நூலதிகாரம்
நூல்
முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு
ஆசிரியர்
; தி. சுப்பிரமணியன்
வெளியீடு
; அடையாளம்
‘முந்தி பிறந்தவன் நான் முதுகில் பூநூல்
தரித்தவன் நான்
சாதியில் ஜங்கமன் நான், சாதிக்கெல்லாம்
பெரியவன் நான்
முன் குடுமி, பிங்குடுமி வெண்சாரமம் பெற்றவன்,
வெள்ளைக்குடையான், புத்தகம் என்னது, பூநூலும்
என்னது,
கட்டோடு வெற்றிலையும், தட்டோடு பாக்கும்,
சொப்போடு சுண்ணாம்பும், பாக்கும் தின்னும்
பல் வெளக்கி
வெள்ளையாடை உடுத்தி, வீசி நடந்து வெள்ளிப்பிரம்பெடுத்து
காரூர் ஜாம்பவ மூர்த்தி பறை சாட்டி வருகிறேன்,
நாச்சிக்கும் நாச்சியப்பனுக்கு பச்சை பந்தலுடுத்தி
நித்திய தோரணம் கட்டி கல்யாணம் செய்யப்போறோம்
நல்லோர் இருக்கலாம் பொல்லார் எல்லாம் ஊருக்கு
போகலாம்’’
தமிழகத்தில்
கருநாடாக ஆந்திர எல்லையான கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள கன்னட மொழியை தாய்
மொழியாக கொண்ட ஓலையர், திகலரு, புட்ட ஓலையரு, முரசுப்பள்ளி, மக்கதூர் என்ற வழக்குச்சொல்லில்
அழக்கப்படும் முரசுப்பறையர் குறித்த ஆய்வு நூல். இம்மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக ‘நாடு’
என்ற அமைப்பில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களது பழக்க வழக்கம் பண்பாடு வரலாறு குறித்து
தஸ்டன் எழுதிய குடிகளும் குலங்களும் நூலிலும் மைசூர் மாநில கோப்புகளில் (கெசட்டியர்கள்)
பதிவுகள் உள்ளன. பொதுவெளியில் பேசுபொருளாக
நூல்கள் குறைவே. இந்த குழுக்கள் இங்கு வாழ்ந்த கல்வெட்டு சான்றுகளோடு துவங்கும் நூல்
பட்டு நூற்பும் செய்துள்ளனர் என்ற தரவினை முன் வைக்கிறது. மாமன்னன் திப்பு சுல்தான்
காலத்தில் வேளாண்மை வானிலை நுணுக்கங்களை அறிந்த குழுக்கள் என்று பதிவு செய்துள்ள சிறிய
நூல் கொத்துக்கொத்தாக பல தகவல்களை தந்துள்ளது.
இவர்கள்
நாடு, தேசம் என்ற வரையரையில் வாழ்கிறார்கள். இவர்களுக்கு குலக்குரு என்ற தலைவர்கள்
பார்ப்பனர்கள் திரிவிசிஸ்டாங்க
ஐயங்கார் பிரிவை சேர்ந்த இவர்கள் திருப்பதி எல்லைப்பகுதியிலிருந்து
வியஜ நகர அல்லது சோழர் காலத்தில் குடியமர்த்தப்பட்டவர்களாக இருக்கலாம். இவர்களே இம்மக்களை
முழுமையாக வழிநடத்தும் நிர்வாகத் தலைவர்களாக இருந்துள்ளனர். இந்த நிர்வாகத்தில் கன்னடம் பேசும் லிங்காயத்து குலத்தினரே பிரச்சனைகளை பேசி
தீர்ப்பு சொல்லும் அதிகாரம் படைத்தவர்கள், இவர்களுக்கு கீழ் மணியகாரன், எஜமான், கோல்காரர், பூசாரி இந்த அமைப்பு முறை
தலைமுறை தலைமுறையாக வருபவை. இந்தக்குழு சாதி விட்டு சாதி மாறி திருமணம் முடித்தவர்கள்,
சாதிக்குள் முறை தவறி திருமணம் முடித்தவர்கள், திருடுபவர்கள், பெண்களை மானபங்கப்படுத்துவர்கள்.
சண்டையின் போது செருப்பு கொண்டு அடித்தல் போன்றவை குற்றங்களாக கருத்தப்பட்டு தண்டிக்கும்
அதிகாரம் படைத்தது. நாக்கில் சூடம் ஏற்றுதல் அல்லது சூடு வைக்கும் தண்டணை சாதி மாறி
திருமணம் முடித்தவர்கள், சாதிக்குள் முறை தவறி திருமணம் முடித்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தண்டனையை நிறைவேற்றுபவர்கள் குல குருவாக இருப்பவர். இதை வைத்துப்பார்க்கும் போது
சாதி ஏன் இந்திய ஒன்றியத்தில் இறுக்கம் பெற்றுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
இப்பகுதியில்
வாழும் தமிழை தாய் மொழியாக கொண்ட பறையர்களும் இதே அமைப்பு முறையில் வாழ்ந்துள்ளனர்
என்பதை கூர்ந்து கவனிக்க வைக்கிறது இந்த நூல். தமிழ் பறையர்
அமைப்பில் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை வசூல் செய்பவர் சலவாதி , தெலுங்கு கன்னடத்திற்கு செட்டி என்ற பெயரில்
லிங்காயத்து குலத்தை சேர்ந்தவர் நிர்வாக அமைப்பில் உள்ளனர். இவர்கள் லிங்கம் பொறித்த
பூநூல் அணியும் வழக்கம் உண்டு. இவர்களது பணி வேளாண்மை குடிகளுக்கும் பறையர் குலத்தினருக்கும்
ஏற்படும் சச்சரவுகள், கூலி உயர்வு கூறித்து பஞ்சாயத்து பேசும் அதிகாரம் படைத்தவர்கள்.
