Search This Blog

Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Monday, 30 November 2020

துப்பாக்கி ரவை கம்பி மத்தாப்பூ ஆன கதை

 

 

                                                                 துப்பாக்கி ரவை கம்பி மத்தாப்பூ ஆன கதை

தீபாவளி என்றவுடன் சிறுவர் முதல் பெரியவர் வரை குதுகலமாக்கிவிடுவது வெடி என்ற வேட்டு. இந்த வெடி இராணுவத்தில் எதிரிகளை வீழ்த்தப் பயன்பட்டது. இப்படி கொலை ஆயுதமான வெடி, எப்படி? சாமான்ய மக்களின் கைகளில் வேடிக்கை, கேலிக்கை பொருளாக மாறியது. கோயில் திருவிழாக்களில் வெடி வெடிப்பதும், கொங்கு மண்டல கோவில்களில் வெடி காணிக்கையாக செழுத்தும் மரபு எப்படி வந்தது. இதற்கான காரணம் என்ன வெடி வெடித்து மகிழ்வதன் வரலாறுதான் என்ன ?

இராயாண, மகாபாரத காப்பியங்களில் சங்கு, சக்கரம் விட்டதாகவும், சிவன் நெற்றியிலிருந்து சங்கு, சக்கரம் போன்ற வெடி ஆயுதம் கொண்டு எரிப்பதாகவும், திருச்செந்தூர் முருகன் சூரனை செந்தூரம் (பஸ்பம்) செய்ததால் செந்தூர் முருகன் ஆனார் என்று காப்பியக்கதைகள் சொல்கிறது.

பொது ஆண்டிற்கு பின்பு (கி.பி) 4 முதல் 9ஆம் நூற்றாண்டு வரை பாறைகளில் குடைந்த குடவரைகள், அதனை அடுத்து 19ஆம் நூற்றாண்டு வரை கட்டப்பட்டுள்ள கோவில் கட்டிடங்கள், ஒற்றைக்கல் தூண்கள், ஒரு பாறையில் குடையப்பட்ட காக்கதேய பேரரசின் தலைமையிடமான வாரங்கல் அரண்மனை, இவைகளைப் பார்த்தால் வெடி இல்லாமல் இவைகளை உருவாக்கியிருக்க முடியாது என்ற ஐயம் எழும். இது குறித்து நடந்த ஆய்வின் முடிவில், ''சோற்றுக்கு பயன்படுத்தப்படும் உப்பினை காய்ச்சி தரையில் குழி தோண்டி அதில் ஊற்றினால் கெட்டியாகும். அந்த கெட்டியான உப்பு உருண்டையை தண்ணீரில் போட்டாலோ அல்லது அதன் மீது தண்ணீரை ஊற்றினாலோ வெடிக்கும்'' இப்படித்தான் நம் முன்னோர்கள் பாறைகளை குடைந்தார்கள், பாறைகளை பிளந்து அரண்மனை கோயில் கட்டுமானத்திற்கு பயன்படுத்தினார்கள் என்று ஆய்வு முடிவுகள் சொல்லுகிறது.

கந்தம், பாஸ்பரஸ், பாதரசம் இவைகளே வெடி தயாரிக்க பயன்படும் மூலப்பொருள்கள். இவைகளைக்கொண்டே பீரங்கிகளுக்கு ரவை என சொல்லப்படும் குண்டுகள் செய்யப்படுகிறது. இவை பெரும்பாலும் சீன நாடுகளான அறியப்படும் மத்திய சீனம், திபெத், பலுகிஸ்தான், ஆப்கான் பகுதியிலே கிடைக்கிறது. இந்த மருந்துகள் 17, 18ஆம் நூற்றாண்டு வரை சித்த மருத்துவத்தில் உயிர் காக்கும் மருந்தாக பயன்பட்டது. இவை உயிரை குடிக்கும் வெடியாக தயாரிக்கும் தொழில்நுட்பம் 1620களில் ஜெர்மனியில் கண்டறியப்பட்டது. அங்கிருந்து மெல்ல மெல்ல நகன்று 1655 வாக்கில் உலகம் முழுவதும் பரவி மருந்து, வெடி மருந்தாக உருமாறி பாதுகாப்பு படைகளின் கைக்கு வந்து மிரட்டியது. பெரும் ஆனைப்படை வைத்து தில்லியை ஆண்ட லோடியை வீழ்த்திய பாபர் முடிசூட்டி மாமன்னரானது இந்த வெடியால் என்பதே வரலாறு.

