Search This Blog

Wednesday 16 December 2020

கொரானாவும் குலக்கல்வியும்

 

 

                                                             கொரானாவும் குலக்கல்வியும் ****************************************************************************************************

 

உலகை ஆளும் *காட்* ஒப்பந்த முதலாளிகளின் அரசுகள், ஆங்கில மருத்துவத்துறையினரின் உதவியுடன் *கொரானா* என்ற பித்தலாட்டத்தைச் சொல்லியே ஓராண்டு காலம் ஓடிவிட்டது. இதன் தாக்கம் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இருக்கும் என்பது அவர்களின் மூலையான திரு. பில்கேட் அவர்களின் அறிக்கையிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

 

சிறு, குறு நிறுவனங்களை மூடவைத்து பெரும் முதலாளிகளிடம் இவர்களை *பணியாளர்களாக* ஒப்படைப்பதே உலக முதலாளிகளில் இலக்கு என்பதை நடப்பதும், வரும் அறிக்கைகளும், ஆளும் அரசுகளின் செயல்பாடுகளும் தெள்ளத்தெளிவாகப் புரியவைக்கிறது.

 

தொழில் நிறுவனங்கள், அதன் சார்ந்த தொழில்கள் குறிப்பாக சரக்குந்து போக்குவரத்து, தொடர் வண்டி, சரக்குப்கப்பல், சரக்கு விமான போக்குவரத்து அதன் சார்புடையை தொழில் தொழிலாளர்களின் நிலை தலைகீழாக மாறிவிட்டது. வேளாண்மை கூலித்தொழிலாளர்களின் நிலை சொல்ல இயலாத இடத்தில் உள்ளது.

 

 'கடந்த ஆறுமாதத்தில் உற்பத்தி என்பது உலகளவில் தேக்கநிலையில் உள்ளது. இதெல்லாம் சரிசெய்திட இயலும் அல்லது சிறுமுதலாளிகளை பெரும் முதலாளிகள் விழுங்கி சரி செய்து விடுவார்கள்' என்றே பொருளாதார வல்லுனர்களின் தெளிவான ஆய்வாக பொருளாதார ஏடுகளில் எழுதியும், பேசியும் வருகிறார்கள். 

 

குலக்கல்விக்கு வித்திடும் கொரானா?

***********************************************************************************

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் வளரும் தலைமுறையான கிராமப்புற பள்ளி, கல்லூரி மாணவர்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதே கேள்வி மேல் கேள்வியாக உள்ளது. கடந்த எட்டு மாதத்தில் கிராமப்புற மாணவர்கள் தங்களது குடும்பத்தினரின் குலத்தொழில் எதுவாக உள்ளதோ அதனை செய்திடத்துவங்கி விட்டனர்.

 

குலத்தொழில்களில் சமூக இழிவாக கருதும் தொழிகளான சலவை, முடிவெட்டுதல், செருப்பு தைத்தலை பேட்டா நிறுவனம் மூலம் ஒழித்திட துவங்கி வைத்தால் தற்போது அத்தொழிலை தொழிலை உற்பத்தி செய்திட முடியாத நிலையை உருவாக்கி விட்டார்கள். வயதானவர்கள் மட்டும் என்ன செய்துவது என தக்குளியைப்பிடித்து வருகிறார்கள். திருவிழா, இறப்பு சடங்களில் பறையடித்தல், ராஜா ராணி வேடம் கட்டி ஆடும் ஆட்டக்காரர்கள், களைக்கூத்தாடிகள், கலைஞர்கள், நையாண்டி மேளம் வாசிப்பவர்கள், வேளாண்மை குடிகள் தங்களது குழந்தைகளை இத்தொழிலிருந்து விடுபட்டு மேம்பாடு செய்திடவே கல்வி என்ற ஒன்றை தேர்வு செய்கிறார்கள்.  'நம்மோடு இந்த கண்றாவி முடியட்டும்' என நினைத்தார்கள். அதற்காக அவர்கள் பல வடிவில் சுயத்தை இழந்துள்ளார்கள் என்பதை அறிந்த செய்தியே. ஆனால் இந்த கொரானா என்ற நோயினை காரணம் காட்டி பள்ளி கல்லூரிகளை திறக்காமல் வைப்பதன் மூலம் இம் மாணவர்கள் எப்படி படிக்கிறார்கள் என்பதை நேரில் விசாரணை செய்ததில் 'வலுத்தது வாழும்' என்ற கோட்பாடு மட்டுமே தெளிவாக தெரிகிறது. பெரும்பான்மையானோர் மாடு மேய்த்தலும் குலத்தொழிலையும் செய்து வருகிறார்கள்.

 

 

#கொரானா நோயல்ல!# *கொள்கை

*****************************************************************************************************

'கொரானா நோய் ஒன்று இல்லை' என உலகம் முழுவதும் பல மருத்துவ அறிஞர்கள் சொல்லி வாதித்து வருகிறார்கள். ஆனால் உலகளவில் அரசுகளின் முடிவு என்பது காட் ஒப்பந்தப்படியே என்பதால் அது #கொரானா நோயல்ல!# *கொரானாகொள்கை* என்பது  தெளிவு. இதனால் கொள்கை முடிவை நோக்கியே அரசுகள் நகரும் என்பதில் ஐயமில்லை.

