Search This Blog

Wednesday 15 March 2023

தமிழர்கள் திராவிடர்களே திராவிடர்களே.....!




                        தமிழர்கள் திராவிடர்களே திராவிடர்களே.....!


''திராவிடம் என்பது கிறித்தவ மதத்தை பரப்ப வந்த திரு. கார்டுவெல் அவர்கள் 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற நூல் எழுதிய பின் திராவிடம் என்ற சொல்லாடல் வந்தது அதையே தோழர் பெரியார் தூக்கி சுமந்து தமிழ் மக்களை ஏமாற்றி இயக்கம் கட்டினார்'' என முகநூலிலும், ஊடகங்களிலும் பரப்புரை செய்திடுகிறார்கள். அது எந்தளவிற்கு மெய்யானது.  திராவிடம் என்ற சொல் எங்கெல்லாம் உள்ளது என்பதை பட்டியல் இடுகிறோம். முடிந்தவரை. 



1. காரவேளன் ஹத்திகும்பா (அலகாபாத் - இது அசோகன் காலத்துக்குறியது)  கல்வெட்டு தமிழ்நாட்டை "திரமிகா / Dramica என்று குறிப்பிடுகிறான்.


2. பொது ஆண்டுகிற்கு பின்பு 5ம் (கி.பி) நூற்றாண்டில் கங்க மன்னன் துர்வினீதன் கொங்குதேச இராசாக்கள் சரித்திரத்தில் "காஞ்சி உள்ளிட்ட திராவிடத்தை வென்றான்" எனக்குறிப்பிடுகிறது.


3. பொ.பி 642 காஞ்சி வந்த சீனயாத்ரீகர் இயூன்சங் அவரது குறிப்பில் காஞ்சியை சுற்றியுள்ள பகுதியை திராவிடம் என்று குறித்துள்ளார்.


4. திராவிடம் = தமிழ்நாடு; திராவிடம்; ஆந்திரம் ;கர்னாடகம்; மகாராட்டிடம்;  கூர்சரம்  என்ற பஞ்சதிராவிட தேசங்கள். திரமிளம் = திராவிடம். செந்தமிழ்அகராதி.


5. பொ.பி. 1246-1279 மூன்றாம் இராசராசன் மகன் இராசேந்திரன் "திராவிட மண்டலத்து (பல்லவநாடு) குலோத்துங்க ராசேந்திரனை வென்று (காகதீய அரசன் கணபதி இந்த அரசனே ஹம்பி கோட்டை முகப்பில் மிக பெரிய பிள்ளையார் சிலையை விஜயநகரத்து அரசுக்கு காணிக்கையாக அதாவது அன்பளிப்பாக செழுத்தினான்) கப்பம் வாங்கினான். (Epind volm. 27 no35. நயனப்பள்ளி கல்வெட்டு.


6. ஆந்திரதேசத்து பித்தர்புரத்தில் உள்ள மல்லப்பதேவனின் கல்வெட்டு (E.i.i V எண் 33;செ.22-4 "அபூர்வ புருஷனான குலோத்துங்கன் ஆந்திரநாடு உட்பட ஐந்து திராவிடப் பகுதிகளையும் ஐம்பது ஆண்டுகள் ஆண்டான்" .


7 . "பழங்கால பாரததேசத்தில் 56 தேசங்கள். பி.வி.ஜகதீஸ் அய்யங்கார் "கிருஷ்னாநதியின் தென்பகுதியும் ; காவிரியாற்றின் வடபகுதியும் ; கருநாடகமும் ;இணைந்த பகுதியே திராவிட நாடு."


8. "அந்நாளிலே திராவிட (அல்லது) திரமிள என்ற சொல் காஞ்சியை தலைநகராகக்கொண்ட தொண்டைமண்டலத்தையே குறித்தது"-- பல்லவ செப்பேடுகள் 30 நூலின் ஆசிரியர் குழு.


