Search This Blog

Saturday 20 June 2020

அனுபவங்களில் நிழல் பாதை மதிப்புரை






                                                 நூலதிகாரம்


நூல்; அனுபவங்களின் நிழல் பாதை
ஆசிரியர்; ரெங்கையா முருகன் + ஹரிசரவணன்
வெளியீடூ ; வம்சி
விலை; 350


தமிழக அரசு & விகடன் விருது பெற்ற நூல், குமுதம் தீராநதியில் தொடராகவும் வந்தது குறிப்பிடத்தக்கது.


(என் மகள் வைக்கம் நாகமணியின் நூல் மதிப்புரை)

மக்களை அறிந்த  மண்ணின் மைந்தர்களின் வரலாற்றை இந்த நூல் பேசுவதால் மக்கள் இலக்கியம் என்றே அழைக்கலாம். என் அப்பா அடிக்கடி மரபு அறிவை  பற்றி  என்னிடம் கூறும் போது சரியாக விளங்கவில்லை. இப்புத்தகதை படித்த பிறகு  என்னால் மிக சரியாக புரிந்துகொள்ள ஏதுவாக இருந்தது.



இயற்கையோடு இணைந்த பழங்குடிகள் வாழ்க்கை முறையை அவர்கள் வாழ்விடத்திடலிருந்து அப்புற[ப்படுத்தும் போது அவர்களின் மரபு அறிவு அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட முடியாமல் போய்விடுகிறது. பழங்குடிகள் மட்டுமல்ல, நாமும் வளர்ச்சி என்ற பெயரில் கட்டமைக்கப்பட்ட நவீன உலகத்தின் பிடியில் மாட்டிக்கொண்டு பலவற்றறை இழந்து வருகிறோம் என்பதே நிதர்சனமான உண்மை ஆகும். எனக்கு விபரம் தெரிந்த காலம் வரை பாத்திரங்களை விளக்க பயன்படுத்தபட்டு வந்த அடுப்பு சாம்பல் காணாமற்போய் இன்று பல்வேறு வகையான  பொடிகளை பயன்படுத்தி கொண்டு உள்ளோம்.


பழங்குடி மக்கள் தங்கள் ஊர் எல்லையை தாண்டி விறகு எடுப்பதை கூட பாவமாக கருதுகிறார்கள் என்பதை ஆசிரியர் பதிவிட்டுள்ளார். அப்படியிருக்க அவர்களை அரசு அப்புறப்படுத்த ஏற்கத்தக்க காரணங்கள் ஒன்றும் இல்லை. ஆனால் நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக அவர்களை வெளியேற்ற துடிக்கிறோம் என்பதே உண்மை என நினைக்கிறேன்.


இந்நூலில் பொதுகுப்பை, கூளம் என்ற வார்த்தையை கண்டவுடன் என் ஊரில் பயன்படுத்தப்பட்ட  குப்பைக்கிடங்குகள்  நினைவுக்கு வந்தன. தற்போது குப்பைகளை மக்கச்செய்து பயன்படுத்தும் அத்தயக முறை பயண்பாட்டில் இல்லை. இது போன்ற நுண்ணிய அறிவுகளை அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் இழந்து வருகிறோம். அல்லது இழக்க வைக்கிறார்கள். சாணி மற்றும் குப்பை கூளங்களை கிடங்கில் போட்டு மக்கினால் தான் அதனுள் மீத்தேன் உருவாகி நல்ல உரமாக மாறும் என்பது அறிவியல். இந்த அறிவியலில் உள்கூறுகளை பழங்குடி மக்களோ அல்லது வெகுமக்களாகிய நாமோ தெரிந்துவைக்காமல் இருக்கலாம். ஆனால் அத்தகைய செயலில் மிகப்பெரிய விஞ்ஞானம் பொதிர்ந்துள்ளது என்பதை யார் எடுத்து சொல்லுவது. 


மரபு அறிவினை இழந்த தலைமுறைக்கும் மரபினை கட்டிக்காக்கும் தலைமுறைக்கும் உள்ள பெரிய இடைவெளியை தெரிந்து கொள்ள முடியும். இதனை பழங்குடிகளின் வாழ்வியலிலிருந்து அவர்களின் வருத்தத்தை நூலாசிரியர் பதிவு செய்துள்ளதை படித்தவுடன் என் தாத்தா இறக்கும் தருவாயில் வைத்தியத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்த முடியாத தவிப்பை உணர்ந்தேன்.


''மொழியை இழந்தவனுக்கு பெண்ணை தர மாட்டேன்'' என்ற அப்பழங்குடிகளின் செய்தியை படித்த போது எனக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. மொழி என்பது பல்வேறு மரபு அறிவுகளை உள்ளடக்கியது என்று அறிந்தே அக்கூற்றை அவர் கூறியிருப்பார் என்றே நான் உணர்கிறேன். ஆனால் இன்று குழந்தைகளின் பெயரை கூட தமிழில் வைக்க தவறி விடுகிறோம் என்பது மிகுந்த வருத்தற்குரியது.


என் தந்தை  அடிக்கடி கூறும் கல்வி வேறு அறிவு வேறு என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை உணர்ந்த இடமாக இப்புத்தகம் இருந்தது என்பதில் எவ்வித ஐய்யப்பாடும் இல்லை. பல ஆயிரம் செய்திகளை திராவிட மொழிக்குடும்ப இனக்குழுக்களில் மரபு சார்ந்த அறிவு மற்றும் அவர்கள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள இந்த நூல் உதவும் என நம்புகிறேன்.

Friday 19 June 2020

பூமி போர்




                                                                  பூமி போர்
                                                             ******************



நிலத்தின் மீதன போர் ஆண்டாண்டு காலமாக நடந்தே வருகிறது. இதன் வடிவம் காலம் தோறும் மாறிக்கொண்டே இருக்கும். தற்போது சுகாதாரம் என்ற போர்வையில் உலகளவிய யுத்தத்தை சத்தமில்லாமல் மக்கள் ஒத்துழைப்போடு இரத்தமின்றி நடத்தி வருகிறார்கள்.


12ம் நூற்றாண்டில் இந்திய ஒன்றியத்தில் உள்ள நர்மதை ஆற்றங்கரைக்கு வட தெற்கு பகுதியில் பெரும்பான்மையாக உழுகுடி சமூதாயமான *தாகூர் மற்றும் இராசபுத்திர* குலத்தினர் வாழ்ந்துள்ளனர். தற்போதும் அவர்களே வாழ்கிறார்கள். அப்போது அங்கு சிறு சிறு குழுக்களாக இசுலாமிய ஆட்சியாளர்கள் ஆண்டனர். இங்கு நிலங்கள் அனைத்தும் அரசுடமையாக இருந்தது. தாகூர் குலத்தினரிடம் இருந்த நில குத்தகயை பறித்து இராசபுத்திரர்களிடம் மாற்றுவார்கள். இதே போல் இராசபுத்திரர்களிடமிருந்து தாகூர் குழுக்களுக்கு மாற்றுவார்கள். இதனால் இருகுழுக்களுக்கு இடையே சண்டை போராக மாறி இருகுழுக்களும் வெட்டி செத்தார்கள். ஒரு கட்டத்தில் இரு குலத்தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தில் ஒன்று கூடினார்கள். நிலகுத்தகையை மாற்றம் செய்திடும் போது ஆயிரம் ஐநூறு பேர் மொத்தமாக சேர்ந்து ஈட்டி கத்தி கம்புகளைக் கொண்டு ஆளும் அரசு மீது போர் தொடுத்துள்ளனர். இந்தப் பூமிப்போரின் விளைவுதான் பிரிட்டீசார் கொண்டு வந்த இரயத்வாரி மாண்டேசு திருத்த சட்டம் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.


