Search This Blog

Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Friday, 28 June 2019

திமுகவில் தங்கதமிழ் செல்வன் வரவும் அஇஅதிமுகவின் எதிர்காலமும்... ..




                           திமுகவில் தங்கதமிழ் செல்வன் வரவும் அஇஅதிமுகவின் எதிர்காலமும்...



அஇஅதிமுகவின் முன்னால் தேனி மாவட்ட செயலாளராக, மாநிலங்களவை உறுப்பினராக, ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பிராக மும்முறை இருந்தவருமான  திரு.தங்கதமிழ்ச்செல்வனை அஇஅதிமுகவிற்குள், உள்ளே விடக்கூடாது என்பது அக்கட்சியின் கூட்டு முடிவு என்பதை விட மான்புமிகு துணைமுதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வத்தின் தனிப்பட்ட முடிவாகவே அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. வேறு வழியின்றி தன்னை நிலைநிறுத்திக்கொள்ள திரு.தங்கதமிழ்ச்செல்வன் திமுகவிற்குள் புகுந்தார் என்பதாக தெரிகிறது. ஆனால் இதுவுண்மையில்லை என்பது கொங்கு நாட்டிலிருந்து வரும் தகவல்கள் மெய்ப்பிக்கிறது.

அஇஅதிமுக துவங்கிய காலம் முதல் அக்கட்சியிக்கு வாக்கு வங்கியைத் தொடர்ந்து தக்கவைத்துள்ள பகுதி கொங்கு மண்டலம் மட்டுமே. அப்பகுதியில் கடந்த சட்டசபை தேர்தலில் அஇஅதிமுக வாக்கு விகிதாச்சாரத்தில் சரிவை துவங்கி, நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இதன் சரிவு நன்றாகவே வெளிப்பட்டது. இந்த சரிவு அஇதிமுகவின் வீழ்ச்சி என்பதை விட திமுகவின் கொள்கை இறுக்கம் என்றே சொல்ல முடிகிறது. திமுக 1980முதல் சரிவை சந்தித்தது. திரு. ஸ்டாலின் அக்கட்சியின் பொருளாராக இருந்த பொது அவரின் தனிப்பட்ட நடவடிக்கை அல்லது கொள்ளை சமரசத்தால் திமுக மீது கடும் கோபமான பகுதிகளில் ஒன்றான கொங்கு மண்டலத்தை அசைத்து விட்டது என்றே அரசியல் நோக்கர்களின் பார்வையாக உள்ளது.  திரு. ஸ்டாலின் அவர்களின் செயல்பாடு என்பதை விட 1967 முன்பிருந்த நீதிகட்சி தலைவர்களின் நீக்குப்போக்கு நடவடிக்கை என்ற பார்வையாகவும் உள்ளதாகவும் பார்க்கிறார்கள். இதனால் முன்னால் அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி போன்றவர்கள் திமுகவை விட்டு போனாலும் வந்த அவரை  மீண்டும் திமுக அரவணைத்து கொள்ளமுடிந்தது. 

இதே நிலைப்பட்டை மாநிலம் முழுவம் எடுக்க பலஅடித்தள வேலைகளை பெரும்முதலாளிகள் மூலமாக அரசர்கள் காலத்தைப்போல பட்டர்கள், குருக்கள் மூலமாக செய்து வந்தனர். இது பெரும் வெற்றியை திமுகவிற்கு நகர்த்தி கொடுத்துள்ளதாகத்தெரிகிறது. 

மதுரை மண்டலத்தைப்பொறுத்தவரை மறவர்கள் திமுவை தங்களது பரமஜூரியாகவே பார்க்க வைத்தது அவர்களின் கடந்த கால சட்ட திட்டங்களில், மய்யமானதான அனைவரும் அர்சகர் ஆகலாம், குல  + சாதி மறுப்பு அங்கீகார சட்டம், சமத்துவபுரம் இவைகளே. இந்த திட்டமும் பன்னாட்டு தாக்கத்தால் நீர்த்து விட்டது. இந்தப்பேச்சை கொள்கைவாதிகள் மட்டுமே பேசிக்கொள்கிறார்கள். இவர்களது பேச்சுகளும் பெரிதாக எடுபடாது என்பதை திமுகவின் தலைமை நன்கு அறிந்தே 'மக்களைத்ப்நாடி' திட்டத்தில் பல தரப்பான நெழிவுகளுடன் நடந்து கொண்டது அதன் தலைமை. 

ஊழலை பொறுத்தவரை மறைந்த பிரதமர் திருமதி இந்திராகாந்தி காலத்தில் பேசப்பட்டதை விட பன்மடங்கு பேசப்பட்ட ஊழல் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழல். இந்தக்குற்றச்சாட்டில் உண்மை தன்மையை விட அதை பேசியவர்கள் இயக்கமாக கொண்டு சென்ற குறிப்பாக பொதுவுடமை இயக்கத்தாராலே அவ்வூழல் மக்களிடம் செல்லாக்காசானது என்பது அவர்களின் பேச்சு + எழுத்துக்களிலே தெளிவுபெறுகிறது. இனி வரும் காலங்களில் ஊழலை பற்றி யார் பேசினாலும் சிரிப்பாக பார்க்க ஒவ்வொரு தனிமனிதனையும் உருமாற்றி விட்டார்கள் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழல்   குறித்து பேசியவர்கள். இதே போல் ஊழல் குற்றச்சாட்டு மெய்பிக்கப்பட்ட அஇஅதிமுகவின் தலைவியான மறைந்த செல்வி .ஜெயலலிதா மீது பத்திரிக்கைகளும் இதர அரசியல் கட்சி தலைவர்களும் கொண்டுள்ள அபிமானம் இந்தியாவில் எந்த கட்சி மீதும் ஏன் தனிநபர்கள் மீதும் ஊழல் குற்றச்சாடு சுமத்தினாலும் அடுத்த நொடியில் வேறு பேச்சு பேசவேண்டிய நிலையிலே பேசிவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இதனால் திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எடுபடாத நிலையிலே உள்ளது.  