இந்தியாவுக்கு வந்த வாஸ்கோடகாமா தனது கப்பலில் வெடி ஆயுதத்தை வைத்தே கொச்சியை சரணடைய வைத்தார். பல்நெடுங்காலம் தமிழக கடல்பகுதியை கையில் வைத்து ஆட்சி செய்த பரங்கியர்கள் வெடியை வைத்துக்கொண்டு நாயக்கர் அரசுக்கு கட்டுப்படாமல் இருந்தனர். பரங்கியர்கள் துணி வியாபாரம் செய்ததை விட நம்ம உவர் நிலத்தில் விளைந்த சவுட்டு உப்பினை வாங்கி சென்றார்கள். பின்னாலில் கந்தகம் மூலம் வெடி தயாரிக்கும் தொழில் நுட்பம் வந்தபின்பு வெடிமருந்து வியாபாரமே அதிகம் செய்தனர் என்பதை திருபாதிரிபுலியூர் - பிரஞ்சு குறிப்புகளை ஆய்வு செய்துள்ளார் ஆய்வாளர் ஜெயசீலன் ஸ்டீபன். இப்படி ஆட்சி அதிகாரத்தை மாற்றிய வெடி, சிறுவர்கள் கையில் விளையாட்டு பொருளாக இருப்பது வரலாறு அறிந்தவர்களுக்கு வியப்பைத் தருகிறது.

விஜயநகர ஆட்சியிலே துப்பாக்கி வந்தற்கான சான்று 1522ல் வரையப்பட்ட விஜயநகர தலைமையிடமான ஹம்பி விருப்பாட்ஷி கோவில் மேல்த்தள ஓவியம் தெளிவுபடுத்துகிறது. தமிழகத்தின் நாயக்கர் ஆட்சியின் தளகர்தாவான மன்னன் திருமலை நாயக்கர் காலத்திலே பரங்கியர்களை எதிர்க்க வெடி ஆயுதம் பெருவாரியாக குவிக்கப்பட்டது. இந்த வெடி ஆயுதத்தை பயன்படுத்த இசுலாமியர்களை மட்டுமே அனுமதித்து நாயக்கர் அரசு. இதனால் படைகளுக்கு தேவையான குதிரைகளை அரபு தேசத்திலிருந்து இறக்குமதி செய்துடன் வெடி இயக்கத்தெரிந்த வீரர்களையும் இறக்குமதி செய்தனர். நாயக்கர் ஆட்சியில் குதிரைப்படை, வெடிப்படை வீரர்கள் பெரும்பாலும் இசுலாமியர்களே. இதனால் இசுலாமியர்களை 'காவல் குடிகள்' என்று ராமப்பய்யன் அம்மானை, சேது மன்னர் செப்பேட்டு வரலாறுகள் சொல்லுகிறது. விஜயநகர மற்றும் நாயக்கர் ஆட்சிக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட பாண்டிய மன்னன் வீரபாண்டியன் படையில் அதிகமான இசுலாமியர் இருந்தனர் என அமீர்குருஸ் எழுதிய தில்லி முகலாய வரலாறு என்ற நூலிலும் தஞ்சை திருக்களர்கோவில் கல்வெட்டும், சேது மன்னர் செப்பேடுகளும் பறை சாட்டுகிறது.  

தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்த 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள், பிரஞ்சுக்காரர்கள், தில்லி முகலாயர்கள், மைசூர் திப்புசுல்தான், இவர்களுக்குள் ஏற்கனவே நாட்டை ஆண்டு கொண்டிருந்த நாயக்க பிரதிநிதிகள், தமிழக பாளையக்காரர்கள் என பலரும் ஆங்காங்கு ஆண்டார்கள். தமிழக வரலாற்றிலே கொடூரமான காலகட்டம் என்றால் இந்தக்காலம் என்றே சொல்ல வேண்டும்.

இந்தக்காலகட்டத்தில் மதுரையை ஆண்ட தில்லி முகலாய சுல்தானின் பிரதிநிதியான ஆற்காடு வாலஜா மன்னரின் பிரதிநிதி முகமது யூசூப்ஹான் மதுரையை ஆண்டார். இவரைப்போலவே கொங்கு மண்டலமாக வரலாற்றில் அறியப்படும் சேலம், ஈரோடு, கோவை பகுதிகளை மைசூரை தலைமையிடமாக கொண்டு ஆண்ட ஹைதரலி, அவரது மகன் திப்பு சுல்தானின் ஆளுமையின் கீழிருந்தது. நாயக்கர் ஆட்சியின் வீழ்சியால் தமிழகத்தின் தென் பகுதி பாளையங்கள் தன்னாட்சி செழுத்தி மன்னர்களானார்கள்.  

