பொதுவுடமை சிந்தனையை அழிப்பதே
இலக்கு
********************************************************************************
வணக்கம் நண்பர்களே தோழர்களே,
எழுத்தாளர் சூரியதீபன் என்ற செயப்பிரகாசம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் என்பவர் தனது வலை பக்கத்தில் எழுதிய கட்டுரை
குறித்து கண்டணம், கிண்டல் பதிவுகளும் எதிர்ப்பு குரல்களும், ஆதரவு குரல்களும் வந்துள்ளது. ஜெயமோகன் என்பவர் எழுதியுள்ளதின்
சாரம் ''அரசுப்பணியில் உள்ளவர் எப்படி தீவிர பொதுவுடமை சிந்தையாளராக இருக்கலாம். இருந்தவர்கள்
ஏன் சட்டப்பிடியில் சிக்கவில்லை'' என்பதே.
பொதுவுடமை கொள்கைகளை
முதன்மையாக வைத்து ஆயுதம் மூலம் அரசினை கட்டமைக்க ''நக்சல்பாரி'' என்ற இடத்தில் கூடியதால் அவர்களை ''நக்சலைட்'' என அரசின் மைய எந்திரமான காவல் மற்றும் உள்துறை உயர்
அலுவர்கள் பெயர் வைத்தனர். பொதுவுடமையை ஏற்றவர்களை, தீவிர, கொஞ்சம், பரவாயில்லாத, சுமார் பொதுவுடமைவாதி வலது இடது
என்பதெல்லாம் என்ன மொழி எனப்புரியவில்லை.
''சீன நாட்டில் பொதுவுடமை ஆக்கத்தின்
தலைவனாக மாவோவின் பெயரில் இந்தி ஒன்றியத்தில் இயக்கும் அமைப்பின் ஆதரவாளர், தடை செய்யப்பட்ட இந்த
அமைப்புடன் தொடர்பில் இருந்தார்'' என்ற குற்றத்திற்காக பேராசியரியர் ஆனந்த் டெல்டும்டே மே 2020ல் கைது செய்யப்பட்டார். ஆனந்த் டெல்டும்டே கைது செய்யப்பட்டதன் காரணம்
என்ன என பொதுவெளியில் விவாதிக்கவே யாரும் தயாராக இல்லை. இந்தியாவில் வெளிவரும்
ஆங்கில தினசரிகள், ஒரு சில வார இதழ்கள் தவிர தமிழ் பத்திரிக்கைகளில் ஒரு பத்தி செய்தியாக
வெளியிட்டது. பாரளுமன்ற வாக்கு அரசியலை ஏற்ற பொதுவுடமை கட்சிக்களும் இது குறித்த விவாதத்தை
பெரிதாக முன்னெடுக்காததை எளிதாக கடந்து விட இயலாது. இலக்கியம், அரசியல், சமூகம் சார்ந்து
இயக்கும் அமைப்புகளே இது குறித்து பேசியும், எழுதியும் வருகிறது.
எழுத்தாளர் ஜெயமோகன் என்பவர் ''பொதுவுடமை சிந்தனையாளரான சூரியதீபன்
என்ற செயப்பிரகாசம் அரசுப்பணியில் எப்படி சேர்ந்தார் ? ஓய்வு பெரும் வரை பொதுவுடமை
சிந்தனையாளரான அதுவும் தீவிர பொதுவுடமை சிந்தனையாளரான ஏன் காவல்துறையின் மூலையான உளவுப்பிரிவுக்கு தெரியாமல் போனது?.
அவர் அரசிடம் ஓய்வு ஊதியம் பெறுகிறார் ? அதை ஏன் நிறுத்தவில்லை'' என்ற சொற்களை மறைமுகமாக
பயன்படுத்தி எழுதியுள்ளார். இவரின் கட்டுரையின்படி ''வாக்கு அரசியலை
ஏற்காது ஆயுதம் மூலம் அரசினை கட்டமைக்க நினைக்கும் (இத்திட்டம் இந்திய ஒன்றியத்தில்
கனவாகவே போகலாம், பல்நூறாண்டு கருத்தியலாக நீடிக்கலாம், அல்லது நீர்த்து மீண்டும் முளைக்கலாம்.
