Search This Blog

Monday, 3 April 2023

வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் ஏன் தேவை


 
                               

                               வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் ஏன் தேவை 

 

 கடந்த தலைமுறையில் மலட்டுத்தன்மை, கேன்சர், சர்க்கரை இதய நோய்கள் குறைவு. காரணம் சித்த மருத்துவம் என்ற பண்டுவம் நம்மிடம் அப்புறப்பட்ட போது. 

 




பாண்டிய, சோழ விஜயநகர ஆட்சியாளர்கள் மூலம் சமற்கிருதமயமானாலும் (sanskritization) எந்த தனி மனிதனோ, குழுவோ, குலமோ சாதி மேலோன்மையை பெறவில்லை. அதற்கு பதிலாக சாதிய ஆதிக்கத்தையும், ஆண்டான் அடிமைத்தனைத்தையும் பெற்று விட்டோம்.

 இந்திய ஒன்றியத்தில் மன்னர் ஆட்சிக்கு அடுத்து வந்த ஆங்கிலேயர்களால் நாம் (westernization) பெற்று இந்திய ஒன்றிய தன்மையை இழந்தோம். உடை முதல் உணவு, கலாச்சாரம், பண்பாடு, மருத்துவம் அனைத்திலும் ஒற்றை தன்மையான  (monopoly) சிந்தனையை நாம் ஏற்று விட்டோம். இதன் விளைவால் கண்டுபிடிப்பு என்பது நிறுவனங்கள் (artificial company) மூலம் வெளிவந்தால் தான் ஏற்போம் என்ற மனநிலையை பகுத்தறிவு என்ற ஒற்றை வாதத்தால் பகுத்தறிய மறுக்கும் மனநிலையைக்கு மாறினோம். இதில் பல்லாயிரம் கண்டுபிடிப்புகள் வந்தாலும் உணவு விசயத்தில் மட்டும் பெரிதான மாற்றத்தை மட்டும் நிறுவனங்கள் கொண்டு வரமுடியவில்லை. அதனால் தான் உணவில் பழைமைக்குள் புதுமை என்ற சித்தாந்தந்திற்குள் நின்று வியாபாரம் செய்வார்கள். இதற்கு எளிய எடுத்துக்காட்டு புலால் உண்பது எந்த எந்த விலங்கு கறிய உண்ணலாம் என பண்டைய மனிதன் கண்டறிந்ததை தாண்டி புதிதாக இன்று வரை கண்டறியவில்லை என்பதே உண்மை.

இதில் பழமை பேசும் இசுலாமியர், அந்தனர், பழங்குடி  குழுக்கள் உள்பட பலரும் மேற்கத்திய கலாச்சார உடையான கோர்ட்டு சூட் போடும் ஒற்றைத்தன்மைக்குள் மாறி இருப்பதைப் பார்க்கலாம். இந்த ஆடை மாற்றம் என்பது அழகியல் சார்ந்தது என்பதை சொலும் உடல்கூறுயியல் மானுடவியல் அறிஞர்கள் ‘’இந்த மனநிலை உணவினை நேரடியாக கைவைக்க முடியாது ஆனால் அதன் பக்கவாட்டில் சிதைக்கும் தன்மை கொண்டது’’ என ஆய்வுகளாக கொடுத்துள்ளனர்.  இப்படியாக சிதைத்ததில் ஒன்றுதான் உலகம் முழுவதிலும் இருந்த வெற்றிலை பாக்கு போடும் பழக்கத்தை மாற்றியது. இந்த பழக்கம் திராவிட அல்லது தமிழர்களுக்கு மட்டும் அல்ல மனித குழு எங்கெல்லாம் வாழ்கிறதோ அங்கெல்லாம் இந்த பழக்கம் இருந்தது, இருக்கிறது. இடத்திற்கு இடம் இதில் சிறிசில மாற்றம் இருக்குமே தவிர பெரும் மாற்றம் இல்லை என உணவு சரித்திர நூல்கள் அறுதியிடுகிறது. 

 

வெற்றிலை பாக்கு போடும் பழக்கத்தை மன்னர் ஆட்சியில் சடங்கு சம்பிரதாயத்தில் (Ritual and cultural) வைத்திருந்தனர்.  இதனாலே வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பது என்பது மரியாதை கலந்ததாக இன்றும் உள்ளது. இந்த பழக்கம் குறிப்பிட்ட சாதி மற்றும் ஆதிக்கத்த தன்மைக்குள் இருந்ததால் பிரிட்டீஷ் ஆட்சிக்கு வந்த போது மன்னர் ஆட்சி மீதிருந்த கோபத்தை வெளிக்காட்ட வெற்றிலை பாக்கு மீது காட்டி தூக்கி ஏறிந்தனர் என்பதை மறுக்க முடியாது'' என வேடிக்கையாக ஆய்வாளர்கள் குறிப்பிடுவது உண்டு. ஆனால் வெற்றிலை போடுவது கெட்ட பழக்கமாக மாற்றியது பகுத்தறியா பகுத்தறிவு என்பதை மறுக்கவும் முடியாது. 