விஜயநகரம் தமிழகத்தில் கால்லூன்றிய காலத்தில் இது போன்ற பூமி போர் உழுகுடிகள் நிகழ்த்தினார்கள். இந்த போரினைச் சமாளிக்க விஜயநகரத்திலிருந்து வந்த மக்களுக்காக தமிழகத்தில் இருந்த காடுமலைகளிய அழித்து குடியேற்றம் நடந்தது. தற்போது மறந்த பூமி போரினைத் சாலை வழியாக, சுகாதாரம் என்ற போர்வையில் தனிமனிதன் உயிரை காப்பதாக துவக்கி வைத்துள்ளது ஆளும் அரசு. இது உலகளவிய நாடகம் யாருக்காக என்றால் இந்த பூமியை சொந்தம் கொண்டாட முதலாளிகள் போடும் கணக்கு என்கிறார்கள். இந்த கணக்கு வெளியே தெரியாமல் இருக்கவே பல வழிகளில் நம்மை திசைமாற்றுவார்கள்.


வளர்ச்சியின் அடிப்படை சாலைகள் தேவைதானே. ? பொதுவான கேள்வி. (அஞ்சாறு காசு சேந்தவுடன் கார் வாங்கிய புதுப்பணக்காரனுக்கு இந்த கேள்வி பொசுகின்ணு வரும் பாறேன் அவனுங்க பேச்சுக்கு பதில் சொன்னால் நம்மள காதக்கருபிடுவாங்க)


இந்திய துணைக்கண்டத்தில் என்னென்ன உற்பத்திகள் செய்யப்படுகிறது. இறக்குமதி ஏற்றுமதி என்னென்ன. இதன் தேவைகள் என்னபதை வைத்தே சாலைகளின் தேவை அல்லது மேம்பாடு குறித்து அளவிடப்படுகிறது. உற்பத்தி செய்ய முடியாத இடத்திற்கு உற்பத்தி செய்திடும் இடத்திலிருந்து முதல் தர உற்பத்தியான உணவு, இரண்டாம் தர உற்பதியான ஆடை, அதன் பின்பு மூன்றாம் தேவையான ஆபரணங்கள் கொண்டு செல்லப்படுவது மனித குலம் தோன்றிய காலம் தொட்டு நடந்தேறி வருகிறது. எடுத்துக்காட்டாக சொன்னால் சீனாவில் உற்பத்தியாகும் பாக்சைட், கெந்தகம், வெடியுப்பு, பூதம் என்ற பாதரசம் இவைகள் இந்தியாவிற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் அதே போல் எரிபொருள், உணவு. இதற்கு தான் கடல் மார்க்கம் ஆகாய மார்க்கம் சாலை மார்கமாக பொருள்களை கொண்டு செல்ல மேம்பாடு தேவைப்படுகிறது.


சில ஆண்டுகளாக மத்திய இந்தியாவிலும் தென் இந்தியாவிலும் பருத்தி உற்பத்தி 30 விழுக்காடு வரை சரிந்துள்ளது என்பதை மைய அரசின் வருடாந்தர புள்ளி விபர அறிக்கை சொல்லுகிறது. அடுத்து மைய இந்தியாவில் பெரும்பான்மை உணவு உற்பத்தியான கோதுமை, பருப்பு நல்ல விளைச்சல் கண்டுள்ளது. மய்ய, மாநில அரசுகளின் சேமிப்பு கிடங்குகளில் இதன் இருப்பு இன்னும் ஐந்தாண்டுகளுக்கு போதுமான அளவுக்கு உள்ளதாகவே ஸ்டாக் ரிப்போர்ட் சொல்லுகிறது. அடுத்து உணவின் இரண்டாம் தர தேவையாகக் கணக்கிடப்படும் சக்கரை தேவையான உற்பத்தி இருந்தாலும் காட் ஒப்பந்த அடிப்படையில் இறக்குமதி செய்ய வேண்டிய நிர்பந்தத்தால் உள்நாட்டு உற்பத்தி தேக்க நிலை ஏற்பட்டது. (இதே போல்தான் அரிசு கோதுமை பருப்பு வகைகளும் இறக்குமதி ஏற்றுமதி செய்தாக வேண்டும் இது தான் காட்) இதனால் கரும்பு பயிரிட்ட உழுகுடிகளுக்கு நிலுவை தொகை சிக்கலை உருவாக்கி அவர்களை வேறு வேளாண்மை உற்பத்திக்கு அரசே மடை மாற்றம் செய்தது.


இரண்டாம்தர உணவு எண்ணை என கணக்கிட்டுள்ளார்கள். இதன் உற்பத்தியில் வட கிழக்கு இந்தியாவில் போதுமான கடலை, தக்காணத்தில் எள் விளைந்தது. இதற்கு விலை கிடைக்கக்கூடாது என்பதை விட உலக முதலாளிகளின் மருந்துகளை மானுட சமுத்திரத்தில் விற்று பிழைக்க இந்தியவை ஆளும் காட் முதலாளித்துவ அரசுகள் நஞ்சுகளான உணவு? எண்ணைகளை அனுமதித்தது. அதன் துவக்கம் இருபது ஆண்டுகளுக்கு முன்பே துவக்கப்பட்டு இன்று வெற்றிகரமாக விண்ணில் பறகிறது. பெட்ரோலின் உபரி உற்பதியான எண்ணையிலிருந்து எண்ணைகள் தயாரிக்கப்படுகிறது. (இது குறித்து பல செய்திகள் வந்து விட்டன) உற்பத்தியில்லாமலே எண்ணையா? ஆம். என்ன வகை எண்ணை தேவையோ அதற்கேற்றால் போல் வாசனை திரவியத்தை உற்றி அதை விற்பனை செய்கிறார்கள்.

'உனது ஆரோகியத்திற்கு நான் பொறுப்பு'' என பிரதமராக இருப்பவர்களே புழுத்துப்போன யோகா மூலம் கொழுப்பை கரைக்க பிரச்சாரம் செய்கிறார்கள். கடுகு, பனை எண்ணைகள் உடலுக்கு 100% கெடுதி என, இத்துப்போன உலக சுகதார மையம் கூட 13 ஆண்டுகளுக்கு முன்பு அறிக்கை கொடுத்தது. அதையும் மீறி ''நாங்கள் கொழுப்பு இல்லாத எண்ணை தருகிறோம்'' என அடிமுட்டாலான படித்த சமூகத்தை நம்ப வைத்து படிக்காமல் நல்லா இருந்த உழுகுடிகள் மீதும் இவர்களின் அடிமுட்டால் தனத்தை ஏவி உழுகுடிகளையும் உழைப்பாளிகளையும் நோயாளியாக்கி விட்டார்கள்.


மலேயா நாட்டில் பெரும்முதலாளிகள் கையில் உள்ள நிலத்தில் பல லட்சம் ஹெக்டர் நிலத்தில் பயிரிடப்பட்ட இரப்பர் காபி இவைகள் அழிக்கப்பட்டது. அதில் என்ன செய்வது என யோசித்தவர்கள் உலக முதலாளிகளை கைக்குள் போட்டு கொண்ட அந்த முதலாளிகள் கொன்றைபனைமரங்கள் நடவு செய்தார்கள். இம் மரத்தின்பழத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணையே பாம் (palm) எண்னை. ''இவ் எண்னை உடல் நலத்திற்கு முழு கேடானது. கடுகு எண்ணையை விட கேடானது'' என ஆய்வறிக்கை சொல்கிறது. அப்படியிருந்தும் எதற்காக இந்திய ஒன்றியம் அனுமதிக்கிறது.  IMA டாக்டர்கள் கையாப்பம் இட்டால் தான் இந்த எண்ணையை விற்பனை செய்ய முடியும். இவர்கள் தங்களது Ethicசை மறந்து, மறைத்து கையப்பமிடுகிறார்கள்.


பிரிட்டீஷ் ஆட்சியில் உலகத்தின் உற்பத்தி கேந்திரமாக இந்திய ஒன்றியத்தை ஆக்கினார்கள். அதனால் தான் எள் விளைந்த இடத்தில் நெல்லும் தென்னையும் விளைவைத்தார்கள். எள்ளிற்கு பதிலாக மணிலாவிலிருந்து கடலை கொண்டு வந்து நமது வேளாண்மையை மாற்றியதுடன் உணவு சங்கிலியை உடைத்தார்கள். நல்லெண்ணை என்பது என்ன ? என கேட்டும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம். உலகத்தின் தேவைக்கும் சக்கரையையும் பருத்தியையும் இந்தியாவில் உற்பத்தி செய்ததன் விளைவாக  நமது உணவு தேவை என்ன என்பது என்ன என்பதை தீர்மானிகிற பொறுப்பினை உலக சுகாதர மையத்திடம் ஒப்படை செய்து விட்டோம். பிரிட்டீசுக்காரர்கள் கொண்டு வந்த கடலை எண்ணையை பிரிட்டீசுகார்கள் வாழும் இங்கிலாந்து தடையுள்ளது என்பதை நாம் மறந்து விட்டோம்.


