தில்லைப் பெருங்கோயில் வரலாறு
*************************************
நூலதிகாரம்
*****************
ஆசிரியர் ; பேராசிரியர் வெள்ளைவாரணனார்.
பதிப்பகம்; சந்தியா
விலை ; 90
தமிழகத்தில் சைவத்தின் அடையாளமாகக்கருத்தப்படும் சிவதலங்களில் மையமானது தில்லை சிதரம்பரம் சிவதலம். இதன் வரலாறு உலகளவில் பேசப்படுகிறது. அதே போல் தமிழை பின்னுக்கு தள்ளிட வழி வகுத்த கோயில் என்ற இழி வரலாற்றையும் சுமக்கிறது.
''பண்டைய தமிழகத்தில் சாதி இருந்தது. ஆனால் மநுஸ்மிருதி சொல்லும் நால்வர்ணம் இல்லை என சோழ, பாண்டிய, ஆட்சியாளர்களை ஆய்வு மேற்கொண்ட பேராசிரியர்கள் மெ.து.ராம்குமார், சுப்புராயலு போன்றவர்கள் எழுதியுள்ளார்கள். ஆனால் சாதியின் இறுக்கம் விஜயநகர, நாயக்கர் ஆட்சியிலே கூடியது என்ற கருத்தையும் முன்வைக்கிறார்கள். அப்படியானால் தமிழகத்தில் இந்த வர்ண மநுஸ்மிருதி எந்த இடத்திலிருந்து துவங்கியிருக்கும் என்ற கேள்விக்கு இக்கோயில் தலவரலாறாகக்கருத்தப்படும் உமாபதி சிவாச்சாரியார் எழுதியது. இதை ''மித்''தாக ஆன நம்பிக்கையை புறம்தள்ளிவிட முடியாது என நினைக்கிறேன். இதை துவக்கமாக கொண்டே நூல் துவங்குகிறது.
அதே போல் சுடலை, சுடு காட்டை ஆண்டவன், சிவன் என்றாலும், சுடலைக்கோயில் என்பது நாட்டார் வழக்காற்றியலில் கிராமதெய்வ வழிப்பாடு என அறியப்படும் வேளையயில் இக்கோயிலுக்குள் சுடலை கோயில் 8ம் நூற்றாண்ல் அமைந்திருப்பதற்கான செய்தி கவனிக்க வேண்டியதாக உள்ளது. சிதம்பரம் என்ற இவ்வூர் பெரும் பற்றப்புலியூர் என்றும் கடல்பரப்பில் வளரக்கூடிய தில்லை என்ற செடியின் பெயரால் தில்லை வனம் என அறியப்பட்டு அதுவே தில்லையானது என இந்த நூலின் துவக்கத்தில் சொல்லுகிறது.
சைவ பெருங்கோயில்களின் எண்ணிக்கை எத்தனை?
****************************************************
தமிழகத்தில் தேவார ஆசிரியர்களால் பாடப்பெற்ற சிவத் தலங்களில் மலைநாட்டில் ஒன்றும், கொங்குநாட்டில் ஏழும், பாண்டி நாட்டில் பதினான்கும், சோழநாட்டில் காவிரிக்கு வட கரையில் அறுபத்து மூன்றும், தென் கரையில் நூற்றிருபத்தேழும், ஈழநாட்டில் இரண்டும், நடுநாட்டில் இருபத்திரண்டும், தொண்டைநாட்டில் முப்பத்திரண்டும், துளுநாட்டில் ஒன்றும், வட நாட்டில் ஐந்தும் ஆக இருநூற்றெழுபத்திரண்டு தலங்கள் அமைந்துள்ளன என்ற குறிப்புகள் சைவ அடியார்களுக்கு மட்டுமல்ல ஆய்வாலர்களுக்கு தேவையான ஒன்றே .
சிவ தாண்டவம் எத்தனை
*********************************
சிவ தாண்டவத்தை ஆங்கிலத்தில் thiriling dance குறிப்பிட்டுள்ளார்கள். இந்தத்தாண்டவம் எத்தனை வகைகளில் இருந்தது என்பதை குறிப்பிட்டு, காளிகாதாண்டவம் திருநெல்வேலி தாமிர சபையிலும், கவுரிதாண்டவம் திருப்புத்தூர்ச் சிற்சபையிலும், சந்தியா தாண்டவம், மதுரை வெள்ளியம்பலத்திலும், சம்கார தாண்டவம் உலகமெல்லாம் ஒடுங்கிய ஊழிக்காலமாகிய நள்ளிரவிலும், திரிபுர தாண்டவம் திருக்குற்றாலச் சித்திரசபையிலும், ஊர்த்துவ தாண்டவம் திருவாலங்காட்டில் இரத்தின சபையிலும், ஐந்தையும் சேர்த்து ஒருங்கே நிகழ்த்தும் ஆனந்தத் தாண்டவம் தில்லைச்சிற்றம்பலத்திலும் நிகழும் எனத் திருப்புத்துர்ப் புராணம் கூறுவதாக நூலில் உள்ளது.
