Search This Blog

தமிழ் தேசிய சிந்தனையாளர்கள் சிலப்பதிகாரத்தையும், அதில் பலர் பக்தி இலக்கியத்தில் உள்ள தமிழையும் தூக்கிச்சுமந்து தமிழ் மொழியை காத்தனர்.
திராவிட இயக்கம் தமிழனின் வீரத்தை சொல்லும் சங்க இலக்கியத்தையும், தமிழன் குணநலம் அறிவிக்கும் திருக்குறலை தெருதெருவாக விதைத்தனர். பேரியக்க கட்சி (காங்கிரஸ்) கம்பன் எழுதிய இராமாயணத்தை மக்களிடம் மீண்டும் பரப்பிய தமிழை தளைத்திட வைத்தது.
தமிழ் மொழியின் சிறப்பை, தமிழனின் மாண்பினை தூக்கி நிறுத்தும் இலக்கியங்களில், ''பிறப்போர்க்கும்......' என்ற ஒற்றை சொல், திருக்குறலை தமிழனின் 'திருமந்திரமாக' தமிழர்களிடம் முதன்மை பெறுகிறது. இக்குறலின் குரல் தொய்வில்லாமல் ஓங்கி ஒலித்திட மறைந்த முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள் வள்ளுவ பெருந்தகைக்கு பெரும் சிலை நிறுவி தமிழின், தமிழனின் பெருமையை சீர்தூக்கினார். இவரைப்போன்று பல அறிஞர் பெருமக்கள் தமிழனின் பெருமாண்பை பேணிகாத்திட தன்நலமில்லாமல் பாடுபடுகிறார்கள்.
அந்த வரிசையில் திருக்குறலின் பெருமையை தனது கடும் பணிக்கு இடையில் குறலோசையை இசைத்திடும் அன்பிற்குறிய தம்பி திரு. திருநாவுக்கரசு இ.கா.ப அவர்களிடம் எனது பெரும் கதையான ''சுளுந்தீ'' நூலினை வழங்கி வாழ்த்துப்பெற்றேன்.
அவர் தான் எழுதிய ''குறல் இனிது குறலின் கதை இனிது' நூலை வழங்கி என்னைப்பெருமைப்படுத்திய போது.






13
Image may contain: 2 people, people smiling, people standing and indoor

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...