Search This Blog

Showing posts with label நூலாயுதம். Show all posts
Showing posts with label நூலாயுதம். Show all posts

Thursday, 18 April 2019

நூலதிகாரம் நூல் south indian repellion 1800 - 1801




                                             இந்தியாவின் முதல் விடுதலை முழக்கம்

Wednesday, 3 April 2019

நூலாயுதம் ; நூல் ; தமிழர் மானுடவியல்


                                                 
                                             நூலாயுதம்

Thursday, 28 March 2019

நூலதிகாரம் // நூல் சைவ வைணவ போராட்டங்கள்


                                                                நூலதிகாரம்

சைவ வைணவ போராட்டங்கள்
ஆசிரியர் சிகரம். செந்திநாதன்                       


வெளியீடு சந்தியா
விலை 165

மரபு எங்கிருந்து, எதிலிருந்து துவங்குவது என்பதே சபரிமலையில் விவகாரம். இதற்கு ஒரு வரியில் பதில் சொல்வதென்றால் அதிகாரத்திற்கு ஆகமம் அடங்கும் இதற்கு எளிய எடுத்துக்காட்டு சைவ கோவிலில் பெருமாள்  இருப்பதும் வைணவக்கோயிலில் சிவன் இருப்பதுமே. ஆக மரபு ஆகமம் என்பதெல்லாம் அதிகாரத்தின் அதாவது ஆட்சியாளர்களின் கைகளில் உள்ளது.  ஆக சபரி மலைப்போராட்டம் என்பது சைவத்திற்குள் சைவ போராட்டமா? அல்லது என்னவென்று தெரியாத இழிகூட்டத்தாரின் கூச்சலா? என்பது புரியவில்லை. இந்தக்கூச்சல் கேட்டபோது நான் வாசித்த நூல் சைவ வைணவ போராட்டங்கள்.  இதை படித்தபோது தான் தெரிந்தது மரபு என்பது ஆச்சியாளர்கள் வைத்து அதைப்பிடித்து தொங்குவது அதைவைத்து பொருளீட்டும் கும்பல் என, புரிந்தது.

நூலில் வைணவ சைவ சண்டையை சங்ககாலம் முதல் நிகழ்காலம் வரை ஓரளவிற்கு தொகுத்துள்ளார். பல்லவர் காலத்திலே சைவம் தளைத்தோங்கியது. ஆனால் நந்திவர்மப் பல்லவனே வழக்கின் மேல் வழக்காடிகளை வைத்திருக்கும் தில்லை கோயிலில் பெருமாள் கோவிலை கட்டினான் என்ற சான்றை படிக்கும் போது அதிகாரத்திற்கு ஆகமம் காலம் தொட்டு அடங்கி இருப்பதை உணர முடிகிறது.

குலோத்துங்க சோழர் காலத்தில் சைவமும் வைணவமும் சண்டையிட்டது. அரச மதமான சைவம் மக்களை ஓடுக்கியது. இதனால் ராமனுசரின் விசிட்டாவைத தத்துவத்தின் மயங்கி வைணத்தின் பக்கம் சாய்ந்தனர். இங்கிருந்து தான் வைண சைவ சண்டை வெளிச்சத்திற்கு வருகிறது. குலோத்துங்கன் ராமனுசரை விரட்டுகிறான் அவன் உயிர்தப்பி மேலக்கோட்டையில் யாதவ சாம்ராஜ்சியத்தில் தஞ்சம் புகுறான். இப்படி வரலாற்றை அள்ளித்தெளித்து துவங்கும் நூல், பன்னிரு திருமுறைகள் சமற்கிருந்த மொழியாக்கம் செய்யப்பட்டது என்றும் சோழர்கள் சைவ வெறியர்களாக இருந்ததற்கு நாவுக்கரசர் (திரு) எழுதிய ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் என்ற வரிகளை சான்றாக வைக்கிறது. 

சோழகாலத்தில் சிவஞ்சானசித்தியாரின் சுபக்கம், பரபக்கம் என்ற இரண்டு நூல். இதில்  பரபக்கத்தில் மனைவிக்காக சிவபக்தனான ராவணனை அழித்து சிவனிடன் பாவ மன்னிப்பு கேட்டான் ராமன் என திட்டிதீர்ப்பது வைணத்தை ஒடுக்க எழுத்தப்பட்டவையே என சான்றளிக்கிறார். இருந்தாலும் சைவ மடங்கள் தமிழை தூக்கிப்பிடிப்பது போல் தெரிந்தாலும் சமற்கிருந்தமே வழிப்பாட்டு மொழியாக உள்ளது என்பதை சுட்டிக்காட்ட தயங்கவில்லை. திருவடுதுறை ஆதின மடம் சமற்கிருத்தை ஏற்று பரப்புரை செய்தது என்று தமிழுக்காக வாதிடுகிறார் ஆசிரியர்.