மதுரை அரசுக்கு கப்பம் கட்ட மறுத்த நெற்கட்டுசேவல் பூலித்தேவன், சிவகிரி போன்ற பாளையங்கள் மீது முகமது யூசூப்கான் படையெடுத்தார். தன்னாட்சி செய்த சிவகங்கை அரசு, முகமது யூசூப்ஹானை எதிர்த்து நாயக்கர் அரசின் கடைசி வாரிசான அரசி மீனாட்சியின் தத்துப்பிள்ளை விஜய சொக்கநாத திருமலை நாயக்கனை மீண்டும் மதுரையில் ஆட்சியில் அமர்த்த முனைந்தது. இவர்கள் மீதும் முகமது யூசூப்கான் படையெடுத்தார் என நாயக்கர் மற்றும் சேது சீமை வரலாற்று நூல்கள் மூலம் அறிய முடிகிறது. முகமது யூசூப்கானை எதிர்கொள்ள திப்பு சுல்தானின் ஆதரவை பாளையப்பட்டு மன்னர்கள் நாடினார்கள்.

இந்தக்காலத்தில் அதிகமாக கொள்ளை நடந்தது. தனது எல்லையில் உள்ள மக்களை கொள்ளையர்களிடமிருந்து காத்திட மக்களை படை வீரகளாக ஆக்கினார் முகமது யூசூப்கான். இதன் துவக்கமாக வெடிமருந்தினை 'கைமருந்தாக' மக்களுக்கு வழங்கப்பட்டது. அதிக பாதரசம் சேர்த்த வெடி மருந்தினை இரும்பு குழாயில் போட்டு அதிகம் கிட்டிக்காமல் (இறுக்கம்) தீ வைத்தால் வெடிக்காமல் தீப்பிளம்பினை கக்கும். (பூந்தொட்டி, பூ மந்தாப்பூ இவைகள் இப்படித்தான் தயாரிக்கப்படுகிறது) 'எதிரிகள் வருவது தெரிந்தால் இந்த வெடியினை தீப்பற்றவைங்கள். தீப்பிளம்பைப் பார்க்கும் படைகள் வெடியிருப்பதாக நினைத்து பயந்து ஓடும். இந்த வெடி ஓரளவுக்கு மக்களை காத்ததால் முகமது யூசுப்கானுக்கு மக்கள் செல்வாக்கு அதிரித்தது. இந்த ஆதரவை தக்கவைக்க  மக்களுக்கு வெடிமருந்தை தயாரிக்கும் முறையை சொல்லிக்கொடுக்க உத்தரவிட்டுள்ளார் என இசுலாமியர் நூலும், பிரிட்டீஷ் குறிப்புகளும் தெளிவுபடுத்துகிறது.

முகமது யூசூப்கான் தனது எல்லையான மேலூர் நாடு, வெள்ளளூர், சூரக்குடி நாடுகளில் ஊருக்கும் வெளியிலுள்ள கோவில்களில் வெடி வெடித்து பாளையக்கார படைகளுக்கு பயம் காட்ட ஆள்களை நியமித்தார். இந்த வெடி வெடிப்பவர்களுக்கு நிலம் மானியம் கொடுத்த செய்திகள் செவிவழிச்செய்தியாக இன்றளவும் மேலூர் பகுதியில் உலாவுகிறது. உயிரை பறிக்காத இந்த வெடியை 'வெத்துவெடி' என மக்கள் பெயரிட்டார்கள். இன்றும் கிராமங்களில் எதுவும் செய்யாத ஆளினை ''அவனொரு வெத்துவேட்டு' என கிண்டலாக சொல்லுவதை கேட்கலாம். (பேராசிரியர் தொ.பரமசிவனின் பேட்டி)

இதே காலகட்டத்தில் கொங்கு மண்டலத்தை ஆண்ட திப்பு சுல்தான் வெள்ளக்கோவில் நாட்டில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் (கொங்கு மண்டலத்தில் 24 நாடுகளில் இதுவும் ஒன்று) பொங்களூர் நாட்டிலுள்ள பொன்னிவாடி கிராமத்தில் உள்ள வீரக்குமார், கருப்பசாமி கோவிலில் மந்தையில் வெடி வெடித்து ஆள்களை நியமித்தார். வெடி வெடிப்பவர்கள் பெயர் 'பொட்டிலி' என்றும், பொட்டிலிகளுக்கு காணிக்கை கொடுக்கவும் மக்களுக்கு ஆணை பிறப்பித்தார். இது தான் காலப்போக்கில் வெடிக்காணிக்கையாக வந்திருக்கும் என ஆய்வுகள் சொல்லுகிறது. (கொங்க நாட்டில் திப்பு சுல்தான்,  மற்றும் தீரன் சின்னமலை வரலாறு ஆசிரியர் புலவர் - ராசு).

