்டும் என காலம் முடிவெடுக்கும்.

Tuesday, 19 May 2020

கொரொனோ என்ற மாயை? எதற்காக ? யாருக்காக?



                                         கொரொனோ என்ற மாயை? எதற்காக ? யாருக்காக?

*****************************************************************************************************
வணக்கம் நண்பர்களே, தோழர்களே

கொரொனோ பெயரைக்கொண்ட தொற்று நோய் ''கடந்த மூன்று மாதமாக பல்லாயிரம் உயிர்களை காவுவாங்கி விட்டது. பலகோடிப்பேரை கொல்லக்காத்திருக்கிறது'' என்று உலகளவில் செய்தி நிறுவனங்கள் அரசு அறிக்கைகள் ஒவ்வொரு நிமிடமும் செய்திகளை கொட்டிக்கொண்டே இருக்கிறார்கள். இதனால் ஏற்படுத்தப்பட்ட அச்சம் பெரும்பீதி, இரும்பு உலை கொதிகளன் போலவே உள்ளது. இந்த நோய் தாக்குதல் உலக நாடுகள் என்ன நடக்கிறது என்பது குறித்த செய்திகளும் பொய் தோற்றமா ? உண்மையா என அவர்களே விளக்கம் தரமுடியும்.  
இந்திய ஒன்றியத்தில் என்ன நடக்கிறது? என்ன நடக்கும் ? என்பதை பற்றி அரசியல் கட்சிகள் அறிவியல்சார் இயக்கங்களின் அறிக்கைகள், ஆளும் அரசுகளை போலவே உள்ளது. மக்களின் துயரம் சொல்லி அழுக இயலாத ஈழத்துயர் போலவே உள்ளது. 

******************************************************************************************************
 மருத்துவத்துறையினர் என்ன சொல்லுகிறார்கள்?
*****************************************************************************************************
கொரொனோ என்ற தொற்று நோய் ஏற்பட்டால் சளிக்காய்ச்சல் வருவதற்கு முன்பு என்ன அறிகுறி இருக்குமோ அதைப்போலவே தொண்டை வலி, சளி, அதன்பின் இருமலுடன் காய்ச்சல், மூச்சிரைப்பு ஏற்படும் என அறிவித்தார்கள். நோய் தாக்குதல் கண்டவர்களாகக் கருத்தப்பம் நபர்களை காவல் துறை மூலம் பிடித்து மருத்துவமனையை சிறைச்சாலைப்போல் மாற்றி துப்பாக்கி ஏந்திய காவலர்கள் கொண்டு பாதுகாத்து சிகிச்சை அளிக்கிறார்கள். இந்த நோயாளிகளின் இரத்தம் மற்றும் சளி எச்சில் மாதிரிகளை சோதித்த 100 பேரில் 85 பேருக்கு குறிப்பிட்ட நோய் இருப்பதாக லேப் டெஸ்ட் கொடுத்துள்ளார்களாம். அரசு பரிசோதனை மையம் தவிர தனியார் லேப்களிலும் கொடுத்து டெஸ்ட் செய்யப்பட்திலும் இதே கணக்கைக் கொடுத்துள்ளார்களாம். மருத்துவச் சிறைச்சாலையிலிருந்து பெயில் கிடைத்தவர்கள் போல டிஸ்சார்ச் ஆனவர்கள் வீட்டுக்காவலில் வைப்பது போல வீட்டிற்குள் வைக்கப்பட்டார்கள்.

