Search This Blog

Friday 10 May 2019

தோப்பில் முகமது மீரான்,









                                                               அஞ்சலி

தோழர்அமீம் முசுதபா 

             

வாழ்வியலை எழுத்துப் புனைவுகளுக்குள் கொண்டு வந்து தமிழை வளப்படுத்திய எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான், இனி தமிழில் நிலைத்திருப்பார். அன்னாரின் மறைவுக்கு அஞ்சலி.

  
அதபுப் பிரம்புகளுக்கு எதிராக சொற்களை ஏவிவிட்டவர் நாவலாசிரியர் தோப்பில் முஹம்மது மீரான் இனி நம் நினைவுகளில் வாழ்வார். எண்பதுகளுக்கு பிறகு தமிழ் படைப்புலகம் புதியபுதிய தடங்களில் பயணிக்கத் தொடங்கியது. அதுவரையிலும் இலக்கிய வெளியில் நவீனத்துவம் மற்றமையாய் மதிப்பிட்டுவந்த சமூகத்திரள்களில் இருந்து படைப்பாளிகள் உருவாகி தமிழ் இலக்கியத்தின் பேசுபொருளை செழுமை படுத்தினார்கள், சொல் புதிதாய் சுவை புதிதாய் அழகியல் புதிதாய் தமிழ் தன்னை உயிர்ப்பித்துக் கொண்டது.அந்த வரிசையில் தோப்பில் முஹம்மது மீரான் அவர்களின் எழுத்துக்கள் அதுவரையிலும் அறியப்படாது இருந்த தமிழ் முஸ்லிம்களின் வாழ்க்கையை தமிழுக்குள் கொண்டுவந்து சேர்த்தன .

இத்தனைக்கும் அவரின் கதைக்களம் தமிழக நிலப்பரப்பில் ஒரு சின்னஞ்சிறு பகுதி. கன்னியாகுமரி மாவட்டத்தின் முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் கடற்கரை கிராமமான தேங்காய்ப்பட்டினம் கிராமக் களத்துக்குள் இருந்துதான் ஒரு கடலோர கிராமத்தின் கதை, சாய்வு நாற்காலி, துறைமுகம் . கூனந்தோப்பு உள்ளிட்ட நாவல்களைத் தந்தார்.

அவரின் புனைவுப்பிரதிகள் பேசும் முஸ்லிம் வாழ்வியலைவிடவும் என்னை அதிகம் ஈர்த்தது மொழியின் மீது அவர் செலுத்திய ஆளுமை . அவரின் கதைப்பரப்புக்குள் வருகின்ற ஒவ்வொரு சமூகத்தின் மொழியும் அவரிடம் துல்லியப்பட்டிருந்தது . அவர் அளவுக்கு மொழியின் மீது இத்தனை நுட்பம் கொண்ட படைப்பாளிகள் குமரி மாவட்டத்தில் இல்லை எனலாம்
.கடற்கரை முஸ்லிம்கள் பேசும் மொழி , மீனவர்கள் பேசும் மொழி, நாடார்கள் பேசும்மொழி இதர சமூகங்கள் பேசும் மொழி . என ஒவ்வொன்றையும் தோப்பில் தன்னுடைய மொழிக்கிடங்கில் செழிப்பாக வைத்திருந்தார்.
மானுட சமூகம் இருக்கும் வரை அவரது புகழ் அழிந்திடாது இருக்கும்.

நன்றி:
Thuckalayhameem Musthafa


தோப்பில் முகம்மது மீரானின் 'ஒரு கடலோர கிராமத்தின் கதைமுதலில் படித்த போது அது என் உலகத்தை மேலும் விரிவாக்கியது. வாழ்ந்து கெட்ட ஒரு குடும்பத்தின் கதைதான் 'சாய்வு நாற்காலி'. அவருடைய நாவல்களை, சிறு கதைகளை எளிதில் படித்துவிட்டி கடந்து செல்ல முடியாது. நெஞ்சை பிழியும். மானுடம் பேசும் அவரது கதைகளை படித்து விட்டு கண்ணீரை கட்டுபடுத்த முயன்று தோற்றிருக்கின்றேன். அவரை வீட்டில் சந்தித்த போது, தமிழ் இஸ்லாமியர் சரித்திரத்தை தன் கதைகளின் ஊடாக அவர் எடுத்து வைப்பதற்கு பின்னால், அவர் ஆய்வுக்கு படிக்கும் நூல்களை காட்டி, அவை குறித்து விவாதித்து என்னை திக்குமுக்காடச் செய்தார். இன்று நம்மை விட்டு பிரிந்து விட்டாலும் தமிழ் இலக்கியத்தில் என்றென்றும் அவருக்கு முக்கிய இடமுண்டு.
இன்னா லில்லாஹி இன்னா இலை ஹி ராஜிஊன்
 

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...