Search This Blog

Tuesday 19 May 2020

கொரொனோ என்ற மாயை? எதற்காக ? யாருக்காக?



                                         கொரொனோ என்ற மாயை? எதற்காக ? யாருக்காக?

*****************************************************************************************************
வணக்கம் நண்பர்களே, தோழர்களே

கொரொனோ பெயரைக்கொண்ட தொற்று நோய் ''கடந்த மூன்று மாதமாக பல்லாயிரம் உயிர்களை காவுவாங்கி விட்டது. பலகோடிப்பேரை கொல்லக்காத்திருக்கிறது'' என்று உலகளவில் செய்தி நிறுவனங்கள் அரசு அறிக்கைகள் ஒவ்வொரு நிமிடமும் செய்திகளை கொட்டிக்கொண்டே இருக்கிறார்கள். இதனால் ஏற்படுத்தப்பட்ட அச்சம் பெரும்பீதி, இரும்பு உலை கொதிகளன் போலவே உள்ளது. இந்த நோய் தாக்குதல் உலக நாடுகள் என்ன நடக்கிறது என்பது குறித்த செய்திகளும் பொய் தோற்றமா ? உண்மையா என அவர்களே விளக்கம் தரமுடியும்.  
இந்திய ஒன்றியத்தில் என்ன நடக்கிறது? என்ன நடக்கும் ? என்பதை பற்றி அரசியல் கட்சிகள் அறிவியல்சார் இயக்கங்களின் அறிக்கைகள், ஆளும் அரசுகளை போலவே உள்ளது. மக்களின் துயரம் சொல்லி அழுக இயலாத ஈழத்துயர் போலவே உள்ளது. 

******************************************************************************************************
 மருத்துவத்துறையினர் என்ன சொல்லுகிறார்கள்?
*****************************************************************************************************
கொரொனோ என்ற தொற்று நோய் ஏற்பட்டால் சளிக்காய்ச்சல் வருவதற்கு முன்பு என்ன அறிகுறி இருக்குமோ அதைப்போலவே தொண்டை வலி, சளி, அதன்பின் இருமலுடன் காய்ச்சல், மூச்சிரைப்பு ஏற்படும் என அறிவித்தார்கள். நோய் தாக்குதல் கண்டவர்களாகக் கருத்தப்பம் நபர்களை காவல் துறை மூலம் பிடித்து மருத்துவமனையை சிறைச்சாலைப்போல் மாற்றி துப்பாக்கி ஏந்திய காவலர்கள் கொண்டு பாதுகாத்து சிகிச்சை அளிக்கிறார்கள். இந்த நோயாளிகளின் இரத்தம் மற்றும் சளி எச்சில் மாதிரிகளை சோதித்த 100 பேரில் 85 பேருக்கு குறிப்பிட்ட நோய் இருப்பதாக லேப் டெஸ்ட் கொடுத்துள்ளார்களாம். அரசு பரிசோதனை மையம் தவிர தனியார் லேப்களிலும் கொடுத்து டெஸ்ட் செய்யப்பட்திலும் இதே கணக்கைக் கொடுத்துள்ளார்களாம். மருத்துவச் சிறைச்சாலையிலிருந்து பெயில் கிடைத்தவர்கள் போல டிஸ்சார்ச் ஆனவர்கள் வீட்டுக்காவலில் வைப்பது போல வீட்டிற்குள் வைக்கப்பட்டார்கள்.

இது நாள் வரை நோய் தாக்குதல் அல்லது தொற்று ஏற்பட்டு மருத்துவமனைக்கு போய் சிசிக்கை எடுக்கப்போனவர்கள் என்று அரசின் பதிவேட்டினைப் பார்த்தால் விமானத்தில் வந்தவர்கள், இசுலாமிய தப்ளிக் மாநாட்டிற்கு போய் வந்தவர்கள், மாலத்தீவிலிருந்து கப்பலில் வந்தவர்கள் என்ற கணக்குகளே உள்ளன. இக்கணக்குகள் நீடிக்க காரணமாக இருப்பது இந்தக்கணக்கில் தப்பித்தவர்கள் மூலம் பரவியதாக சொன்னார்கள். சென்னை பெருநகர காய்கறி அங்காடியை ''ஒற்றை சோர்ஸ்'' எனச்சொன்னார்கள். அதன் மூலம் சிலருக்கு பரவியதாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வாரச்சந்தையும், சேடபட்டி என்ற கிராமத்தையும் சீல் வைத்து மூடப்பட்டது. மற்ற பகுதியின் நிலை தெரியவில்லை.