இதையெல்லாம் அறிந்து, தெளிந்த தொண்டு நிறுவனம் போல் செயல்படும் திமுகவின் தலைமை பலமான மாற்றுக்கட்சி தலைவர்களை வளைக்க பலவண்ணங்களில் செயல்பட்டு அடுத்த தேர்தலில் குறைந்த 200 ச.ம. உறுப்பினர் என்ற இலக்கை நோக்கி தனது பயணத்தை துவக்கி விட்டது. இப்பயணத்தை பெரும் கேடுகள் வந்து தடுத்தாலே தவிர மற்றவகையில் அதை நிறுத்த இயலாது என்று அடித்து சொல்லுகிறார்கள் அரசியல் நோக்கர்கள். இதன் நீட்சியாகவே திரு. தங்கத்தமிழ்செல்வன் திமுகவிற்கு போனார். திரு. செந்தில்பாலாஜிக்கு போலவே இவருக்கும் தேனி மாவட்ட செயலாளர் பதவி வழங்க இருக்கிறது என்று தெளிவாக விளக்குகிறார்கள் கட்சியின் உள்ளமைப்பிற்கு மூலையாக உள்ளவர்கள். 

அடுத்த இலக்கு திருநெல்வேலி, இராமநாதபுரச்சீமையும். அதற்கான பேச்சுவார்த்தைகள் ஒரு மடத்தின் தலைவர் மூலமாக அமெரிக்க நாட்டில் நடந்து முடிந்ததாம். இதன் வெளிப்பாடு மெல்ல மெல்ல வெளிவரலாம். 

அஇஅதிமுகவைப்பொறுத்தவரை முதலமைச்சரான திரு. பழனிச்சாமி கட்சியை தக்கவைக்க அவரது சாதிக்காரரும் சொந்தக்காரருமான ஒரு ஆளுனர் மற்றும் அட்ரணி சென்டல் மூலமாக நங்கூரமாக நிலைகொண்டுள்ளார். இவரது செல்வாக்கு கட்சியை தக்க வைக்க முடியுமா என இந்தியா அரசின் உளவு மற்றும் தொண்டு நிறுவன அரசியல் ஆய்வு நிறுவனங்கள் கொடுத்த ஆய்வறிக்கையில் முதல்வர் திரு. பழனிச்சாமிக்கு ஆரவாரமான மக்கள் பலமில்லை என்றாலும்  துணை முதல்வர்  திரு. ஓ. பன்னீசெல்வத்தை விட அதிகமாக இவருக்கு செல்வாக்கு இருப்பதாக தகவல் கொடுத்துள்ளார்கள். இந்த செல்வாக்கினை வைத்து  அவரை தொடர்ந்து ஆட்சியில் அமரவைத்து எம்.ஜி.ஆரின் இறுதி காலத்தில் மண்டைக்காட்டு கலவரம் மூலம் காலூண்றியது போல் மறுகாலூண்ற முடிவெடுத்துள்ளது ஆளும் பா.ஜ. இது எந்தளவுக்கு அவர்களுக்கு சாதகம் என்பதை விட அவர்களின் நோக்கு தமிழகத்தில் பண்பாட்டு தளத்தில் நுழைந்தால் தங்களது செல்வாக்கு அழிக்க முடியாத சக்தியாக அசுரபலத்துடன் நிலைத்திடும் என்ற கணக்கிலே கிராம பூசாரிகள் சங்கத்தில் துவங்கி, ஆருட மய்யங்களில் (ஜோசியம் சாதகம்) பெண்கள் அழகு நிலையம் வரை தங்களது கால்களை அகலப்பரப்புவதன் மூலம் இன்னும் பத்தாண்டுகளில் அவர்களின் இலக்கை எட்டி விடுவார்கள் என்பதை தெளிவுபடுகிறது. அப்போது அஇஅதிமுக என்ற அமைப்பை கபளிகரம் செய்வார்கள் என்பது அய்யமில்லை என்றே சொல்லுகிறார்கள் சமூகவரசியல் பார்வையாளர்கள். 

சேர் ஆட்டோவுக்கு அனுமதி மறுக்கும் அரசு தொலைகாட்சி நிறுவனம் நடத்த விண்ணப்பித்த மாயத்தில் ரிசர் வங்கியின் ஆலோசனையும் வங்கி கடனும் தனியார் முதலாளிகள் குறிப்பாக பண்யா +  பஜாஜ் குழுமத்தினர்கள் மூலம் குறைந்த வட்டியில் கடன் கொடுப்பதுடன் அவர்களின் நிறுவங்கள் விளம்பரமும் கொடுக்க 'கட்டாய'அறிவுரை வழங்கி வருகிறது ஆண்ட ஆளும் பா.ஜ. இதன் மூலம் நாடெங்கும் தங்களது கொள்கைகளை பண்பாட்டு தளத்தில் நிலைநிறுத்திடும் பணியில் வெற்றி கண்டுள்ளார்கள். இந்த வெற்றியை அரசியல் ரீதியாக தக்க வைக்க அவர்களுக்கு காலம் இடம் கொடுக்கும் என்பதில் கருத்து மாறுபாடு இருக்காது என விவாதிக்கிறார்கள் அரசியல் கள ஆய்வாளர்கள்.
இதைனை வைத்துப்பார்க்கும் போது திமுக என்ற அமைப்பு இருக்கும் ஆனால் அதுவும் 'நீர்கரைசலா'க தனது கொள்கைகளை அமுலாக்கம் செய்திடும் என்பதை வாக்கு அரசியலை நம்பியுள்ளவர்கள் எதிர்கொள்ள வேண்டும்.


