Search This Blog

Monday 19 August 2019

நூல் ; கொங்கு குடியானவர் சமூகம்





                                                                             நூலதிகாரம்
 


நூல் ; கொங்கு குடியானவர் சமூகம்
மூலநூல் (A study of left and right sub cast of south india)
ஆசிரியர்  ; பிராண்டா பெக் (பெண்)
மொழி பெயர்ப்பு ஆசிரியர் ; திரு அப்பணசாமி
மீள் வாசிப்பு ; மானுடவியல் பேராசிரியர் பக்தவச்சலபாரதி
வெளியீடு ; அடையாளம்
விலை ; 460 ,பக்கங்கள் ; 462

வணக்கம்,
          மேற்குத்தொடர்ச்சி மலையில் அடிவாரத்தில் உள்ள கோயம்பத்தூர் துவங்கி கோவா வரை உள்ள பகுதியை கொங்கு நாடு என பழய இலக்கியங்கள் இயம்பினாலும் ஒளவையார் அதிசியத்த அதிமான் ஆண்ட தகடூர் எல்லை வரையே நமது கொங்கு நாடு என புழக்கச்சொல்லால் அழைக்கப்படுகிறது.

              கொங்கு நாடு குறித்த வரலாற்று நூல் 1918ல் திருச்செங்கோடு முத்துசாமிக்கோனார் என்பவரால் எழுததப்பட்டதை பேராசிரிரும் எழுத்தாளருமான கோட்பாட்டாளர் பெருமாள் முருகன் மறுப்பதிப்பிட்டு வெளிச்சப்படுத்தினார். பிரிட்டீஷார் பல கெஜெட்டிரியர்களில் சேலம், கோவை மாவட்டமாகப் பிரித்து வகைப்படுத்தி எழுதியுள்ளார்கள். குறிப்பாக சேலம் கலெக்கராக இருந்த தாமஸ் மான்றோ எழுதிய வரலாற்று நூல் குறிப்பிடத்தக்கது. பெரும் புலவர் இராமசாமி செட்டியார் எழுதிய கொங்கு வரலாறு, கோவை கிழார், புலவர் குழந்தை, பேராசிரியர் ஆரோக்கியசாமி, டி.வி மகாலிங்கம் ஆகியோர் ஆங்கிலத்தில் எழுதியவைமயிலை சீனி வேங்கடசாமி, எழுதியவை படிக்க வேண்டிய நூல்கள். 

           கல்வெட்டு ஆய்வாளர் புலவர் இராசு, மற்றும் பேராசிரியர் வே. மாணிக்கம் அவர்கள் எழுதிய நூல்கள் வரலாறுகளை அடுக்கி வைக்கிறது. இருந்தாலும் இதில் சமூகவியலான நூல்கள் என்பன புலவர் இராசு எழுதிய கொங்கு நாட்டு செப்பேடுகள், கொங்கு நாட்டு கல்வெட்டுக்கள், வேட்டுவ குல ஆவணங்கள், கொங்கு ஆவணங்கள் என உள்ளூர் வரலாறுகள் தொக்குப்புகள் அதனுள் உள்ள செய்திகளை விட தொகுத்த புலவர் இராசு அவர்களே நம்மை வியக்க வைக்கிறார். 

நாடார் சமூகத்தை மய்யமாக வைத்து ஆய்வு மேற்கொண்ட ஹார்டு கிராவ், பிரமலைக்கள்ளர் மற்றும் ஆப்பநாடு கொண்டையங்கோட்டை மறவர் சமூகம் சார்ந்த ஆய்வு நூல் எழுதிய ஜெர்மன் பேராசிரியர் லூயிஸ் தூமன், பிராமணர்களை மய்யமாக வைத்து பல நூறு நூல்கள் உள்ளன. ஆனால் கொங்கு கவுண்டர்கள் சார்ந்த மானுடவியல் நூலாக வரவில்லை. அந்த குறையை தீர்த்துள்ளார்  லூயிஸ் தூமனின் மாணவி பிராண்டா பெக். இது முழுக்க முழுக்க ஆய்வு நூலாக 1960 காலங்களில் வெளிவந்தது. அதை பல்நெடு ஆண்டுகள் கழித்து தமிழ் சமூகத்திற்கு தொண்டுளத்தோடு மொழி பெயர்க்க உதவியுள்ளது விடியல் நிறுவனம். ஆய்வு நூலை அப்படியே வாசகனுக்கு அச்சுப்பிசுராமல் கொடுத்துள்ளார் மொழிபெயர்ப்பு ஆசிரியர் அப்பணசாமி. 

