Search This Blog

Showing posts with label மாட்டுக்கறி அரசியல். Show all posts
Showing posts with label மாட்டுக்கறி அரசியல். Show all posts

Monday, 12 April 2021

மாட்டுக்கறி

 

                            மாடு

மாடு அரசியல் பா. கொண்டு புதிய சட்டத்தால் இன்று விவாதப்பொருளாகி விட்டது. இதன் வரலாற்றை சற்று பின் நோக்கி பார்ப்போம்.

ஔரங்கசீப் தில்லி சுல்தானாக (மன்னன்) ஆட்சி செய்த போது போபால் நகரில் உள்ள சைவ மடமான காசி மடத்தை சேர்ந்த சாமியார்கள் 1000 காசுகளுடன் சென்று சுல்தான் ஔரங்கசீ அவர்களை வணங்கி ''மாடுகள் குறைந்து விட்டது ஆகவே மாட்டினை கறிக்காக கொள்ளுவதை குறைக்க ஆவண செய்திட'' வேண்டினார்கள். இந்த கோரிக்கை ஏற்ற ஔரங்கசீப் மாடுகள் கறிக்காக வெட்டுவதை குறைப்பதாக ஆணையிட்டார்.

அதற்கடுத்து பிரிட்டீஷ் இந்தியாவில் கறிக்காக மாடுகள் கொல்லைப்படுவது குறித்து இங்கிலாந்து பாரளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை இல்லை. பிரிட்டீஷ் இந்தியாவில் திரு. பாலகங்காதரத்திலகர் மாடுகளைக் காக்க வேண்டித்தான் முதன் முதலாக கொல்கத்தாவில் போராட்டம் நடத்தினார். இதுவும் விடுதலைப்போராட்டமாக வரலாற்றாக உள்ளது. சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் - ல் இருந்த சனாதனவாதிகள் மாட்டு அரசியலை தொடர்ந்து கையிலெடுத்து வந்தார்கள். இதன் தொடர்ச்சியாகவே பசுவதை சட்டம் காங்கிரஸ் அரசாங்கத்தால் 1968ல் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் ''மாநில அரசு விருப்பப்பட்டால் நிறைவேற்றலாம்'' என சரத்து உள்ளது.

 

தற்போது விலங்குகள் நல அமைப்பு (பீட்டா), ''விலங்குகள் வதைக்கப்படுவதாக'' 1994ல் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் ''யானைகளை வனத்திற்குள் மரங்கள் தூக்கிட, பிச்சை எடுக்க பயன்படுத்தக்கூடாது'' என தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். இந்த தீர்ப்பின் பின்னனியில் ''கனரக வாகன உற்பத்தியாளர்கள் இருந்தார்கள்'' என்ற விமர்சனத்தை மறுப்பதற்கில்லை. தற்போது யானைகள் தூக்கிய மரக்கட்டைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்படுவதை பார்க்கும் போது தீர்ப்பில் ''உள் நோக்கம் இல்லை'' என்பதை நம்பும்படியாக இல்லை.

அதே போல் வேட்டையாடுவது மனித குலத்தின் பண்பு. இதை வனச்சட்டம் ஒற்றை சட்டத்தால் தடுத்து விட்டார்கள். இங்கிருந்து தான் பசுவதை சட்டம் அமுலுக்கு வந்தது. இன்று சங்பரிவார் அமைப்புகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் பார்க்க மறுத்தவை எனலாம்.

 

வனத்திற்குள் சென்று விலங்குகளை துப்பாக்கியால் சுட்டு கொன்று சிரித்து ரசிப்பது என்பது வேறு, பாரம்பரிய வேட்டை கருவிகளை கொண்டு வேட்டையாடிய விலங்குகளை உணவுக்காக வேட்டையாடுவது வேறு. சுட்டு எக்காலமிடுவதற்கும் உணவிற்கு வேட்டையாடுதற்கும் உள்ள வேறுபாடுகள் அறியாத ''சமூக''? அறிஞர்களிடம் என்ன பேசிட இயலும். உணவுக்கு விலங்குகளை கொலை செய்வதும் கொலை வெறியை வளர்ப்பதற்கும் வேறுபாடு தெரியாத கூட்டமாகவே இன்றைய சுற்றுச்சூழல் பார்வையாளர்கள் என அடையாளம்காட்டப்படுபவர்கள்.

.

இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 2004ம் ஆண்டு கொண்டு வந்த சட்டத்தின்படி, ''பிள்ளையார் என்ற விநாயகர் மீது சிறு கழித்ததாக கட்டமைக்கப்பட்ட கரட்டானை (ஓணான்) அடித்தால் கூட 2000ரூ தண்டம். கட்டவில்லை என்றால் ஆறு மாத காலம் சிறைத்தண்டணை. கரட்டானுக்கே தண்டத்தொகை இவ்வளவு என்றால் மற்ற விலங்குகளுக்கு சொத்தை விற்று கட்ட வேண்டும், பணம் இல்லாதவர்கள் வாழ்நாள் முழுக்க சிறையில் கழிக்க வேண்டும்.