உற்பத்தி இல்லாமல் காட் ஒப்பந்த இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் குழாய் மூலம் எண்ணைகள் கொண்டு செல்லப்படுகிறது, கொண்டு வரப்படுகிறது. தொடர் வண்டிகள் மூலம் சரக்கு எளிதாகவும் கட்டணக்குறைவாகவும் கொண்டு செல்ல முடிகிறது. அப்படி இருக்க இந்த சாலை விரிவாக்க திட்டத்தின் இலக்கு என்ன ?.


பிரிட்டீசு இந்தியாவில் வி. பில் என்ற புவியியல் நிபுனரால் எழுதப்பட்ட 'எக்கானிமி ஆப் இந்தியா' என்ற நூலிலை கையில் எடுத்துள்ளது உலக வங்கி (இது உலக முதலாளிகளாக இயக்கப்படும் தனியார் வங்கி). அந்த நூலில் தக்காணம் முழுக்க வைரம் வைடூரியம், மரகதம், வெள்ளை நிற சலவைக்கல், சுண்ணாம்புக்கல் உள்ளது என குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளது. இதே போல் மதுரை, சேலம், திண்டுக்கல் ரங்கமலை பகுதியில் உள்ள கனிமங்களை சுரண்டலுக்குதான் இந்தியாவை ஆளும் காட் ஒப்பந்த அரசுகள் ஒற்றை பாதையிலிருந்து எட்டுப்பாதையாக மாற்றுகிறது. அதே போல் உலத்தின் உள்ளாடை தேவைக்கு தமிழகத்தில் உள்ள திருப்பூர் தான் உற்பத்தி மையம். இதனால் ஏற்படும் கடும் கழிவுக்கேடு இன்னும் அதிகரிக்கும். இதன் எதிர்ப்புகளை முறியடிக்க பல வகையில் திட்டமிட்டு தற்போது சுகாதாரம் என்ற போர்வையில் களமாடுகிறார்கள்.  


வி. பில் தனது குறிப்பில் இந்தியாவில் இருப்பு பாதை (ரயில்வே) போடப்பட்டதால் உணவு மற்றும் இரண்டாம் தர சமூக தேவைப் பொருள்கள் விலை இந்திய ஒன்றியம் முழுவதும் ஒரே மாதிரியாக உள்ளது. இருந்தாலும் ஜபல்பூர் , காந்த மலைப்பகுதியில் இரும்புகாக தாது வெட்டி எடுத்தால் சுற்றுச்சூழல் கெட்டு விடும் என இவரின் அறிவுரையை ஏற்ற பிரிட்டீஷ் அரசு கூட இரும்பு தாதுவை வெட்டி எடுப்பதை நிறுத்தியது.

பம்மாத்து ஆங்கிலேய அரசுக்கு இருந்த அக்கரை கூட சுதேதி பித்தால்லாடம் பேசும் காட் முதலாளி அரசுகளுக்கு இல்லையே.

Monday 15 June 2020

பண்பாடு - கருநாடாக



                                                            பண்பாடு 


கருநாடகம் ''பல பண்புகள் உள்ள ஒரு நாடு''  என வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.  அங்குள்ள மக்கள் இன்னும் தோலில் துண்டு போடும் பழக்கத்தை பெருமையாக கருதுகிறார்கள். அதே போல் காதில் இளைஞர்கள் கூட பூ வைக்கிறார்கள். 

 ''எவனாவது காதில் பூ வைத்திருக்கிறவனிடம் போய்ச் சொல்''  என்ற பழமொழி தமிழகத்தில், 1970 முன்பு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கே தெரியும். காதில் பூ, பச்சிலையை வைப்பது, தமிழகத்தில் மறைந்து பல ஆண்டுகளாகி விட்டது. அதே போல் தோளில் துண்டு போடுவது பெருமையானதாக இருந்ததும் மறைந்து விட்டது. கருநாடகத்தில் இன்னும் இருப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.  



Friday 12 June 2020

சமூக இணக்கத்தின் வெளிப்பாடு





                            சமூக இணக்கத்தின் வெளிப்பாடு      

#########################################################################################                                                  வழிபாடு?

*******************************************************************************************************

வணக்கம் நண்பர்களே தோழர்களே,

மனிர்களுக்குள் சண்டை சச்சரவு வந்தாலும் குலங்களுக்குள் ஒற்றுமையை நிலைநாட்ட கடவுளை சாட்சியாக வைத்து வாழ்ந்து வந்தார்கள். சில பகுதியில் இந்த ஒற்றுமை இன்னும் சாகாமல் இருந்தும் வருகிறது. இதற்கு பல நூறு சான்றுகள் உள்ளன. மதுரை மாவட்டம் செக்கணூர்ணி அருகிலுள்ள கொக்குலம் கிராமத்தில் உள்ள பேக்கருப்பசாமி கோயிலில் பறையர் குலத்தினரே பூசாரி. இக்கோயிலில் வழிப்பாட்டாளர்கள் பிறமலை கள்ளர் குலத்தினரே. அதே போல் பள்ள கருப்பசாமி கோயிலில் பள்ளர் குலத்தினர் விபூதி கொடுப்பவராக உள்ளனர். சில கிராமங்களில் பிற்படுத்தபட்டோர்களான கள்ளர், கோனார் சமூகத்தினர் பள்ளர், பறையர் குலத்தினரோடு மாமன் மைத்துனர் பங்காளி முறை வைத்து அழைக்கும் பழக்கம் உண்டு. ஆனால் பெண் எடுப்பது கொடுப்பது இல்லை.  

தேனி மாவட்டம் கம்பம் நகரில் ஒரு பகுதியான உத்தமபுரத்தில் வாழும் கோனார் சமூகத்தினர் கம்பத்தில் உள்ள ஒக்கலிய காப்பிலியர் சமூகத்தின் ஒரு பிரிவுடன் பங்காளி உறவு வைத்துள்ளனர். உழுகுடிகளாக பள்ளர் குலத்தினர் அதிகமாக உள்ள கிராமத்தில் வசிக்கும் ஆசாரிகளுடன் அப்பன் மகன் உறவு உள்ளது. இசுலாமிய சமூகத்தினருடன் திராவிட குடிகளாக நாயக்கர், பிறமலை கள்ளர், கோனார் சமூகத்தினர் மைத்துனர் உறவு முறையும் பள்ளர் பறையர் சமூகத்தினருடன் பங்காளி முறையும் இருப்பதை கிராமங்களில் பார்க்க முடியும்.  

தேனி மாவட்டமும் திண்டுக்கல் மாவட்டமும் இணையும் இடமான அ.வாடிப்படிப்பட்டி கிராமத்தில் கம்பளத்து நாயக்கரில் ஒரு பிரிவினருக்குறிய கோயிலில் பள்ளர் குலத்தில் பிறந்த ஒருவரை தெய்வமாக வழிபடும் பழக்கம் இன்றும் உள்ளது. இது குறித்து ஆய்வு மேற்கொண்ட காந்தி கிராமிய பல்கலை கழக பேராசிரியர் முனைவர் முத்தையாவிடம் பேசினோம்.