      

      

Thursday, 25 April 2019

நூறு விழுக்காடு வாக்கு


                                                


                                                                          நூறு விழுக்காடு வாக்கு 

Friday, 5 April 2019

பூமிப்போர்


                                                                             


                                                      பூமிப்போர்  


                         




இந்திய ஒன்றியத்தில் உள்ள நர்மதை ஆற்றங்கரைக்கு வட தெற்கு பதியில் பெரும்பான்மையாக உழுகுடி சமூதாயமான தாகூர் மற்றும் ராசபுத்திர குலத்தினர் வாழ்கிறார்கள். 12ம் நூற்றாண்டில் இங்கு நிலங்கள் அனைத்தும் அரசுடமையாக இருந்தது. அப்போது இசுலாமிய ஆட்சியாளர்கள் அங்கு ஆண்டனர். நில குத்தகயை வேறு நபர்களுக்கு மாற்றிட ஆளும் ஆட்சியாளர்கள் முடிவெத்தார்கள். அப்போது ஆயிரம், ஐநூறு பேர் மொத்தமாக சேர்ந்த உழுகுடிகள் ஈட்டி கத்தி கம்புகளைக் கொண்டு ஆளும் அரசுமீது போர் தொடுத்துள்ளனர். இந்தப் பூமிப்போரால் பிரிட்டீசு இந்தியாவில் நிலம் தனி நபர்களுக்கு பட்டா வழங்கும் சட்டம் கொண்டு வர உதவியாதாகவும் வரலாற்று ஆய்வு உண்டு. 

 விஜயநகர ஆட்சியாளர்கள் தமிழகத்தில் கால்லூன்றிய காலத்தில் இது போன்ற பூமி போர் உழுகுடிகள் நிகழ்த்தினார்கள். இந்த போர் நாயக்கர் ஆட்சி முடியும் வரை நீடித்தது. இந்த போரினைச் சமாளிக்க விஜயநகரத்திலிருந்து வந்த மக்களுக்காக தமிழகத்தில் இருந்த காடுமலைகளிய அழித்து குடியேற்றம் செய்தனர். தற்போது மறந்த 'பூமி போரி'னைத் சாலை வழியாக துவக்கி வைத்துள்ளது அரசு. 

வளர்ச்சிக்காக சாலைகளை போடுகிறார்கள் , இந்தியாவில் மக்கள் தொகை படித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடுகிறது இவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது அரசின் கடமை தானே என்பது வாதமாக இருக்கிறது.

 இந்திய துணைக்கண்டத்தில் என்ன என்ன உற்பத்திகள் செய்யப்படுகிறது அல்லது இறக்குமதி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் தேவைகள் என்னபதை வைத்தே சாலைகளின் தேவை அல்லது மேம்பாடு குறித்து அளவிடப்படுகிறது. உற்பத்தி செய்ய முடியாத இடத்திற்கு, உற்பத்தி செய்ய முடியும் இடத்திலிருந்து முதல் தர உற்பத்தியான உணவு, இரண்டாம் தர உற்பதியான ஆடை, அதன் பின்பு மூன்றாம் தேவையான ஆபரணங்கள். ஆக சீனாவில் உற்பத்தியாகும் பாக்சைட், கெந்தகம் பூதம் என்ற பாதரசம் இவைகள் இந்தியாவிற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் அதே போல்வே எரிபொருள்களும். இதற்கு தான் கடல் மார்க்கம் ஆகாய மார்க்கம் சாலை மார்கமாக பொருள்களை கொண்டு செல்ல மேம்பாடு தேவைப்படுகிறது.

சில ஆண்டுகளாக 2018 மார்ச் கணக்குப்படி மத்திய இந்தியாவிலும் தென் இந்தியாவிலும் பருத்தி உற்பத்தி 30 விழுக்காடு வரை சரிந்துள்ளது என்பதை மய்ய அரசின் வருடாந்தர புள்ளி விபர அறிக்கை சொல்லுகிறது. அடுத்து மய்ய இந்தியாவில் பெரும் உணவு உற்பத்தியான கோதுமை, பருப்பு நல்ல விளைச்சல் கண்டுள்ளது. மய்ய, மாநில அரசுகளின் சேமிப்பு கிடங்குகளில் இதன் இருப்பு இன்னும் ஐந்தாண்டுகளுக்கு போதுமான அளவுக்கு உள்ளதாகவே இருப்பு அறிக்கை (ஸ்டாக் ரிப்போர்) சொல்லுகிறது. 

உணவின் இரண்டாம் தர தேவையான உணவு சக்கரை. இது தேவையான உற்பத்தி இருந்தாலும் காட் (gat) ஒப்பந்த அடிப்படையில் இறக்குமதி செய்ய வேண்டிய நிர்பந்தத்தால் உள்நாட்டு உற்பத்தி தேக்க நிலை ஏற்பட்டது. இதனால் கருப்பு பயிரிட்ட உழுகுடிகளுக்கு நிலுவை தொகை சிக்கலை உருவாக்கி அவர்களை வேறு வேளாண்மை உற்பத்திக்கு அரசே மடை மாற்றம் செய்து வருகிறது.

இரண்டாம் தர உணவு தேவையில் முக்கிய இடம் தருவது எண்ணை. இதன் உற்பத்தியில் வட கிழக்கு இந்தியாவில் போதுமான கடலை, தக்காணத்தில் எள் விளைந்தது. இதற்கு விலை கிடைக்கக்கூடாது என்பதை விட உலக முதலாளிகளின் மருந்துகளை மானுட சமுத்திரத்தில் விற்று பிழைக்க இந்தியவை ஆளும் காட் முதலாளித்துவர அரசுகள் நஞ்சுகளான உணவு? எண்ணைகளை அனுமதித்தது. இந்த நஞ்சு எண்ணை விவாபர துவக்கம் இருபது ஆண்டுகளுக்கு முன்பே துவக்கப்பட்டு இன்று வெற்றிகரமாக விற்கப்படுகிறது. அதனால் தான் கொழுப்பு (கொலஸ்ட்ரால்) இல்லாத எண்ணை என விற்பனை செய்ய முடிகிறது. இந்த கொலஸ்ட்ரால் இல்லாத எண்ணை என்பது ஐக்கிய நாடு சபையில் கடுமையாக எச்சரிக்கப்படும் கடுகு எண்ணையில் தேவையான எண்ணையில் வாசனை திரவியத்தை உற்றி காய்ச்சி. நல்லெண்ணையும், விளக்கு எண்ணையும், தேங்காய் எண்ணையும் ஒன்றே. தேவை வாசனை மட்டுமே. இதைத்தானே விற்பனை செய்கிறார்கள். இதனால் தான் அனைத்து நோய்களும் என்பதை அறிவியல் உலகம் அறிந்திருந்தும் அதை மருத்துவ வியாபாரத்திற்காக அனுமதிக்கிறார்கள். இவை உடல் ஆரோகியத்திற்கு கெடுதியானது என்றால் பிரதமராக இருப்பவர்களே புழுத்துப்போன யோகா மூலம் கொழுப்பை கரைக்க முடியும் எனப்பிரச்சாரம் செய்கிறார்கள். கடுகு, பனை எண்ணைகள் உடலுக்கு 100% கெடுதி என, இத்துப்போன உலக சுகதார மய்யம் கூட 13 ஆண்டுகளுக்கு முன்பு அறிக்கை கொடுத்தது. அதையும் மீறி நாங்கள் கொழுப்பு இல்லாத எண்ணை தருகிறோம் என அடிமுட்டாலான படித்த சமூகத்தை நம்ப வைத்தது. பள்ளிகூடம் போகாமலே உடல் நடலத்தோடு இருந்த உழுகுடிகள் மீதும் இவர்களின் அடிமுட்டால்தனத்தை ஏவி உழுகுடி, உழைப்பாளிகளையும் நோயாளியாக்கி விட்டார்கள். தற்போது விற்பனையில் உள்ள தேங்காய் எண்ணை 50 விழுக்காடு பெட்ரோல் என்பது விசாரித்துப்பார்தால் நமக்கு தலை சுற்றுகிறது. 