 

அரசின் கமுக்க கூட்டாளிகளான விலங்கு நல வாரியத்தினர் தொடுத்த வழக்கில் ''வித்தை கூடாரங்களில் (சர்கஸ்) வன விலங்குகளை (அதென்ன வன விலங்கு) வித்தை காட்டவும், விளையாட்டுக்காகவும் பயன்படுத்தக்கூடாது'' என்ற தீர்ப்பு வழங்கியது நீதி மன்றம். வித்தை கூடாரங்களில் சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலங்குகளை கண்டு இரசித்தவர்கள் தொலைகாட்சி பெட்டியில் இனி பார்க்க மட்டுமே முடியும்.

 

இதன் தொடர்ச்சியான வழக்காக ''இந்தியாவில் 27 % குறைவாக வனம் இருக்கிறது வனம் & சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும் வனத்தை மேம்பாடு செய்ய வேண்டும்'' என வழக்கு தொடர்ந்தார்கள். ''வனத்தில் 99 ஆண்டு குத்தகை நிலங்கள் மற்றும் வருடாந்தர குத்தகை நிலங்களை, குத்தகை காலம் முடிந்த பின்பு குத்தகைக்கு விடக்கூடாது. அந்த நிலங்களை வனங்களாக மாற்ற வேண்டும். காட்டுக்குள் வாழும் பழங்குடி மக்களை விருப்பத்திற்கு ஏற்ப வெளியேற்ற வேண்டும்'' என தீர்ப்புச் சொன்னார்கள். இந்த வழக்கில் / தீர்ப்பில் 999 ஆண்டுகால டாடா மற்றும் .வி.தாமஸ் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள (தேயிலை,காபி) சுமார் 5லட்சம் ஹெக்டர் நிலங்கள் குறித்து நீதி மன்றமும் வழக்கு தொடுத்தவர்களும் எச்சில் விழுங்கிட கூட வாய் திறக்கவில்லை / அசைக்கவில்லை. இந்த வழக்கில் வனத்தை மேம்பாடு செய்து விலங்குகளை வாழும் இடமாக மாற்ற வேண்டும் என்பதே தீர்ப்பில் சாரம்சம். இந்த தீர்ப்பை வைத்து தான் சுற்றுச்சூழலை மேம்படுத்துங்கள் என்று  வளர்ந்த நாட்டுகளான அறியப்படும் நாட்டினரின் மீத்தேன் பயன்பாடுக்கு ஈடாக அவர்கள் நமக்கு நமக்கு ஆண்டு தோறும் கோடி கோடியாக அள்ளிக் கொடுக்கிறார்கள்.

பசுவதை

வேட்டை சமூகமாக இருந்த மனிதன் உற்பத்தி சமூகமாக மாறியதும், வேளாண்மை உற்பத்திக்கு பயன்படுத்த முடியும் என கணித்த விலங்குகளை காட்டுக்குளே தேர்வு செய்தான். அவை நாய் (ஓநாய்), மாடு (காட்டு மாடு), புள்ளி மான், (சருகு மான், சம்பார் மான், கவுரி மான்), கோழி (கானக்கோழி) முதலியன. மனிதன் வேளாண்மைக்கு தகுந்தது என பலநூறாண்டுகள் ஆய்வில் தேர்தெடுத்த விலங்குகள் மீது தான், வளர்ந்த சமூகம் எனச் சொல்லிக்கொள்ளும் நாம் தொடர்ந்து தனது ஆளுமை என்ற பெயரில் தாக்குதல் நடத்துகிறோம். (அடைப்புக்குள் இருக்கும் விலங்குகள் மனிதன் அன்பிற்கு கட்டுபடாதவை) பண்டை சமூகம் கண்டெடுத்தை போல் ஏதாவது ஒரு விலங்கையாவது வளர்ந்த சமூகமான இன்று அறிமுகம் செய்யவில்லையே.

வேட்டையாட ஓடி திரிந்த சமூகம் இன்று குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டாலும் பரவயில்லை நோயாளி சமூகமாக மாற்றி விட்டனர். பசுவதை என்பது நேற்று இன்றல்ல பல்நெடுங்காலமாக செய்த முயற்சியால் இன்று வெற்றி பெற்றுள்ளார்கள். மாடு விசயத்தில் சனதானவாதிகள் தொடர்ந்து முயற்சித்து வருவார்கள், வந்தார்கள் அதனால் வெற்றி பெற்றார்கள்.

 

முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு

  நூலதிகாரம் நூல் முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு ஆசிரியர் ; தி. சுப்பிரமணியன் வெளியீடு ; அடையாளம்   ‘முந்தி பிறந்தவன் நா...