''கம்பளத்து நாயக்கர் சமூகத்தினர் கருநாடகப்பகுதியிலிருந்து இங்கு வரும் போது அரவக்குறிச்சி மலையில் உற்பத்தியாகும் மலட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளம் வடிந்த பின்னால் தங்கள் கொண்டு வந்த பொதிமாட்டு வண்டியை ஆற்ற்றில் இறக்கினார்கள். காட்டாறு வெள்ளத்தில் ஆற்றில் மணலுக்கடியில் சகதி அதிகமாக இருந்ததால் வண்டி சிக்கியது. அருகிலிருந்த பள்ள குடும்பன் தலைமையிலான பள்ளர் குல மக்கள் நாயக்கர்களுக்கு உதவியுள்ளார். அப்போது வண்டி மேடேறும் போது எப்படியோ பள்ள குடும்பன் இறந்து விடுகிறார். அவருடையை உறவினர்கள் பள்ள குடும்பனை அடக்கம் செய்கிறார்கள். தங்களை காப்பாற்றி உயிர் விட்ட பள்ள குடும்பன் நினைவாக அவரது கால் தடம் பட்ட மண்ணை எடுத்து வந்து அவர்கள் தங்கி இடமான வாடிப்பட்டியில் வழிபட்டுள்ளார்கள். காலப்போக்கில் இவர்களது மூதாதையர்களும் இறந்து விட அவர்களுடன் சேர்த்து பள்ளகுடும்பனையும் வழிபடுகிறார்கள். இந்த கம்மளத்து நாயக்கர்களில் பிரிந்து சென்று தென் மாவட்டங்களில் குடியேறிய குழுக்களும் பள்ள குடும்பன் பிடிமண்ணை எடுத்து சென்று அங்கும் வழிபடுகிறார்கள்'' எனச்சொன்னார்.

கம்பளத்து நாயக்கர் தொன்மம் குறித்து முனைவர் பட்டம் பெற்ற யாதவர் கல்லூரி பேராசிரியர் பாலுச்சாமியிடம் பேசினோம் ''வடக்கிருந்து வந்த நாயக்கர் குழுவிற்கு ஆவுலுசித்து என்பவர் தலைவராக இருந்து வழி நடத்தி வந்துள்ளார். அவரே மாடுகளை பழக்கும் தலைவர். இவரது நினைவாக இன்னும் ஆவுலு, ஆவுலுசித்து, சித்தாவுலு என கம்பளத்து நாயக்கர் குலத்தினர் பெயர் வைக்கிறார்கள்'' என்ற தகவலை சொன்னார்.

குலங்களுக்குள் நடந்த நிலப்பறிப்பு, அதிகார மேல்நிலையாக்கம், குலப்புனிதம் இவைகளால் குல மோதல்கள் ஆண்டாண்டுகாலமாக இறுக்க நிலையுடன் நிடிக்கிறது. ஆனால் ஒற்றுமையின் தொன்மங்கள் மட்டும் இன்னும் சாகாமல் வழிப்பாட்டாக உள்ளது.  

Monday 8 June 2020

பகதூர் ஷா ஜாபாரும் மதசார்பின்மையும்

 
                                                             விடுதலைப்போர்
 
செ.சண்முகசுந்தரம்

சிப்பாய் எழுச்சியில்(முதல் இந்திய சுதந்திரப் போரில்) பங்குகொண்ட சிப்பாய்களில் பெரும்பாலானோர் உயர்சாதி இந்துக்களாக இருந்தபோதிலும், ஏன் முகலாயப் பேரரசின் கடைசி மன்னனான பகதூர் ஷா ஜாபரிடம் போய் நின்றார்கள் என்று தெரியுமா உங்களுக்கு? இதற்கு விடை தெரியவேண்டுமானால் பகதூர் ஷா ஜாபரின் மதச்சார்பற்ற தன்மை குறித்து நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். பகதூர்ஷா கவித்துவ உள்ளம் கொண்ட ஒரு கவிஞர். மதசார்பற்றவர். சூஃபி ஞானி. ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியை தன் கண்ணெதிரே பார்த்துக் கொண்டிருந்தவர். இந்துக்களைக் காப்பற்றியவர். தீவிரவாத‌ இஸ்லாமியர்களின் கோரிக்கைகளுக்கும், உணர்வுகளுக்கும் ஒருபோதும் பலியாகாதவர். ஒரு சமயம் ஒரு இந்து, ஜாபரின் பிரதம மந்திரியான ஹப்பிம் ஹஸனுல்லாகான் மூலமாக தான் ஒரு இஸ்லாமியராக மாறவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தபோது, அந்த இந்துவை அரண்மனையிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டார். மற்றொரு சமயத்தில் 200 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் அரண்மனைக்கு முன்கூடி ஈத் பண்டிகை அன்று பசுவதை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தபோது, இஸ்லாமியர்களின் மதம் பசுவதையை வேண்டி நிற்கவில்லை என்று பதில் தந்தார். சன்னி பிரிவைச் சார்ந்த ஜாபர், ஷியா பிரிவினரின் பண்டிகையான முகரத்தை அரண்மனையில் கொண்டாடினார். ஜாபரின் அரண்மனை மருத்துவரான சாமன்லால் கிறித்துவ மதத்திற்கு மாறியபோது, உலமாக்கள் அவரை அரண்மனையில் இருந்து நீக்கக் கோரினர். மருத்துவரின் மத நம்பிக்கை என்பது அவரது தனிப்பட்ட நம்பிக்கை சார்ந்தது எனக் கூறி அக்கோரிக்கையை அவர் நிராகரித்தார். ஒரு இஸ்லாமிய அரசில் உண்மையான மதச்சார்பற்றத் தன்மையை பின்பற்றியவர்.
ஆனால் 21ம் நூற்றாண்டு நவீன இந்துத்வ ஜனநாயக அரசில், இஸ்லாமியர்கள் தங்கள் பெயரைச் சொன்னால், தொப்பி அணிந்து சென்றால் துப்பாக்கிச் சூடும், அடி உதைகளும் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றன.

சுளுந்தீ''யை பற்ற வைத்த கன்னிவாடி அரண்மனை (ஜமீன் = பாளையப்பட்டு)



''சுளுந்தீ''யை பற்ற வைத்த கன்னிவாடி அரண்மனை (ஜமீன் = பாளையப்பட்டு)
********************************************************************************


கன்னிவாடி அரண்மனை எனது ''சுளுந்தீ'' பெருங்கதைக்களத்தைத் தூக்கி நிறுத்திய இடம்.

மதுரை நாயக்கர் அரசின் படைத்தளம் இயங்கிய தளம் என்பதால் அரசின் அதிகார மையமாக மட்டுமல்லாது வைகை ஆற்றுக்கு வடக்கே தனி அரசு போல் செயல்பட்டது கன்னிவாடி அரண்மனை.

பிரிட்டீஷ் ஆட்சியை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மனின் படைத்தளபதி ஊமத்துரை மற்றும் சிவகங்கை சீனை மன்னர்களான மருது சகோதர்களுக்கு அடைக்களம் கொடுத்த குற்றத்திற்காக முதலில் காவு வாங்கப்பட்டது கன்னிவாடி பாளையப்பட்டு. இந்தப்பாளைப்பட்டு மீது வழக்கு தொடுத்த பிரிட்டீஷ் அரசு இதன் சொத்துக்கள் அனைத்தையும் கையகப்படுத்தி ஏசு சபையினருக்கு தானமாக வழங்கியது.பாளையப்பட்டு தலைவரான கதிரியப்பநாயக்கன் அவரது படைத்தளபதி தேவதானப்பட்டி கோடாங்கி பூசாரி நாயக்கன் ஆகியோரை தூக்கில் போட்டது.

ஜமீன்தார் குடியிருந்த அரண்மனையும் வழக்கில் சிக்க வைத்தனர். இதனால் அரண்மனை இருந்தும் அதில் வசிக்க முடியாமல் தனது முன்னோர்கள் கட்டிய அங்காளபரமேஸ்வரி கோயிலில் தங்கி இருந்தார் கடைசி அரண்மனையாரான அப்பயநாயக்கர். அக்கோயிலும் ஏலம் எடுக்கப்பட்ட வரைபட எல்லையில் போனதால் அதையும் இழந்தார்கள். ஏலம் எடுத்தவர்கள் அரண்மனையும் கோயிலையும் தரைமட்டமாக்கினார்கள். அதில் உள்ள அனைத்துகோப்புகளும் மண்ணோடு மண்ணாகிப்போனது.