சைவத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாதாடியவர் நாவுக்காரர். அதைப்போலவே வைணவத்தில் நம்மாழ்வார், மத்தவாச்சாரியர்கள் என்று வரலாற்றை தூக்கி நிறுத்தும் இந்த நூல் பக்தி இலக்கிய காலம் என்பது ஆரிய மதத்திற்கு எதிரானது என சான்றுரைக்கிறார். ராமனுசர் புரட்சியாளர் என எல்லோரும் எழுதும் போது ''அவர் எழுதிய ஸ்கிரந்தகம் தமிழில் இல்லை. அதில் திருகோட்டியூரில் வைணகுண்ட தரிசனத்தை சாமானியன் பார்க்க அழைத்து சென்றதாக ஒருவரிகூட இல்லை. அதே போல் ஆரியன் அல்லாதவன் பூநூல் அணிந்தாலும் இந்த பிறவியில் ஆரியனாக முடியாது. இறைவனை தொழுதால் அடுத்த பிறவியில் ஆரியனாக பிறக்கலாம். இது ஆரிய பெண்களுக்கும் பொருந்தும் என்றும், நாத்திகத்தை நரபலி என்றும் சமணத்தை ஆனை என்றும், பவுத்தத்தை இருட்டு என்றும் சைவத்தை கபாலிகள் என்றும் ஆதிசங்கரரின் அத்வைத்தத்தை மலைப்பாம்ம்பு என்றும் ராமனுசர் சொல்லியுள்ளதை அவரின் நூலிருந்து சான்று தருவது ஆசிரியரின் வாசிப்பு நுணுக்கத்தை காட்டுகிறது.

பாண்டியர் காலத்தில் சைவவைணவ சண்டை

பொதுவாக பாண்டியர்கள் சைவர்களாக இருந்தாலும் 8,9ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த நெடுஞ்சசையன் பராந்தகன் வைணவன், அடுத்து வந்த வரகுணபாண்டியன் சைவன் அடுத்து ஆட்சி செய்த கூன்பாண்டியன் சமணன் பின்னர் சைவம் மாறவர்ம சுந்தரபாண்டியன் (இவனே சோழர் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தவன்) சைவம், சடையவர்மசுந்தர பாண்டியன் வைணவன் என பாண்டிய மண்டலம் பல மார்க்கங்களை அனுசரித்ததை தெளிவுபடுத்திக்காட்டுகிறார்.

வைணவத்தில் இன்றும் பேசப்படும் பொருள் 'தென்கலை (y) வடகலை (u)' இந்த வடிவங்களில் நெற்றியில் நாமம் போடுவார்கள் என்பதை குறிப்பிடும் நூல் இவர்களை சண்டை வெளிச்சத்துக்கு வந்தது 1882ல். அப்போது தென்கலையினர் தமிழில் உள்ள பாசுரங்களை வழிப்பாட்டில் பாடவேண்டும் என்ற கோரிக்கையை நிராகத்ததே வழக்கின் சாரம். இதில் லண்டன் கோர்ட் வரை வழக்காடி தமிழை நிலைநாட்டியுள்ளனர் என பெருமைப்படும் ஆசிரியர் இப்படி தமிழுக்காக வாதாடியவர்களே எழுத்து வடிவத்தில் சமற்கிருத்தை கொண்டுவந்து மணிபிரவால நடையை உருவாக்கினார்கள் என சுட்டிக்காட்டுகிறார்.

நாயக்கர் ஆட்சியில்

இவர்கள் ஆட்சியில் வழிபாட்டில் தமிழ் இரண்டாம் இடத்தில் கூட இல்லை. முருகன் வழிபாடு ஸ்கந்த வழிபாடாகவும் 'ஸ்கந்தபுரணம்' என திருத்தி தமிழில் புகுத்தினார்கள் என வருத்தப்படும் ஆசிரியர் இவர்கள் காலத்திலே தமிழை தூக்கி பிடிக்க தனிமனிதர்களாக பலர் போராடியதை பட்டியலிடுகிறார். அவர்களின் முக்கியமானவர் அருணகிரிநாதர். அடுத்து சிவபிரகாசசுவாமிகள் தமிழே எம்மொழியென இவர்கள் முழங்கியுள்ளதை பட்டியல் போடுகிறார். இவர்களைப்போலவே சித்தர்கள் ஆரியத்தையும் சாதியத்தையும் எதித்து குரல் கொடுத்து தோற்று மலைகளில் ஓடிய புரட்சியாளர்கள் அவர்கள் பல போராளிகளை வைத்தியர் என்ற போர்வையில் உருவாக்கினார்கள் என போராளிகளுக்காக நூலாசிரியர் முழக்கமிடுகிறார்.

மாராட்டியர்கள்

இவர்கள் காலத்தில் தமிழை ஒதுக்கியே வைத்தனர். தியாகராயர் என்பவரை வைத்து தமிழில் இருந்த சதிராட்ட அடவுகளிய தெலுங்கில் கீர்த்தனையாக்கி அதை வரலாறராக்கி விட்டனரென ஆதங்கப்படும் ஆசிரியர் மன்னர் சொக்கநாதஆட்சியில் வாழ்ந்த தாயுமாணவரையும் குறிப்பிட தவறவில்லை.