உற்பத்தி இல்லாமலமே உற்பத்தி செய்யப்படும் எண்ணையினை காட் ஒப்பந்த முதலாளிகள் குழாய் மூலம் கொண்டு வந்து சுத்திகரிப்பு செய்து தொடர் வண்டிகள் மூலம் எளிதாகவும் கட்டணக்குறைவாகவும் நாடு முழுக்க அடைகிறது. இப்படி இருக்க எட்டு வழிச்சாலை விரிவாக்க திட்டத்தின் இலக்கு என்ன ?. பிரிட்டீசு இந்தியாவில் வி. பில் என்ற புவியியல் நிபுனரால் எழுதப்பட்ட 'எக்கானிமி ஆப் இந்தியா' என்ற நூலிலை கையில் எடுத்துள்ளது உலக வங்கி (இது உலக முதலாளிகளாக இயக்கப்படும் தனியார் வங்கி). அந்த நூலில் தக்காணம் முழுக்க வைரம் வைடூரியம், மரகதம், வெள்ளை நிற சலவைக்கல், சுண்ணாம்புக்கல் உள்ளது என குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளது. இந்த கனிமங்களை சுரண்டலுக்குதான் இந்தியாவை ஆளும் காட் ஒப்பந்த அரசுகள் ஒற்றை பாதையிலிருந்து எட்டுப்பாதையாக மாற்றுகிறது. 

 வி. பில் தனது குறிப்பில் இந்தியாவில் இருப்பு பாதை (ரயில்வே) போடப்பட்டதால் உணவு மற்றும் இரண்டாம் தர சமூக தேவைப் பொருள்கள் விலை இந்திய ஒன்றியம் முழுவதும் ஒரே மாதிரியாக உள்ளது. இருந்தாலும் ஜபல்பூர், காந்த மலைப்பகுதியில் இரும்புகாக தாது வெட்டி எடுத்தால் சுற்றுச்சூழல் கெட்டு விடும் என இவரின் அறிவுரையை ஏற்ற அரசு இரும்பு தாதுவை வெட்டி எடுப்பதை நிறுத்தியது. ஆங்கிலேய அரசுக்கு இருந்த அக்கரை கூட சுதேதி பித்தால்லாடம் பேசும் காட் முதலாளி அரசுகளுக்கு இல்லையே. இதை அம்பலப்படுத்த வேண்டிய கட்சிகள் எங்கே.

கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பத்திர பதிவு நடைமுறையை மய்ய அரசு மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டது. அதை ஆதரித்து பல வணிக பத்திரிக்கைகள் குறிப்பாக இந்தியன் எக்னாமி என்ற பத்திரிக்கை தூக்கி வைத்து எழுதியது. இந்த அரசாணை அடிப்படையிலே செல்வி.ஜெயலலிதா நில மதிப்பீட்டு தொகையை அதாவது மார்கெட் விலையை விட அரசு மதிப்பு கூடுதலாக இருக்க வகை செய்யும் வகையில் அரசு ஆணை வெளியிட்டார். இதன் நோக்கத்தை அப்போதே என் போன்றோர் நில கையெட்டுப்பு சட்டத்தை இந்த அரசு கொண்டு வரப்போகிறது என் ஏழுதினோம் பேசினோம் அது நடந்து விட்டது. தற்போது எட்டு வழிச்சாலைக்காக அமைசரவை கூடி கைப்பமிட்ட அரசாணை 106 விதியில் வெளியிட்டுள்ளார்கள். இந்த விதியின்படி அரசாங்கம் நிலம் கையப்படுத்தினால் அதை எதிர்த்து நீதி மன்ற தடையாணை பெற முடியாது வழக்காடலாம். 

                     தெற்காசியவில் குறிப்பாக தென் தமிழகத்தில் பொது ஆண்டிற்கு பின்பு 10ஆம் நூற்றாண்டில் பெருத்த கடல் கொந்தளிப்பும் (சுனாமி) பெரும் நிலநடுக்கமும் ஏற்பட்டது. இதன் காரணத்தை தற்போது ஆய்விடும் புவியியல் வள்ளுனர்கள் பூமியின் சமநிலைத்தன்மை என அறிதியிட்டுள்ளார்கள். உலக மக்கள் அனைவரையும் நுகர்வு கலாச்சாரத்தில் தள்ளி விட்டுள்ளது காட் ஒப்பந்தம். இந்த ஒப்பந்தந்திற்கு சீனா, ரஷ்யா போன்ற பொதுவுடமை நாடுகளே இரையாகி விட்டது. பூமியினை அதிகளவில் கனிமத்திற்காக புண்ணாக்கிய நாடு சீனா என்கிறது உலக பொருளதார அறிக்கை. நுகர்விலிருந்து விடுபட நாம் விழிப்புணர்வை செய்திட்டாலே பூமிப்பந்தினைக்காப்பாற்ற இயலும். இவைகளை இந்த பாரளுமன்ற மக்களாட்சி காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது நமது அறிவுடமை.  