இது நாள் வரை நோய் தாக்குதல் அல்லது தொற்று ஏற்பட்டு மருத்துவமனைக்கு போய் சிசிக்கை எடுக்கப்போனவர்கள் என்று அரசின் பதிவேட்டினைப் பார்த்தால் விமானத்தில் வந்தவர்கள், இசுலாமிய தப்ளிக் மாநாட்டிற்கு போய் வந்தவர்கள், மாலத்தீவிலிருந்து கப்பலில் வந்தவர்கள் என்ற கணக்குகளே உள்ளன. இக்கணக்குகள் நீடிக்க காரணமாக இருப்பது இந்தக்கணக்கில் தப்பித்தவர்கள் மூலம் பரவியதாக சொன்னார்கள். சென்னை பெருநகர காய்கறி அங்காடியை ''ஒற்றை சோர்ஸ்'' எனச்சொன்னார்கள். அதன் மூலம் சிலருக்கு பரவியதாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வாரச்சந்தையும், சேடபட்டி என்ற கிராமத்தையும் சீல் வைத்து மூடப்பட்டது. மற்ற பகுதியின் நிலை தெரியவில்லை.

******************************************************************************************************
                                                         கொரொனா நோயாளிக்கு என்ன நடந்தது
*****************************************************************************************************
காவல் துறை மூலம் பிடித்து கொரொனோ நோயாளியாக கருத்தப்பட்ட நபரை சிறப்பு வார்டில் வைத்து மருத்துவம் பார்க்கிறார்கள். இந்த நோயாளிகள் யாருக்கும் மருத்துவத்துறை குறிப்பிட்டுள்ள எந்த சிம்டமும் வரவில்லை. 15 நாள் கழித்து அவர்கள் விடுதலை என்ற டிஸ்சார் செய்யப்பட்டார்கள். டிஸ்சார் ஆனாலும் அரசியல் கைதியைப்போல் வீட்டுக்காவலில் வைத்து மருத்துவ கண்காணிப்பில் வைத்தார்கள். அப்போதும் எதுவும் குறிப்பிட்ட எந்த சிம்டமும் இல்லை என்றே தகவல் வந்துள்ளது. 

******************************************************************************************************
                                                                                 விண்டோ ப்பிரிடு
*****************************************************************************************************
ஒரு உயிர் தனது இனப்பெருக்கத்தை செய்வதை விண்டோ ப்பிரிடு என்பார்கள். கொரொனோ கிருமியில் விண்டோ ப்பிரிடு குறித்த ஆய்வு நடத்த இது நாள் வரை எந்தகருவியும் இல்லை. ஆய்வுகளும் நடத்தப்படவில்லை. ஹைச்.ஐ.வி என்ற நோய்கிருமியின் விண்டோ ப்பிரிடு கண்டறியும் கருவி இல்லாமல் பல ஆண்டுகள், பலரை பிடித்து இந்த நோய் தாக்கியுள்ளது என அறிவித்ததில் நூற்றுக்கணக்கணக்கானோர் தற்கொலை செய்து கொண்ட பதிவுகள் ஏராளம் உள்ளது.

கொரொனா தொற்று குறித்து மாநில மைய அரசு நடத்தும் துறை ரீதியான வீடியோ கன்பரசிங்கில், தமிழக மருத்துவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அத்துறையின் உயர் மருத்துவர்களை விட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான, செயலாளர், ஆணையார், இயக்குனர்கள் பதில் ஏதுவும் சொல்லாமல் ''அடுத்து, அடுத்து, அடுத்து'' எனச்சொல்லி முடிக்கிறார்களாம். ஆனால் அந்தந்த கலெக்டர் மூலம் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர், ஊரக சுகாதாரப்பிரிவு துணை இயக்குனர் மூலம் கேள்வி கேட்ட டாக்டர்களை 'லெப்ட் அண்ட்டுரைட்' வாங்குகிறார்களாம். மொத்தத்தில் ''மேலிட உத்தரவு'' என்ற தொணியில் சொல்லுகிறார்களாம். நான் பேசிய மருத்துவ நண்பர்கள் ''என்னமோ நடக்குறது இதில் ஏதோ உள்குத்து உள்ளதாகவே தெரிகிறது'' என வருத்தப்பட்டார்கள். அவர்களின் 'பொதுவுடமை கட்சியினர் ஆட்சி செய்திடும் கேரளத்தில் கொரான தொற்றுக்கு சிறப்பாக மருத்துவம் பார்க்கிறார்களே' என்ற கேள்விக்கு ''அதைப்பற்றி ஏதும் கேட்க வேண்டாம்' என்கிறார்கள்.
ஏன் இந்த கமுக்கம்! என்பதை கேள்வி எழுப்பி மக்களிடம் தெரிவிக்க வேண்டிய எதிர் கட்சிகள் ஆளும் அரசுடன் கூட்டு வைத்து செயல்படுவதாகவே உணர முடிகிறது.