பிரிட்டீஷ் ஆட்சி

ஆரியத்தை அப்பட்டமாக எதித்தவர் வள்ளளார். இவர்  பிரிட்டீஷ் ஆட்சியை ஒழிக என எழுதிய கவிதைகளை குறிப்பிடுகிறார். தோல்சீலை போராட்டம் செய்த வைகுந்தசாமி பிரம்ம சபை எப்படி பிரம்ம சமாஜமானது என கேள்வி எழுப்பு நூலாசிரியர்  ஆதிசங்கரரின் அத்வைத்ததை விட எங்கள் அப்பர் சம்மந்தரின் தேவாரம் பழையது. ராமனுசரின் விசிட்டா வைத்தத்தை விட முந்தியது எங்கள் பிரபந்தம் என நமது மண்டையில் கொட்டுகிறாது இந்த நூல் சிறிய நூல் என்றாலும் பரந்து பட்ட தகவல்கள் பெருத்த வாசிப்பாளர்களுக்கு இந்த தீனி குறைவு என்றாலும் நொறுக்குத்தீனியாக அமையும் எனப்பரிந்துரைக்கிறேன்.
   
 


நூலதிகாரம் -- தமிழகத்தில் பறவைகள் காப்பிடம்




                                                                      நூலதிகாரம்  

   தமிழகத்தில் பறவைகள் காப்பிடம்     

நூல் -  தமிழகத்தில் பறவைகள் காப்பிடம்
ஆசிரியர் - சண்முகநந்தம் &பேராசிரியர் முனைவர் செயக்குமார்
வெளியீடு - எதிர்
விலை - 500



தமிழகத்தில் பறவைகள் காப்பிடம்......, இந்த தலைப்பைப் பார்த்தவுடன் 'இது நமக்காகது' என பலரும் ஒதுங்கி விடுவார்கள். இல்லை இல்லை படிக்கும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் இருக்க வேண்டிய நூல் என்பதை நாம் உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என, பரிந்துரைக்கிறேன். தமிழகத்தில் உள்ள அனைத்து பறவைகள் காப்பிடங்களுக்கும் (சரணலையம்) சென்று, ஆய்வு செய்து, அதன் புகைப்படங்களை (அழகிய) எடுத்து மிமினுக்கும் தாள்களில் அச்சிட்டுள்ளார்கள். இதை விட முக்கியமானது இந்தியாவிலே அதிக பறவைகள் காப்பிடமும் பெரிய காப்பிடமும் அமைந்த மாநிலம் தமிழகம் என்பதால் இது போன்ற நூல்கள் தமிழ் இலக்கிய உலகில் இல்லாததும், இந்த நூல் அறியப்படவேண்டியதன் கட்டாயத்தை நான் உணர்கிறேன்.  
'மரத்தையும், பறவையையும் தங்கையாக நினைத்து அழுத பெண் பாத்திரத்தை தமிழ் இலக்கியங்களில் படித்திருப்போம். கொங்கு மண்டலத்தின் 'அண்ணன்மார்' கதையின் மையப்புள்ளியே கிளி, இராமயாணத்தில் 'மான்' தானே கதையின் திருப்பம். பாலூட்டும் பன்றியை தனது பசிக்காக வேட்டையாடிய புலியால் பரிதவித்த பன்றி குட்டிகளுக்கு பாலூட்ட புலிக்கு தண்டனை விதித்தான் சிவன் என்று பக்தி இலக்கியத்திலும் பதிவுள்ளது.
பிரிட்டீஷார் வருகைக்கு முன்பு வரை விலங்குகளை உணவுக்காக வேட்டையாடுவதில் தர்மம் இருந்தது. பெண் விலங்கையும், பெண் பறவையும் வேட்டையாடி விட்டு வருந்தி அழுத இலக்கிய பாத்திரச் செய்திகள் புதைந்து கிடப்பதை பார்க்கும் போது மானுட சமூகம் இயற்கையோடு இசைந்து வாழ்ந்ததைக் காட்டுகிறது. வேட்டையாடி கூட்டு வாழ்கையாக இயற்கையோடு மனித இனக்குழுவின் ஒற்றுமையை பறைசாட்டி ஒன்றாக ஒன்றியிருந்த வாழ்வை, விலங்குகளிடமிருந்து மனிதனை தனியாக பிரித்தது பிரிட்டீஷ் சட்டம்.
வாரக்கடைசி நாளுக்கு (வீக் எண்ட்) 'எங்கு போகலாம்' என திட்டமிடும் குடும்பத்தினர் குழந்தைகளுடன் பறவைகள் காப்பிடத்திடத்திற்கு போகலாம். அந்த காப்பிடங்கள் எங்கு உள்ளன, போகும் வழி, தூரம் எவ்வளவு, என்ன விதமான பறவைகள் எந்த மாதங்களில் வரும், போகும் போது என்னென்ன எடுத்துச்செல்ல வேண்டும்? என்பதற்கான கையேடு வேண்டுமல்லவா? அக்கையேடு தான் இந்த நூல்.
மொரிசியஸ் தீவில் 'கல்வாரியா' மரத்தின் விதையினை 'டோடோ' என்ற பறவை சாப்பிட்டு அதன் வயிற்றில் ஏற்படும் நொதி மாற்றத்தால் சீரடைந்து, இப்பறவையின் எச்சம் மூலமே கல்வாரியா விதை முளைத்தது. இந்தப்பறவை அழிந்ததால் (வேட்டையாடுவதாலும்), இந்த மரத்தின் விதைகளை உண்ணுவதற்கான பறவையில்லை. தானாக பழுத்து விழும் இந்த மரத்தின் விதை முளைக்கும் திறனை இழந்து விட்டது. தற்போது மொரீஸ்யஸ் தீவில் மிஞ்சியுள்ளது ஒரே ஒரு மரம் மட்டுமே. இதனை எப்படி இனப்பெருக்கம் செய்ய வைப்பதென உலக நாடுகளெல்லாம் கூடி ஆய்வு நடந்துகிறது. ஆய்வு இன்னும் முற்றுப்பெறவில்லை என்ற செய்தியோடு, ''பறவைகள் என்பது தனித்த உயிரனம் அல்ல, அது அனைத்து உயிர்களுக்குமான தொடர் சங்கிலியின் முதல் கண்ணி'' என அறிவுறுத்தளோடு துவங்கிறது இந்த நூல். பெரும்பாலான பறவைகள் விதைகளை மட்டுமே உண்ணும் என்பதால் விதை முளைப்பதற்கும், பரவலுக்கும் மையக்காரணி பறவைகளே என்பதை சட்டென அறிவுறுத்துகிறது.
கடல் நீர் - முன்னீர், ஆறு - நன்னீர், குடிநீர் - இன்னீர், மழைநீர் - அமிழ்தநீர் என இலக்கியங்கள் சொல்லும் செய்தியை பறவைகள் இசைபோல அருமையாகச் சொல்லி, குளத்தின் ஓரத்திலே பழங்காலத்தில் இறந்த மனிதர்களை புதைத்துள்ளார்கள். மதுரையை சுற்றியுள்ள ஏரிக்கரையோரங்களை ஆய்வு செய்ததில் அங்குள்ள ஏரி குளங்கள் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்ற அறிய தகவலை சான்றுடன் விளக்குறது. 