இப்படித்தான் அரசபடைகளிடமிருந்த வெடி என்ற பயங்கரமான ஆயுதம் சாமானிய மக்களிடம் வந்தடைந்தது. திப்புவின் குதிரை படைக்கு தளபதியான தீரன் சின்னமலை தனது ஆயுத கிடங்கில் பெருவாரியாக வெடிமருந்துகள் பதுக்கி வைத்திருந்ததை பிரிட்டீஷார் குறிப்புகள் சொல்லுகிறது. மதுரை மீனாட்சியம்மன் ஊர்வலத்தில் நான்கு வீதி முக்குகளில் வெடிப்போட நாயக்க மன்னர் சொக்கநாதநாயக்கர் உத்தரவிட்டு அவர்களுக்கு வெடிமானியம் வழங்கினார். இதன் நீட்சி இன்றும் தொடர்கிறது.

19ம் ஆம் நூற்றாண்டில் பிரஞ்சுக்காரர்கள், தில்லி முகலாயர்கள், மைசூர் திப்புசுல்தான், நாயக்க பிரதிநிதிகள், தமிழ் மன்னர்கள் தத்தமது ஆட்சியை காப்பாற்ற வரிவசூலை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தேவையிலிருந்தனர். அன்றய காலகட்டத்திலிருந்த பெரிய தொழில்சாலை விவசாயம் மட்டுமே. விவசாய விளைச்சலை அதிகரிக்க கிணறு வெட்டுவதற்கு தேவையான வெடிமருந்துகளை இசுலாமிய ஆட்சியாளர்கள் வாரிவழங்கினார்கள். இதனால் தமிழகத்திலே அதிக கிணறுகள் இருக்கும் பகுதி கொங்கு மண்டலம், அதற்கு அடுத்தபடியாக மதுரை மண்டலம் என்பது குறிப்பிடத்தக்கது. வேளாண்மை குடிகளிடன் வெடி சகசமாக புழங்கியதால் இந்தியா முழுவதும் ஆட்சியை அதிகாரத்தை நிலைநிறுத்திய பிரிட்டீஷார் வெடி மருந்துக்கென தனிச்சட்டத்தை கொண்டு வந்தனர். இந்த சட்டம் சென்னை மாகாணத்திலே முதன்முதலில் அமுல் செய்து கடுமை காட்டினார்கள். (கொங்கு வரலாறு)

நாயக்கர் ஆட்சியில் வரி வசூலிக்கும் துர்கை வழிபாடான நவராத்திரி விழா முடிந்த பின்பு தீபாவளி நாளில் வெத்து வெடிகளை வெடித்து அரண்மனையாளர்கள் மகிழ்ந்தனர் (நாயக்கர் காலத்தில் தொகுக்கப்பட்ட தனிப்பாடல்கள், துதிப்படல்களான அம்மானைகள்). இதே போல் நாயக்கர் மான்னர்கள் அரண்மனையை விட்டு வெளியேறும் போது வெடிப்படையினர் வெடி வெடித்து மன்னர் வரவேற்கும் நிகழ்வும், மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தவும் இதை நிகழ்த்தினார்கள். (நாயக்கர் வரலாறு). நாயக்கர் மன்னர்கள் வருகையின் போதும், பெரும் கோவில்களிலும் வெடியை பார்த்த மக்கள் ஆட்சி மாற்றங்களால் தங்கள் பாதுகாப்பிற்காக கையாண்டார்கள். ஊருக்கு ஒதுக்குப்புறமான கோவிலில் வெடித்த வெத்து வெடிகளே காலப்போக்கில் திருவிழாக்களில் வெடி வெடிக்கும் பழக்கமாக மாறியது.

இசுலாமிய அரசின் வெடிப்படை வீரர்கள் இறந்தால் வெடிவெடித்து துக்கத்தை அனுசரித்தனர். இதன் நீட்சியே இன்றும் அரசியல் பிரமுகர்கள், படைவீரர்கள் இறந்தால் வெடிவெடித்து சோகத்தை கடைபிடிக்கப்படுகிறது.  

