Search This Blog

Friday 12 April 2019

மரபணு மாற்றமும் பரிணாம வளர்ச்சியும் (jenetic change and mutation)




                             மரபணு மாற்றமும் பரிணாம வளர்ச்சியும் 

                           (jenetical change and mutation and spontaneous mutation)


              
  மரமணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள், விலங்குகள் தொடர்பாக கடந்த பதினைந்து ஆண்டுகளாக இந்திய துணைக்கண்டத்தில் விவாதித்துக் கொண்டே இருக்கிறோம். (இதற்கு மறைந்த மறைந்த தமிழக முதல்வர் (தண்டனைச்) செல்வி ஜெயலலிதா 'மரமணு மாற்றம் என்பது கடவுளுக்கே அடுக்காது' என அறிக்கை கொடுத்தார்). மய்ய அரசில் இருந்த காங்கிரஸ் ஆட்சி காலத்திலே மரமணு விதை, விலங்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. (மாநில அரசுகள் வேண்டுமானால் தடுக்கலாம் என்ற சட்டம் வழி வகை செய்துள்ளது). ஆனாலும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் மட்டுமே கடைகளில் கிடைக்கிறது. (இப்படி கதையிருக்க மோடி விவசாய விளை பொருள்களுக்கு இரட்டிப்பாக பணம் கிடைக்க திட்டம் போடுகிறார் என டிவி பொட்டியில் சொல்லுகிறார்கள்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு தான் மரமணு மாற்றத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள். ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இயற்கை தன்னிச்சையாக (spontaneous mutation) தனது பரிணாம மாற்றத்தை துவங்கியதால் தான் இன்று நாம் சாப்பிடும் அனைத்து வகையான பொருள்களும் கிடைக்கிறது என்பது விலங்கியல் தாவரவியல் விஞ்ஞானிகளின் ஒத்த கருத்து. அப்படியானால் இயற்கையாக மரமணு மாற்றம் நிகழும் போது மனிதன் தனது அறிவாற்றலால் கண்டுபிடித்ததை ஏன் தடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. 

இயற்கையாக மரபு மாற்றம் ஏற்படும் போது நஞ்சு இல்லை. செயற்கையில் விதைக் கருவில் நஞ்சு சேர்ப்பதும் , அந் நஞ்சு உடல் நலக்கேடு விளைவிக்கும் தன்மை கொண்டதே இதை எதிர்க்கிறார்கள். இதற்கு ஒரே விடை வியாபாரம், வியாபாரம் என்பது மட்டுமே. ஆளும் அரசு இந்த மரமணு மாற்ற விதைகளுக்கு பதிலாக நஞ்சற்ற விதைகளை உருவாக்க முடியும். 


சித்தர்கள் மரபணு மாற்ற விதைகளை செய்தார்கள். நல்ல பாம்புத் தலைய நசுக்காம அது வாயில பூசணி, சுர விதைய உள்ளே வைத்து அதன் வாயினைத் தைத்து, பாம்பினைத் தலை கீழா தொங்க விட்ட வேண்டும். பாம்புத் தலையில் வைத்து தைத்த விதையில் நல்ல பாம்பின் நஞ்சு, விதைக் கருவில் சேந்திரும். இந்த விதையில் காய்க்கும் காய்கள் சாதாரண காய்கள் போலவே காய்த்திடும். இந்தக் காய்களில் சுவை மாறுபடாது ஆனால் சமைத்தாஅல் அதற்குள்ளிருக்கும் நஞ்சு சாகாது. இந்த விதைகளை திருட்டினைத்தடுப்பதற்காக விவசாயிகள் வரப்பு ஓரத்தில் நடவு செய்வார்கள். களவாணிகள் கண்களுக்கு வரப்பு ஓரத்தில காய்த்து கிடப்பதே முதலில் கண்ணில படும். அதை திருடி சமைப்பார்கள். இதை உண்டால் வயிறு ஊதும். உயிர் சேதாரம் ஆகாது. இரண்டு நாளக்கு வயிற்றோட்டம் போகும். இப்படியாக நஞ்சு கலந்த விதைகள் ஒரு முறைக்கு மேல் முளைக்க வைத்தால் விதை முளைக்குமே தவிர கொடி ஓடாது. இதுதான் மரமணு மாற்றம். இந்த யுத்தியைக்கண்டே மேலை நாடுகளில் மரபணு மாற்றம் செய்கிறார்கள்.மரபணு மாற்றத்தில் நஞ்சு கலக்காமலும் முளைக்கும் திறனை உண்டாக்க முடியும் என்று ஆய்வுகளில் கண்டறிந்துள்ளார்கள்.