இப்பகுதியில் உள்ள சலவாதிகள் கன்னடம் பேசும் செட்டிகளுக்கு கீழ் தான் அதிகாரம் உள்ளதாம்.
இவர்கள் செட்டி சொல்லும் பணியை செய்ய வேண்டும். செட்டிகள் அரசின் மணி முத்திரையை பெற்றவர்கள்.
இதனை தெய்வத்திற்கு ஒப்பாக அனைவரும் வணங்குகிறார்கள். கருநாடாகத்தில் உள்ள லிங்காயத்திற்குள்
இப்பதவி இருந்த சான்றுகள் இல்லை என்கிறார் நூலாசிரியர்.
பல்லவர்கள்
காலத்தில் ஆந்திர மாநிலத்திலிருந்து ப்பிராமணர்கள் தமிழகத்துக்கு அழைத்து வந்தனர்,
இவர்களுக்கு வீடு கட்ட வீடு அருகில் கிணறு அமைக்க, செஞ்சாந்து வைத்து சுவர் பூச்சு
செய்திட அனுமத்த கல்வெட்டு சான்றுகளை கூர்ந்து பார்க்கும் போது பிற குழுக்கள் இவைகள்
செய்திட அரச அனுமதியில்லை என்றே பொருள்படுகிறது.
இன்றும்
கிராமங்களில் பட்டியல் குழுக்கள் செருப்பு போட, உருமா கட்ட, குடை பிடித்துச்செல்ல சமூக
தடை சட்டம் உள்ளதை அறிவோம். இந்த அனுமதியை பிற்பட்டுத்தப்பட்ட குழுக்கள் எப்படி பெற்றனர்
என்பதற்கான அந்தியூர், திருப்பூர், அவிநாசி, பேரூர் குடிமங்களம், கடத்தூர், கரூர்,
மொடக்கூர், பாரியூர் கல்வெட்டு சான்று மூலம் ‘பார்பனர்களுக்கு 10 கழஞ்சி பொன் கொடுத்தால்
அதை அவர்கள் பாதியை அரசுக்கு செழுத்தி விட்டு மீதியை அவர்கள் வைத்துக்கொண்டு செருப்பு
அணிய, சீன குடை (வெண்பட்டு) பிடிக்க, குதிரையில் போக அனுமதி வழங்கியுள்ளதை பதிவிட்டு
வியப்படைய வைக்கிறது.
இறப்பு
சடங்கின் போது பால் தெளிக்கும் சடங்கின் போது சிறியவர் முதல் பெரியவர் வரை பீடி, சுருட்டு
வழங்கி அதை அவ்விடத்தில் புகைக்க செல்லும் பழக்கம் கூர்ந்து கவனிக்க வைக்கிறது. குடும்ப
சம்பிரதாய நிகழ்வுகளில் ஏகாளி என்ற வண்ணார் குலத்தவரே முன்னின்று செய்வது கவனிக்க வேண்டிய
செய்தியாக உள்ளது.
உருமி
அறிந்த இசைக்கருவி என்றாலும் இதனை தலை உறுமி என்ற கருவியை தலையில் வைத்து இசைக்கும்
வல்லமை நுணுக்கம் பெற்றவர்களாக இக்குழுக்கள் இன்றும் உள்ளனர். அதே போல் உடும்பு சவ்வின்
மூலம் செய்திடும் இசைக்கருவிகளை இம்மக்கள் செய்திடுவார்களாம்.
யாத்திரை
என்பது செல்வது ஜாத்திரை என்பது கூடுதல் என்ற செய்தி நூலாசியரியரை பாராட்டாமல் இருக்க
முடியாது.
கிருஷ்ணகிரி
வடக்கு பகுதியில் பறையர், வெள்ளாளர் இருசமூகமும் சேர்ந்து கரகம் எடுக்கும் விழா இன்று
வரை சிறப்பாக நடை பெறுவதை பார்த்துள்ளேன். இதில் பறையர் கரகம் ஆண் சாமியாகவும், வெள்ளாளர்
கரகம் பெண் சாமியாகவும் கருதி இரு கடவுளுக்கும் திருமணம் நடத்துவே தருமபுரி, கிருஷ்ணகிரி
பகுதியில் அதி பிரமாண்ட திருவிழா. இதில் வன்னியர் பிறந்தவிட்டார்கள் என விழாவிற்கு
வருவது, மறுகரக விழாவின் போது நாடார் குலத்தினர் கரகம் கொண்டுவருவது என அனைத்து குலங்களும்
ஒற்றுமையாக இருப்பது இவ்விழாவில் காணலாம்.
இந்த
சமூக அமைப்பு முறையில் உள்ள பழக்க வழக்கங்கள் எப்படி நிலை கொண்டுள்ளது என்பதை அறிந்திட
நினைக்கும் நபர்கள் வாசிக்க வேண்டிய நூல்.
No comments:
Post a Comment