******************************************************************************************************
                                                         கொரொனா நோயாளிக்கு என்ன நடந்தது
*****************************************************************************************************
காவல் துறை மூலம் பிடித்து கொரொனோ நோயாளியாக கருத்தப்பட்ட நபரை சிறப்பு வார்டில் வைத்து மருத்துவம் பார்க்கிறார்கள். இந்த நோயாளிகள் யாருக்கும் மருத்துவத்துறை குறிப்பிட்டுள்ள எந்த சிம்டமும் வரவில்லை. 15 நாள் கழித்து அவர்கள் விடுதலை என்ற டிஸ்சார் செய்யப்பட்டார்கள். டிஸ்சார் ஆனாலும் அரசியல் கைதியைப்போல் வீட்டுக்காவலில் வைத்து மருத்துவ கண்காணிப்பில் வைத்தார்கள். அப்போதும் எதுவும் குறிப்பிட்ட எந்த சிம்டமும் இல்லை என்றே தகவல் வந்துள்ளது. 

******************************************************************************************************
                                                                                 விண்டோ ப்பிரிடு
*****************************************************************************************************
ஒரு உயிர் தனது இனப்பெருக்கத்தை செய்வதை விண்டோ ப்பிரிடு என்பார்கள். கொரொனோ கிருமியில் விண்டோ ப்பிரிடு குறித்த ஆய்வு நடத்த இது நாள் வரை எந்தகருவியும் இல்லை. ஆய்வுகளும் நடத்தப்படவில்லை. ஹைச்.ஐ.வி என்ற நோய்கிருமியின் விண்டோ ப்பிரிடு கண்டறியும் கருவி இல்லாமல் பல ஆண்டுகள், பலரை பிடித்து இந்த நோய் தாக்கியுள்ளது என அறிவித்ததில் நூற்றுக்கணக்கணக்கானோர் தற்கொலை செய்து கொண்ட பதிவுகள் ஏராளம் உள்ளது.

கொரொனா தொற்று குறித்து மாநில மைய அரசு நடத்தும் துறை ரீதியான வீடியோ கன்பரசிங்கில், தமிழக மருத்துவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அத்துறையின் உயர் மருத்துவர்களை விட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான, செயலாளர், ஆணையார், இயக்குனர்கள் பதில் ஏதுவும் சொல்லாமல் ''அடுத்து, அடுத்து, அடுத்து'' எனச்சொல்லி முடிக்கிறார்களாம். ஆனால் அந்தந்த கலெக்டர் மூலம் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர், ஊரக சுகாதாரப்பிரிவு துணை இயக்குனர் மூலம் கேள்வி கேட்ட டாக்டர்களை 'லெப்ட் அண்ட்டுரைட்' வாங்குகிறார்களாம். மொத்தத்தில் ''மேலிட உத்தரவு'' என்ற தொணியில் சொல்லுகிறார்களாம். நான் பேசிய மருத்துவ நண்பர்கள் ''என்னமோ நடக்குறது இதில் ஏதோ உள்குத்து உள்ளதாகவே தெரிகிறது'' என வருத்தப்பட்டார்கள். அவர்களின் 'பொதுவுடமை கட்சியினர் ஆட்சி செய்திடும் கேரளத்தில் கொரான தொற்றுக்கு சிறப்பாக மருத்துவம் பார்க்கிறார்களே' என்ற கேள்விக்கு ''அதைப்பற்றி ஏதும் கேட்க வேண்டாம்' என்கிறார்கள்.
ஏன் இந்த கமுக்கம்! என்பதை கேள்வி எழுப்பி மக்களிடம் தெரிவிக்க வேண்டிய எதிர் கட்சிகள் ஆளும் அரசுடன் கூட்டு வைத்து செயல்படுவதாகவே உணர முடிகிறது.

********************************************************************************************************
                                                                     ஏன் இந்த கமுக்கம்!
*********************************************************************************************************
ஐயப்பாடு 01. 