எம்.ஜி.ஆர் மலைத்த அரண்மனையார்
*******************************************************
மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் திமுகவில் எம்.எல்.ஏவாக இருந்த காலத்தில் திண்டுக்கல் வந்தார். அப்பயநாயக்கரின் கதையை தெரிந்து இவரை சந்தித்தித்துள்ளார். ''உங்களுக்கு நிதி அளிக்கவும் சுதந்தர போராட்ட தியாகிக்கான ஊதியம் வழங்கிட உதவுவதாக'' சொல்லியுள்ளார். இதை மறுத்த அப்பயநாயக்கர் ''அரண்மனையார் கொடுத்துப் பழக்கப்பட்டவர்கள் கை நீட்டி வாங்கமாட்டார்கள்'' எனச்சொல்ல ''உங்கள் கதையையாவது சொல்லுங்கள் திரைப்படமாக எடுக்கிறேன். அதன் மூலம் கிடைக்கும் நிதியை முழுமையாக தங்களுக்கு வழங்குகிறேன்'' என்றும் கேட்டுள்ளார் எம்.ஜி.ஆர். ''கதையை சொல்லுகிறேன் சினிமா வேண்டுமானால் எடுங்கள் நிதியை ஏழை மக்களுக்கு வழங்குங்கள்'' என்று சொல்லியுள்ளார். இப்படிப்பட்ட குணம் கொண்ட அரண்மனையாரை சுமார் 2006ல் ஆனந்த விகடன் இதழுக்காகப் பேட்டி எடுக்கப்போனேன். அந்தச்சந்திப்பு தான் ''சுளுந்தீ'' என்ற கதைக்கு நெருப்பு மூட்டியது.

இடிந்த அரண்மனையை மட்டும் வழக்கில் விடுபட இடிந்த அரண்மனையை வாழ்ந்த இடத்தை பார்த்துப்பார்த்து நொந்து இத்து இருக்க இடமில்லாமல் அங்காளபரமேசுவரி கோவிலில் தங்கி இருந்தார். எம்.ஜி.ஆர் உதவுவதாக சொன்னதை கேட்டவுடன் ''அரண்மனையார் என்பது தனிப்பட்ட அதிகாரப் பதவி அல்ல மக்களின் தலைவர். மக்கள் சொத்துக்களைக் காப்பவன். இப்படித்தான் நான் அரண்மனை பட்டம் ஏற்பத்தற்கு முன்பு எனது வாத்தியாரான வள்ளுவன் பெரிய கருப்பணன், புலவன் பெரிய குப்புச்சாமி ஆகியோர் எனக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தார்கள். மக்கள் சொத்தைக் காத்தவன் கஞ்சிக்கு இல்லாமல் செத்தான். இருக்க இடமில்லாமல் கிடக்கிறான் என்ற அவச்சொல், அவகீர்த்தியை நான் கையேந்தி வாங்குவதன் மூலம் எனது முன்னோர்களுக்கு வந்து விடும். இதனால் எம்.ஜி.ஆர் மட்டுமல்ல பிறர் செய்திட வந்த உதவியை மறுத்தேன். நான் மநுதர்மத்தை மதித்து அரசாட்சி செய்வேன் என பட்டம் ஏற்றவன். எனது சிறுவயதிலே சொத்துக்கள் அனைத்தையும் பிரிட்டீஷார் கையப்படுத்தினார்கள். எனது முன்னோர்கள் பிரிட்டீஷாரை எதிர்த்தது இந்த மக்களுக்கு தெரியவில்லை என்பது மக்களின் குற்றம் இல்லை'' என பேட்டிகொடுத்தார். அவருக்கு நான் வாங்கிச்சென்ற பிஸ்கட் பாக்கெட்டை கொடுத்தேன். அதை வாங்க மறுத்து விட்டு மெல்ல எழுந்து கோவில் கிணற்றில் தண்ணீரை இறைத்து, ஒரு குவளையில் எடுத்து வந்து 'இதை மட்டுமே இந்த அரண்மனையார் கொடுக்கும் நிலையில் உள்ளேன்'' என நீட்டினார். இதுவே அவரின் தன்மானத்தின் அளவுகோள் என்பதைப் புரிந்து கொண்டேன்.

அப்போது அங்கு தனது மனைவுடன் வந்த சேர்வைகாரர் ஒருவர் அப்பயநாயக்கரை வணங்கி 'வீடுகட்டிக்கிருக்கேன் மரம் வேணும் அய்யா'' எனக்கேட்க இடிந்து கிடக்கும் அரண்மனையை கையைக்காட்டி சரக்கட்டைகளை எடுத்துக்கொண்டுபோ நல்லா இரு என சொல்லி அவரை வணங்கி இவர் அனுப்பி வைத்தார்.

கோபமாக முகத்தை வைத்திருந்தவர் நம்மை அழைத்து அரண்மனை அருகில் உள்ள ஒரு மாடத்தைக்காட்டி இது என்ன எனக்கேட்டார். சிறுகோவில் போல் தெரிந்ததால் கோவில் என்றோம். ''கோவில் இல்லை அரண்மனையார்களின் சவரம் செய்திடும் நாவித மாடம்' என அவர் சொல்ல விக்கிப்போனோம். நாவித மாடத்தில் உட்காந்தபடியே நாவிதம் செய்திடவே மாடம் அமைத்து வாழ்ந்த எனக்கு யாரிடமாவது கை நீட்ட மனம் வருமா ? என, எதிர் கேள்வி வைத்தார். நம்மிடம் அவருக்கான பதில் இல்லாமல் மௌனமானோம்.
ஆனந்த விகடன் பத்திரிக்கை மூலம் கிடைத்த நட்பில் சுளுந்தீ பெருங்கதைக்களத்தில் நான் சேகரித்த தகவல்களை அவ்வப்போது சொல்லி பதில் கேட்டேன். (நான் அவரைச் சந்திக்க துவங்கிய போது அவருக்கு எழுபத்தி ஒன்பது வயது ) மறுப்பதை மறுத்து பல அரண்மனை ரகசியங்களை மறுக்காமல் சொல்லி, அரண்மனையார்களுக்கு நாவிதர்களின் பங்கு என்ன என்னபதை சொல்லி உதவினார்.

சுளுந்தீ 2018 டிசம்பரில் அச்சேறுவதற்கு முன் அதன் டம்மியை எடுத்துக்கொண்டு அவரைச் சந்திக்க அவரின் உறவினரும் சில்லுவார்பட்டி எட்டு ஊர் நாட்டாமையும் பேராசிரியர் முனைவர் மனோகரனுடன் போனோம். அவரால் முழுமையாக என்னை நினைவுபடுத்தி அசைபோடமுடியவில்லை. நான் அவரை, அரண்மனையை எடுத்த படங்களை அவருக்கு கொடுத்த பின்பு ஓரளவுக்கு நினைவு நினைவு வந்தது. அவரின் வாழ்த்தினை பெற்று நூல் வந்த பின்னால் அவரிடம் கொடுக்கலாம் முடிவு செய்திருந்தோம். ஆனால் அவர் 14.02.2019 அன்று மாலை மறைந்து விட்டார்.

அரண்மனையாருக்கு மரியாதை செழுத்தி விட்டு, சுளுந்தீ நாவலை தளுகையாக அவரது உடலில் வைத்தோம். 'சுளுந்தீ' நூலிலின் அட்டைப்படத்தில் கன்னிவாடி அரண்மனையின் படத்தைப் பார்த்த அவரு உறவினர்கள் ''வாழ்ந்த இடம் சுவடு இல்லாமல் போனது' எனத்தெலுங்கில் சொல்லி அழுத அழுகை நம்மை இறுக்கமாக்கியது.

''அரண்மனையார் இறந்து விட்டால் அவர் ஊர் பிணம். அதை தூக்கி எறியூட்டும் வரை ஊராரே செய்வார்கள். எந்த சாத்திர சம்பிரதாயம் இல்லை. உறவுகள் பெயர் அளவுக்கு அழுது விளகி நிற்பார்கள். பிணத்தை பல்லக்கில் வைத்து அரண்மனை எல்லைக்கு கட்டுப்பட்ட ஊரார் மாற்றி மாற்றி தூக்கி செல்வார்கள். சுடுகாட்டில் எரிக்கும் பழக்கம் இல்லை . ஊரார் எங்கு சொல்லுகிறார்களோ அங்கு தான் புதைப்பார்கள்'' என அரண்மனையார் இறந்தால் என்ன செய்வீர்கள் என அவரிடம் பேட்டி எடுத்தது நினைவுக்கு வர அப்பயநாயக்கர் பிணமாக இருந்தாலும் நான் நடைபிணமாய் நடந்தேன்.