நீர்த்தும் கூடப்போகலாம்) நபர்கள் அரசின் பதவிக்கு வரக்கூடாது'' என்பதுதான் கருப்பொருளாக
உள்ளது.
ஒருவர் அரசு பதவியில் சேரும்
முன், அரசின் மூலையாக உள்ள காவல் துறையின் உளவுப்பிரின் மூலம்
பணியில் சேர்பவர்கள் ''அரசியல் கட்சி சார்புடையவரா? அவர் மீது வழக்குகள் உள்ளனவா?, வாக்கு
அரசியலை ஏற்ற பொதுவுடமை கட்சி ஆதரவாளனக இருந்தால் ''இனி மேல் ஒழுங்கா இருந்துங்கக்கோ
உன் வாழ்க்கை பிரச்சனை என்பதால் உங்களுக்கு சாதமாக அறிக்கை எழுதுகிறேன்'' என காவல்துறை
அலுவலர் சொல்லுவார். ஆனால் வாக்கு அரசியலை ஏற்காத அமைப்பின் ஆதரவாராக இருந்தால் இப்பேச்செல்லாம்
இல்லை. ஒற்றை வரியில் சொல்லுவதென்றால் வேலை கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் புகார்
மேல் புகார் கொடுத்து விரட்டி விடுவார்கள்.
அரசியல் சாசன வழிக்காட்டுதலில்
உருவாக்கப்பட்ட அரசு பணியாளர் விதி வரைமுறை சட்டக்கையேடுகள் விதிகளின்படி ஜெயமோகன்
என்பவர் கட்டுரை எழுதியிருக்கலாம். ஆனால் .... இவர் நாடறிந்த எழுதாளர் இவர் எழுதியதில்
உள்நோக்கம் தவிர வேறு என்னவாக இருக்கும். இவரின் இலக்கு என்பது ''பொதுவுடமை சிந்தனை என்பது எந்தத்தளத்திலும் இருக்கக்கூடாது''
என்பதானே தவிர வேறு எதுவும் இல்லை என்பதையே உணர்த்துகிறது.
ஆளும் பாரதீய ஜனதா அரசின் அரசியல்
மூலையாக உள்ள சங்பரிவார் அமைப்புகளின் இலக்கும், ஜெயமோகன் என்பவர் இலக்கும் ஒன்றே. ஆனால் .... , ''இன்று தீவிர பொதுவுடமையை எதிக்கிறேன்
என சொல்லும் ஜெயமோகன் என்பவர் அடுத்து பொதுவுடமையை எந்த வடிவத்தில் இருந்தாலும் எதிர்க்க
தொடர்ந்து எழுயும் வருகிறார்.
என்பதை பொதுவுடமை அமைப்புகள் தெரியாதா? இவர் எழுதுவதால் பொதுவுடமை சிந்தனை இல்லாமல்
போய்விடப்போவதில்லை. இப்படி தனது கொள்கையை அறிவித்த நபரரான நபருடன் தனிப்பட்ட உறவு வைத்துக்கொள்ளுவது மானுட தன்மை ஆனால் இயக்க உறவு வைத்துகொண்டுள்ளவர்களை குறிப்பாக பொதுவுடமை
அமைப்பில் உள்ளவர்களே அவரை ஏற்றுக்கொண்டாடும் கேவலநிலையை என்ன சொல்லுவது.
இந்து அறநிலைய சட்டப்படி அத்துறையின்
பணியில் சேருபவர், 'இந்துவாக, ஆன்மீகவாதியாக'' இருந்த்தல் கட்டாயம்.
அதைப்போல அரசுப் பதவியில் இருப்பவர்கள் 'பொதுவுடமை எதிப்பாளர்களாக
இருக்க வேண்டும்' என திட்டமும் சங்பரிவார் அமைப்புகளில் பல்நெடும் காலமாக பேசப்படுகிறது.
அவர்களின் வெளியீடுகளில் வெளிப்படையாகவே எழுதியும் வருகிறார்கள். இதை பொதுத்தளத்தில்
இயங்கும் எழுத்தாளர்கள் துணிந்து எழுதுகிறார்கள் என்றால்... இவர்களை என்ன செய்ய வேண்டும்
என காலம் முடிவெடுக்கும்.
No comments:
Post a Comment