 

இதன்படியே தனியார் துறைகளுக்கான கடந்த கால அரசுகளின் முடிவுகளின்படியே தற்கால அரசுகளும் கொள்கை முடிவோடு அரசின் கோப்புகளை நகர்த்துகிறது. அறிவுலகத்தின் மூலம் உலக பணக்காரான பில்கேட்ஸ் என்பவர் 'இன்னும் ஆறுமாதத்திற்கு கொரானா பயங்கரமாக தாக்கும்'' என்று சொன்னதை உற்றுக்கவனித்தாக வேண்டும்.

 

''2014ம் ஆண்டிற்குள் அரசு மற்றும் தனியார் துறைகளில் இண்டர்நெட் என்றழைக்கப்படும் ஆன்லைன் மூலம் 50% மாற்றம் கொண்டுவரப்படும். இந்த கொள்கையும் எப்படி அமையும் என்பது முறையான முடிவற்று உள்ளது. எதுவும் யாருக்கு தெரியாது. யார் உத்தரவிடுகிறார்கள் எதனால் இந்த உத்தரவு வருகிறது என்பதை கேட்டால் யாரிடமும் பதில் இல்லை, என்ன மாதிரியான உத்தரவு வரும் எப்போது வரும் என்பதெல்லாம் சொல்ல முடியாத நிலையிலே உள்ளோம்'' என தமிழக அரசின் *கீ* போஸ்ட் ஐ.ஏ.எஸ் ஆப்பீசர்கள் சொல்லுவதை கேட்கும் போது கொரொனாகொள்கையின் வீரியத்தை உள்வாங்கிக்கொள்ள முடிகிறது.

 

 

கொரானோ குறைந்தன் மர்மம் என்ன.

*****************************************************************************************************

2020 ஆண்டு மே மாதங்களுக்கு முன்பு கொரொனா நோயினை எப்படி கண்டறிந்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. வெளியூரிலிருந்து வந்தவர்களுக்கு இந்த நோய் இருப்பதாகச் சொல்லுவார்கள். அவர்களின் உறவினர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது போல் அரசு அதிகாரிகளே தடுப்புகட்டி நோய் தாக்குதல் உள்ளானவராக கருத்தப்படும் குடும்பத்தினர் வீட்டில் ஸ்டிக்கர், யாரும் விட்டு வெளியே வரக்கூடாதளவிற்கு காவல்துறை பாதுகாப்பு இப்படியான வித்தைகளை பார்த்தோம். இந்த வித்தைகள் அனைத்தும் இல்லாததால் குறைந்தது என்பதை பணத்தை முதன் முதலில் பார்க்கும் அல்லது பணத்தாலே விளையாடும் தலைமுறைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர்களது மனநிலை போலவே விஞ்ஞானத்தை கொள்கையாகக்கொண்ட கட்சிகள் அமைப்புகள் கொரானா கொள்கைக்கு ஒத்துசங்கூதுவது என்னவிதமான கொள்கை என்பது அவர்களுக்கே வெளிச்சம். கடந்த காலங்களில் குலக்கல்வி என கொதித்த நாம் கொரானா  மூலம் குலக்கல்வி நடக்கப்போவது அறியாதவர்களாக இருப்பது நடிப்பு என்றே தோன்றுகிறது.

 

 *

செல்வி ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது கோயில்களில் ஆடுகோழி வெட்ட தடை சட்டம் கொண்டு வந்தார். அதனை ஆதரித்து காஞ்சிபுரத்தில் இயங்கும் சங்கர மடமும், தமிழகத்தில் இயங்கும் பகுத்தறிவை கொள்கை முடிவாக கொண்ட அமைப்பும் அறிக்கை கொடுத்தது.

 *

பொதுவுடமை கட்சியினர் தடை செய்யப்பட்ட காலங்களில் மருத்துவத்தை எளிதாக தெரிந்து கொண்டு தலைமறைவு வாழ்க்கைக்கு பயன்படும் எனக்கருதியே ஆங்கில மருத்துவத்தை ஒத்த ஹோமியோபதியை தேர்ந்தெடுத்தார்கள். அதன் விளைவாக தமிழகத்தில் சித்தமருத்தும் கொள்கை சார்புடையோரிடமிருந்து விலகிப்போனது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிளர்ந்தெடுந்த இயற்கை வேளாண்மை பேசிய குழுக்களும் அக்குபஞ்சர் முறையை முதன்மைப்படுத்தியதால் இந்த மண்ணிலிருந்த சித்தமருத்துவம் அக்குழுக்களிடமும் விலகிப்போனது.  இதைப்போலவே முதலாளித்துவத்தை எதிர்க்கும் கொள்கைசார் அணியினர் எதை எதிர்ப்பது எனத்தெரியாமல் இருப்பதால் அவர்களை *கொரானகொள்கைவாதி*கள் என காலம் அறிவிக்கும். குலக்கல்வி முறையும் அடிமை முறையும் தளைத்தோங்கும். வாழ்க டங்கள் குழு வாழ்க காட் ஒப்பந்தம்.  

 

 

 

 

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...