Search This Blog

Thursday, 28 March 2019

குல சாமி


                                                                     குல சாமி

                                                                        
Add caption


         குலசாமி என்பது தங்களது பாரம்பரித்தை பண்பாட்டைக் காப்பதாகவே பலரும் முடிவு செய்து அதற்கான முனைப்பு காட்டுவதை பார்க்கலாம்.  

           
திருமணமாவதற்கு முன்பு தம்பதியினர் மண்டுக்கருப்பு என்ற சாமிக்கு கருமாதிக்கு செய்வது போல் சாமிக்கு எண்ணை & அரப்பு வைத்து குளிப்பாட்டி விட்டு திருமணம் முடிக்கும் சடங்கு



    ''குலசாமிகள் நம் குலத்தைக் காப்பவர்கள் // வாழ்ந்த முன்னோர்கள் // குலத்தினைக் காத்தவர்கள்' என நினைப்பதிலே தத்துவத் தடுமாற்றம் உள்ளதை பார்க்கலாம். இதை மறுபரிசீலனை செய்திடவே சமூக ஆய்வாளர்கள் மறுப்பது வியப்பாகவும் உள்ளது.

        இவர்களின் வாதப்படி '' குறிப்பிட்ட சாதியை மட்டும் குறிப்பதல்ல குலம். பல குலத்தினர் ஒன்றாக ஒரு குல தெய்வத்தை வணங்குகிறார்களே. அதன் அடிப்படையில் பார்த்தால் குலம் என்பது வேறு '' என்றும் திருக்குறலில் கூட குலம் சொல் வருகிறது. கீதை, பெரிய புராணம் போன்ற நூல்களிலும் வைணவப்பெரியவர் ராமநுசர் போன்றவர்களும் குலம் குறித்து பதிவிட்டுள்ளார்கள். இதை பிடித்துக்கொண்டு அப்படியே பார்ப்பது என்னவிதத்தில் நியாயம் என்பதே நமது மறுகேள்விக்கானதாக உள்ளது. 

        மாமன் மைத்துன் உறவு முறைக்காக, திருமண உறவிற்காக ஒரு குலத்தினுள் பல உள்பிரிவுகள் தேவை அதன் அடிப்படையில் குலங்களுக்குள் உள்பிரிவுகள் தோன்றியிருக்க வாய்ப்புள்ளது. காலப்போக்கில் தனித்தனி குலங்களாகவே குலங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளது. நடப்பில் உள்ள அமைப்பு முறையில் பல குலத்தினர் ஒரு குலசாமியை வணங்குவார்கள். அவர்கள் அனைவரும் ஒரு குலத்தினர் எனக் கணக்கிடுவது சரியாக புலனப்பார்வையாக இருக்குமா? என்பது தெரியவில்லை.    

        குலசாமிகள் ஒரு குலத்திற்கு அதாவது சாதிக்கு சொந்தமானது. சில கோயில்களில் பல குலத்தினரும் ஒரு சாமியை வழிபடுவார்கள். ஒரு குலசாமியை பல குலத்தினர் வழிபடும் போது ஏன் பல குலத்தினராக பிரிந்து கிடக்கிறார்கள். அவர்கள் ஒருங்கிணையாமல் புறமணம் புரியாமல் அகமணம் புரிகிறார்கள். இந்தக் கேள்விக்கு தொ.பரமசிவம் ''துடியான சாமி // நம்மைக் காத்த முன்னோர்கள். சமூகம் தனது தொன்மங்களை படிமங்களை சேகரித்து வைத்துள்ளது அதனை வெளிப்படுத்த ஒரு நாளே குல சாமி கும்பிடு '' என்றப் பதிலை வைக்கிறார். அவரை சார்ந்து அல்லது அவரை ஒத்த சிந்தனையாளர்களானவர்கள் தமிழ் தேசிய சிந்தனையோடு குலசாமி வழிப்பாட்டை பார்க்கிறார்கள். 
 
                  குலசாமி வழிபாடு செய்திட மாசிக்களறி அல்லது மாசிக்கும்பிடு, சிவராத்திரி அன்று தங்களது குலத்தினர் அனைவரும் கூடுகிறார்கள். இதன் மூலம் தங்கள் உறவுகளின் ''முறைகளை''யும் தங்களது குலத்தினர் யார் யார் என்பதை அடையாளம் செய்து மறுகூர் செய்து கொண்டு குலத்திற்குள்ளே இயங்க அதன் இறுக்கத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதை போதிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவையே'' இதை உடைக்க பேராசிரியர் நெடுஞ்செழியன், ஏர்.மகாராசன் போன்ற சமூக ஆய்வாளப் பெருமக்கள் எழுதிய நூல்களிலும் சரியான விளக்கம் இல்லை.
 
                 பிறந்த குழந்தைக்கு குலசாமி கோயிலில் மொட்டை போட்டு குலசாமி பெயரை முதல் பெயராக வைப்பது என்பது தங்களது குலத்தைக் காக்கவும் கூர் செய்திடவுமே இவை காலம்காலமாக பயன்பட்டுள்ளது என்பது அறிந்த தகவல்தான்.

