Search This Blog

Saturday 11 May 2019

மயிருக்குள் ஒளிந்திருக்கும் சாதி




                      மயிருக்குள் ஒளிந்திருக்கும் சாதி




சடாமுடி வைத்திருப்பவன் சாமியார்.
மொட்டையடித்தவன் பரதேசி.
மொட்டையடித்து தாடி வளர்ப்பவன் முகமதியன்.
தலையில் குடுமியும் மீசையும் வைத்திருப்பவர்கள் லௌகீக குடும்பி.
தலையை மொட்டையடித்து மீசையும் எடுத்துவிட்டவன் சாதானி அய்யர்.
தலையில் குடுமி வைத்து மீசையை எடுத்துவிட்டவன் வைதீக அய்யர், அய்யங்கார், தீட்சிதர்கள்.
தலையில் மயிர்களைக் கத்திரித்து தொப்பி போடுபவன் துரை.
கிருதா, மீசை வைத்திருப்பவன் சத்ரியன்.
முன்குடுமி மலையாளி.
தலையின் மயிரைக்கொண்டு இவ்வளவு ஜாதி, மதப் பிளவுகளை உண்டாக்கியுள்ளனர்.
மிருகம், பட்சிகள்கூட அவ்வவற்றின் தன்மைகள் பொருந்தி பண்புகள் வெளிப்படுவதுபோல, எல்லாவித சாதி மனிதர்களிடமும் மானுடத்தன்மை மட்டுமே பொருந்தியிருக்கிறது
ஏசுவை துதிப்பதும், முகமது நபியை வணங்குவதும், கிருஷ்ணனை ஆராதனை செய்வதும், விநாயகனைக் கும்பிடுவதும், பௌத்தர்கள் லாமாவை துதிப்பதும் சித்த சுத்தியை மட்டுமே தருமேயொழிய, பரமுத்திக்கு தன்னைத்தான் உணர்ந்து சிரவண, மனன, யோக சித்திகள்மூலம் மட்டுமே அடையமுடியும் என்று சபையில் உரையாடினார்.
1897 ம் ஆண்டு சர்வமத சபை கூட்டத்தில் பொதிகை சித்தர் மரபு . நாராயணதேசிகர் சபை நடுவராக இருந்து உரையாற்றியதன் ஒரு பகுதி.

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...