தமிழ் இலக்கிய பழம்பாடல்களில் 64 வகை பறவைகள் பெயர்கள் உள்ளதைப்பட்டியலிட்டு, பறவைகள் கூடி ஓசையிடுவதை 'ஓசனித்தல்' என்ற அழகு சொல்லால் நமது புலவர்கள் பதிவு செய்துள்ளதையும், அன்னம் என்ற பறவை வாத்து என்பதை தேடி விளக்கம் கொடுத்துள்ளதனர். ஆக்ஸிசன் குறைந்த பகுதியில் காகம் வாழாது. காகம் இல்லாத இடத்தில் மனிதன் வாழமாட்டான் என்ற நுண்ணிய செய்தி, காகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பை விவரிக்கிறது.

பறவைவைகள் குறித்து யார்யாரெல்லாம் ஆய்வு செய்தார்கள். இந்தியாவின் முன்னோடி பறவையிலானாரான 'சலீம் அலி' குறித்த தகவல், சிறுவர்கள் எளிதாக புரிந்து படித்து கொள்ளும் விதமாக பறவைகளின் உடல் கூறுயியல், பறவைகள் இனப்பெருக்கத்திற்காக மட்டுமே கூடு கட்டுகின்றன. கூடு கட்டுவதில் ஆண் பறவைகள் பெண் பறவையை ஈர்க்க படும்பாடு அதன் விவரிப்பு அறிவியல் பூர்வமாக கொடுத்துள்ளார்கள். அதே போல் பறவைகளிலே குயில் மட்டும் ஏன் கூடு கட்டுவதில்லை ஆய்வின் விடை கிடைக்காததை பதிவிட்டுள்ளது நூல். பறவைகள் எத்தனை மாதங்களுக்கு ஒரு முறை முட்டையிடும், சில பறவைகள் மூன்றாண்டுக்கு ஒரு முறையே இனப்பெருக்கம் செய்கிறது என்ற செய்தி அருமையான பதிவு.

பறவைகள் காப்பிடங்களைவிட அதன் பெயர் காரணத்தை வாசகர்களுக்கு கொடுத்திட நூலாசிரியர்கள் எடுத்த சிரத்தையை புரிந்துகொள்ள முடிகிறது. இராமநாதபுர மாவட்டம் சாயல்குடி அருகே உள்ல காஞ்சாரை என்ற காப்பிடத்தின் பெயர் காரணத்தை விளக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்கள். கஞ்சாரை என்பது பண்டுவத்திற்கு (வைத்தியத்திற்கு) பயன்படும் மூலிகை என்பதை பண்டுவ அகராதியில் பார்த்திருந்தால் வாசகர்களுக்கு தெளிவுபடுத்தி இருக்கலாம்.
தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி முடிவுற்று பிரிட்டீஷ் ஆட்சி வந்தது. நாயக்கர் குதிரைபடைகளுக்கு தடை போட்டனர். இதனால் குதிரைகளை வேதாரயகாடுகளில் விடப்பட்டது. இந்தக்குதிரைகள் 'தொண்டு குதிரைகள்' என அழக்கப்பட்டது. இதுபோன்ற அறியப்படதாக செய்திகள் மரங்களை நடவு செய்தவர்கள், பறவைகள் குறித்த ஆய்வாளர்கள் செய்திகளை பெட்டி செய்தியாக கொடுத்து அழகுற வடிவமைத்துள்ளார்கள். 