சதிராட்டம் என்ற பரதக்கலை பரதநாட்டியமாக மாற்றியது 20 நூற்றாண்டில் தான் என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆனால் இந்தக்கோயில் கல்வெட்டுகள் குறிப்புகளை குறிப்பிட்டுள்ள நூலாசிரியர் பல மன்னர்களுக்கு *பரதம் காத்தவன்* என்ற பட்டங்களை சூட்டியுள்ளதை பார்க்கும் போது பரதம் என்ற சமற்கிருந்த சொல்லும் சதிராட்டம் என்ற சொல்லும் 20 நூற்றாண்டு வரை சமபலமாகவே வந்துள்ளது. பிரிட்டீஷ் ஆட்சியில் தேவதாசிகள் சட்டத்தின் மூலம் ஒழித்ததன் மூலம் சதிராட்டத்தை ஆடிய தமிழ் குடியினரிடமிருந்து பரதம் வேறு குழுக்கள் வசம் போய் விட்டது என்றே பார்க்க முடிகிறது.
திருக்கோயில் அமைப்பு
*****************************
நாற்பது ஏக்கர் பர்பபளவில் சோழராட்சியில் கட்டப்பெற்றது. இக்கோபுர வாயிலில் பரத சாத்திரத்திற் கூறிய வண்ணம் நூற்றெட்டுக் கரணங்களைச் செய்யும் ஆடல் மகளிருடைய சிற்ப வடிவங்களை அமைத்து அழகுப்படுத்தியவன் *பல்லவ மரபினனாகிய இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனாவான்*. இவனது படிவம் இக்கோபுரவாயிலுள் வட மேற்குப் பக்கத்தே தெற்கு நோக்கிய மாடத்தில் இடம் பெற்றுள்ளது. இம்மன்னனுக்கு ''சொக்கசீயன்'' என்னும் சிறப்புப் பெயருடைய கல்வெட்டும் உள்ளதாம். இந்த பெயரைப்பார்க்கும் போது சியான் என்ற குடிகளிடம் புழக்கமாக உள்ள சொல் சீயன் என்ற சொல்லின் மூலமாக இருக்குமோ என யோசிக்க வைக்கிறது.
மருத்துவக்குறிப்பு !
*******************************
இருபத்தோராயிரத்து அறு நூறு பொன்னோடுகளால் ஆன இந்த கோயில் மேற்கூரை மனிதன் ஒவ்வொருநாளும் விடும் மூச்சின் எண்ணிக்கையை உணர்த்துவன என குறிப்பிட்டுள்ளது சரியானவே உள்ளது.
வேம்பம்பூ மாலை
**********************
பிற்காலச் சோழரது ஆட்சியில் சோழர்களின் பெண்வழி மரபில் தோன்றித் தமிழகத்தை ஆண்டவர்கள் முதற் குலோத்துங்கன், மற்றும் விக்கிரம சோழன். இவர்கள் பாண்டியர் போலவே சோழ அரசனும் வேப்பம் மாலை அணிந்தான். செய்தி வியப்பாக உள்ளது.
சிதம்பரம் கோயிலுக்குள் சுடலை மாடனுக்கு கோயில்
*****************************************************
"ஆரியவுலகம் அனைத்தையும் குடைக்கீழ் ஆக்கிய குலோத்துங்க சோழற் காண்டொரு நாற்பத்தாரிடைத் தில்லை. பம்பலத்தே வட கீழ்பால் போரியல் மதத்துச் சொன்னவாற்றிவார் கோயிலும் புராண நூல் விரிக்கும் புரிசை மாளிகையும் வரிசையா விளங்கப் பொருப்பினான் விருப்புறச் செய்தான் ... கண்டன் --- மாதவனே" தில்லையில் புலி மடுவின் அருகே வியாக்கிரபாதர் தந்தையார் மத்தியந்தன முனிவர் வழிபட்ட சுடலையமர்ந்தார் திருக்கோயிலைக் கற்றளியாக்கியது.
கோயில் என்றாலே பிரச்சனை வராமல் இருக்குமா அங்குள்ள வைணவ கோயில் தான் அதன் காலம் எப்போது. அதனால் ஏற்பட்ட பிரச்சனை என்ன அதை எப்படி சமாளித்தார்கள் என்ற செய்திகள் உள்ளது. மொத்தத்தில் தில்லை கோயில் குறித்து பாடிய அனைத்துப்பாடல்களையும் கல்வெட்டு செய்திகளையும் வரலாற்று செய்திகளையும் ஒன்றாக தொகுத்துள்ளார் கலைமாமணி பேராசிரியர் வெள்ளைவாரணனார்.

No comments:
Post a Comment