இப்படி அரண்மனைகளில், கோயில் திருவிழாக்களில் வெடித்த வெத்துவெடிகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதை கணக்கிட்ட காவல்துறையை பரவலாக்கி மக்களை கெடுபிடிக்குள் கொண்டு வந்த பின்பு வெடியில் நல்ல வருவாய் கிடைப்பதை அறிந்த பிரிட்டீஷார் பெருவணிமாக மாற்றினார்கள்.

 

 

Tuesday, 11 June 2019

சௌபா என்ற சமூக வரலாறு


                                    




                                                சௌபா என்ற சமூக வரலாறு
                                       **************************************
         பத்திரிக்கை வாசிப்பாளர்களுக்கு சௌபா, என்ற பெயரைக் கேட்டவுடன் ஜூவியில் தொடராக வந்த 'சீவலப்பேரி பாண்டி' என்ற கதையே நினைவுக்கு வரும். சௌபா ஒரு சாமானிய வேளாண் உழுகுடி குலத்தில் பிறந்து தனது எழுத்து வல்லமையால் 1985 கால கட்டத்தில் விகடன் பத்திரிக்கையில் மாணவ நிருபராக உள்ளே புகுந்து தனது இடத்தைத் தக்க வைத்தவன்.

விஸ்காஸ் என்ற பன்னாட்டு நிறுவனம், டானிரி இந்தியா என்ற பெயரில் மைய அரசு மலைகளில் மரங்களை வெட்ட, மரம் வளர்க்க அனுமதி பெற்றது. இவர்கள் இலங்கையிலிருந்து நாடு திரும்பியவர்களை (ரீ- பேட்டியாட்ஸ்) வைத்து கொடைக்கானல் மலையில் மர வளப்பும், மரம் வெட்டும் தொழிலை செய்தனர். காலப்போக்கில் இந்த நிறுவனம் இந்த மக்களை கொத்தடிமைகளாகக் கையாண்டது. இதை கண்டறிந்து இந்த மக்களை விகடன் நிறுவன உதவியோடு வெளியேற்றி இவர்களுக்கு நிலம் கிடைக்க வழிவகை செய்தான் சௌபா. அந்த இடமே இன்றைய குண்டுப்படியும், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள எல்லைப்பட்டி கிராமமும். 

விகடனில் இவன் எழுதிய முக்கியமான செய்தி சாயல்குடி ஜமீன்தாரைத் தவிர மற்றவர்கள் தரையிலே உட்கார்ந்து முகச்சவரம் செய்ய வேண்டும் என்ற சமூக சட்டத்தை அம்பலப்படுதியது. அடுத்து சிசுக்கொலை இந்தச் செய்தியை எல்லோரும் பெரிதாக சொல்லுவார்கள். இந்த செய்தியை மைய அரசே சொல்லி பிரபலப்படுத்தியது என்றே ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள். காரணம் அந்த கால கட்டத்தில் பொதுவுடமை சிந்தனையாளர்களும், தமிழ் தேசிய சிந்தனையாளர்களும் முளைத்தனர். இவர்களை அரசு எந்திரம் ஒடுக்கி அழித்தது. இந்த செய்தி முதன்மை பெறக் கூடாது என்பதற்காக சிசுக்கொலை என்ற ஆயுதத்தை கையில் எடுத்து மக்களை மடைமாற்றம் செய்தது அரசு. இருப்பினும் இந்த செய்தியும் சௌபாவுக்கு பெரும் புகழை கொடுத்தது. 

இந்த சூழலில் விகடன் முதலாளி திரு. பாலசுப்பிரமணியம் அவர்கள், மதுரை அருகில் நிலம் வாங்கினார். அந்த நிலத்தை தனது மாணவ நிருபரான சௌபா பெயரிலே வாங்கியதே சிறப்பு. அதனைக் கவனித்து விகடன் நிருபராக இருந்த சௌபா எழுத்துப் பணியிலிருந்து விடுபட்டு விகடனின் பத்திரிக்கை முகவராக வலம் வந்தார். அந்த காலத்திலே இவருக்கு உதவிய நண்பர்கள் நட்பும், அதன் வழியில் ஏற்பட்ட காதல் திருமணமும் நடந்தது. 