9.  "நமாம யஹம் த்ராவிடவேத சாகரம்"-- திருவாய்மொழி-நாதமுனி தனியன்கள்.


10. 18453-1903 ஆண்டு சபாபதிநாவலர் எழுதிய நூலின் பெயர் "திராவிட பிரகாசிகை.


11. தாயுமான சுவாமிகள் தம் பாடலில்  "வல்லான் ஒருவன் வரவுந்திராவிடத்திலே" என்கிறார்.


13. கவிமணி தேசியவினாயகம்பிள்ளை தமிழ் நாட்டை "திராவிடநல் திருநாடு"என்கிறார்.


14.  ரவீந்திரநாத்தாகூர் தமது தேசியகீதத்தில்"திராவிடநாடு" என்கிறார்.


15. வேதாந்த தேசிகர் "திராவிடோஉபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி" நூல் : யாத்தார்.


16, இராமாயணத்திலும் பார்ப்பன வேதங்களிலும் 'திராவிட் என்ற சொல் உள்ளது.


17. திருமேனி &சிலப்பதிகாரத்தில் "ஆரியப் படை" கடந்த நெடுஞ்செழியன் என வருகிறது.


18. அத்வைதம் படைத்த ஆதி சங்கரர்,திருஞானசம்பந்தரை "திராவிடசிசு"என்றார்.


இலக்கியங்கள் ஆரிய-திராவிட என்றது இடத்தைச் சுட்டிக் காட்டுகிறது. பிரிட்டிஷ் காலனியவாதிகள் இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன்பே ஆரிய-திராவிட சொற்கள் பயன்பாட்டில் இருந்தது. இதை வைத்து ஐரோப்பிய இங்கிலாந்து காலனியவாதிகள் ஆரிய-திராவிட என்கிற சொற்களால்

1. மார்க்ஸ் முல்லர் போன்றோர் வரலாற்றைக் கட்டமைத்தனர்.

2. வில்லியம் ஜோன்ஸ்,

கிறிஸ்டோபர் கால்டுவெல் பாதிரியார் போன்றோர்... கிறித்தவ,பைபிள் புராண கதைகளின்படி மொழிக்குடும்பங்களை உருவாக்கினர். இந்த மொழிக்குடும்ப அடிப்படையில் இனவாத அரசியலை கட்டமைத்தனர்.  இந்திய வரலாறு நெடுகிலும் முரண்பாடு என்பது ஆரிய-திராவிட முரண்பாடு என்றனர். இந்திய வரலாறு ஆரிய-திராவிட இனவாத அடிப்படையிலானது என்றனர். இந்த நிலைபாடு எதற்காக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் உருவாக்கினர். பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்தை எதிர்த்து மக்கள் போராடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக.

அந்த அடிப்படையில்...

வடக்கே ஆரிய இனவாத அரசியல் பேசிய சாவர்க்கர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எங்கள் எதிரி இல்லை என்றார். எங்கள் எதிரி அதாவது ஆரியர் எதிரி இஸ்லாமியர்கள் என்றனர். தெற்கில் திராவிடர்களின் எதிரி ஆரிய பார்ப்பனர் என்றனர்."பார்ப்பனிய எதிர்ப்பு பிரதானமானது" என்றார் பெரியார்.


ஆகவே... வடக்கே... தெற்கில்...

பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்தை எதிர்த்து இரண்டு இனவாத (ஆரிய-திராவிட) அரசியல்வாதிகளும் போராடவில்லை. பிரித்தாளும் சூழ்ச்சியை, ஆரிய-திராவிட இனவாத அரசியலை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் திட்டமிட்டு செய்தது.


அதனால்....

ஆரிய-திராவிட இனவாத அரசியலால் பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்தை எதிர்த்த போராட்டங்களை திசைதிருப்ப பயன்பட்டது. பிரிட்டிஷ் காலனிய எதிர்ப்பில் பகத்சிங் போன்றோர்

உறுதியுடன் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...