            பெருந்தெய்வ கோயில்களில் பூசகர்களாக உள்ள பார்பனர்கள் தங்களது சொந்த வேண்டுதலுக்கு இவர்கள் பணியில் உள்ள கோயில் சாமியை விட குலதெய்வத்திற்கு முன்னுரிமை கொடுத்து வணங்குவார்கள். இது ரிக்வேதகாலத்திலிருந்து தொடர்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். 1866 காலங்களில் மைசூரில் தங்கி பிராமணர்கள் குறித்து ஆய்வு செய்த ஏசு சபை பாதிரியார் ஏ.ஜே. அபேதுபே Hindu manners, customs and ceremonies என்ற நூலினை எழுதினார். இதில் வேதத்தில் குறிப்பிட்ட பழக்க வழக்கங்களை இன்றும் பார்ப்பனர்கள் கடைபிடிப்பது வியப்பாக உள்ளது என்றும், குலதெய்வ வழிப்பாட்டை முன்னிருத்துபவர்கள் பார்பனர்கள் என்றும், குலதெய்வ குற்றத்திற்கும் முன்னோர் வழிபாட்டிற்கும் முன்னுரிமை கட்டாயம் தருகிறார்கள் / தரவேண்டும் என வேண்டுகிறார்கள் என தனது ஆய்வில் பெயர் பேட்டியுன் கொடுத்துள்ளார்.

                   விஜயநகர, நாயக்கர் ஆட்சி காலத்தில் குலநீக்கச்சட்டம் (ஜாதியை விட்டு) கடுமையாக அமுலாக்கம் செய்யப்பட்டதற்கான சான்றுகள் பல நூறு உள்ளது. ''குலம் மாறி திருமணம் முடித்தால், உறவு மாறி திருமணம் முடித்தால் குலநீக்கம் செய்வார்கள். குலநீக்கம் செய்தவர்களுக்கு உழுவதற்கு நிலம் கிடைக்காது. இதனால் குலசாமியை அக்காலத்தில் கட்டாயம் தேடவேண்டிய தேவை இருந்தது. இன்றைய சூழலில் அதற்கான தேவை
குலசாமி வழிப்பாட்டிற்கு போல் பெருந்தெய்வ வழிபாட்டிற்கு கோட்டை என்ற விதை எடுத்துச்செல்லும் நிகழ்வு.


என்ன என்பதை சமூக அறிஞர்கள், மானுட ஆய்வாளப் பெருமக்களே விளக்கம் கொடுக்க வேண்டும்.

           குலசாமி இல்லாத குலங்கள் நாயக்கர் அரசில் உருவாக்கப்பட்ட அங்காள பரமேசுவரியையும், காமாட்சியம்மனையும் வணங்கினார்கள். வணங்கியும்                              வருகிறார்கள். பெரும்பான்மை தமிழ் குடிகள் வணங்கும் இக்கோயிலில் இன்றும் தெலுங்கில் பாட்டுப்படிப்பதைக் கேட்டகலாம். இது ஒருவகையில் சமூக ஒற்றுமை என்று எடுத்துக்கொள்வதில் தவறில்லை ஆனால் தத்துவத்தடுமாற்றத்தை உணர முடிகிறது.

      தென்காசிக்கும் கரிவலநல்லூருக்கும் இடைப்பட்ட ஊர்களில் தெலுங்கு பேசும் யாதவர்களின் குலதெய்வத்தை அங்குள்ள கொண்டையங்கோட்டை மறவர்கள் குலதெய்வமாக வணங்குகிறார்கள்.

               இன்றை சூழலில் குல ஆதிக்கம் என்பதை விட குலத்தை வைத்தே பல அரசியல் கட்சிகள் இயங்குகிறது. இப்படி இயங்குவதன் மூலம் குல ஒற்றுமையை ஏற்படுத்தி பிற குலத்தினர் மீது வன்மத்தை பூசி, வாக்கு வங்கியை தக்கவைக்க முடியும் இதைத்தானே பல அரசியல் கட்சிகள் செய்து வருகிறது. இதனால் அரசியல் கட்சியினர் குலசாமி வழிபாட்டை தனது தொண்டாக செய்து வருவதை ஆய்வாளர்கள் கருத்தில் கொள்ளவேண்டிய காலமிது. அதற்காக பெருந்தெய்வ வழிபாட்டை ஆதரிப்பதாக பொருள் இல்லை. சிறுதெய்வ வழிபாடே காலப்போக்கில் பெருந்தெய்வ வழிபாடாக மாறியுள்ளது என்பதற்கு தொண்டை தஞ்சை மண்டலத்தில் உள்ள திரௌபதி தீபாச்சம்மன் வழிபாடும், தென்பகுதியில் வள்ளியூர், சீவப்பேரி சுடலைமாடனும் என்பதை மறந்து விடவேண்டாம். சுடலை மடனும் சிவனும் ஒன்று என்ற ஆய்வும் உள்ளது. சிறுதெய்வங்கள் பெருந்தெய்வத்தின் தன்மை அல்லது தொன்மங்களை சுமந்து இருப்பதை கூர்ந்து கவனித்தால் புலப்படும்.