Wednesday, 3 April 2019

'ஊழல் வதம்' எடுபடுமா?#



                                                           'ஊழல் வதம்' எடுபடுமா?#

Tuesday, 2 April 2019

போடுங்கம்மா ஓட்டு ..... போடுங்கய்யா ஓட்டு

               
                                      'மக்களாட்சி' என்ற  மந்திரச்சொல்
                                     
                           போடுங்கம்மா ஓட்டு ..... போடுங்கய்யா ஓட்டு            


வணக்கம் 
                                         
தில்லி பாரளுமன்றம்


             
 மக்களாட்சி தத்துவம் என்ற மந்திரச்சொல்லால் ''ஓட்டுப்போடலேன்னா செத்ததுக்கு அர்த்தமாப்பா'' என்று சொல்லி ஆன்மீக வாக்காக பரவியிட, வாக்கு சாவடியில் வரிசை நின்று வாக்களித்தார்கள் மக்கள். ஒரு கட்டத்தில் வாக்கு போடுவதால் எதுவும் நடக்கவில்லை என்ற கசப்பு & வெறுப்பாக மாற பலரையும் ஓட்டுச்சாவடியை குட்டிச்சுராகப் பார்க்க வைத்தது. இதனால் அரசியல் கட்சியும் முதலாளிகளும் சேர்ந்து ''வாக்கு சாவடிக்கு வராத மக்களை புரட்சியாளர்கள் அதாவது நக்சல்பாரிகள் கையில் எடுத்தார்கள் என்றால் அனைவருக்கும் சிக்கல் வரும்' என்ற ஆலோசனையை சொன்னார்கள். முதலாளிகளுக்கு பயம் வந்தால் முதலில் அவர்கள் எடுக்கும் ஆயுதம், சாப்பாடு. அதற்கும் மயங்கவில்லை என்றால் பணமாக கொடுப்பது, அதற்கும் அசரவில்லை என்றால் நேரடியாக பேச்சுவார்த்தைக்கு போவது. இதில் பெரும்பாலான மக்கள் அசைந்து விடுவார்கள். பணம் காசுக்கு ஆசைப்படாத மக்களும் 'சரி நாட்டுக்கு வந்தது நமக்கும் ஓட்டப்போடுவோம்' என முடிவெடுத்து வாக்களித்து வந்தார்கள். இதில் மக்கள் பழக்க அடிமையானர்கள் என்பதை விட காவல்துறை இன்னும் பல துறைகளின் நெருக்கடியால் வாக்கு சதவிகிதத்தை தக்கவைத்து மக்களாட்சி தத்துவம் என்ற மானை விரட்டி வந்தார்கள். இந்த மான் மாயமான் என பல்லித்தது. இந்த இடைவெளியில் அரசு எந்திரத்தில் மாற்றம் கொண்டுவர நினைக்கும் குழுக்கள் ஓட்டுப்போடாதே புரட்சி செய் ஆயுதம் ஏந்து எனப்பிரச்சாரம் செய்தனர். இதன் பலன் இந்திய துணைக்கண்டத்தில் வடபகுதியில் எடுப்பட்டது. 

வாக்களிக்க விளம்பரம்

        இந்த காலகட்டத்தில் அண்டை நாடு என்பதை விட ஆன்மீக நாடாகவும் இந்து நாடாகவு அறிப்பட்ட நேபாளத்தில் மன்னர் ஆட்சியை எதிர்த்து மாவோ பொதுவுடமை சிந்தனையாளர்கள் பல்நெடுங்காலமாக போராடி வந்தவர்கள். கைக்கு ஓரளவு வெற்றி கிடைத்தது. (இதில் இந்திய அரசும், இந்தியாவில் இயங்கும் பொதுவுடமைக்கட்சியின் உள்குத்துக்கள் தனி கதை). இந்த மாவோ குழுக்களின் வெற்றி இந்தியாவில் பரவிடக்கூடாது என்பதற்காக ஆலோசனையில் மூழ்கி கண்டுபிடித்தது தான் வாக்கு பெட்டியில் ஒட்டி வந்த நோட்டா. 

    வாக்களிக்காதவர்கள் அரசு எந்திரத்தின் மீது கொண்ட கோபமே இவர்கள் மாவோ குழுக்கள் பக்கள் போய்விடுவார்கள் என்பதால் இவர்கள் கோபத்தை தனிக்க நோட்டோ என்பதை கண்டறிந்து நடைமுறைப்படுத்தினார்கள். ஒரு தொகுதியில் நோட்டோ வெற்றி பெற்றால்  அந்தப்பகுதியில் ஐ.ஏ.எஸ் அதிகாரி தான் சட்ட மன்ற, பாரளுமன்ற உறுப்பினர் என அறியாத கூட்டம்  அதிலும் வாக்களித்து தனது அதிமேதாவிதனத்தை நிறுவியது நிறுவி வருகிறது.   

       

                 மன்னர் ஆட்சியை மக்களாட்சியாக கட்டமைத்த பிரிட்டீஷாரும் இந்திய முதலாளிகளும்


பிரிட்டீஷார் ஆட்சியில் 1920ல் பொது தேர்தல் நடந்தது. அப்போது இங்கிலாந்தை ஆண்ட அரச பிரதிநிதிகளே இந்திய பாரளுமன்றத்திற்கு தலைவர். இந்தியாவில் தேர்தெடுக்கப்பட்ட பாரளுமன்ற, சட்டசபை உறுப்பினர்கள் விவாதத்தை தீர்மானிப்பதும், அவர்களின் தீர்மானத்தை அரச மாளிகையே தீர்மானித்தது. இதை மக்களாட்சி என்று இந்திய மக்களிடம் விதைத்தார்கள்.