இக் காதல் மனைவியின் சொந்த ஊர் அருகில் சீவலப்பேரி பாண்டி என்பவரின் வாழ்வை ஜுவியில் தொடராக எழுதினான் செளபா. இது இவனுக்கு பெரும் புகழையும் பெரும் நட்பையும் தேடிக் கொடுத்தது.

சீவலப்பேரி பாண்டி திரைப்படத்தை தெலுங்கு மொழியில் இவரது அனுமதியில்லாமல் வெளியிட்டனர். இதை விகடன் நிறுவனமே வழக்கு நடத்தி அன்றைய காலத்தில் சுமார் 5 லட்சம் சன்மானமாக பெற்றுகொடுத்தது. இந்த தொகையை மூலதானமாக வைத்து சிறுமலை அடிவாரத்தில் சுமார் 15 ஏக்கார் பரப்பளவில் காடு வாங்கி அதில் மரங்களை நட்டு தனது வாசத்தைத் துவங்கினான் சௌபா.

விகடன் நிறுவனம் இவரை முழுமையாக கலட்டி விட்டது. தனது உயரிய நண்பர்கள் உதவியோடு பத்திரிக்கையாளராக சமூக பார்வையாளராக வலம் வந்த சௌபாவை ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தினார்கள் உயர் காவல் துறை அலுவர்கள். 2001 தேர்தலில் சௌபாவை, ஜெய தொலைகாட்சி நிறுவனம் முழுமையான இவனது மூலையைப் பயன்படுத்தியது. 2001 தேர்தல் வெற்றிக்கு இவரது கமுக்க (விடுதலைபுலிகளுக்கு திமுக சதி வேலை செய்ததாகவும், வேதாரயத்தில் விவசாயி தற்கொலைக்கும் திமுகவே காரணம் என்ற தேர்தல் விளம்பர படம், அதே போல் காயித ஓடம் கடலை மேலே மூவரும் போவோம் என்ற கருணாநிதி அவரது மனைவிகள் ஓடத்தில் போவது போன்று கட்சி அமைக்கப்பட்ட கேலி சித்திர வேலைப்பாடு படம் இவரின் மூலையே. இவனை நம்பிய செல்வி - ஜெயலலிதா ஜெய தொலைக்காட்சியில் பணி செய்யாத பணியாளராக நியமித்து மாதந்தரமாக 50000 வழங்கினார். இந்த சம்பளத்திற்கு 'இன்று' என்ற தொகுப்பு இவரை இன்னும் ஜெய நிறுவனத்தில் முதலாளி நிலையில் இருந்த தினகரனுக்கு நெருக்கத்தை கொண்டு சென்றது. இதனை முழுமையாக பயன்படுத்திய சௌபா தென் மாவட்டங்களில் வேட்பாளர் தேர்வு செய்தது இவரே என்பது அவரை அறிந்த நண்பர்கள் அறிவார்கள். இதன் ஏற்கனவே விகடன் மூலம் கிடைத்த திரைவுலக நண்பர்களை வைத்து படம் எடுக்க அல்லது படத்திற்கு கதை கரு மாற்றம் உள்பட பணிகளை செய்து வந்ததுடன் அதிமுக அரசின் அறிவிக்கப்படாதா மாநிலம் தழுவிய பி.ஆர்.ஓவாக வலம் வந்தார். இதானால் இவருக்கு பல கோடிகள் கிடைத்தது. கடைசியாக நடந்த ஆர்.கே நகர் தொகுதியில் ஆளும் கட்சியை தோற்றகடித்த 'உசசாரய்யா உசாரு' என்ற பாடலை ஒளிப்பதிவு செய்து திகனரனுக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்தார் என்பது அவரை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்.

இந்த நிலையில் தனது மனைவியுடன் பிரிந்து இருந்தாலும் மகனை திரைத்துறை நட்சத்திரமாக்க முயற்சித்தார். அதன் விளைவு தான் அவன் கொலையாளியாக வலம் வந்ததும் இவரை கொலையாளி சூழலுக்கு தள்ளியதுமே. சௌபா 54 ஆண்டு கால வாழ்க்கையில் அவர் தன்னைத்தானே கொலையாண்டார் என்றே சொல்ல வேண்டும்.

நான்கு தினக்கு முன்பு தேவேந்திர குல வேளாளர் அமைப்பு செயல்பாட்டாளர் டாக்டர் சிவமணி 'சௌபா மிகவும் மோசமான இருக்கிறார்' எனச்சொன்னார். மனதளவில் சௌபாவை சந்திக்கக்கூடாது என இருந்த எனக்கு அவரை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. மதுரை ராசாசி மருத்துவமனைக்கு இரவில் போய் வார்டு எண் 202ல் பார்த்தேன். சௌபா சிரித்தார்.
 