வேடந்தாங்கள் காப்பிடத்திற்கு புதிய பறவைகள் வருவதையும், ஒவ்வொரு ஆண்டும் வந்து சென்ற சில பறவைகள் வராமல் நின்றது குறித்த ஆய்வு தேவை என்பதை சுட்டுக்காட்டும் இந்த நூல், காப்பிடங்கள் அனைத்து கண்மாய் ஏரிகள் அவைகளுக்கான நீர் வரத்து கால்வாய்கள் தூர்த்து கிடப்பதை விவசாயிகளுடன் சேர்ந்து தனது வருத்ததை பதிவிட்டுள்ளது.
பொதுவாக சூழலியல்வாதிகள் ''மனிதனை விலங்காகவும், விலங்கை மனிதனாக பார்க்க வைத்தவர்கள்'' என்ற குற்றச்சாட்டு உண்டு. அதிலிருந்து சற்று வேறுபட்டு மனித குலத்தோடு இசைந்து நூலினை முழுமையாக செழுமைப்படுத்தியுள்ளார்கள் நூலாசிரியர்கள். இந்தாலும் அதில் உள்ள குறைபாடாக பார்ப்பது அயல் தாவரம், இயல் தாவரம் எனக்குறிப்பிட்டுள்ளது. அதே வீட்டு விலங்காக வளர்க்கப்படும் பன்றி நாய், பூனை இவைகள் காப்பிடங்களுக்கு செல்கிறது என்ற சொல்லாடல்கள் நமது சிந்தனைக்குள் சிக்கலை உண்டாக்குறது.
ஒரு விதை முளைக்க தேவையான காரணிகள் இருந்தாலும், அவை முளைத்து வளர்ந்திட தேவையான சூழல் இருந்தால் மட்டுமே அம்மண்ணில் அல்லது அவ்விடத்தில் மண்ணே இல்லத எட்டு மாடி கட்டிடத்தில் கூட முளைத்த தாவரம் நிலைத்து நிற்கும், ஒவ்வொரு விதையும் தனக்குள் புரட்சி  (Darwin's Theory of Evolution, and  RNA, DNA Metopolism with its Mechanism phenomenon) என்ற 'வித்தை' வைத்துள்ளது என்பது இயற்கை விதி. வெளிநாட்டு தாவாரங்களுக்கு விசா வழங்குபவர்கள் போல் அயல் (அன்னிய) இயல் (உள்ளூர்) தாவரம் என பிரித்து எழுதியதும் இந்த நூலில் பார்க முடிகிறது. பறவையோ விலங்கோ உணவு தேவைக்காக வலசையாக (migration) வரும், போகும். வந்த பறவைக்கு சூழல் அதனது உடலுக்கு ஒத்துப்போனாலும் அந்த இடத்தில் அந்த விலங்கினங்கள் வாழ்வதில்லை என்பதே அறிவியல் உண்மை. அதை கவனிக்க மறுத்து கருத்து திணிப்பாக எழுதியுள்ளதை கவனித்தில் கொள்ளவேண்டியுள்ளது. 

அதே போல் தன்னிச்சையான மரப்புப்கூறு மாற்றம்  (spontaneous mutation) நிகழ்வதாலே, மனிதன் தோன்றாத பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தாவரங்கள், அதிலிருந்து பூச்சி புழு. இவைகளிருந்து பறவை அடுத்து மனிதன் பரிணமித்தான் என்பதை தற்போது வரை உள்ள ஆய்வுகள் தெளிவுபடுத்துகிறது. காப்பிடங்கள் அனைத்தும் குளத்திலே அமைந்துள்ளது. குளங்கள் வேளாண்மைக்கான ஆதாரம் வேளாண்மை குடிகளின் வளர்ப்பு விலங்கு நாய், பூனை, உணவுக்காக பன்றிகள். இவைகள் அருகில் உள்ள காப்பிடங்களுக்கு போகத்தானே செய்திடும். இந்த நூலின் கூற்றுப்படியே வைத்தால் காட்டு பன்றி, காட்டுப்பூனை, காட்டு நாயான ஓநாய் செந்நாய் இவைகள் காப்பிடங்களுக்கு வருமே இதை தடுக்க சொல்லுவார்களா. அதே போல் பூச்சிக்கொள்ளி மருந்திற்கு எதிர் கருத்துருவாக்கம் உருவகப்பட்டுள்ளது. எதிர் கருத்துவருவாக்கம் அறிவியல் பூர்வமாக நிருபனம் ஆகவில்லை. அதுவரை இவர்கள் காத்திருப்பது நியாயம் என்பதை நூலாசிரியர்கள் உணர்ந்து சூழலியர்கள் மனித குலத்திற்கு விஞ்ஞனத்தொடு இசைந்து கொடுத்திட முன்வரவேண்டும். இல்லையென்றால் இவை வெற்று முழக்கமாகிவிடும் என்பதை கருத்தில் கொள்ளப்படும் என்பதை வேண்டுகிறோம். 