இப்படி கண்டுபிடித்து விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய அரசும், அரசின் வேளாண்மைத்துறையைச்சேர்ந்த இந்தியன் அக்ரிகல்சுரல் கவுன்சில் ஆப் ரிசர்ச் கவுன்சில் விஞ்ஞானிகள் தனியார்களுக்கு வழி விடும் வேலையைச் செய்கிறார்கள். நஞ்சற்ற விதைகளை அரசு விதைக் கிடங்கில் வேளாண்குடிகளுக்கு மானியமாகவோ அல்லது இலவசமாகவோ கொடுத்தால் பிரச்சனை முடிந்து விடும். இதை இந்த ஆளும் அரசுகள் செய்யவே செய்யாது. காரணம் முதலாளிகள் தான் சட்ட மன்ற பாரளுமன்ற உறுப்பினர்கள். இவர்களை தேர்வு செய்யும் வாக்காளர்கள் பெரும் முதலாளிகள் என முடிவு செய்வோம்.

//ஏன் இந்தியாவில் மட்டும் உலக தேவைக்கு சுரண்டுகிறார்கள்
இங்குள்ள மக்கள் ஏற்கனவே குலவாரியாக (ஜாதிவாரியாக) பிரிந்து கிடக்கிறார்கள். இவர்கள் ஒன்றிணைய மாட்டார்கள். அப்படியே ஒன்றிணைவது போல் தெரிந்தால் அவர்களை குலவாரியாக இயங்க பண உதவிகளை தாரளமாக கிடைத்திட மய்ய அரசு தனது இந்த வேளையை 1984லிருந்தே கதவுகளை திறந்து விட்டுள்ளது. (இதில் பாஜ, காங் என்ற வேறுபாடெல்லாம் இல்லை)//
கல்பாக்கம், கூடாங்குளம் அணுமின் நிலையம் என்றால் ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ தீங்கில்லா திட்டமே.

தமிழகத்தில் அரச மரபில் வேளாண்மை சார்ந்த தச்சு, கருமான், மண் சட்டி பானை செய்தல், நெசவு, சிறிதளவில் நகை அலங்காரம் செய்திட வண்ணக் கற்கள் பொறுக்குதல், அரச மரபினருக்கு, குடிகளுக்கு நகை செய்திடும் தொழில் இதைத் தவிர தொழில் என்பதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை. நாயக்கர் அரசு காலத்தில் டச்சு, பிரிட்டீஷ், பிரஞ்ச்காரர்களுக்கு கடல் பகுதியை குத்தைக்கு விட்டார்கள். குத்தைக்கு எடுத்தவர்கள் சாயம் காய்ச்சும் தொழிலை துவக்கி வேலையில்லாத வேளாண்மை கூலிகளுக்கு வேலை கொடுத்தார்கள். இது தான் இந்தியாவில் தொழிலுக்கான துவக்கம்.

பிரிட்டீஷ் இந்தியாவிலே சாயப்பட்டரைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு அவுரி செடியை விவசாயமாக செய்திட வைத்தார்கள். வட நாட்டில் மட்டுமே அவுரிக்கெதிரான கிளர்ச்சி துவங்கியது. (தமிழகத்தில் சிறிதளவு போராட்டம் நடந்ததற்கான சான்று உள்ளது) 1880 காலங்களில் ஏற்பட்ட (பிரமபுத்திரா நதி வறண்டதால் வங்க தேச பஞ்சம் என்பார்கள்) மிகப் பெரிய பஞ்சம் (அப்போது மழை பெய்யாதற்கு காரணம் சீமை கருவேல மரமே காரணம் என்று எவரும் சொல்லவில்லை) பஞ்சத்திலிருந்து மக்களை காப்பதாக அறிவித்த? பிரிட்டீஷ் அரசு, மக்களை மலைகளில் ஏற்றி இந்தியாவில் உள்ள வனங்கள் அனைத்தையும் அழித்து தேயிலை, காபி பயிரிட ஜமீன்தார்களுக்கும், டாடா போன்றவர்களுக்கு நிலங்களை குத்தைக்கு விட்டது. (தேயிலை காபி பசி போக்கும் உணவு இல்லை. பிரிட்டீஷ் இந்தியாவுக்கு அன்னிய செலவானி மட்டுமே ஈட்டித் தந்தது. ஆனால் தற்போது விவசாய பட்டியலில் தேயிலை காபி இருப்பதால் அதற்கு வரி விலக்கு உண்டு)