சோழ, பாண்டிய, விஜநகர, நாயக்கர் ஆட்சியில் துவங்கி, பிரிட்டீஷார் தொகுத்துள்ள மதுரை, கோவை கெஜட்டில் வலங்கை இடங்கை பிரிவுகள் அதன் மோதல்கள் பதிவுகள் உள்ளன. இந்த வலங்கை இடங்கை பிரிவுகளே இந்தச் சமூகத்தில் உள்ள குலம் என்ற ஜாதி கட்டமைப்பை எப்படி இருப்பு வைத்துக்கொள்கிறது. இந்த குலம் தனது இருப்பை தக்கவைக்க என்ன வகையான வழிமுறைகளை கையாண்டுள்ளது என்பதற்கு வலங்கை இடங்கை பிரிவே காரணம் என ஆசிரியர் பிராண்டா பெக் தனது களஆய்வில் 'இடங்கை வலங்கை பிரிவுகளாக அனைத்து குலங்களும் இருந்துள்ளனர்' என்பதை நிறுவி விளக்கியுள்ளார். 

            இவர் களஆய்வு செய்த 1960ம் ஆண்டில் இடங்கை வலங்கை கூறுகள் இருந்துள்ளது என்பதை நமது தமிழ் எழுத்தாளர்கள் ஏன் பதிவிடவில்லை என்ற கேள்வி எழுகிறது. இறந்தவர்களில் குறிப்பாக வீரமாத்தி மற்றும் கோயில் ஆடல் பணியில் இருந்த தேவரடியார்களாக இருந்து மதிக்கத்தக்க கலைஞரக இருந்த பெண்களுக்கு கோவில் எழுப்பும் பண்பு இங்கு இருந்துள்ளது. பெண் தெய்வம் இறந்தவர்களின் கோவிகள் வடக்கு நோக்கியே அமைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டும் ஆசிரியர், வாணிபம் செய்திடும் தமிழ் செட்டி, நாடார்கள் மதுரையிலிருந்து சென்றவர்கள் என வழக்காற்று தகவல்களை பதிவிட்டுள்ளார். இவர்கள் மதுரையிலிருந்து வெளியேறும் போது அங்கையர் கன்னியான மதுரை மீனாட்சி தங்களைப்பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக வட திசை நோக்கி வைத்து வந்தார்களாம் என்ற பதிவு ஆய்வுக்குறியது. நாடார்கள் பலரும் பாண்டிய நாடார்கள் என கொங்கு நாடார்கள் தங்களை அழைத்துக்கொள்வதும் அவர்களுக்கு சமூக அந்தஸ்து இருந்துள்ளதையும் சான்றுகளோடு பதிவிட்டுள்ளார்.

தெலுங்கு பேசும் அருந்ததியர் என தற்போது அடையாளப்படும் மாதாரி, வாடன் என சமூகங்கள் இப்பகுதியில் போர் குடிகளாக இருந்தவர்கள் என்றும் விளக்கியுள்ளார். 

பறையர் சமூகத்தினர் கொங்கு பகுதியில் மிக செல்வாக்காக இருந்தனர் அவர்களில் மொரசுப்பறையர்கள் வரி வசூல் செய்த பறையர்களுக்கு குடியான சமூகமான கவுண்டர்கள் வருடாந்தர கூலி கொடுக்க வில்லை என்றால் அவர்களை ஊரை விட்டும் சாதியை விட்டும் குலநீக்கம் செய்திடும் சமூக சட்டம் இருந்ததாக பதிவிட்டுள்ளதும், இன்றும் மாரியம்மன் கோவில் பூசாரிகளாக பறையர் குலத்தினர் இருப்பது அவர்களுக்கு கவுண்டர் மற்றும் இதர சமூகம் கொடுக்கும் மரியாதை அதிகம் என்ற செய்தி கூர்ந்து கவனிக்க வைக்கிறது. 