அயல் இயல் என்ற சொல்லாடல்கள் ''நாட்டு மாடு'' கொள்கை போன்றதே. இவையெல்லாம் 'சாதி புனிதம்' குலதெய்வ வழிப்பாடுகளை காப்பதை போன்ற கொள்கைக்கும் இதற்கும் என்ன வேறுபாடு உள்ளதை விஞ்ஞானப்பூர்வமாக விளக்கம் சொல்ல காரணிகள் இல்லாமல் மரபு என்ற ஒற்றைச்சொல்லை துணைக்கு இழுக்கிறார்கள் ஆசிரியர்கள். மனிதன் நேற்று தோன்று விலங்கல்ல. அவன் வேட்டை சமூகமாக இருந்து அதிலிருந்து பரிணமித்தவன். அவன் வேட்டை சமூகமாக இருந்த உற்பத்தி சமூகமாக நிலைத்து நிற்க காடுகளிலிருந்து தனக்கு பழக்கப்படும் விலங்குகளை கண்டறிந்து அதிலிருந்தே வளர்ப்பு விலங்குகளை (domestic)  இனம் கண்டு அவன் வளர்தான். காட்டுக்கோழி இருக்கவே கோழி வரஆடு - கேளை ஆடு - வெள்ளாடு செம்பறி ஆடு, காட்டு மாடு - உழவு மாடு, செந்நாய் ஓநாய் - நாய் இப்படி விலங்குகளை கண்டறிந்து வளர்த்தான் என்பது இந்த நூலாசிரியர்கள் அறியாது அல்ல. தெரிந்தும் ஏதோ காரணத்திற்காக இப்படியான சொற்களை பயன்படுத்தி இருப்பது விஞ்ஞானத்திலிருந்து விளகி நிற்பது வருத்தமளிக்கிறது.  

மனித குலம் இன்னும் வியப்பாக பார்ப்பது இயற்கையான மரபியல் கூறுகள் மட்டுமே (jenitic engenreing). இதற்குள் மனிதன் நுழைந்து விட்டால் அனைத்தும் மானுடன் கைவசப்படும் என்பதை சூழலியல் என்ற போர்வையில் விஞ்ஞானத்திற்கு எதிராக களமாடுவர்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும் என கோரிக்கையை முன்வைக்கிறோம்.   

பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் சுளுந்தீ (sulunthee novel - tamil)

   
பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் சுளுந்தீ (sulunthee novel - tamil)   
         
                                        (French Institute of Pondicherry (IFP)
           பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் எனது கதையான சுளுந்தீயை 28.02.2019 அன்று மாலையில் அதன் நிறுவன ஆய்வாளர்கள் (post p.h.d and p.h.d RESEARCHER) விமர்ச்சித்து பேசினார்கள். 
                                 

      
                 தேனி மாவட்டம் ஆண்டிபட்டியிலிருந்து சென்ற என்னை அந் நிறுவனத்தின் ஆய்வர் முனைவர் திரு. பகதிசிங் அவர்கள் பாண்டிச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து அழைத்துச்சென்று அந்நிறுவனத்தின் மூத்த ஆய்வர் திரு. கண்ணன் அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவர் என்னிடம் போனில் பேசியிருந்ததால் என்னவோ நெருங்கிய நண்பர் போலேவே உரையாடினார். நூலில் உள்ள தரவுகள் குறித்து ''எத்தனை ஆண்டுகள் தேடினீர்கள், அனைத்தும் புதிய செய்திகள், அதற்காக தேடிய தரவு, தர்கத்திற்காக எடுத்துக்கொண்ட சான்றுகளுக்காக எடுத்துக்கொண்ட காலம் எத்தனை ஆண்டுகள்'' என்ற கேள்வியை பல முறை கேட்டார். நூலில் ஆறு இடங்களில் தொடர்பு இல்லாமல் இருப்பதாகச் சுட்டிக்காட்டியவர் ''பத்தாண்டுகளுக்கு மேல் ஜூனியர் விகடனில் வேலை பார்த்தும் இந்த பிழை வந்தது ஏற்புடையது அல்ல'' என கடுமையாக விமர்சித்தவர், இக்குறைகள் ஏற்புடையதான் என்றது, எனக்கு நிறைவைத் தந்தது. மலை ஐந்து மணிக்கு ஆய்வாளர்கள் 28 பேர் கூடிருந்தார்கள். அதில் ஆறு பேர் பிராஞ்ச் நாட்டைச்சேர்ந்த ஆய்வாளர்கள். சுளுந்தீ கதைக்கான விமர்சன கூட்டம் துவங்கியது. 
               அறிமுக உரையாக ஆய்வர் திரு. கண்ணன் அவர்கள் பேசி என்னை அறிமுகம் செய்து வைத்து நூல் குறித்து பேசினார். ''இந்த நூலில் வந்துள்ள சமூக தரவுகள் அனைத்தும் இன்று சமூகத்தில் அடிதட்டு மக்களாக கருதப்படும் மக்களின் வாழ்வியல் கதையின் காலமான 18ஆம் நூற்றாண்டில் எப்படி இருந்திருக்கும் என்பதை பல்நெடுகாலமாக ஆய்வு செய்து எழுதப்பட்டது. அவரைப் பாராட்டலாம்'' எனப்பேசி என்னைப்பேசிட அழைத்தார். 
                  நூலில் உள்ள தரவுகள் நூலில் உள்ள வெங்கம்பயள் என்ற சொல்லுக்கு நான் சுட்டிக்காட்டிய சேர நாட்டில் உள்ள தரவும், கொடைக்கானல் என்பது சரியாக இருக்காது. கோதை என்பதை ஆங்கிலத்தில் எழுதினாலும் கோடை அல்லது கொடை என எழுதினாலும் ஒரு போலவே இருக்கும். கொடைக்கானலில் உள்ள பழையான கிராமங்களில் சேர மரப்பிற்குறிய வெங்கமேடு உள்ளது. ஊரில் நுழைவுவாயில் சேர மண்ணிற்குறிய தன்மையை இன்னும் இழக்காமல் உள்ளது. தமிழ், தெலுங்கு கன்னட மக்களுக்கும் எளிய எடுத்துக்காட்டு தமிழ் குலத்தினர் காது வளர்ப்பார்கள் வடுக மக்கள் காது வளர்க்க மாட்டார்கள். சுளுந்து மரத்தில் பச்சை குச்சியில் தீ பற்றவைத்தால் மழையிலும் அணையாது இப்படியான கதையில் உள்ளவை குறித்த சான்றுகளை எடுத்து வைத்தேன். சுமார் 2.30 நிமிடம் பேசினேன்.                                                                                 
                                                              