மலை அழித்த பிரிட்டீஷார் தரைப்பகுதியையும் விட்டு வைக்கவில்லை. உலக முதலாளிகளை அழைத்து வந்து இங்கு விளைந்த பருத்தியை வைத்து உலகத் தேவைக்கான துணியை நெய்திட ஆலைகளை நிறுவி மக்களுக்கு வேலை கொடுத்தார்கள். நெய்திடும் துணிகளுக்கு சாயம் ஏற்றுவதற்கு முன்பு பிலீச்சிங்க செய்திட ஆற்று நீரை பயன்படுத்தினார்கள். பஞ்சத்தில் இருந்த மக்களுக்கு வேலை கிடைத்தால் போதும் என்ற நிலையில் பிளீச்சிங் செய்வதால் ஆற்று நீர் மாசுபடுவது மக்கள் கண்களுக்கு புலப்படவில்லை. (இதே போல் தோல் பதனிடும் மையமும்).

சுதந்தர இந்தியாவையும் பஞ்சம் விட்டு வைக்கவில்லை. ஒருவேளை உணவு சாப்பிடாமல் இருக்க சொன்னார்கள். விளைந்த பொருளை அரசுக்கு கொடுத்திடும் கட்டாய லெவி கடுமையாக்கப்பட்டது (லெவி போர் காலத்தில் மட்டுமே நடைமுறையில் இருக்கும் சட்டம் ஆனால் பஞ்சத்தை முன்னிட்டு போர் அல்லாத காலத்திலும் இந்தியாவில் நடைமுறையில் இருந்தது) . அதைனை தொடர்ந்து பசுமை புரட்சி திட்டத்தில் ரசாயாண உரங்கள் அனுமதிக்கப்பட்டது. இதனால் பஞ்சத்திலிருந்து மக்களை மீட்டிட முடிந்தது.

எல்லா தரப்பிலுருந்தும் இப்போது கேட்கும் குரல் 'சுற்றுச்சூழலை காப்போம், நஞ்சில்லா உணவு' என்பதே.
உலக நாடுகளின் தேவைக்கு நாயக்கர், பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் எப்படி இங்கு சாயப்பட்டரை நெசவுத் தொழில் கூடங்களும், தேயிலை காபி வேளாண்மையும் செய்யப்பட்டதோ அதே நிலை இன்று வரை தொடர்கிறது. இவைகள் இல்லை என்றால் இந்திய துணைக்கண்டம் வளருமா வளராதா என்ற கேள்வி எழுகிறது இங்குள்ள ஆலைகளுக்கு தேவையான மூலப்பொருள்களை வெட்டி எடுப்பதும் இங்கே தான் (சிமிண்ட், உருக்கு ஆலைகள்) அதனால் சுற்றுச்சூழல் கேடாதா ?, நமது தேவைக்கு மட்டுமே உற்பத்தி செய்ய முடியாதா ? இதற்கு பதில் முடியவே முடியாது என்றுதான் சொல்லியாகவேண்டும்.
இந்தியா காட் ஒபந்தந்தத்தில் கையெழுத்து போடாத வரை ஒரு பகுதியில் உற்பத்தியாகும் பொருளை அங்கே மாற்று ப்பொருளாக்கி அந்தப்பகுதி மக்களுக்கே விற்பனை செய்வது என்ற காந்திய பொருளாதாரம், ஓரளவுக்கு இங்கு செல்லுபடியானது. நரசிம்மராவும், மன்மோகன் சிங்கும் காட் ஒப்பந்தந்தில் போட்ட கையெழுத்தில் அனைத்தும் முடிந்தது.
உலக நாடுகள் முழுக்க பெரும்பாலான தாதுகள் கிடைக்கும் போது ஏன் இந்தியாவை மட்டும் உலக நாடுகள் குறி வைக்கிறது. ?

