நூலதிகாரம்
தமிழகத்தில் பறவைகள் காப்பிடம்
நூல்
- தமிழகத்தில் பறவைகள் காப்பிடம்
ஆசிரியர்
- சண்முகநந்தம் &பேராசிரியர் முனைவர் செயக்குமார்
வெளியீடு
- எதிர்
விலை
- 500
தமிழகத்தில்
பறவைகள் காப்பிடம்......, இந்த தலைப்பைப் பார்த்தவுடன் 'இது நமக்காகது' என பலரும் ஒதுங்கி
விடுவார்கள். இல்லை இல்லை படிக்கும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் இருக்க வேண்டிய
நூல் என்பதை நாம் உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என, பரிந்துரைக்கிறேன். தமிழகத்தில் உள்ள
அனைத்து பறவைகள் காப்பிடங்களுக்கும் (சரணலையம்) சென்று, ஆய்வு செய்து, அதன் புகைப்படங்களை
(அழகிய) எடுத்து மிமினுக்கும் தாள்களில் அச்சிட்டுள்ளார்கள். இதை விட முக்கியமானது
இந்தியாவிலே அதிக பறவைகள் காப்பிடமும் பெரிய காப்பிடமும் அமைந்த மாநிலம் தமிழகம் என்பதால்
இது போன்ற நூல்கள் தமிழ் இலக்கிய உலகில் இல்லாததும், இந்த நூல் அறியப்படவேண்டியதன்
கட்டாயத்தை நான் உணர்கிறேன்.
'மரத்தையும்,
பறவையையும் தங்கையாக நினைத்து அழுத பெண் பாத்திரத்தை தமிழ் இலக்கியங்களில் படித்திருப்போம்.
கொங்கு மண்டலத்தின் 'அண்ணன்மார்' கதையின் மையப்புள்ளியே கிளி, இராமயாணத்தில் 'மான்'
தானே கதையின் திருப்பம். பாலூட்டும் பன்றியை தனது பசிக்காக வேட்டையாடிய புலியால் பரிதவித்த
பன்றி குட்டிகளுக்கு பாலூட்ட புலிக்கு தண்டனை விதித்தான் சிவன் என்று பக்தி இலக்கியத்திலும்
பதிவுள்ளது.
பிரிட்டீஷார்
வருகைக்கு முன்பு வரை விலங்குகளை உணவுக்காக வேட்டையாடுவதில் தர்மம் இருந்தது. பெண்
விலங்கையும், பெண் பறவையும் வேட்டையாடி விட்டு வருந்தி அழுத இலக்கிய பாத்திரச் செய்திகள்
புதைந்து கிடப்பதை பார்க்கும் போது மானுட சமூகம் இயற்கையோடு இசைந்து வாழ்ந்ததைக் காட்டுகிறது.
வேட்டையாடி கூட்டு வாழ்கையாக இயற்கையோடு மனித இனக்குழுவின் ஒற்றுமையை பறைசாட்டி ஒன்றாக
ஒன்றியிருந்த வாழ்வை, விலங்குகளிடமிருந்து மனிதனை தனியாக பிரித்தது பிரிட்டீஷ் சட்டம்.
வாரக்கடைசி
நாளுக்கு (வீக் எண்ட்) 'எங்கு போகலாம்' என திட்டமிடும் குடும்பத்தினர் குழந்தைகளுடன்
பறவைகள் காப்பிடத்திடத்திற்கு போகலாம். அந்த காப்பிடங்கள் எங்கு உள்ளன, போகும் வழி,
தூரம் எவ்வளவு, என்ன விதமான பறவைகள் எந்த மாதங்களில் வரும், போகும் போது என்னென்ன எடுத்துச்செல்ல
வேண்டும்? என்பதற்கான கையேடு வேண்டுமல்லவா? அக்கையேடு தான் இந்த நூல்.
மொரிசியஸ்
தீவில் 'கல்வாரியா' மரத்தின் விதையினை 'டோடோ' என்ற பறவை சாப்பிட்டு அதன் வயிற்றில்
ஏற்படும் நொதி மாற்றத்தால் சீரடைந்து, இப்பறவையின் எச்சம் மூலமே கல்வாரியா விதை முளைத்தது.
இந்தப்பறவை அழிந்ததால் (வேட்டையாடுவதாலும்), இந்த மரத்தின் விதைகளை உண்ணுவதற்கான பறவையில்லை.