 


தற்போது ஆண்களில் பல பேருக்கு மலட்டுத்தன்மை உருவாகியுள்ளது என்பதை ஆய்வாக சொல்லாவிட்டாலும் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, ஏலம், கிராம்பு, பத்திரி என்ற சாதிபத்திரி இவைகள் கலந்து போடும் பழக்கத்தில் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு அளவிற்கு சுருங்கி விட்டதே இதன் மாற்றம் காரணம் என்பதை விட கிராம்பு, சாதிபத்திரி, ஏலம் இவைகள் பிரிட்டீஷாரில் வனச்சட்டத்தால் கடுமையான விலையேற்றத்தை பெற்று விட்டதுடன் கிடைக்காத பொருளாகவும் மாறிவிட்டது. செரிமான பிரச்சனை முதல் எலும்பு கெட்டி பெருவது, ஆண்மை ஊக்கம் வரை வெற்றிலை, பாக்கு என்பது பல நோய்களைத் தீர்க்கும் ஒரு அருமருந்து என்பதால் முக்கியத்துவம் கொடுத்திருக்கிது மனிதகுலம்.  பிரிட்டீஷ் ஆட்சியினர் காலத்திற்கு முன்பு சித்த மருத்துவத்தில் புகையிலையும் ஒரு வகை மருந்து தான் ஆனால் வெற்றிலை பாக்குடன் போடும் பழக்கத்தில் இல்லை. இந்த பழக்கம் பிரிட்டீஷ் ஆட்சியில் வந்தது. புகையிலையை வைத்துக்கொண்டு வாயில் கேன்சர் வந்திடும் (புற்றுநோய் எப்படி உருவாகிறது என இன்று வரை தெளிவான முடிவு இல்லை), பற்களில்  கரை போகவே போகாது (உண்மைதான் போகவே போகாது), தவிர "டேய்.. இன்னும் பழைய ஆள் மாதிரி வெத்தலையை போட்டு கிட்டு….எனச் சொல்லிச் சொல்லியே வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் நம்மிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைத்து விட்டார்கள் பகுத்தறியா பகுத்தறிவாளர்கள்.

வெற்றிலை, பாக்கில் சேரும் சுண்ணாம்மில் கல்சுண்ணாம்பு, முத்துச்சிப்பி சுண்ணாம்பு, புளிபோட்ட சுண்ணாம்பு என வித்தியாசம் காட்டி உண்டார்கள். இதனை சுவைக்கும்போது முதலில் ஊறும் நீரும், இரண்டாவது ஊறும் நீரையும் துப்பிவிட வேண்டும் என்றும், மூன்றவதாய் ஊறும் நீரே அமிர்தம் என தாம்பூலம் இட்ட வழி முறைகள் சொன்ன சித்த மருத்துவம் இருந்த ஊரில், "ஆங்.. தாம்பூலமா அப்படின்னா?", எனக் கேட்கும் அடுத்த தலைமுறை வந்து விட்டது. வெற்றிலை எச்சிலை துப்பிட பனிக்கம் என்ற தனிப்பாத்திரம் வைத்திருந்ததெல்லாம் காலமாற்றத்தில் காட்சிபொருளாக மாறி ஆய்வாளர்கள் மட்டுமே இதை காணும் நிலை மாறிவிட்டது.

 பெருகி வரும் ஆண் மலட்டுத் தன்மை குறிப்பாக விந்தணு உற்பத்தி மற்றும் அதன் Motility குறைதல் இவற்றுக்கு தாம்பூலம் மிக சிறந்த மருந்து.வெற்றிலையில் உள்ள Hydroxy Chavicol எனும் Phenol Compound ஆனது ஆண்களின் Prostate-ஐ வலுப்படுத்துகிறது, மேலும் Prostate புற்று வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது,

விதைப்பையில் உற்பத்தியாகும் விந்தணுவிற்கு Prostate-ல் இருந்து சுரக்கும் நீரில் உள்ள Zinc மூலம் தான் உயிரே கிடைக்கிறது, அதாவது Motility உண்டாகிறது, IVF நிகழ்வில் விந்தின் Capacitation நிகழ்வும் முக்கியம், அந்த Capacitation நடக்க Prostate சுரப்பு ரொம்ப முக்கியம் , இதையெல்லாம் தெரிந்ததால் தானோ என்னவோ காதல் மனைவி ஊட்டி விடும் தாம்பூலத்தைச் சிலாகித்துப் பேசியிருக்கிறார்கள் போல,மலச்சிக்கலா…., தாம்பூலத்துடன் கொஞ்சம் அதிகம் பாக்கைச் சேர், வாய் நாற்றமா, கிராம்பு சேர், வீரியம் வேண்டுமா,….. சாதிக்காய் சேர் எனச் சொன்ன தமிழ்ச் சமூகம் இன்று Infertility center-களில் முடங்கி கிடக்கிறது. அடுத்த தலைமுறைக்கு இனியாவது தாம்பூலத்தின் மகத்துவத்தை எடுத்துரைப்போமே. 

சித்த மருத்துவத்தில் ரசத்தை (பாதரசம்) மருந்தாக்குவதற்கு சுத்தி முறையில் பயன்படுவது வெற்றிலை. பல மருந்துகளை இதன் சாற்றில் ஊறல் போட்டு அதன் நஞ்சினை நீக்கவும் பயன்படுகிறது. 

 

 முத்துநாகு உடன் Karthikeyan Karuppasamy  

 

 

No comments:

Post a Comment

முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு

  நூலதிகாரம் நூல் முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு ஆசிரியர் ; தி. சுப்பிரமணியன் வெளியீடு ; அடையாளம்   ‘முந்தி பிறந்தவன் நா...