           
                         குலசாமி ஆய்வுகளை வெகுசனப்படுத்தும் போது (when ever publish the in camera statement ..... ) போது கட்டாயம் எதிர்விளைவுகளையே ஏற்படுத்தியது என்பது காலக்கண்ணாடி. பெருந்தெய்வ வழிபாட்டினை எதிர்ப்பற்காக குலதெய்வ வழிப்பாட்டை ஆதரிப்பது என்பது நல்ல பண்பல்ல. ஆய்வு செய்துவது வேறு அதை கடைபிடிக்க சொல்லுவது என்பது வேறு. ஆனால் குலதெய்வ அல்லது பண்பாட்டு ஆய்வாளர்கள் தங்களது ஆய்வினை அப்படியே கடைபிடிக்க சொல்லுவதாக இருப்பதால் குல ஆதிக்கம் அதிகரித்து குல வேறுபாடு மேலும் மேலும் வழுப்படும் என்பது ஐயமில்லை. 


                                                                             கோவிலுக்கு ரெட்டை சேவல் காணிக்கை     
             சிறுதெய்வ அல்லது குலசாமி வழிபாடுகள் பெருந்தெயவ கோவிலுக்குள் மக்கள் நுழைவதை மறுக்கப்படும் போதும் அதை விட நாங்கள் ''பெரிய ஆள்'' எனக் காட்ட சாகச வித்தைகளை காட்டுவதிலே குலசாமிக் குறியீடுகள் தொடர்கிறது. அல்லது அம்மம்மக்ளின் வாழ்வியல் சமூக பண்ப்பாட்டு இயக்கவியம் தொடர்பான வெளிப்பாடுகள். இவை அனைத்தும் பெரும்பாலும் சைவ வழிப்பாட்டை அல்லது சைவ பெருந்தெய்வமான சிவன் சார்ந்ததாகவே உள்ளதை பல ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளது.
       
           வைணவத்தில் பத்து அவதாரமும் உள்ளதை கருத்தில் கொள்ளவேண்டுகிறோம். இவர்களுக்கும் சாமானிய மக்கள் எதிர்ப்பு கூடியதால் தீப்பந்தம் பிடித்து காணிக்கை செழுத்துதல், நாக்கில் கையில் சூடம் பொறுத்தி காட்டுதல் போன்ற குலசாமி தொன்மங்களை அங்கும் காணலாம். பெருந்தெயவமோ குலதெய்வமோ ஒரு போது சமூக ஒற்றுமைக்கு வழிவகுக்காது. 

                     பரவலாக பேசப்பட்டும் தீட்டு பெண்கள் கோயிலுக்குள்ளும், இரவிலும் வரக்கூடாது என்பதெல்லாம் பந்தளம் ஐயப்பன் கோவிலில் மட்டும் அல்ல. வீட்டுக்கு வெளியான போன பெண்ணை கோவியிலுக்கு தடுக்கும் நம்ம ஊர் குலசாமிகளையும், அதன் தொன்மம் எங்கிருந்து பெறப்பட்டது என்ற ஆய்வில் இறங்கிப்பார்த்தால் ஆரியத்திற்குளிருந்து பலவும், நம்மிடமிருந்து சிலவும் சென்றிருப்பதை கவனிக்கலாம். ஆரியத்தின் வர்ணாசரமும் உள்ளூர் குடிகளின் ஆசாரமும் சேர்ந்ததே சனதானம். இந்த சனாதனம் குலசாமி வழிப்பாட்டில் இல்லை என்று நம்மால் அடித்து சொல்ல இயலாத நிலையிலே உள்ளது. பிற்படுத்தப்பட்டவர்கள் வணங்கும் பல குலதெய்வக்கோயில்களில் பட்டியல் குலத்தினராக அறியப்படும் பல குலத்தினர் நுழைந்தால் செத்து விடுவார்கள் என்ற நம்பிக்கை பரப்பப்படுவது உள்ளது.

         இவையெல்லால் குற்றச்சாட்டாக பார்த்தாலும் குலசாமி வழிபாட்டில் குல வரலாறுகளை ஏதுவாக கண்டறிந்திட முடியும். இந்த வரலாறுகள் மானுடவியலான பார்வைக்கு ஆகுமே தவிர அதை பொதுவெளியில் வைத்து விவாதிக்க ஆகாது என்பது எல்லோரும் அறிந்ததே. இது போன்ற பல நூறு ஆயிரம் எடுத்துக்காட்டுகளை அடுக்கலாம்.

குலசாமி ஆய்வுகள் சமூக மாற்றத்திற்கும் பொதுவுடமையை நோக்கி இச்சமூகம் நகர்வத்தற்கும் பயன்படும் விதமாக அமைந்தால் நல்லது. நடக்க வேண்டும் என்பதே வேண்டுகோள்.

No comments:

Post a Comment

முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு

  நூலதிகாரம் நூல் முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு ஆசிரியர் ; தி. சுப்பிரமணியன் வெளியீடு ; அடையாளம்   ‘முந்தி பிறந்தவன் நா...