குறிப்பு
***********
கன்னிவாடி அரண்மனையாரின் உறவினரான தேவதானப்பட்டி சின்ன அரண்மனையாரான மூங்கிலாறு காமாட்சி அம்மன் கோவில் கோடாங்கி நாயக்கர் என்ற கோடாங்கி காமாட்சி நாயக்கர் மருது சகோதர்கள் மற்றும் திப்பு சுல்தான் படைக்கு வெடி தயாரித்த குற்றத்திற்காக இவரை மூங்கிலாறு காமாட்சி அம்மன் கோவில் முன்பாக இவர் நட்டு வளர்த்த புளியமரத்திலே பிரிட்டிஷ் அரசு தூக்கில் போட்டது. இவரைப்போன்றவர்களை சுதந்திரப்போராட்ட தியாகிகளாக அறிவிக்க அரசிடன் கோரிக்கை வைத்தார் பேராசிரியர் இராசயன். அது எடுபடாததால் வழக்கு தொடுத்துத்துள்ளார். அவர் உடல் மிகவும் நலமில்லாமல் உள்ளார். அவர் தொடுத்த வழக்கும் அவரது உடல் நலம் போலவே உள்ளது வருத்தமாகவுள்ளது.



[30/08, 8:58 pm] Muthu Nagu: http://kungumam.co.in/Articalinnerdetail.aspx…
இந்து ஆங்கிலம்
****************
[31/08, 6:13 am] Muthu Nagu: From the hotbed of conflict https://www.thehindu.com/…/r-muthunagu…/article29301111.ece…
இந்து தமிழ்
***********
https://www.hindutamil.in/news/literature/165551-.html

ஜல்லிகட்டு

                                                           
                                                            ஜல்லிகட்டு 




மனிதன் என்ற விலங்கு குழுக்களாக வாழ துவங்கிய காலத்திலிருந்தே வேட்டையாடுதல் துவங்கி விட்டதாக மானுடவியல் ஆய்வாளர்களளின் ஆய்வின் முடிவு.அதன் அடிப்படையில் வேட்டையாட, அவனை காக்க அவன் பழக்கிய முதல் விலங்கு, நாய். ''இதுவே மனிதன் முதல் படை'' என தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ள தியேட்டர் பாஸ்கரன் அதற்கான கல்வெட்டு ஆதரங்களை கொடுத்துள்ளார். குழு வாழ்க்கை முறையிலிருந்து அடுத்த பரிணாமானது அரசு அல்லது தலைமை அடிப்படையிலான குழு வாழ்க்கை இங்கு தான் உற்பத்தி முறை துவங்குவதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.உற்பத்தி முறைக்கு முதல் தேவையான காரணி மாடு அதை பழக்கி விவசாய பணிகளுக்கு பயன்படுத்தினான். எதிர் குழுக்களிடமிருந்து தன்னையும் உற்பத்திக்கு பயன்படும் மாடுகளை காத்திட காளைமாடுகளை முட்ட பழக்கி எதிரியை தாக்க கற்று கொடுத்தான்.இப்படி உருவாக்கப்பட்டது தான் ' காளைபடை ' . இந்த காளை படையை அடக்குவது அன்றைய போர் முறையில் உயரிதாக கருதப்படுகிறது. இதை தான் ஆணீறை கவருதல் பெண்டீர் கொள்தல். காளைகளை அடக்கிய போரில் மாண்ட வீரர்களுக்கு நடுகற் சிற்பங்களும், புடை சிற்பங்களும் அதிகமாக குறிப்பாக தென் இந்தியாவில் கிடைக்கிறது (ஆதராம் தென் இந்திய நடுகற்கள் ஆசிரியர் ராமசந்திரன்) .

விஜநகர ஆட்சியாளர்கள் பாண்டிய மன்னில் போர் தொடுத்த போது அரச்சாட்சியை வெற்றி பெற்றாலும் மக்களை வென்று நிலங்களை கையகப்படுத்த விடாமல் தடுத்தது காளை மற்றும் நாய் படைகளே.இதை இரண்டாம் புக்கரின் மனைவி கங்காதேவி எழுதிய மதுரா விஜயத்தில் சிறு குறிப்பு கிடைக்கிறது.இதனால் காளை படையில் உள்ள தொட்டிய கம்பளத்து நாயக்கர் மற்றும் ஒக்கலிய சமூகத்தினரை விஜயநகர அரசு தனது படையுடன் அழைத்து வந்து தமிழகத்தில் உள்ள காளை படைகளை தோற்கடித்து நிலங்களை கைப்பற்றியது.இந்த வெற்றியை இன்றும் கம்பளத்தார்ஒக்கலிக்கர் சலகெருது விழாவாகவும் எருது ஓட்டுதல் எருது கட்டுதல் நடத்துகிறார்கள் என்பது நுண்ணிய வரலாறு.(ஆதாரம் = கம்பளத்து நாயக்கர் சமூக வரலாறு ஆசிரிய பேரா.முத்தையா காந்திக்கிராம பல்கலைகழகம்) இதனால் தெழுங்கு பேசும் தொட்டிய நாயக்கர்களில் எத்திராவுலு என்ற பெயர்கள் வைத்திருப்பதை காண முடிகிறது. இம்மக்கள் குடியிருக்கும் இடம் மரிக்குண்டு மரித்தூர் மரிக்குடி என்றும் உள்ளது. மரி என்பது தொழுவம் என்று பொருள் . (இன்றும் கரூர் மாவட்டத்தில் நடக்கும் எருது விரட்டில் அதிகம் பெண்கள் கலந்து போர் வீரனை போல ஓடி வருவதை பார்க்கலாம்.அரசுகளின் வளர்ச்சி கிராமங்கள் வரை வளர்ந்ததால் நாய் காளை படைகளின் தேவை அற்றதானது.அரசுக்கு காளை நாய்களை விட பலமான உயரமான யானை படைகள் வந்தது.அடுத்து வேகமாக ஓடக்கூடிய குதிரை படை.இதனால் காளை படையாக இருந்து காவல் காத்த காளைகள் ஊர் பொது வெளி உள்ள கோயிலில் கட்டப்பட்டதும்,மக்களிடம் ஊடுரிவி உள்ள பிராமணியத்தால் காளை படை காளை 'கோயில் காளை' யாக பெயர் மாறியது.இந்த காளைப்படைகளின் எச்சமே பூம்பூம் மாடு என தனது ஆய்வில் சொல்லுகிறார் வனத்துறை உயர் அலுவலர் அரவரசன். ஆக மஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டு,எருது விரட்டு இவைகள் மானுடம் சார்ந்த வரலாற்றினை தோற்றி இருக்கிற

சீமைகருவேல்மரம் அரசியல்+அறிவியல்




                                       சீமைகருவேல்மரம் அரசியல்+அறிவியல்
                                                       
தோழர்களே நண்பர்களே,தோழர்களே

சீமைகருவேல் (அக்கேசிய ஜூலிபிரா) ''நஞ்சுமரம், நிலத்தடி நீரை உறிஞ்சிவிடும், காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும், உடனே அழிக்காவிட்டால், இந்த நாடே தீங்கில் அழிந்துவிடும்'' என்ற பீதியாக ? ! பரப்பட்ட தகவல் காரணமாக, தகவலின் அறிவியல் உண்மைகளை ஆராயாமல், நீதிமன்றமும் தடை செய்தது. அழிக்க ஆணையிட்டு பல அறிவியல் ? மேதைகளும் அந்த தீர்ப்பை ஆதரித்து டிவி, முகநூலில் பிரச்சாரமே செய்து மக்களை முட்டாக்கினார்கள். தற்போது நீதி மன்ற தீர்ப்பை  நீதி மன்றமே நிறுத்தியுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு என்ன மாதிரி வரும் என்பது பல நூறு ஆயிரம் கேள்வி ?

01. சீமைக்கருவேலை மரங்களை வேரோடு அழித்தால் தான், சமையல் எரிவாயு (கேஸ்) கம்பெனிகளால் கிராமத்திற்குள் இன்னும் புகமுடியும், இந்தியா 70 சதவிகிதம் கிராமங்களால் ஆனது. அங்கே புகாமல், இவர்களுக்கு இலாபம் இல்லை.