உலகம் முழுவதும் மரபுசார் அறிவை நிறுவனங்களுக்காகவே முடக்கி வைத்தார்கள். மரபு அறிவியலில் 'விஞ்ஞானம் இல்லை' என்ற மாயத்தை கட்டமைத்து விட்டார்கள் தற்போது மேற்கத்திய நாடுகள் குறிப்பாக ஜெர்மன் போன்ற நாடுகளில் மெய்பித்து வருகிறார்கள். அவகளிடம் மிகத்தாமதமாக இந்திய ஒன்றியத்திற்கு இறக்குமதியானதே இயக்கை வேளாண்மை என்ற கான்செப்ட். இந்த மரபு பரப்புரையால் முதலில் அடிவாங்கியது உரம், பூச்சிக்கொள்ளி மருந்து உற்பத்தி. அரசே பசுமை வேளாண்மையை திட்டமாக அறிவித்து அதற்கு மானியமாக நிதி வழங்க வேண்டிய காட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. கடந்த பத்தாண்டுகளில் உரம் மருந்து உற்பத்தி, விற்பனை, ஏற்றுமதி இறக்குமதி இவைகளை கணக்கிட்டால் இதனை உள்வாங்கிக்கொள்ள இயலும். இதேபோலவே மருத்துவத்துறையும்.
இந்த மரபு சிந்தனை என்பது வந்து விட்டால் நிறுவனம் சார்ந்து மனிதன் இருக்கமாட்டான் சுயசார்பிற்கு போய் விடுவான் என்ற அச்சம் நிறுவனங்களுக்கு வந்து வந்து விட்டதன் விளைவு தான் இந்த நோயினை வைத்து மக்களை மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என்று என்னத்தோன்றுகிறது.  
ஐயப்பாடு 02.
சிறு குறு நிறுவனங்களை நேரடியாக அழிக்க இயலாது. மறைமுகமாக அழித்திடும் திட்டமே இந்த தொற்று நோய் திட்டம் என்கிறார்கள். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் பேசிய போது ''உலகளவில் சிக்குன்யா காய்ச்சலை வைத்து இது போன்று லாக்டவுன் கட்டமைத்திட முயற்சித்தார்கள். ஏஐடி கொசு சில நாடுகளில் இல்லாமல் போனதால் சில நாடுகள் ஒத்துழைப்பு கொடுக்க முடியாமல் போனது. தற்போது கட்டமைத்து விட்டார்கள். கட்டமைத்த பீதியை தொடர்ந்து நம்ப வைக்கும் முகந்தரமாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்த அரசின் வெளியீடுகள். இதை வைத்து பார்க்கும் போது இவர்கள் சொல்லும் கருத்தையோ வாதத்தையோ நாம் மனம் ஏற்க தயாராக இல்லாத மனநிலையே நமக்கு உள்ளது.

ஐயப்பாடு 03

அரபு நாடுகளில் ''இன்னும் ஆறுமாத காலத்திற்கு எண்ணை நிறுவனங்கள் இயங்காது. வேறு வேலை பார்த்துக்கொள்ளவும். உங்களுக்கான உணவு இடம் மட்டுமே தருவோம்'' என அறிவித்துள்ளது அரபு நாடுகள். ஆலைகள் வேலைநிறுத்த போராட்டங்களில் மாதக்கணக்கில் மூடி மீண்டும் இயங்கிய வரலாறு உண்டு. ஆனால் அந்தத்தொழிலாளர்களை 'வேறு வேலைக்கு போயிடுங்கள்' என பிரிட்டீஷார் இயக்கிய ஆலை நிருவாகம் கூட சொன்னதில்லை. ஆனால் இன்றைய அறிவிப்புகள் எதை நோக்கி என்பதை பொருளாதரத்துறை வள்ளுனர்களே தெளிவாக குறிப்பிட இயலும்.

ஐயப்பாடு 4.

கடந்த ஐந்தாண்டுகளில் வடமாநிலத்திலிருந்து கொத்துக்கொத்தாக அனைத்து உடல் உழைப்பு சார்ந்த தொழிலாளர்கள் தென் மாநிலங்களுக்கு வந்து குவிந்துள்ளார்கள் அல்லது குவிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு ஏன் அங்கு வேலை இல்லை. ''ஒரு வரியில் மக்கள் தொகை பெருக்கம்'' என்ற சொல்லால் ஆய்வினை முடித்து விடுவது ஆய்வாகத்தெரியவில்லை. தென் மாநில மக்கள் வட மாநிலத்தவர்கள் போல் ஏன் அப்பணியை செய்ய இயலவில்லை ? என்ற கேள்விக்கு விடை தேட வேண்டியுள்ளது. குறைந்தது அந்தந்த பகுதி இல்லாவிட்டாலும் அந்தந்த மாநிலத்தவர்களுக்கு ஆங்காங்கு வேலை ஏற்படுத்த சூழல் ஏன் உருவாகவில்லை? . 