பிரிட்டன், அமெரிக்கா, சீனம் அங்கெல்லாம் இயற்கை வளம் கொட்டிக் கிடைக்கிறது. சீனம் தனது தொழில் கொள்கையால் சுற்றுச் சூழலை கெடுத்து அந்த நாட்டை குட்டிச் சுவராக்கி விட்டது. (அந்த நாட்டில் பிரச்சனை வெடித்து வெளி வர சில ஆண்டுகள் பிடிக்கும்) அமெரிக்காவை பொறுத்தவரை அந்த நாட்டின் பரப்பளவை விட, மிக மிக குறைந்த மக்களே அங்கு வசிக்கிறார்கள். நம் நாட்டில் ஒரு பஞ்ச்சாயத்தில் உள்ள மக்கள்தொகையினர் பயன்படுத்தும் மீத்தேன் கேஸ்சினை ஒரு குடும்பம் பயன்படுத்துகிறது. (இது போன்றே மற்ற நுகர்வுகளும்) பிரிட்டன், அமெரிக்க போன்ற நாட்டினர் சொகுசாக வாழ தெற்காசிய நாடுகளில் இந்தியாவை குறி வைத்து இயற்கை வளங்களை சுரண்டிட இங்குள்ள பார்பன சங்பரிவார்களை இயக்குகிறார்கள்.

தேயிலை, காபியும் எப்படி வேளாண்மை உற்பத்தி என்ற பொது புத்தியை உருவாக்கி விட்டார்களோ அதே போல் இந்தியாவிலுள்ள தாதுகளை குறிவைத்து ன் பார்பன பாண்ய குர்ப்பலான வேதாந்தா நிறுவனம். 99 ஆண்டுகளுக்கு இந்த நிறுவனத்திற்கு மலைகளை குத்தைகைக்கு விட்டு விட்டுள்ளார்கள்.
ஏன் இந்தியாவில் மட்டும் உலக தேவைக்கு சுரண்டுகிறார்கள். இங்குள்ள மக்கள் ஏற்கனவே குலவாரியாக (ஜாதிவாரியாக) பிரிந்து கிடக்கிறார்கள். இவர்கள் ஒன்றிணைய மாட்டார்கள். அப்படியே ஒன்றிணைவது போல் தெரிந்தால் அவர்களை குலவாரியாக இயங்க பண உதவிகளை தாரளமாக கிடைத்திட மய்ய அரசு தனது இந்த வேளையை 1984லிருந்தே கதவுகளை திறந்து விட்டுள்ளது. (இதில் பாஜ, காங் என்ற வேறுபாடெல்லாம் இல்லை).

மக்கள் எதிர்ப்பு இருக்கே என்ற கேள்வி வரலாம் அதெல்லாம் தோற்ற பிழை. போராடுபவர்களில் 99 % உதயகுமார்களே என்பதை மக்கள் அறிய வாய்பில்லை. அதையும் தாண்டி போராடும் பொதுவுடமை சிந்தனையாளகளை நக்சல்பாரிகள், மாவோ சிந்தனையார்கள் என்று காட்டிய முதலாளித்துவ ஏடுகளும் காட்சி ஊடங்களும் இருக்கிறது. ஆக எந்த சலசலப்பும் இல்லாமல் நாட்டை சூரையாடுவார்கள்.
கல்பாக்கம் அணு குண்டு தயாரிக்கும் நிலையத்தை கல்பாக்கம் அணுமின் நிலையம் என நம்மை சொல்ல நம்ப வைத்தார்களோ, அதைப் போலவே கூடங்குளத்தை பார்க்க வைத்து விட்டார்கள். ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ இவையெல்லாம் எம்மாந்தரம். இதற்கு மாற்றுத்தீர்வு ... வாக்கு அரசியல் மட்டும் தானா என சிந்திக்க வேண்டிய காலம் எப்போதோ வந்து விட்டது ... காலம் தாமதமான ஞானம் தான் நமக்கு எப்பவுமே.

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...