02. ரூ 150க்கு துவங்கிய 230 க்கு வாங்கி உபயோகித்த (மீத்தேன் வாய்வு கூண்டு) கேஸ், இன்றைக்கு நேரடி மானியத்தை உங்களுக்கு கொடு்த்து விட்டு அதன் விலையை தள்ளுபடி போக ரூ 570. தள்ளுபடி இல்லாத விலை ரூ 800 க்கு மேல் செல்ல வாய்ப்பு. அப்படி என்றால் 60 கோடி மக்களை இந்த கேஸ் அடுப்பு சென்றால் தான் கேஸ் கம்பெனிகளுக்கு வருமானம்.

03. வெறும் மரத்தை வெட்டி விற்றால் டன்க்கு ரூ 2500, கரியாக மாற்றி வித்தால் ரூ 12000- 14000, அதை ஆக்டிவேட்டு கார்பனாக மற்றி சார்க்கோல்லாக மாற்றி வித்தால் ரூ 25000 - ரூ 75000, . தேங்காய் ஒட்டில் இருந்து இதை ஆக்டிவேட்டு கார்பனாக மற்றி சார்க்கோல்லாக மாற்றி வித்தால் ரூ 1,50,000 - ரூ 1,75,000, இதை 300 மெஸ்க்கு பவுடராக்கி கார்பன் ஆக மாற்றினால் இதைவிட இரண்டு, மூன்று மடங்கு விலை அதிகம். இது மருத்துவ குணத்திற்கும், தண்ணீர் சுத்திகரிப்பிற்கான தொழில் நுட்பத்திற்கும், மற்றும் இது போன்ற பல்வேறு மருத்து பொருள்களுக்கு பயன்படுத முடியும் (ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது), இதை ஏற்றுமதி செய்திடலாம் - டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா என்று கேட்கிறானே அது போல. திரும்பவும் அது உங்களிடம் வரும் வெளிநாட்டில் இருந்து. இதை இந்த தமிழக அரசு செய்யுமா, சீமைக்கருவேல மரத்தை ஒழிக்க புறப்பட்டிருக்கும் நண்பர்களுக்கு இது தெரியுமா, இல்லை வெட்டியவர்கள் யாரும் இதை செய்து அந்த கிராமத்தில் தொழிற்சாலையை ஏற்படுத்தி மதிப்பு கூட்டி வேலை வாய்ப்பை, பொருளாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கையில் ஈடு பட்டிருக்கிறார்ள் இல்லை. சீமைக்கருவேலை மரத்தை வேரோடு அழிக்க வேண்டும் என்று இவர்கள் சொல்லும் எந்த காரணமும் அறிவியல் முறைப்படி நீருபிக்கவில்லை.  ஆகவே நீதி மன்ற தீர்ப்பை உள்நோக்கம் கற்பிக்க கூடாது என்ற சட்டம் சொல்லுகிறது ஆனால் இந்த தீர்ப்பு எந்த நோக்கம் கொண்டது என்பதை நீதிமன்றமே சொல்லட்டும்.

04. சீமைக்கருவேல இலைகளுக்கு ஒரு தனி குணம் இருக்கிறது, அது Anti microbial and Anto bacterial property இருக்கிறது இதன் காரணமாக பேக்ட்ரீயா, மைக்ரோப்ஸ் வராமல் இருக்கிறது. அதன் மூலம் உணவுப்பொருள்கள் கெட்டுவிடாமல் இருப்பதற்கு பாதுகாப்பு பிரிசெர்வேட்டிவாக, இராசாயண பொருள்களுக்கு பதில் இதை உபயோகித்தால் அதன் மூலம் ஏற்றுமதி வருமானம், பொருளாதாரம் பெருகும், வேலை வாய்ப்பு கிடைக்கும்.

05. சீமைக்கருவேலை மரத்தின் இலைகள் மூலம் ஒளிரக்கூடிய பெயிண்ட் உற்பத்தி செய்ய முடியும்.இந்த ஆய்வினை சிவகாசி மெப்கோ கல்லூரி ஆராய்ச்சி மாணவி ஒருவர் அப்துல்காலாமிடம் நீருபித்துள்ளார்.

06. சீமைக்கருவேல் மரங்களின் காய்களில் இருந்து விலங்குகளுக்கு சத்தான உணவுப்பொருள்களை உற்பத்தி செய்ய முடிகிறது. சீமைக்கருவேல் காய் நெத்து இவைகளை சாப்பிடும் ஆடு நல்ல சத்தாக வளர்கிறது கறவை மாடுகள் பால் அதிகம் கறக்கிறது ,தீவன பற்றாக்குறையை சீமைக்கருவேல் காய் நெத்து குறைக்கிறது.

07. சீமைக்கருவேல் மரத்தில் இருந்து பிர்க்கெட் போட்டு, அதை எரி பொருளாக மாற்றும் தொழில் நுட்பம், அதன் மூலம் இன்றைக்கு அதன் எரிசக்தி திறன் அதிகரித்து மின்சாரம் உற்பத்தி பண்ணும் திறன் உள்ள இந்த சீமைக்கருவேல் மரங்களை அதிகமான குஜராத்தி கம்பெனிகள், வட இந்திய கம்பெனிகள், இதை மதிப்பு கூட்டி, மின்சாரம் தயாரிப்பதற்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறார்கள். (அதானி குழுமத்திடன் சோலார் மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கவே சீமை கருவேல் மரங்கள் அழிக்கபட்டன என்ற செய்தியை மறுத்திடவும் முடியவில்லை)

08.தமிழ்நாட்டில் சும்மார் 12,620 பஞ்சாயத்துகள் உள்ளன. அப்படியென்றால் சீமைக்கருவேலை மரத்தை வெட்டி அதன் மூலம் கமார் 12,620 மெகா வாட் மின்சாரத்தை நம்மால் எளிதில் மின் உற்பத்தி செய்ய இயலும். இதன் மூலம் நம் மாநிலத்திற்கு தேவையான மின்சாரத்தை தயாரிப்பது மட்டும் அல்லாமல் மற்ற மாநிலங்களுக்கும் மின்சாரம் அளிக்க முடியும். இதன் உற்பத்தி செலவு ரூ 2.50 முதல் ரூ 4.20 - மின்சாரத்தை விற்பனை விலை ரூ 6 முதல் ரூ 10 வரை அரசிற்கும் தனியாருக்கும் விற்பனை செய்யலாம். ஒரு மணி நேரத்திற்கு தேவைப்படும் எரி பொருள் 1000 கிலோ. ஒரு நாளுக்கான உறபத்தி செலவு ரூ 60,000,ஒரு நாளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு 18000 யூனிட்கள்,மின்சார விற்பனை விலை ரூ.7 விதம் ஒரு நாளிற்கு ரூ.126000 வருமானம்.ஒரு நாளில் கிடைக்கும் நிகர லாபம் ஒரு நாளிற்கு ரூ. 66000.ஒரு வருடத்திற்கு கிடைக்கும் லாபம் (330 நாள்) ரூ. 2,17,80,000.முதலீட்டை திரும்ப பெரும் கால அளவு 20 ந்தனையும் செய்ய வேண்டுமென்றால் அதற்கு அறிவார்ந்த அரசு வேண்டும். அதன் மூலம், சீமைக்கருவேலம் பல் வேறு பயன்பாட்டிற்கு வரும். இதன் மூலம் தமிழ்நாட்டின் பொருளாதாரம் உயரும், வேலை வாய்ப்பு பெருகும்.

