கலைஞர் இழப்பு அரசியல் தலைமை இடைவெளியா?
வாக்கு அரசியலை ஏற்காதவர்கள் கூட
கலைஞர் மீது தனிப்பட்ட அபிமானத்தை வைத்திருப்பார்கள். இதன் காரணம் அவரது இலக்கியம்
மேடை பேச்சு இல்லை கொள்கையே.
ஒரு பொருளை உற்பத்தி செய்பவன் அதனை
அழகாக உற்பத்தி செய்தாலும் விற்பனையாகுமா ? என்பதை மனதில் வைத்தே உற்பத்தி செய்வான்.
பத்திரிக்கைகள் கூட செய்தியை வெளியிடுவது விற்பனையின் அடிப்படையிலே என்பது அறிந்ததே.
அரசியல் கட்சி துவக்கிவது வாக்குக்களை பெற்று ஆட்சியை பிடிப்பதே அதன் முதல் நோக்கம்.
இந்த நோக்கத்திலும் வாக்கினை இழப்போம் என தெரிந்தே சில சட்டங்களை கொண்டு வந்த கட்சி
திமுக மட்டுமே.
01. குல (ஜாதி) மறுப்பு
திருமண அங்கீகார சட்டம்.
02. அனைத்து குலங்களும் பூசகர்
(அர்சகர்) ஆகலாம் சட்டம் .
03. பெண்களுக்கு சொத்துரிமை. //
குல மறுப்பு திருமண சட்டத்தால் சாதி ஒழிந்து விடப்போவதில்லை. ஆனால் இந்தச் சட்டம்
இயற்றாதவரை குல மறுத்து திருமணம் செய்தால் அந்த திருமணம் அங்கீகாரம் கிடையாது. இந்த சட்டம் கொண்டு வந்தவுடன் முதல் எதிர்ப்பு பிற்படுத்தப்பட்ட
குலத்தினர் மய்யத்தில் பெரும் கிளர்ச்சியை உண்டாக்கியது. ''இனி நம்ம பிள்ளைகளை கூட்டிட்டு
நம்ம முன்பாக பள்ளனும் பறையனும் நிற்பான். அதை பார்த்துகிட்டு சும்மா இருக்க வேண்டியதான்''
என குலத்தை எதிர்த்து மேடையில் முழங்கிய உள்ளூர் தலைவர்கள் தங்களது கிராமத்து மந்தைகளில்
பேசி, திமுகவின் மீது எதிர் மனநிலையை எடுத்தார்கள்.
அனைத்து குலங்களும் பூசகர் (அர்சகர்) ஆகலாம்
என்ற சட்டம் கொண்டு வந்தவுடன் ''கோயில்ல பள்ளனும்
பறையனும் பூச பண்ணுவான் நாம கைகட்டி அவங்கிட திருநீரு வாங்கனும்'' என்று வெளிப்படையாகவே
பேசி மேலும் எதிர் சிந்தனையில் மூழ்கினார்கள். இந்த நிலையிலே திமுகவை உடைக்க நினைத்த
பேராய கட்சி ம.கோ.இரா (எம்.ஜி.ஆர்) என்ற நபரை கையில் எடுத்தது. கட்சியின் பொருளாளர்
பதிவியில் இருப்பவரே கணக்கு கொடுக்கும் அதிகாரம் படைத்தவர். அவரே கணக்கு கேட்டு நாடகம் போட்டு அதிமுகவை துவக்கினார்.
திமுக மீது எதிர் சிந்தனையில் இருந்த பிற்படுத்தப்பட்ட குலத்தினர் அதிமுகவை கண்களை
மூடி ஆதரித்தனர். திமுக தனது வாக்கு வங்கியை இழந்தது. அதிமுக அசைக்க முடியாத வாக்கு
வங்கியை தொடந்து தக்கவைத்துள்ளது குல எதிர்ப்பே என்பது சமூக அரசியல் அறிந்தவர்கள் ஒத்துக்கொள்வார்கள்.
பெண்களுக்கு சொத்து உரிமை.
தமிழகத்தில்
பெரும்பான்மை நில உடமையாளர்கள் பிற்படுத்தப்பட்டோரே. ''நகை நட்டப்போட்டு பொம்பளை பிள்ளைகளைகள
கட்டிக்கொடுத்த பின்னாலும் சொத்தில பங்கு கேட்பாளுக' என ஆண் ஆதிக்க சிந்தையோடு கடுமையாக
எதிர்த்தார்கள். ஏற்கனவே திமுக எதிர்ப்பில் இருந்த பிற்படுத்தப்பட்ட வாக்காளர்கள் மீண்டும்
இறுக்கமாகவே திமுகவை பார்த்தார்கள். திமுக தனது கொள்கை பூர்வமான சட்டங்களால் வாக்கு
வங்கியை பெருக்க முடியாமலே போனது என்பதே அரசியல்
நிலை.
இங்கு தான் ஒன்றை கூர்மையாக பார்க்க முடியும். எப்போதெல்லாம்
திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் 'இன்ன அஞ்சு வருசத்துக்கு இந்த பள்ளனும் பறையனும்
ஆட்டம் தாங்க முடியாதப்பா' என்ற சொல்லாடலை நான் கிராமத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோரிடம்
கேட்டு கேட்டு சலித்துப் போயிருக்கிறேன். (பட்டியல் குழுக்களுக்கு திமுக அள்ளி கொடுக்கவில்லை
என்பது தனிச் செய்தி)
இதிலிருந்து ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது
கலைஞர் ஆட்சிக்கு வந்தால் பட்டியல் குழுக்கள் பலம் பெறுவதாக பிற்படுத்தப்பட்டோர் கருதுகிறார்கள்.
பட்டியல் குழுக்களுக்கு மாரல் சப்போர்ட் பிம்பம் கலைஞர் எனபவரால் நிரம்பியதை புரிந்து
கொள்ள முடிகிறது. இங்குதான் இடைவெளி விழுந்ததாவே புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த
மாரல் சப்போர்ட்டிலும் இடைவெளி விழுந்ததாலே பட்டியல் குழுக்களில் எழுச்சி, தனிகட்சி
துவக்கம் நடந்தது. ஆனால் பட்டியல் குழுக்களின் தனி கட்சியால் சமூக இறுக்கத்தை கட்டிக்காத்த
பிற்படுத்தப்பட்ட குலங்கள் மேலும் அதிகரித்து பட்டியல் குலத்தின் மீது தங்களது இடைவெளியை
அதிகரித்தார்கள். கலைஞர் என்பவரால் ஓரளவுக்கு நிரப்பட்ட மாரல் சப்போர்ட் என்ற இடைவெளியை
இந்த சமூக இழந்ததாகவே கலைஞரின் இழப்பை பார்க்க முடிகிறது. இந்த மாரல் சப்போர்ட் என்ற
இடைவெளிதான் தலைமை இடைவெளியாக கட்டப்படுகிறது தலைமை என்பது வேறு மாரல் (பிம்பம்) என்பது
வேறு.

No comments:
Post a Comment