********************************************************************************************************
                                                                     ஏன் இந்த கமுக்கம்!
*********************************************************************************************************
ஐயப்பாடு 01. 

உலகம் முழுவதும் மரபுசார் அறிவை நிறுவனங்களுக்காகவே முடக்கி வைத்தார்கள். மரபு அறிவியலில் 'விஞ்ஞானம் இல்லை' என்ற மாயத்தை கட்டமைத்து விட்டார்கள் தற்போது மேற்கத்திய நாடுகள் குறிப்பாக ஜெர்மன் போன்ற நாடுகளில் மெய்பித்து வருகிறார்கள். அவகளிடம் மிகத்தாமதமாக இந்திய ஒன்றியத்திற்கு இறக்குமதியானதே இயக்கை வேளாண்மை என்ற கான்செப்ட். இந்த மரபு பரப்புரையால் முதலில் அடிவாங்கியது உரம், பூச்சிக்கொள்ளி மருந்து உற்பத்தி. அரசே பசுமை வேளாண்மையை திட்டமாக அறிவித்து அதற்கு மானியமாக நிதி வழங்க வேண்டிய காட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. கடந்த பத்தாண்டுகளில் உரம் மருந்து உற்பத்தி, விற்பனை, ஏற்றுமதி இறக்குமதி இவைகளை கணக்கிட்டால் இதனை உள்வாங்கிக்கொள்ள இயலும். இதேபோலவே மருத்துவத்துறையும்.
இந்த மரபு சிந்தனை என்பது வந்து விட்டால் நிறுவனம் சார்ந்து மனிதன் இருக்கமாட்டான் சுயசார்பிற்கு போய் விடுவான் என்ற அச்சம் நிறுவனங்களுக்கு வந்து வந்து விட்டதன் விளைவு தான் இந்த நோயினை வைத்து மக்களை மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என்று என்னத்தோன்றுகிறது.  
ஐயப்பாடு 02.
சிறு குறு நிறுவனங்களை நேரடியாக அழிக்க இயலாது. மறைமுகமாக அழித்திடும் திட்டமே இந்த தொற்று நோய் திட்டம் என்கிறார்கள். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் பேசிய போது ''உலகளவில் சிக்குன்யா காய்ச்சலை வைத்து இது போன்று லாக்டவுன் கட்டமைத்திட முயற்சித்தார்கள். ஏஐடி கொசு சில நாடுகளில் இல்லாமல் போனதால் சில நாடுகள் ஒத்துழைப்பு கொடுக்க முடியாமல் போனது. தற்போது கட்டமைத்து விட்டார்கள். கட்டமைத்த பீதியை தொடர்ந்து நம்ப வைக்கும் முகந்தரமாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்த அரசின் வெளியீடுகள். இதை வைத்து பார்க்கும் போது இவர்கள் சொல்லும் கருத்தையோ வாதத்தையோ நாம் மனம் ஏற்க தயாராக இல்லாத மனநிலையே நமக்கு உள்ளது.