         பிரிட்டீஷ் ஆட்சியில் பெரும்பாலான நிலங்கள் பாளையக்காரர்கள், ஜமீன், மிட்டா, மிராஷ்களுக்கு மட்டுமே சொந்தம். சில பகுதியில் உழுபவனுக்கு வழங்கப்பட்ட நிலம் இனாம், ஜாரி என்ற வகைப்பாட்டில் பிரித்தளித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அப்போது நடந்த ஆட்சியை பிரிட்டீஷ் ஆட்சி என்றும் வரலாறு சொல்லுகிறது. சரியாகச் சொன்னால் பிரிட்டீஷ் மன்னருக்கு இயக்கிய இங்கிலாந்து பிரிவியூ கவுன்சிலுக்கு கீழ் நடந்த நாயக்கர் ஆட்சியின் எச்சம் என்றே சொல்ல வேண்டும். ஆனால் அந்த ஆட்சியை மக்களாட்சி என்று வரலாறு பதிவிட்டுள்ளது.

             மன்னர் அவர்களுக்கு கீழ் இயங்கும் பாரளுமன்றம், அவர்களுக்கு கீழ் நாயக்கர், மறவர், வன்னியர், கவுண்டர் ஜமீன்கள், இதர சாதிகளில் குறிப்பாக முதலியார், பிள்ளை, சில இடங்களில் சொற்ப எண்ணிக்கையில் பார்ப்பனர்கள், நாடார்கள் மிட்டா, மிராசு, பட்டக்காரர் என மூன்றடுக்கு ஆட்சி முறையை மக்களாட்சி என்று இன்றும் நம்புவோர்கள் உண்டு. இந்த திரைமறை பொம்மலாட்ட மக்களாட்சியில் எல்லோரும் வாக்களிக்க தகுதியானவர்கள் இல்லை. பட்டாதாரிகள் அதாவது நில உடமையாளர்கள் மட்டுமே. இன்னும் கொச்சையாகச் சொன்னால் அரசுக்கு வரி செலுத்துபவர் மட்டுமே. இதில் பெண்களுக்கு வாக்குரிமை கிடையாது.

                         பருத்தி உற்பத்தியை பெருக்க கிடைத்த நிலம்  வாக்குரிமையை தந்தது

            பிரிட்டீஷ் ஆட்சியில் காலத்தில் ஏற்பட்ட தொழில் மயமாக்கத்திற்கு குறிப்பாக துணி உற்பத்திக்கு தேவையான பஞ்சினை உலகத்திற்கே உற்பத்தி செய்திட நெருக்கடி என்பதை விட வியாபாரத்தில் லாபம் சம்பாதிக்க முடிவெடுத்தது பிரிட்டீஷ் அரசு, பஞ்சுக்கொள்கையை விரிவுபடுத்தியது. ஆனால் நில குத்தகைதாரர்களான பாளையக்காரர்கள், மிட்டா மிராசுகள் உழுபவனிடம் நில குத்தகையை வாங்குவதில் கவனம் செலுத்தினார்களே தவிர உற்பத்தியை பெருக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பாளையக்காரர்கள், மிட்டா மிராசுகளிடமிருந்த நிலங்களை கையகப்படுத்தி நிலத்தில் கூலிகளாக குத்தகைதாரர்களாக இருந்த வேளாண் குடிகளுக்கு பஞ்சமி ஜாரி நிலம், கள்ளர் ஜாரி நிலம் என பிரித்து வழங்கினார்கள். இதன் மூலம் வாக்களிக்கும் உரிமையை பல குலதினர் பெற்றனர். இதன் மூலம் சில பட்டியல் குலத்தினரும், பிற குலத்தினரும் வாக்குரிமை பெற்று தங்களது வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை நிலை நாட்டினார்கள்.

                   ஒருவழியாக இந்தியா சுதந்தரம் அடைந்ததாக அறிவிக்கப்பட்ட 1952ல் நடந்த தேர்தலில் 18 வயதிலிருந்த வாக்களிக்கும் வயதை 21 ஆக உயர்த்தி ஆண் பெண் இருவருக்கும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். வாக்களிக்கும் உரிமை என்பது நெல்லுச்சோறு சாப்பிட்டால் பெருமை என்பது போல தங்களது பிறவிப்பயனாக கருதிய மக்கள் அனைவரும் மௌன மகிழ்சியாக வாக்களித்து இன்புற்றார்கள். எதற்காக...., வரும் காலத்தில் எல்லோருக்கும் நிலம் கிடைக்கும் என்ற நட்பாசையால்.
இந்தியா சுதந்தரம் அடைந்து 1974 வரை பெருவாரியான நிலங்கள் மிட்டா மிராசு, பாளையக்காரர், ஜமீன்தார்களிடமே இருந்தது. நிலத்தின் மேல் மக்கள் போர் தொடுத்தார்கள் வட இந்தியாவில். வேறு வழியில்லாமல் நில உச்சரவம்பு மற்றும் மன்னர் மானியம் ஒழிப்பு சட்டம் கொண்டு வந்தார்கள். (இந்த சட்ட முன் வடிவத்திற்கு வாக்களிக்காமல் கழிப்பறையில் பம்மிய திராவிட முன்னேற்ற கட்சி உறுப்பினரின் வீர ?வரலாறு உண்டு.)  

நில உச்ச வரம்பு சட்டம் கடும் எதிர்ப்பிற்கிடையில் நிறைவேற்றினார்கள். இச்சட்டத்தை கடுமையாக எதிர்த்தவர்கள் இன்றை பாரதீய ஜனதா கட்சியாக அறிப்படும் அன்றைய ஜன சங்கத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சட்டம் கேரள மாநிலத்தில் ஓரளவிற்கு ஒரளவிற்கு பரவலாக்கப்பட்டது. தமிழகத்தில் பரவாயில்லை என்று சொல்லாம்.

