Search This Blog

Friday 10 May 2019

பூவை கல்யாணசுந்தர முதலியார்








                     பூவை கல்யாணசுந்தர முதலியார்



சித்தாந்த சரபம் எண்கலை வித்தகர்பூவை கல்யாணசுந்தர முதலியார் பிறந்த தினம் இன்று (10.05.1854) யாழ்ப்பாணம் சுவாமி நாத பண்டிதர் சைவத்துக்கு சாதி உண்டு என்று வலியுறுத்தி பேசினார்.
திரு.வி.கல்யாண சுந்தர முதலியாரோ அதனை மறுத்து சைவத்துக்கு இழிபிறவி சாதி உண்டு என்று நிரூபித்து விட்டால் நான் சைவ மதத்தை விட்டு விலகிவிடுகிறேன் என்று கூறினார்.

சைவம் அன்பு வண்ணம். அன்புக்கு சாதி ஏது? என்னை பொறுத்த வரை சைவம் சாதியற்ற தென்று வலியுறுத்தி பேசி முடித்தார் திரு.வி..இந்த இருவர் பேச்சையும் கேட்டு முடித்தவுடன் நடுவராக விளங்கிய பூவை கல்யாணசுந்தர முதலியார் தனது தரப்பு முடிவுரையாக தனக்கு நேர்ந்த அனுபவத்தை திரு.வி.. அவர்களுக்கு பின்வருமாறு கூறினார்.

யான் தென்னாட்டு மடங்களில் நன்கு பழகியவன். எத்தனையோ சொற்பொழிவுகளை மடங்களில் நிகழ்த்தியவன். எனக்கு காவியளிக்க ஒரு பெரிய சைவ மடாதிபதியைக் கேட்டேன். அவர் மறுத்து விட்டார். கயிலாயக் கதவு தென்னாட்டு சைவ வேளாளர்களுக்கு மட்டும் திறக்குமோ? மற்றவர்களுக்கு திறவாதோஎன்று சத்தம் போட்டு விட்டு திரும்பியதாக கூறினார்

சாதிகளுக்குள்ளே சமயம் அடங்க கூடாது. சாதி மடங்களால் சைவத்துக்கு கேடு சூழ்ந்து வருகிறது. சாதிக் கோட்டையை உடைத்தாலன்றிச் சைவம் வளராது என்று பேசிய பிறகு திரு.வி.கவை பார்த்து தம்பி நீர் இளைஞர்; சாதிக் கோட்டையை தகர்க்க முயற்சி செய். உனக்கு உறுதுணையாக நான் நிற்பேன் என்றார்.

பூவை கல்யாண சுந்தர முதலியாருடைய கருத்திற்கேற்ப தூத்துக்குடி சைவ சபையில் மறைமலையடிகளுக்கு நிகழ்ந்த ஒரு அவமான நிகழ்வுதான் அடிகளை போலி சைவமும் வேளாளர்களும் என்ற நூலினை எழுதும் அளவுக்கு தள்ளி விட்டது என்பதையும் இங்கு நினைவு கூற வேண்டியுள்ளது.
..சிதம்பரனார் கூட சிவஞான போதம் நூலுக்கு வேதாந்த பார்வையில் உரை எழுதிய போது சைவ மடங்கள் ஏற்றுக் கொள்ள தயங்கின. தென்புலத்தார் குறித்த அவரது கருத்துக்கு தூத்துக்குடி சைவர் பொ.முத்தையாபிள்ளை அவர்களுக்கும் , ..சி.க்கும் பனிப் போர் நடந்த விசயத்தை இந்த இடத்தில் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.
சென்னை விழா என்று வருடந்தோறும் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் வெள்ளையர்களின் பெருமிதங்களைத்தான் கொண்டாடுகிறோம்

உண்மையாக சென்னை விழாவில் பெருமிதத்துடன் நினைவு கூறப்பட வேண்டியவர் பூவை கல்யாணசுந்தரனாரை கொண்டாடப்பட வேண்டும்.
ஏனெனில் சென்னை நகரைச் சுற்றிலும் உள்ள அனைத்து தலங்களையும் தரிசித்து தலப்புராணங்கள் எழுதி தள்ளியவர். இந்த தலப்புராணங்கள் மூலம் சென்னை நகரின் நாட்டு வளம்,புவியியல் அமைப்பு ஆகியவற்றை ஆயிரக்கணக்கான பக்கங்களில் பதிவு செய்தவர்