அவரிடன் 'அண்ணே நீ மரணத்தைத் தழுகொண்டிருக்கிறேன்ணே' என மனதில் பட்டதை பட்டென சொன்னேன். அதற்கும் சிரித்தார். இருவரும் மௌனத்தாலே பேசினோம். எனது மனதிற்குள் நான் யாதவர் கல்லூரியில் படிக்கும் (1985 - 1988) போது சந்திக்க வேண்டும் என முயற்சித்து சந்திக்க இயலாமல் போனது, 1992 மூத்த எழுத்தாளரும் அப்போதியய ஜூவி நிருபராக இருந்த எனது மதிப்பிற்குறிய அய்யா ஜே.வி நாதன் மூலமாக அறிமுகக் கடிதம் கொண்டு வந்து வடக்குமாசி வீதி சந்திப்பில் அவரது இல்லத்தில் சந்தித்தேன். அதன் பின்னர் நான் விகடனின் எழுதிய கட்டுரைகளுக்காக அவர் என்னை விமர்சிப்பதும், பாரட்டுவதுமாக தொடர்ந்த நட்பு, 'எனது சிசுக்கொலை செய்தியை விட உன்னோட 'பிள்ளைகள் கையால் பெற்றோர் பரலோகம்' என்ற முதியோர் கொலைச் செய்தி படுபிரபலம் எனப்பாராட்டியதில் நெருக்கம் கூடியது. கம்பளத்து நாயக்கர் ஆடும் தேவராட்டத்தில் கையில் துண்டு இருப்பதற்கு பதிலாக கத்தி வைத்து ஆடினால் இன்னும் அந்த ஆட்டத்திற்காக சிறப்பு கூடும் என சொல்ல அதை செயல்வடிவம் ஆக்கினான் சௌபா. இந்த நெருக்கம் ஒவ்வொரு குலத்திற்குள்ளிருக்கும் பெருமைகளை குறும்படமாக்க ஆக்கிட முயற்சித்து ஆலோசித்தது போன்ற நினைவுகள் என்னை முழுமையாக ஊமையாக்கியது. (இதுவே எனது சுளுந்தீ நாவின் அடிநாதம்) அவரது தோட்டத்திற்கு போகும் போதெல்லாம், அவர் குடித்துக்கொண்டு 'டே தம்பி நீ குடிக்கலேன்னா நல்லவன் என நினைக்காதே, குடிக்கிற நாங்களெல்லாம் கெட்டவன்னு நெனைக்காதடா'  என்ற அவருடனாக உரையாடல் நினைவுகள் என்னை கல்லாக்கியது. நான் எதற்கும் அழுகத்தெரியாவதன் என்பதால் கல்லாக மனதுடனே நினைவுகளில் இருந்தேன். இதற்கு மேல் பேசிட ஒன்றும் இல்லை என முடிவெடுத்து 'நான் விடை பெறுகிறேன்ணே' என்றேன். அதற்கும் மெல்லிதாக சிரித்தார். 'இந்தக் குற்றச்சாட்டிலும் நாம் மரணிக்காவிட்டால் சமூக குற்றவாளி பட்டியலில் சேர்க்கபடுவோம்ன்ணே'' என்றேன். அதற்கு அவர் மௌனமாகச் சிரித்தபடி என்னைப்பார்த்தார்.

'கொலையை நீ செய்யாவிட்டாலும், செய்தாலும் நான் உன்னை ஏற்கிறேன்' என்றேன் என்றேன். 'நீ பாசக்காரண்டா' எனச்சொன்னார். அதற்குமேல் பேச விடாமல் வார்டனாக இருந்த காவலர்கள் 'போகலாம்' என கண் அசைத்தார்கள். நான் அங்கிருந்து விடை பெற்றேன். இரண்டு தினங்களில் விடைபெற்றான் சௌபா.

Friday, 31 May 2019

மொழி காத்த மூலவனார்


     


தமிழ் உரிமை வேட்கை பாடல் - எழுதியவர் வேதாந்தி சுவாமி அருணகிரிநாதர் (1937 ல் இந்தி எதிர்ப்பு போராட்ட கால கட்டத்தில் எழுதப்பட்டது. இன்றைய அரசியல் தலைவர்களுக்கு அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பாடல்.