      எனது கதையை 13 ஆய்வாளர்கள் படித்து விமர்சனம் செய்வதாக சொல்லியிருந்தார்கள். யாரும் விமர்சிக்கவில்லை. முனைவர் திரு. பகத்சிங், முனைவர் திரு.கண்ணன் இருவரும் ''கதையின் கதாநாயகனான நாவிதன் ராமனின் மகனான நாவிதன் மாடன், கலகக்காரனாக மாறுவதற்கு இன்னும் 'பல'மான காரணம் சொல்லியிருக்கலாம்'' என்ற விமர்சனத்தை வைத்தார்கள். மற்றவர்கள் கதை களத்தில் தரவுகள் சேகரிக்க சென்ற போது மக்களின் ஒத்துழைப்பு, நடந்து கொண்ட விதம் எப்படி இருந்தது, களத்தில் ஏற்பட்ட சிரமம் குறித்தே வினாவி எனது பதிலை பெற்றவர்கள் 
         'கதை குறித்து எதிர் விமர்சனம் இல்லை, கதையில் வரும் சமூக, வரலாற்று தரவுகளைச் சொல்லிப் பாராட்டினார்கள். நானே நன்றி கூறிட நிகழ்ச்சி முடிவடைந்தது. திரு. கண்ணன் அவர்கள் 'சுளுந்தீ கதை என்பதை விட மிகச்சிறப்பாக சமூக வரலாறு. கதையில் சுட்டிக்காட்டிய சிறுகுறைகளை உடனடியாக திருத்துவோம் எனது வீட்டில் தங்குங்கள்'' என அன்பு காட்டினார். அவரின் மனைவியாரும் ''எங்கள் வீட்டில் தங்குங்கள் சார் கூட வாங்க' என அன்பாகச் சொன்னது பெருமையாக இருந்தது. அவர்களிடம் 15நாள் கழித்து வருவதாக சொல்லி விட்டு கிளம்பினேன்.முனைவர் திரு. பகத்சிங் அவர்கள் இரவு உணவு வழங்கி, பாண்டிச்சேரியிலிருந்து மதுரைக்கு பேருந்தில் செல்ல உடனடியாக ஏற்பாடு செய்து உதவினார்என்னை அழைத்து அன்பு செழுத்தி, பெருமைப்படுத்திய பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவன ஆய்வுப்பணியாளர் அனைவருக்கும் மிக்க நன்றி.

The Burning Ire of the Downtrodden (Sulunthee Novel)




                                                The Burning Ire of the Downtrodden                                                    





 http://epaper.newindianexpress.com/c/37834793




B. Meenakshi Sundaram


The novel Sulunthee, a new arrival to the present world of Tamil fiction, brings to light the socio-political situation in Kannivadi, when it was a part of the 18th century Madurai. The author Muthunagu, a native of Aandipatti, had, for long years, gathered the ideas of penning this historical novel, whose content is hitherto untold in Tamil fiction.

“The majority of the characters in Sulunthee are from the downtrodden communities. Moreover, what attracted me in the novel is that a young man from a barber community being its hero. Though I am much familiar with the history of Madurai, many of the anthropological and cultural features discussed in the novel, are absolutely new to me” avers C.Santhalingam, eminent archaeologist and former director, Tamil Nadu State Archaeology Department, in his foreword to the book.