ஐயப்பாடு 03

அரபு நாடுகளில் ''இன்னும் ஆறுமாத காலத்திற்கு எண்ணை நிறுவனங்கள் இயங்காது. வேறு வேலை பார்த்துக்கொள்ளவும். உங்களுக்கான உணவு இடம் மட்டுமே தருவோம்'' என அறிவித்துள்ளது அரபு நாடுகள். ஆலைகள் வேலைநிறுத்த போராட்டங்களில் மாதக்கணக்கில் மூடி மீண்டும் இயங்கிய வரலாறு உண்டு. ஆனால் அந்தத்தொழிலாளர்களை 'வேறு வேலைக்கு போயிடுங்கள்' என பிரிட்டீஷார் இயக்கிய ஆலை நிருவாகம் கூட சொன்னதில்லை. ஆனால் இன்றைய அறிவிப்புகள் எதை நோக்கி என்பதை பொருளாதரத்துறை வள்ளுனர்களே தெளிவாக குறிப்பிட இயலும்.

ஐயப்பாடு 4.

கடந்த ஐந்தாண்டுகளில் வடமாநிலத்திலிருந்து கொத்துக்கொத்தாக அனைத்து உடல் உழைப்பு சார்ந்த தொழிலாளர்கள் தென் மாநிலங்களுக்கு வந்து குவிந்துள்ளார்கள் அல்லது குவிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு ஏன் அங்கு வேலை இல்லை. ''ஒரு வரியில் மக்கள் தொகை பெருக்கம்'' என்ற சொல்லால் ஆய்வினை முடித்து விடுவது ஆய்வாகத்தெரியவில்லை. தென் மாநில மக்கள் வட மாநிலத்தவர்கள் போல் ஏன் அப்பணியை செய்ய இயலவில்லை ? என்ற கேள்விக்கு விடை தேட வேண்டியுள்ளது. குறைந்தது அந்தந்த பகுதி இல்லாவிட்டாலும் அந்தந்த மாநிலத்தவர்களுக்கு ஆங்காங்கு வேலை ஏற்படுத்த சூழல் ஏன் உருவாகவில்லை? . 

வட நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் குறித்து வட நாட்டு பத்திரிக்கையாளர்களிடம் பேசினோம். ''வட கிழக்கு மாநிலங்களில் உள்ள மலைகளில் உள்ள கனிம வளங்களை வேதாந்த எல்.&டி போன்ற கம்பெனிகளுக்கு 99 ஆண்டுகால குத்தகை விடப்பட்டுள்ளது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த கனிம வளங்களை எடுத்துச்செல்ல அங்கு ஆறு வழிச்சாலை துறைமுகம் வரை போடப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் செயல்பட மக்கள் போராட்டம் தடையாக உள்ளது. அங்கு இயங்கும் தீவிர பொதுவுடமை அமைப்புகளுக்கு மக்கள் ஆதரவாக உள்ளதால் அவர்களை அப்புறப்புறப்படுத்த பெரும் முதலாளிகளுக்கு அரசே திட்டம் வகுத்துக்கொடுத்தது. அத்திட்டத்தின்படி இந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு வட்டியில்லா கடனாக 1 முதல் 5 இலட்சம் வரை கடன் கொடுக்கிறார்கள். அவர்கள் வேலை செய்து கழித்துக்கொள்ள வேண்டும். இப்படித்தான் இடப்பெயர்வு துவங்கியது. வயதானவர்களைத்தவிர இளைஞர்கள் இல்லாத கிராமத்தைதான் பார்க்க முடிந்தது.  இவர்கள் மீண்டும் இங்கு வந்தாலும் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியிலிருந்து தப்பிக்க அவர்களது கைப்பாவையாக இயங்குவார்கள். இது இருக்க தீவிர பொதுவுடமை செயல்பாட்டார்களையும் முடக்கிவிட்டார்கள்.. தற்போது இந்த இளைஞர்கள் வந்தாலும் பெரிதான தொழில் துவங்கவுள்ள கம்பெனிக்கு பெரும் பாதிப்பு இருக்காது'' என்கிறார்கள்.    