தண்டமிழ் நாட்டின் தலைவர்களேதமிழ்த்
தாய்படும் இன்னல் தவீர்ப்பீர்களேஉங்கள்
பெண்டுபிள் ளைக்கிடை யூறு நேர்ந்தால்நீங்கள்
பேசாதி ருப்பீரோ சொல்வீர்களே
அப்பனும் அம்மையும் பேசுந்தமிழ்மகவும்
அம்மா அம் மாவென் றழைக்குந் தமிழ்- என்றும்
ஒப்புயர் வில்லாதே ஓங்கு தமிழ்பூ
வுலகின் முதன்முதற் றொன்று தமிழ்
சித்தர்கள் தேடிய செல்வத்தமிழ்பாண்டி
சேர சோழ மன்னர் காத்த தமிழ்நம்
முத்தமிழ் சங்கப் புலவர்முனிவர்கள்
முற்று துறந்தோர் வளர்த்த தமிழ்
குறுமுனி வாரிக் குடித்த தமிழ்இளங்
கோவள்ளுவ வரள்ளிக் கொண்ட தமிழ்-கண்ணிற்
கருமணி போன்றெளிர் கன்னித் தமிழ்கம்பர்
காளமே கம்பொழி கவிதை தமிழ்
நால்வர்கள் ஆழ்வார்கள் நாயன்மார்கள்திரு
நாவினில் நின்று நடித்த தமிழ்நாம்
பாலுண்ணுல் போதே பருகுந் தமிழ்நூலின்
பயனொரு நான்கும் அளிக்கும் தமிழ்
சிலம்பு வளைமணி மேகலையும்குழை
சிந்தா மணியணி தெய்வத் தமிழ்-இன்று
புலம்பி தவித்துடல் புண்படப்பார்த்து நாம்
பூமியில் வாழ்தல் புகழுடைத்தோ
நாவிற்கினிய தமிழ் மொழியிற்பிற
நச்சு மொழிசொற் புகுத்தி விட்டுநாம்
சாவியாய்ப் போன பதர்களைப் போல்வீட்டிற்
சாம்பிக் கிடத்தல் தகுதி கொலொ.
ஆங்கில பல்கலை சொற்களுக்குச்சரி
யான தமிழ்ச் சொல் லமைப்பதற்குமிக
ஆங்கில முந்தமிழும்படித்தோர்பிறர்
அன்றி தமிழர்கள் யாருமின்றே
தமிழிற்பல கலைச்சொல் லாக்குங்குழுவில்
தமிழர்யா ரேனும் ஒருவருண்டோநம்
அமிழ்தத தமிழை அருவருப்- பாய்ப்பேசும்
அயல்மொழி யார்க்கிதிலென்ன வேலை.
இந்திநம் நாட்டிற் பொ துமொழியாகிடின்
எத்துணை தீமையுண் த்துணையும்- இன்று
நந்தமி ழிற்கலைச் சொல்லாக்கமுன்வந்தோர்
நயவஞ்சச் சூழ்ச்சியி னாலேயுண்டாம்
ஊர்களின் பேர்களை மாற்றினர்கள்மக்கட்
குள்ள தமிழ்ப்பேரையும் மாற்றினார்கள்- தெய்வப்
பேர்களைக் கூடப்பு ரட்டினாரின்றுநாம்
பேசுந்த மிழ்க்கேஉ லைவக்கின்றார்.
பைந்தமிழ் மாணவர் பல்கலையைப்பிற
பாடையின் மூலம் பயில்வாரானால்நம்
செந்தமி ழிற்கலை சொல்லேயிலையென்று
தீண்டவு மாட்டார் தெரிவீர்களே
புற்றினிற் பாம்பு புகுந்ததக்கறையான்
புற்றினைப் பாம்புபுற் றென்பது போல்அந்தோ
மற்றவர் புக்க இடந் தந்ததாற்றமிழ்
மாநிலங் கூடத தாமென்கிறார்.
இன்னமும் நீங்கள் விழிப்படையாதையோ
ஏமாந் திருந்தா லெதிர்காலத்தில்உங்கள்
பன்னலம் பைந்தமிழ் நாடுமுழுவதும்
பார்ப்பன மயமாம் கண்டு கொள்வீர்.

முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு

  நூலதிகாரம் நூல் முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு ஆசிரியர் ; தி. சுப்பிரமணியன் வெளியீடு ; அடையாளம்   ‘முந்தி பிறந்தவன் நா...