கொங்கு நாடார்களில் 63 பிரிவுகள் இருந்தாலும் அதில் கிணற்று பாவா குலம், ராவுத்தர் குலம் என்ற செய்தி ஆய்வு மேற்கொள்ளவேண்டியுள்ளதை குறிப்பிடுகிறார். 

நூல் ஆசிரியர் கொங்கு நாட்டில் காங்கேயம் அருகில் உள்ள ஓலப்பாளையம் என்ற கிராமத்தில் தங்கி ஐந்தாண்டுகள் ஆய்வு மேற்கொண்ட போது கோவை புறநகர் பகுதி வரை உள்ள கிராமங்களில் அண்ணன்மார் உடுக்கையடிப்பாடல்கள் பாடுவதை பதிவிட்டுள்ளவர் அக்கதை குறித்த அனைத்து ஆவய்வுகளையும் படித்து கள ஆய்வு செய்துள்ளதாக குறிப்பிட்டு 'கொங்குப்பள்ளர், குறவர் குலத்தினர் அண்ணன்மார் கதையை பாடும் உரிமை பெற்றவர்கள்' என அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார். இப்பகுதியில் புலவர் என்ற குலத்தினருக்கு தனித்த மரியாதையுள்ளதையும் அவர்கள் சங்க காலத்திலிருந்த பாணர் புலவர் போல் இப்பகுதியில் உள்ள அனைத்து குடும்பங்கள் வரலாற்றை அறிந்தவர்களாக உள்ளனர். கவுண்டர்களின் திருமணத்தை மருத்துவ குலத்தினரும் (முடிதிருத்துவபவர்கள்) புலவர் என்ற குலத்தினருமே நடத்தி வைக்கிறார்கள். இந்த குலத்தினருக்கு பறையர் குலத்தினர் உதவியாக இருக்கிறார்கள் என்ற செய்தி சமூக அமைப்பு முறையில் உள்ள நெருக்கம் புலப்படுகிறது.

                 கவுண்டர் குலத்தினர் நிலத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை வெற்று நம்ம்பிக்கையில்லை அது அதிகாரத்தின் பிறப்பிடம் என நம்புகிறார்கள். பிடி மண்ணை எடுத்தால் அதற்காக உயிரை கொடுக்கிறார்கள். பங்காளிகள் சண்டையில் பிரிந்து சென்றால் பிடிமண் எடுத்து கோவில்கட்ட அனுமதிப்பதில்லை என்ற செய்தி வியப்பாக உள்ளது. 

               கொங்குப்பகுதியில் உள்ள அண்ணன்மார் உடுக்கையடிப்பாடல்களில் கொங்கு வேட்டுவர் குலத்தினரையும் ஆசாரி குலத்திரையும் எதிரியாகவே சித்தரித்து பாடல் இருக்கிறது. இப்பாடல் போலவே இன்றும் கொங்கு கவுண்டர்களில் பெருபாலான கோவில்களில் ஆசாரி குலத்தினர் உள்ளே நுழைவதில்லை என்ற செய்தி ஆய்வு செய்திடல் வேண்டும் என தெரிகிறது.  அதே போல் 1960 காலங்களில் வேட்டுவர்கள் கவுண்டர் என தங்கள் பெயருக்கு பின்னால் போட்டு அழைக்கும் பழக்கம் இல்லை என்பது நுட்பமான செய்தி.

பிரிட்டீஷார் ஆட்சியில்  வணிக தன்மை அதிகரித்த பின்பு தான் ஹோட்டல்கள் வந்துள்ளது. 1960 காலங்களில் ஹோட்டல்களில் கோமுட்டி, ஆசாரி சாதியினர் தவிர மற்ற சமூகத்தினர் அனைவரும் சாப்பிட்ட இலையை எடுக்க வேண்டும் என்ற சமூக வரம்பு இருந்துள்ளது. 