தானாக பழுத்து விழும் இந்த மரத்தின் விதை முளைக்கும் திறனை இழந்து விட்டது. தற்போது
மொரீஸ்யஸ் தீவில் மிஞ்சியுள்ளது ஒரே ஒரு மரம் மட்டுமே. இதனை எப்படி இனப்பெருக்கம் செய்ய
வைப்பதென உலக நாடுகளெல்லாம் கூடி ஆய்வு நடந்துகிறது. ஆய்வு இன்னும் முற்றுப்பெறவில்லை
என்ற செய்தியோடு, ''பறவைகள் என்பது தனித்த உயிரனம் அல்ல, அது அனைத்து உயிர்களுக்குமான
தொடர் சங்கிலியின் முதல் கண்ணி'' என அறிவுறுத்தளோடு துவங்கிறது இந்த நூல். பெரும்பாலான
பறவைகள் விதைகளை மட்டுமே உண்ணும் என்பதால் விதை முளைப்பதற்கும், பரவலுக்கும் மையக்காரணி
பறவைகளே என்பதை சட்டென அறிவுறுத்துகிறது.
கடல்
நீர் - முன்னீர், ஆறு - நன்னீர், குடிநீர் - இன்னீர், மழைநீர் - அமிழ்தநீர் என இலக்கியங்கள்
சொல்லும் செய்தியை பறவைகள் இசைபோல அருமையாகச் சொல்லி, குளத்தின் ஓரத்திலே பழங்காலத்தில்
இறந்த மனிதர்களை புதைத்துள்ளார்கள். மதுரையை சுற்றியுள்ள ஏரிக்கரையோரங்களை ஆய்வு செய்ததில்
அங்குள்ள ஏரி குளங்கள் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்ற அறிய தகவலை சான்றுடன்
விளக்குறது.
தமிழ்
இலக்கிய பழம்பாடல்களில் 64 வகை பறவைகள் பெயர்கள் உள்ளதைப்பட்டியலிட்டு, பறவைகள் கூடி
ஓசையிடுவதை 'ஓசனித்தல்' என்ற அழகு சொல்லால் நமது புலவர்கள் பதிவு செய்துள்ளதையும்,
அன்னம் என்ற பறவை வாத்து என்பதை தேடி விளக்கம் கொடுத்துள்ளதனர். ஆக்ஸிசன் குறைந்த பகுதியில்
காகம் வாழாது. காகம் இல்லாத இடத்தில் மனிதன் வாழமாட்டான் என்ற நுண்ணிய செய்தி, காகங்களுக்கும்
மனிதனுக்கும் உள்ள தொடர்பை விவரிக்கிறது.
பறவைவைகள்
குறித்து யார்யாரெல்லாம் ஆய்வு செய்தார்கள். இந்தியாவின் முன்னோடி பறவையிலானாரான 'சலீம்
அலி' குறித்த தகவல், சிறுவர்கள் எளிதாக புரிந்து படித்து கொள்ளும் விதமாக பறவைகளின்
உடல் கூறுயியல், பறவைகள் இனப்பெருக்கத்திற்காக மட்டுமே கூடு கட்டுகின்றன. கூடு கட்டுவதில்
ஆண் பறவைகள் பெண் பறவையை ஈர்க்க படும்பாடு அதன் விவரிப்பு அறிவியல் பூர்வமாக கொடுத்துள்ளார்கள்.
அதே போல் பறவைகளிலே குயில் மட்டும் ஏன் கூடு கட்டுவதில்லை ஆய்வின் விடை கிடைக்காததை
பதிவிட்டுள்ளது நூல். பறவைகள் எத்தனை மாதங்களுக்கு ஒரு முறை முட்டையிடும், சில பறவைகள்
மூன்றாண்டுக்கு ஒரு முறையே இனப்பெருக்கம் செய்கிறது என்ற செய்தி அருமையான பதிவு.
பறவைகள்
காப்பிடங்களைவிட அதன் பெயர் காரணத்தை வாசகர்களுக்கு கொடுத்திட நூலாசிரியர்கள் எடுத்த
சிரத்தையை புரிந்துகொள்ள முடிகிறது. இராமநாதபுர மாவட்டம் சாயல்குடி அருகே உள்ல காஞ்சாரை
என்ற காப்பிடத்தின் பெயர் காரணத்தை விளக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்கள். கஞ்சாரை
என்பது பண்டுவத்திற்கு (வைத்தியத்திற்கு) பயன்படும் மூலிகை என்பதை பண்டுவ அகராதியில்
பார்த்திருந்தால் வாசகர்களுக்கு தெளிவுபடுத்தி இருக்கலாம்.