             இச்சட்டத்தில் நில உச்ச வரம்புக்கு உள் சட்ட வழி வகை செய்தது. கம்பெனி, மற்றும் டிரஸ்ட், சொசைட்டி பிரிவுகள் மூலம் 240 ஏர்ஸ் (2.40) வரை வைத்துக்கொள்ளலாம். தனி நபர் 12.4 ஏர்ஸ் நிலம் வைத்திருக்க சட்டம் வகை செய்தாலும் கரும்பு பயிறிட்டிருந்தால் 25 ஏக்கர் வரை தனி நபர் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கியது. இதை பொதுவுடமைக் கட்சியினரே ஆதரித்தது கூர்ந்து கவனிக்கத்தக்கது. இன்றும் நில உச்சவரம்பு சட்டம் நடைமுறையில் உள்ளது. வருமான வரி கணக்கிற்கு மட்டும் ரைடு வரும் மய்ய அரசு அதிகாரிகள் நில உச்சவரம்பிற்கு ஏன் வரமறுக்கிறார்கள் என்பதை கேட்டால் நமக்கு அறிவு உண்டு எனப்பொருள். 

             இந்தியாளவில் நில உச்சவரம்புச் சட்டம் முழுமையாக அமுல் படுத்தவில்லை என இந்திய அரசால் இயக்கப்படும் ஏக்தா பரிசத் போன்ற அமைப்புகள் ஒடிசா, பீகார், இன்றைய சட்டீசுக்கர், மகாராசுட்டம் போன்ற மாநிலத்தில் நிலமற்ற மக்களை ஒன்று திரட்டி தில்லி வரை 500 மைல் நடைபயணம் மேற்கொண்டது. ஆனால் இதையெல்லாம் கருத்தில் கொள்ளாத மய்ய அரசு சத்தமில்லாமல் கடந்த ஆண்டும் இந்தியா முழுவதும் உள்ள நில உச்சவரம்பு சட்ட அமுலாக்க அலுவலங்களை மூட உத்தரவிட அனைத்து மாநில அரசுகள் இதனை நைசாக மூடிவிட்டது. 

            அனைத்து உழுகுடி அல்லது வேளாண்மை கூலிகளாக உள்ள அனைவருக்கும் குறைந்தபட்டம் இரண்டு ஏக்கர் நிலமாவது கிடைத்த பின்னர் இந்த அலுவலங்களை மூடி இருக்கலாம் எனக்கோரிக்கை வைக்கக்கூட அரசியல் கட்சிகளில் குறிப்பாக பொதுவுடமை கட்சியினர் கூட கோரிக்கை வைக்கவில்லை என்பதே வியப்பிலும் வியப்பு. இந்த ஏக்தா பரிசத் அமைப்பு மக்களைத்திரட்ட கோரிக்கை பேரணி நடத்த அரசே உதவியது. காரணம் மக்கள் சட்டத்தை கையில் எடுத்து முதலாளிகள் நிலத்தை கையக்கப்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவும், இந்த மக்களை மவோ பொதுவுடமை அமைப்பினரிடமிருந்து அன்னிப்படுத்தவுமே என்ற பார்வையை மறுதளித்த இயலாது.   

                                                       
                                                                             வாக்களிப்பது எதற்காக    




                     இந்தியாவில் நேரடியாக வாக்களிக்கும் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரளுமன்ற சட்டமன்ற உறுப்பினர் இருக்க, இவர்கள் வாக்களித்து குடியரசு தலைவர், குடியரசுத் துணைத்தலைவர் என்ற பதவியினரை தேர்ந்தெடுக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுத்த அரசு சரியாக செயல்படுகிறதா என கண்காணிக்க உருவாக்கப்பட்டதே இந்த இந்த சட்டம். அப்படியானால் மாநில ஆளுனரை ஏன் தேர்ந்தெடுக்காம்ல நியமிக்கிறார்கள் ஏன் என யாராது சிந்தித்து கேட்டதுண்டா. கேட்க மறுக்கும் ஒவ்வொரு வாக்காளனும் இந்த அரசமைப்பு சரி என ஒத்துக்கொண்டவன் அல்லது 'ஊருக்கானது நமக்கு' என ஆளோட்டாளாக வரிசையில் நின்று வாக்களிப்பவன் என்று தானே பொருள் கொள்ள முடிகிறது. இதில் நாம் எந்த ரகம் என்பது என்பதை நாமே தெளிந்து கொள்ளவேண்டிய காலம் கட்டாயம்.   

               இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட இந்திய சட்டங்கள் சுதரந்தரம் வாங்கிய குறைந்தது 25 ஆண்டுகள் கழித்தாவது முழுமையாக நடைமுறைப்படுத்தி உள்ளார்களா? என கேள்வி கேட்க வேண்டாம், நாம் யாரிடமாவது விவாதித்தது உண்டா?. காரணம் இந்திய அமைப்பு முறை சரியாக இருக்கிறது என நம்பி அல்லது பொதுப்புத்தியில் வாக்களிக்கிறோம் என்றே பொருள் கொள்ளவேண்டியதாகவுள்ளது.   

பண்ணையாளாக கஞ்சிக்கு வேலை செய்திடும் கூலி தொழிலாளி
            இந்தியா விடுதலை அடைந்து 1974 வரையிலும் பெருவாரியான நிலங்கள் மிட்டா மிராஷ் பாளையக்காரர்கள் வசமிருந்தது. கோயில் மடங்களும் இதில் அடக்கம். இந்த நிலத்தில் உழுது கப்பம் கட்டிய வரும் மக்களுக்கு இதுநாள் வரை இந்திய அரசு நிலம் கொடுக்க முன்வரவில்லையே. மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் தனிப்பட்ட முயற்சியால் நிலமற்றவர்களுக்கு இரண்டு ஏக்கர் நிலத்தை வழங்க முயற்சி எடுக்கப்பட்டது. அரசு அலுவர்களின் சாதி ஆதிக்கத்தாலும், உள்ளூர் ஆதிக்க சாதியினரின் தலையீட்டாலும் உரிய பயனாளிகளுக்கு போய் சேரவில்லை, அப்படியே பயனாளியாக இருந்தவகள் பெரும்பாலனாவர்களின் பெயர் பொய்யானவை என இந்திய அரசின் ஆடிட்டிங் ரிப்போர்ட் அறிக்கை சொல்லுகிறது. 