              கோவில் திருவிழாக்களில் அம்மன் கோவியிலில் பொங்கல் வைத்தவுடன் அம்மனுக்கு ஊர் நாட்டாமை பொங்கல் பானையில் மட்டுமே பொங்கல் எடுத்து படைத்தனர். பின்னாலில் அனைத்து பொங்கல் பானையிலும் பொங்கல் எடுத்து படைத்துள்ளனர் என்பது குலமும் குழுக்களும் கீழிருந்து மேலாதிக்கம் பெற்றதைப்புரிந்துகொள்ள முடிகிறது.

                  உணவு பழக்க வழக்கம் குறித்த பதிவில் கொங்குப்பகுதியில் பட்டக்காரர்கள் என்ற ஜமீன்தார்கள்  கூட அரிசி சோறை பெரிதாக விரும்பி உண்ணவில்லை அரிசி சாப்பாடு ஒரு நாளுக்கு ஒரு வேளை இருப்பதை நான் பல பெரிய வீடுகளில் கூட பார்க்கவில்லை என்ற செய்தி நாம் இன்று எப்படி உணவு விசத்தில் மாறியுள்ளோம் அல்லது அரசு இலவசமாக நெல் அரிசியை மட்டும் ரேசனில் கொடுத்து மாற்றி விட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. 

                 தனித்தனி குலங்களாக மக்கள் வாழ்ந்தாலும் வலங்கை இடங்கையாக மட்டுமே பிரிந்து வாழ்கிறார்கள். இதுவே குல இருப்பை தக்கவைக்கிறது என்று ஆழமாக பதிவிட்டுள்ளார். இந்திய சடங்குகளும் நம்பிக்கைகளும், பழக்க வழங்கங்களும் பண்பாடும், சாதிய கூறுகள், சாதிய படிமங்கள் என பல நூல்கள் இருந்தாலும் கொங்கு பகுதியில் குறிப்பாக கவுண்டர் சமூகம் சார்ந்த மானுடவியல் நூல் வரவில்லை என்றே சொல்ல வேண்டும். அதை இந்த நூல் வலங்கை இடங்கை வாயிலாக தேடியுள்ளது.
நூலின் ஆசிரியர் கொங்கு பகுதியை ஆய்வு மேற்கொள்ள அவர் படித்த நூல்களில் பட்டியலை படித்துப்பார்த்தால் அவரது களப்பணியை விட படிப்பு பணிக்காக அவர் தன்னை முழுமையாக காவுகொடுத்துள்ளதை புரிய முடிகிறது. இந்த நூலின் மூலத்தன்மையை சிதையாமல் மொழி பெயர்க்க மொழி பெயர்ப்பாளர் இடங்கை வலங்கை குறித்த நூல்களை தேடி படித்து சிரமப்பட்டிருப்பார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

4 comments:

  1. மிக ஆழமான மதிப்பாய்வு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. நல்ல புத்தக ஆய்வு.நீங்கள் குறிப்பிட்டதுபோல கொங்கு பகுதியின் குலம் குடிகளின் ஆய்வு நூற்கள் அரிதே.
    // தனித்தனி குலங்களாக மக்கள் வாழ்ந்தாலும்வலங்கை இடங்கையாக மட்டுமே பிரிந்து வாழ்கிறார்கள். இதுவே குல இருப்பை தக்கவைக்கிறதுஎன்று ஆழமாக பதிவிட்டுள்ளார்.//
    நீங்கள் வலங்கை இடங்கை பற்றி ஒரு விரிவான கட்டுரை எழுதினால் நாங்கள் அறிந்து கொல்வோம் 

    ReplyDelete
  3. //தெலுங்குபேசும் அருந்ததியர் என தற்போது அடையாளப்படும் மாதாரி, வாடன் என சமூகங்கள் இப்பகுதியில்போர் குடிகளாக இருந்தவர்கள் என்றும் விளக்கியுள்ளார்.//
    வாடன் குலத்தவர் போர் குடிகளாக இருந்தவர்கள் என்கிறது ஆய்வு, அவர்கள் ஏன் தற்போது துப்புரவு பணியாளர் களாகவும் பட்டியல் இனத்தில் கடை நிலையில் அவர்களை கொண்டு சேர்த்த சமூக காரணிகள் எது

    ReplyDelete

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...