(அவர் எழுதிய சென்னை நகர் கோவில் புராணங்கள் ஓரு சிலவற்றை குறிப்பிட விரும்புகிறேன் திருவான்மியூர், வேளச்சேரி, திருவொற்றியூர், திருவலிதாயம் (இன்றைய பாடி), பூந்தமல்லி, ஆண்டார்குப்பம், திருவேற்காடு, திருப்பாலைவனம் (பொன்னேரி அருகில்), திருப்பாசூர், திருக்கழுக்குன்றம், திருமுல்லைவாயில், குன்றத்தூர், தக்கோலம், செங்கல்பட்டு, காட்டங்கொளத்தூர் இவை போன்ற மேலும் பல இடங்கள் குறித்து பதிகங்களாக பாடி அச்சிட்டு வெளியிட்டவர். சொல்லப்போனால் தொண்டை மண்டல மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்று கூட இவரை அழைக்கலாம்.

1876 ம் ஆண்டுசென்னையிலிருந்து செங்கல்பட்டிற்கு முதன்முதலில் புகைவண்டி விட்ட போது இவருடன் சீடர்கள் பயணிக்கையில் ரயில் பிரயாணம் குறித்து பாட வேண்டினர். அச்சமயம் பாடிய பாடல் முதல் புகை வண்டி பயணத்தை பதிவு செய்தார்.

ஆயிரத் தொண்ணூற் றெழுபத்தாறா மாண்டணி செப்டெம்பர்
தூயமுற் றிகதி சுக்ர வாரந் தோன்றும் பதினோர் மணியதில்
பாய வுலகிற் பல மாக்கள் பலனையடையப் புகைவண்டி
நேய செங்கை நகரென்னு நிலத்து வந்து நிலவிற்றால்
திருவொற்றியூர் பட்டினத்தார் கோவிலுக்கு வீதிஉலா விழாவை ஆரம்பித்து வைத்தவர் இவரே. பட்டினத்தார் பாடல்களுக்கு ஞானார்த்த தீப உரை எழுதியவர்.

சேக்கிழார் சுவாமிகளுக்கு யானை மீது வீதி உலா நடத்த ஏற்பாடு செய்தவரும் இவரே.மறைமலையடிகளுடன் சேர்ந்து மெய்கண்ட சந்தான சபை ஒன்றை உருவாக்கியவர்.சைவ சித்தாந்த பெருமன்றத்தின் வழியாக வந்த சித்தாந்தம் இதழின் முதல் ஆசிரியர் இவரே. 1912 ல் தொடங்கிய சித்தாந்தம் பத்திரிக்கையில் 1918 வரை இப் பத்திரிக்கைக்கான கொள்கையில் சைவ வரம்பு சிறிது கூட வழுவாமல் பார்த்துக் கொண்டவர். மணவழகு என்ற புனைபெயரில் மறைமலையடிகளுக்கு முன்பாக தூய தமிழில் பெயரை மாற்றிக் கொண்டு எழுதியவர். இவரிடம் பயின்ற மாணவர்கள் 36 பேர். இயற்றிய நூல்கள் பதிகங்கள் நீங்கலாக 40 நூல்கள். பரிசோதித்து அச்சிட்ட நூல்கள் மட்டும் 96 நூல்கள். பல நூல்களுக்கு எழுதிய சாற்றுக்கவிகள் 864. பல்வேறு கண்டன நூல்கள் எழுதியவர். கப்பலோட்டிய தமிழன் ..சி. அறம், பொருள், வீடு மூன்றையும் உணர்த்தும் விதமாக மெய்யறிவு என்ற நூல் எழுதி அதற்கு சிறப்பு பாயிரமாக பூவை கல்யாண சுந்தரனாரால் எழுதப்பட்டு ..சி.க்கு சிறப்பு சேர்த்தவர். வேதாந்திகளோடு கொள்கை அளவில் முரண்பட்டிருந்தாலும் பல வேதாந்த நூல்களில் இவரது சிறப்பு பாயிரம் காணமுடிகிறது.



No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...