The story revolves around the life of Maadan Naavidhan, the son of Rama Naavidhan, the respectable barber in the palace of Kannivadi. The chieftain, who is called ‘Aranmanayar’ held members of the barber community high and provided them privileges for their services as physicians and haircutters. The Aranmanayar also gifted plenty of Nanjai Nilam (Wet lands) to the barbers so that they could obtain lucrative income out of the land’s produce. Yet, in the caste-ridden society, the Aranmanayar was opposed to the aspirations of Maadan Naavidan to become a soldier in the army by renouncing his family profession of treating diseases, haircutting and shaving. The barbers were called ‘panduvars’, for they excelled in ‘panduvam’ (medical treatment)



“During the time of wars between the Madurai Naickers and the representatives of the Pandya kings, the latter bought certain chemicals from the barbers, who used them for making medicine. The representatives of the Pandya king used those chemicals as explosives against the Naickers. Angered by this, the Naickers killed members of the barber community in great number. Threatened by this nightmare, the barbers handed over their medical treatises to the Brahmin bureaucrats of the Naicker administration and escaped from being killed by the Naickers. Later on, the Brahmins translated the barbers’ medical treatises into Sanskrit and replaced the Tamil expression‘Panduvam’ by ‘Vaidhyam’ “says Muthunagu.

Inspired by the novel, the Institut Français de Pondichéry (The French Institute of Pondicherry) recently organized a symposium on Sulunthee and had an interactive session with its author Muthunagu. 

The front jacket of the book, which portrays the dilapidated Kannivadi palace, has been titled Sulunthee to mean the sticks of Sulunthu tree (Ixora parviflora) being used as flambeaus. 

Muthunagu says that the popular flambeaus made of ''Sulunthu'' sticks have a natural character of burning for hours.

“People from downtrodden communities, who were meted out injustices in the Naicker rule of the 18th century, indulged in rebellions and set fire to things. Therefore, the government brought a ban on making torches using the Sulunthu sticks. Nevertheless, the title of my book is a metaphor to the wrath of the downtrodden” winds up Muthunagu

Sunday, 24 March 2019

சுளுந்தீ :

மறைக்கப்பட்ட தமிழ் மானுடத்தின்
18ஆம் நூற்றாண்டினை மிக நுட்பமாக விவாதிக்கும் ஆகச் சிறந்த தமிழ்த் தேசிய சமூக வரலாற்றுக் களஞ்சியம்.

:- ஆய்வறிஞர் இரெங்கையா முருகன். 







உள்ளூர் வரலாறுகளையும், ஒடுக்கப்பட்ட இன மக்களின் வரையறைகளையும், மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கர் காலத்தின் அரசியலில் ஊடாட்டமான இருண்ட பகுதிகளையும் தனது அயராத உழைப்பால் இனவரைவியல் வரலாற்று நாவலாக சுளுந்தீ அனலாகப் பட்டையைக் கிளப்புகிறது.

சித்தமருத்துவம் தமிழகத்தில் தொலைக்கப்பட்ட வரலாறும், பண்டுவர்களான நாவிதர்கள் சமூகத்தில் எவ்வளவு பெரிய இடத்தை வகித்தனர் என்பதும், தமிழ்ப் பூர்வக் குடிகளுக்கும் அரசாண்ட வந்தேறிக் குடிகளுக்கும் இடையே உள்ள பிரச்சினை,சமாதானம், குடிமுறையிலிருந்து குல நீக்க முறைக்கும் உள்ள பிரத்யேகக் கூறுகளையும் அலசி ஆராய்கிறது சுளுந்தீ.
நாட்டுப்புற வழக்காறுகள், பக்கத்துப் பக்கம் தடுக்கி விழுந்தால் ஆய்வுப் பூர்வமாகப் பழமொழி மற்றும் சொலவடைகளை சமூகத்தோடு இயைந்த பார்வைகளும், ஆனந்த வருட பஞ்ச காலக் குறிப்புகள் தமிழில் இந்த அளவுக்குப் பதியப்படவில்லை.

புளியமரம் வந்த வரலாறு, வண்ணார் சமூகத்தாரின் வெள்ளாவியில் துணிகளை வைப்பதில் கூட வர்ண பேதம், கிணறு தோண்ட பூதம் வந்த கதை, கழுதை குறித்த சுவாரஸ்யமான சமூகக் கதையாடல்கள், தமிழ்ச் சமூகத்தில் மடங்களுக்கும் அரசுக்கும் உள்ள நுட்பமான தலையீடுகள், மயிருக்குள் நுழைந்திருக்கும் நுட்பமான சாதி வேறுபாடுகள், ஏராளமான சித்தா மருத்துவக் குறிப்புகள், மறைந்து கொண்டிருக்கும் வயதான பெண்கள் அணியும் தண்டட்டி அணிகலண், பழனி, கன்னிவாடி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் பகுதி சார்ந்த மக்கள் அவசியம் படிக்க வேண்டிய வரலாற்று இனவரைவியல் நாவல்.

இந்த நாவல் பல்கலைக் கழக வளாகப் பாடத் திட்டத்தில் வைக்கப்பட வேண்டிய புத்தகம்.
சுளுந்தீ :மறைக்கப்பட்ட தமிழ் மானுடத்தின் 18ஆம் நூற்றாண்டினை மிக நுட்பமாக விவாதிக்கும் ஆகச் சிறந்த தமிழ்த் தேசிய சமூக வரலாற்றுக் களஞ்சியம்.

முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு

  நூலதிகாரம் நூல் முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு ஆசிரியர் ; தி. சுப்பிரமணியன் வெளியீடு ; அடையாளம்   ‘முந்தி பிறந்தவன் நா...