வட நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் குறித்து வட நாட்டு பத்திரிக்கையாளர்களிடம் பேசினோம். ''வட கிழக்கு மாநிலங்களில் உள்ள மலைகளில் உள்ள கனிம வளங்களை வேதாந்த எல்.&டி போன்ற கம்பெனிகளுக்கு 99 ஆண்டுகால குத்தகை விடப்பட்டுள்ளது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த கனிம வளங்களை எடுத்துச்செல்ல அங்கு ஆறு வழிச்சாலை துறைமுகம் வரை போடப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் செயல்பட மக்கள் போராட்டம் தடையாக உள்ளது. அங்கு இயங்கும் தீவிர பொதுவுடமை அமைப்புகளுக்கு மக்கள் ஆதரவாக உள்ளதால் அவர்களை அப்புறப்புறப்படுத்த பெரும் முதலாளிகளுக்கு அரசே திட்டம் வகுத்துக்கொடுத்தது. அத்திட்டத்தின்படி இந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு வட்டியில்லா கடனாக 1 முதல் 5 இலட்சம் வரை கடன் கொடுக்கிறார்கள். அவர்கள் வேலை செய்து கழித்துக்கொள்ள வேண்டும். இப்படித்தான் இடப்பெயர்வு துவங்கியது. வயதானவர்களைத்தவிர இளைஞர்கள் இல்லாத கிராமத்தைதான் பார்க்க முடிந்தது.  இவர்கள் மீண்டும் இங்கு வந்தாலும் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியிலிருந்து தப்பிக்க அவர்களது கைப்பாவையாக இயங்குவார்கள். இது இருக்க தீவிர பொதுவுடமை செயல்பாட்டார்களையும் முடக்கிவிட்டார்கள்.. தற்போது இந்த இளைஞர்கள் வந்தாலும் பெரிதான தொழில் துவங்கவுள்ள கம்பெனிக்கு பெரும் பாதிப்பு இருக்காது'' என்கிறார்கள்.    

ஐயப்பாடு 04. 

 அரசின் நடவடிக்கைகளை பார்க்கும் போது திருமணம் முடிப்பத்தாக இருந்தால் எத்தனை பேர் கூடுவார்கள் என்பதை கணக்கிட்டு அரசிடன் அனுமதி வாங்கவேண்டும் என்ற நிலையே புரிந்து கொள்ள முடிகிறது. இருக்கும் நிலையைப்பார்க்கும் போது கட்டாயம் குறைந்தது 500க்கு மிகையாகமல் கூடலாம் என்ற வழிக்காட்டுதலை அரசு  அறிவிக்கும் என்றே தலைமை செயலக அதிகாரிகள் சொல்லுகிறார்கள். அப்படியானல் உண்ண உணவு   உடுக்க உடை தவிர மற்றவை கடுமையாக பாதிக்கப்படும். மனிதன் தனது வளமையை வளத்தை காட்டுவது இதர செலவினங்களிலே. இவைகள்  சார்ந்தே பல தொழிகள் இயங்குகிறது. இவைகள் முடங்கும் போது மனித குலம் மொத்தமாக அடிமையாக யாரிடமோ அழைத்து செல்ல இந்த தொற்று நோயினை பயன்படுத்துகிறார்களோ ?, என்ற ஐயப்பாடு எழுகிறது.

ஐயப்பாடு 05.

முகக்கவசம் இது சாதாரமாக எடுத்துக்கொள்ள இயலவில்லை. பள்ளிக்குழந்தைகள் இதை அணிய இயலுமா ?. கூடி வாழும் வயதில் இருப்பவர்களை எப்படி அனுக இருக்கிறார்கள். அவர்களின் மனநிலை குறித்த தாக்கம் எப்படி இருக்கும்.?. வகுப்பறைகள் எத்தனை பேரை அமர வைப்பது ?. அரசு பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளின் நிலை என்ன?. 

தற்போது அரசுப்பணியாளர்களை ஒரு மீட்டர் இடைவெளியில் வைத்து பேரூந்தில் அழைத்து சென்றால் நாளை சாமானிய மக்களை எப்படி அழைத்துச் செல்வார்கள். ? இதை துறைவாரியாக கணக்கிட்டால் தலைசுற்றுகிறது.   இப்படியான ஐயப்பாடுகளை கணக்கிட்டு பாருங்கள். எதை நோக்கி இந்த தொற்றால் நகர்த்துகிறார்கள் நகர்கிறோம். யாரோ யாருக்காவோ நகர்த்துகிறார்களோ என்ற ஐயப்பாடு எழுவதை தடுக்க இயலவில்லை. மொத்தத்தில் சிறு குறு நிறுவனங்களை சுகாதாரச் சட்டத்தில் அடைத்து பெரும் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் பணியாகவே இந்த நகர்வு நகர்வதாக ஐயம் எழுகிறது. 

இந்தபேரழிவை பொத்தாம் பொதுவாக நிகழ்த்த முடியாது என்பதால் அதற்குமுன்பாக பல மாதங்கள் லாக் டவுன் என்ற யுத்தியை கையாள்கிறார்கள் என்ற பலரது ஐயத்தை போலவே நமது ஐயத்தையும் வைக்கிறோம். மொத்தத்தில் காட் (general agreement on tariffs and trade) ஒப்பந்தந்தத்தின் கரங்கள் நீள்கிறது. இதில் பொதுவுடமை கட்சி முதலாளித்துவ கட்சி என்ற பாகுபாடெல்லாம் இல்லை என்பதாகவே தற்போது வரை உள்ள நிகழ்வு உணர்த்துகிறது.

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...