சீமைகருவேல் மரத்தால் தீமை என்பது புளியமரத்தின் (புளிய மரத்தில் 28 நாள் தொடந்து படுத்திருந்தால் கட்டாயம் தோல் மற்றும் மூட்டு வலி வரும்) தீமையை விட அதிகம் என்பதை அறிய, சீமைகருவேல் விறகினால் மின்சாரம் தயாரித்தால் பூமி சூடாகும் என்பதை ஏற்றால் அனல் மின்சாரம் தயாரிக்கப்படும் நிலக்கரியால் பூமி வெப்பமாவதை தடுக்க வழி சொல்லி விட்டு இதை எதிர்க்கலாம். (ஆக நமது அரசின் கலப்பு பொருளாதர கொள்ளைதான், இந்த சிக்கலுக்கு காரணம்.ஆக நமக்கு பொருளதார கொள்கை என்பதை பற்றி தெரிந்து கொள்ளாத வரை இப்படியான சிக்கலை சந்தித்து கொண்டே இருப்போம் என்பது மட்டும் உறுதி)

சீமைக்கருவேல் மரங்கள் அதிகமாக உள்ள பகுதி பழைய ஒன்றுபட்ட இராமநாதபுர மாவட்டமும், திருநெல்வேலியில் உள்ள புறநகர் தாலுகா, பழைய மதுரை மாவட்டமான திண்டுக்கலில் குறைவாகவும், மதுரை புறநகர் பகுதியான மேலூர், பேரையூர் தலுகா, மற்றும் திருமங்கலத்தை அடுத்துள்ள கல்லிக்குடி ஒன்றியப்பகுதி மட்டுமே .இந்த பகுதியில் 1898 அரசு பசலி பதிவின் படி தரிசு, மானாவாரி எனவும்,கண்மாய் அருகில் உள்ள கிணறுகளில் ஒரு போக சாகுபடி நடதுள்ளதாகவும் இருந்துள்ளதை வருவாய்துறை பதிவுகள் தெரிவிக்கிறது. அப்படியானால் இந்த பகுதியில் முன்னால் முதல்வர் காமராசர் கொண்டு வந்த சீமைக்கருவேல் மரத்தை அழித்து என்ன பயிரிட முடியும் என அரசு சொல்லுவதை விட நீதிமன்றமும் திரு.வைகோவும் சொல்லுவார்களா? (பலநூறு நீதி மன்ற தீர்ப்புகள் நடைமுறை படுத்தாமல் கிடப்பில் உள்ளதும் பல நூறு கண்டம்ட் அப் கோர்ட் ஆன தீர்ப்புகள் உள்ளன.இவைகளுக்கெல்லாம் இந்த நீதி மன்ற சிவப்பு விளக்கினை சுற்றி சழன்று தீர்ப்பை நடைமுறைப்படுத்தவரவில்லை ? என கேட்க தெருவிற்கு வரவில்லை ஆனால் சீமைகருவேல் மரத்திற்கு மட்டும் வந்தது / இது பற்றி கருத்து சொல்ல நமக்கு துப்பில்லை என்பதை மறந்து விடதீர்கள் தோழார்களே)




                            வெடிக்கு தடை நீடிப்பது சரியா? 

அரசு உயரிய பதிவியில், அல்லது மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவன் இறந்தால் வெடி வெடித்து மரியாதை செய்து அடக்கம் செய்வார்கள்.
16ம் நூற்றாண்டில் பாமினி சுல்தான்கள் ஆட்சி செய்த இடங்களில் (தற்போதைய ஆந்திர கருநாடக) தலைவர்களை வரவேற்க, வழி அனுப்ப வெடி வெடித்துளார்கள். இவர்களைப் போலவே தில்லி சுல்தான்களும், தமிழகத்தை ஆண்ட நாயக்கர் ஆட்சியிலும் வெடி வெடித்து வரவேற்ற வரலாற்று பதிவுகள் உள்ளன. இதன் அடிப்படையிலே நமது வீட்டு விழாக்களில் வெடி போடும் பழக்கம் வந்தது. வெடிப்போடுவதை தடுத்த ஆணை இட்ட நீதி? மன்றம் இந்த தகவல்களை ஏன் கருத்தில் கொள்ளவில்லை.

கனிம வளக் காவலர்கள்?

                            

                                      கனிம வளக் காவலர்கள்?
                          *************************************

இந்தியாவை ஆண்ட பிரிட்டீசார் கனிம வளங்கள் இங்கு கொட்டிக்கிடப்பதை குறிப்பாக அகத்தியர் மலையில் இருப்பதை கண்டறிந்தவர் மொழி அறிஞராக அறியப்படும் திரு. சி.யூ. போப். அவர் தான் தாது மணலை கண்டறிந்தார். அதன் நீட்சியே ஆளும் ஆண்ட அரசுளின் தாது திருட்டு. 

இதே போல் அகத்தியர் மலை என அறியப்படும் மேற்குத்தொடர்ச்சி மலை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என ஏசு சபை பாதிரியார் ஆல்வேரேஜ் குறிப்பிட்டு 'இந்த மலைகளில் வைரமும் வைடூரியமும், கொட்டிக்கிட்கிறது' என தமிழக மக்களின் பட்டறிவை வைத்து குறிப்பெழுதியுள்ளார். அதன் பின் ஜியலாஸ்ட் விஞ்ஞானி வி . பில் என்பவர் மூலம் ஆய்வு செய்து இந்தியன் எக்கானாமி ஆப் நேட்சுரல் சோர்ஸ் என்ற அறிக்கை தாக்கல் செய்தார். இந்த வளங்களை கொள்ளையடித்திடவே, (காட் டங்கல், தற்போது WTO) ஒப்பந்தந்தத் திட்டத்தில், பன்மொழிப் புலவன் மறைந்த பிரதமர் திரு. நரசிம்மராவும், உலக பொருளாதார நிபுணன் முனைவர் முன்னால் பிரதமர் திரு. மன்மோகன்சிங்கும் கைரேகை வைத்து வேதாந்தா நிறுவனத்தை உலகளவில் புரொமோட் செய்தார்கள். 

தமிழகத்தை ஆண்ட நாயக்கர் அரசு அழித்த காடுகளின் மிச்ச மீதியை பிரிட்டீஷார் அழித்தனர். இனி காட் மூலம் உலகமுழுவதும் உள்ள சனங்களுக்காக இந்திய ஒன்றியத்தில் உள்ள அரசு துப்பாக்கி முனையில் அழிக்கும். எம் தோழர்கள் மட்டுமே உயிர்பலியாவார்கள். 

இந்திய துணைக்கண்டத்தில் நடந்த தேர்தல்களில் கட்சிகளின் அறிக்கையை படித்துப்பாருங்கள் அனைத்து கட்சியும் ஒரே மாதிரியாக 'தொழில் வளர்ச்சி' என்ற ஒற்றைச் சொல்லை மட்டுமே விதவிதமான வார்த்தைச் சொல்லாடல்களை பயன்படுத்தி நூறு பக்கங்களை நிரப்பி இருப்பார்கள். இந்த தொழில் வளர்ச்சின் உச்சம் தான் தூத்துக்குடி தாமிர தொழில்சாலை போராட்ட களத்தில் சாவு. 

கொடைக்கானலில் தமிழக முதல்வர் மறைந்த திரு. எம்.ஜி. இராமச்சந்திரன் ஆட்சியில் பாதரசம் மூலம் தயாரிக்கப்படும் தெர்மல் குடுவை தாயாரிப்பு நிறுவனம் துவக்கப்பட்டது. உலமே தடை செய்ததை மறைந்த பிரதமர் இந்திராகாந்தி எம்.ஜி. இராமச்சந்திரன்  கூட்டுடன் துவக்கப்பட்டது. 

சிறுமுகை விஸ்காஸ் நிறுவனத்தின் செயற்கை சாயப்பட்டரை, திரு. இராசீவுகாந்தி அவர்கள் புண்ணியத்தில் நர்மதை ஆற்றங்கரையில் திரு. சிந்தியா குடும்பத்தாரின் விமல் காட்டன் சில்க்ஸ் சாய பட்டரை இப்படி பட்டியல் போடலாம். இவை இந்திய பொருளதாரத்தையும், நமது மக்களுக்கும் எந்தளவுக்கு வேலை வாய்ப்பை கொடுத்தது என்ற புள்ளிவிபரம் 05% விழுக்காடு கூட பயன்தரும்படியாக இல்லை. 

கிராமப் பொருளாதரத்தை மறு கட்டமை செய்திட வேண்டிய கட்டாயத் தேவை இந்திய ஒன்றியத்திற்கு தற்போதய தேவையாக இருக்கிறது. கிராம பொருளாதரம் என்றவுடன் காந்திய பொருளாதாரம் என ஒதுக்கிவிடாமல் அதை ஒத்திசையுள்ள கருத்துக்களை கையில் எடுக்க வேண்டிய தேவையுள்ளது.

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...