ஐயப்பாடு 04. 

 அரசின் நடவடிக்கைகளை பார்க்கும் போது திருமணம் முடிப்பத்தாக இருந்தால் எத்தனை பேர் கூடுவார்கள் என்பதை கணக்கிட்டு அரசிடன் அனுமதி வாங்கவேண்டும் என்ற நிலையே புரிந்து கொள்ள முடிகிறது. இருக்கும் நிலையைப்பார்க்கும் போது கட்டாயம் குறைந்தது 500க்கு மிகையாகமல் கூடலாம் என்ற வழிக்காட்டுதலை அரசு  அறிவிக்கும் என்றே தலைமை செயலக அதிகாரிகள் சொல்லுகிறார்கள். அப்படியானல் உண்ண உணவு   உடுக்க உடை தவிர மற்றவை கடுமையாக பாதிக்கப்படும். மனிதன் தனது வளமையை வளத்தை காட்டுவது இதர செலவினங்களிலே. இவைகள்  சார்ந்தே பல தொழிகள் இயங்குகிறது. இவைகள் முடங்கும் போது மனித குலம் மொத்தமாக அடிமையாக யாரிடமோ அழைத்து செல்ல இந்த தொற்று நோயினை பயன்படுத்துகிறார்களோ ?, என்ற ஐயப்பாடு எழுகிறது.

ஐயப்பாடு 05.

முகக்கவசம் இது சாதாரமாக எடுத்துக்கொள்ள இயலவில்லை. பள்ளிக்குழந்தைகள் இதை அணிய இயலுமா ?. கூடி வாழும் வயதில் இருப்பவர்களை எப்படி அனுக இருக்கிறார்கள். அவர்களின் மனநிலை குறித்த தாக்கம் எப்படி இருக்கும்.?. வகுப்பறைகள் எத்தனை பேரை அமர வைப்பது ?. அரசு பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளின் நிலை என்ன?. 

தற்போது அரசுப்பணியாளர்களை ஒரு மீட்டர் இடைவெளியில் வைத்து பேரூந்தில் அழைத்து சென்றால் நாளை சாமானிய மக்களை எப்படி அழைத்துச் செல்வார்கள். ? இதை துறைவாரியாக கணக்கிட்டால் தலைசுற்றுகிறது.   இப்படியான ஐயப்பாடுகளை கணக்கிட்டு பாருங்கள். எதை நோக்கி இந்த தொற்றால் நகர்த்துகிறார்கள் நகர்கிறோம். யாரோ யாருக்காவோ நகர்த்துகிறார்களோ என்ற ஐயப்பாடு எழுவதை தடுக்க இயலவில்லை. மொத்தத்தில் சிறு குறு நிறுவனங்களை சுகாதாரச் சட்டத்தில் அடைத்து பெரும் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் பணியாகவே இந்த நகர்வு நகர்வதாக ஐயம் எழுகிறது. 

இந்தபேரழிவை பொத்தாம் பொதுவாக நிகழ்த்த முடியாது என்பதால் அதற்குமுன்பாக பல மாதங்கள் லாக் டவுன் என்ற யுத்தியை கையாள்கிறார்கள் என்ற பலரது ஐயத்தை போலவே நமது ஐயத்தையும் வைக்கிறோம். மொத்தத்தில் காட் (general agreement on tariffs and trade) ஒப்பந்தந்தத்தின் கரங்கள் நீள்கிறது. இதில் பொதுவுடமை கட்சி முதலாளித்துவ கட்சி என்ற பாகுபாடெல்லாம் இல்லை என்பதாகவே தற்போது வரை உள்ள நிகழ்வு உணர்த்துகிறது.

முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு

  நூலதிகாரம் நூல் முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு ஆசிரியர் ; தி. சுப்பிரமணியன் வெளியீடு ; அடையாளம்   ‘முந்தி பிறந்தவன் நா...