     சுதந்தரம் அடைந்தவுடன் வேளாண் கூலிகளுக்கு நிலம் கிடைக்க அன்னாதான திட்டமாக தனிப்பட்ட முயற்சியாக பூதான இயக்கம் மூலம் கிடைத்த நிலங்கள் இன்று ஆதிக்க சாதிகளின் கைகளில் உள்ளது என்பது வெட்டவெளிச்சம். நிலத்தில் கூலியாளாக தலைமுறை தலைமுறையாக பணிசெய்திடும் நபர்களுக்கு நிலம் கிடைக்கும் என ஒவ்வொரு ஐந்தாண்டும் வாக்களிக்கும் மனநிலையை நம்மிடம் விதைத்தவர்கள் யார் ? என்ற சிந்தனை நமக்கு வரவில்லையே ஏன். 

                                                       தேர்தல் அலுவர்கள் யார் ?          

நேற்று வரை நம்மிடம் கையூட்டு வாங்கிய விஏஓ, ஆர் ஐ, தாசிதார், நமது கண்ணுக்கு தெரியாமல் கமிசனை மட்டும் வாங்கும் ஆர்டிஓ, டிஆஒ ,கலெக்டர், (இதில் விதிவிலக்கான அலுவர்களும் இருக்கிறார்கள்) இவர்கள் தேர்தல் விதிமுறை வந்தவுடன் எப்படி உத்தமராகப் பார்க்கப்படுகிறார்கள். இந்த உத்தமர்கள், 'சட்டத்தை மீறும் நபர்கள் என கைகாட்டினால் அவர்களை சுட்டுத்தள்ள, மொட்டியில் தட்ட நேற்று வரை லஞ்சத்தைத் தவிர வேறு எதுவும் வாழ்க்கையில் அறிந்திடாத சாலையில் உன்னையும் என்னையும் வழி மறிக்கும் இவர்களை உத்தமர்கள் என பார்க்க வைக்கும் மந்திரசக்தி எது என என்றாது நாம் யோசித்தது உண்டா ? இந்த அதிகாரிகளை ஆளுனர்களாக நியமிக்கும் கூத்து தனிக்கதை. 

லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட அரசு அலுவலர்கள்


                  இந்தியாவில் சாதிகளின் இருப்பு என்பது நேற்று இன்று தோன்றியதல்ல. அதன் பெருமை சிறுமைகளை பேசுவது ஆய்விற்காக இருக்கவேண்டுமே தவிர பொதுவெளியில் பேச அனுமதித்தது யார். இப்படி பெருமை பேசி மற்ற இனக்குழுக்களை இழிவு செய்திட வேண்டிய தேவை என்ன இருக்கிறது. தேர்தலுக்கும் இதற்கும் தொடர்பு இல்லாதது போல் தோற்றமளிக்கும். ஆனால் ஆழத்தொடர்புடையது என்பதை நாம் உள்வாங்க மறுக்கும் வசியமை வைத்தவர்கள் யார். 

             உழுவபவனுக்கு நிலம் சொந்தம் என்ற கோரிக்கை கோட்பாடாக மாறும் போது இக்கோரிக்கையைத் திசை திருப்பி தொழில் மயக்கொள்கைக்குள் நம்மை இழுத்து சென்ற சக்தி எனது என்பதை நாம் ஏன் சிந்திக்கவில்லை.

             வனத்தின் உள்ள கனிம வளங்களை, மரத்தையும் கொள்ளையடிக்க வனத்திற்கும் மக்களுக்குமான உறவினை முறித்து 1883ல் பிரிட்டீஷ் இந்திய வனச் சட்டம் கொண்டு வந்தார்கள். இன்னும் இச்சட்டத்தை இன்னும் அப்படியே கடைபிடிக்கிறோம். 
காட்டுக்குள் வாழும் குடிகள் இடம் கொடைக்கானல்

         தற்போது முளைத்துள்ள புதிய ரக சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளின் பிரச்சாரத்தால் ''பட்டா இல்லாமல் வனத்திற்குள் வாழும் மக்களை அப்புறப்படுத்தலாம்'' என்று நீதி மன்றம்  கொழுத்துப்போன தீர்ப்பை வழங்கியுள்ளது. வனத்திற்கும் மக்களுக்கான உறவால் பாதிக்கப்படுவது யார்?  வனநிலங்களை 999 ஆண்டுகளுக்கு குத்தைக்கு எடுத்து வனத்தை அழித்து இரண்டாம் தர உற்பத்தியான தேயிலை, பாக்கு, பயிட்டதை இன்னும் அழிக்காமல் காக்கும் சக்தி எது என நாம் என்றாவது சிந்தித்தது உண்டா?.


நுகர்வின் வெளிப்பாடு


              தனிநபர்களின் தேவையை விட வாங்கிக்குவிக்கும் நுகர்வு கலாச்சாரத்தை நம்மூலைக்குள் திணித்து அது மரபுக்கூறாக மாறிவிட்டது என்பதை உணர்த்தாக சுற்றுச்சூழல் காவலர்கள் யாருக்காக குரல் கொடுக்கிறார்கள் இவர்களை இயக்குவது யார் ?. என்பதை நாம் யோசிக்கவே இல்லையே. வண்ண வண்ண நிறத்தில் ஆடை அணியும் நுகர்வு கலாச்சாரத்தால் தானே வனம் அழித்து சாயம் காய்ச்ச மரம் வளர்த்து அதையும் வெட்டினார்கள். இதனால் தானே சாயப்பட்டரை வளர்ந்தது. இந்தச் சாயப்பட்டரையும் உலகத்திற்கே உற்பத்தி கேந்திரமாக இந்தியாவின் தமிழகத்தில் மட்டும் உள்ளது ஏனென நம்மை பேசாமல் இருக்க வைக்கும் சதி எது?.  
பயிற்சியில் ஈடுபடும் மாவோ பொதுவுடமை கட்சியினர்
 
சாயக்கழிவாக ஓடும் நொய்யல் ஆறு

முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு

  நூலதிகாரம் நூல் முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு ஆசிரியர் ; தி. சுப்பிரமணியன் வெளியீடு ; அடையாளம்   ‘முந்தி பிறந்தவன் நா...