தமிழகத்தில்
நாயக்கர் ஆட்சி முடிவுற்று பிரிட்டீஷ் ஆட்சி வந்தது. நாயக்கர் குதிரைபடைகளுக்கு தடை
போட்டனர். இதனால் குதிரைகளை வேதாரயகாடுகளில் விடப்பட்டது. இந்தக்குதிரைகள் 'தொண்டு
குதிரைகள்' என அழக்கப்பட்டது. இதுபோன்ற அறியப்படதாக செய்திகள் மரங்களை நடவு செய்தவர்கள்,
பறவைகள் குறித்த ஆய்வாளர்கள் செய்திகளை பெட்டி செய்தியாக கொடுத்து அழகுற வடிவமைத்துள்ளார்கள்.
வேடந்தாங்கள்
காப்பிடத்திற்கு புதிய பறவைகள் வருவதையும், ஒவ்வொரு ஆண்டும் வந்து சென்ற சில பறவைகள்
வராமல் நின்றது குறித்த ஆய்வு தேவை என்பதை சுட்டுக்காட்டும் இந்த நூல், காப்பிடங்கள்
அனைத்து கண்மாய் ஏரிகள் அவைகளுக்கான நீர் வரத்து கால்வாய்கள் தூர்த்து கிடப்பதை விவசாயிகளுடன்
சேர்ந்து தனது வருத்ததை பதிவிட்டுள்ளது.
பொதுவாக சூழலியல்வாதிகள் ''மனிதனை
விலங்காகவும், விலங்கை மனிதனாக பார்க்க வைத்தவர்கள்'' என்ற குற்றச்சாட்டு உண்டு. அதிலிருந்து
சற்று வேறுபட்டு மனித குலத்தோடு இசைந்து நூலினை முழுமையாக செழுமைப்படுத்தியுள்ளார்கள்
நூலாசிரியர்கள். இந்தாலும் அதில் உள்ள குறைபாடாக பார்ப்பது அயல் தாவரம், இயல் தாவரம்
எனக்குறிப்பிட்டுள்ளது. அதே வீட்டு விலங்காக வளர்க்கப்படும் பன்றி நாய், பூனை இவைகள்
காப்பிடங்களுக்கு செல்கிறது என்ற சொல்லாடல்கள் நமது சிந்தனைக்குள் சிக்கலை உண்டாக்குறது.
ஒரு விதை முளைக்க தேவையான காரணிகள்
இருந்தாலும், அவை முளைத்து வளர்ந்திட தேவையான சூழல் இருந்தால் மட்டுமே அம்மண்ணில் அல்லது
அவ்விடத்தில் மண்ணே இல்லத எட்டு மாடி கட்டிடத்தில் கூட முளைத்த தாவரம் நிலைத்து நிற்கும்,
ஒவ்வொரு விதையும் தனக்குள் புரட்சி (Darwin's Theory of Evolution,
and RNA, DNA Metopolism with its
Mechanism phenomenon) என்ற 'வித்தை' வைத்துள்ளது
என்பது இயற்கை விதி. வெளிநாட்டு தாவாரங்களுக்கு விசா வழங்குபவர்கள் போல் அயல் (அன்னிய)
இயல் (உள்ளூர்) தாவரம் என பிரித்து எழுதியதும் இந்த நூலில் பார்க முடிகிறது. பறவையோ
விலங்கோ உணவு தேவைக்காக வலசையாக (migration) வரும், போகும். வந்த பறவைக்கு சூழல் அதனது
உடலுக்கு ஒத்துப்போனாலும் அந்த இடத்தில் அந்த விலங்கினங்கள் வாழ்வதில்லை என்பதே அறிவியல்
உண்மை. அதை கவனிக்க மறுத்து கருத்து திணிப்பாக எழுதியுள்ளதை கவனித்தில் கொள்ளவேண்டியுள்ளது.
அதே போல் தன்னிச்சையான மரப்புப்கூறு
மாற்றம் (spontaneous mutation) நிகழ்வதாலே,
மனிதன் தோன்றாத பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தாவரங்கள், அதிலிருந்து பூச்சி புழு.
இவைகளிருந்து பறவை அடுத்து மனிதன் பரிணமித்தான் என்பதை தற்போது வரை உள்ள ஆய்வுகள் தெளிவுபடுத்துகிறது.
காப்பிடங்கள் அனைத்தும் குளத்திலே அமைந்துள்ளது. குளங்கள் வேளாண்மைக்கான ஆதாரம் வேளாண்மை
குடிகளின் வளர்ப்பு விலங்கு நாய், பூனை, உணவுக்காக பன்றிகள். இவைகள் அருகில் உள்ள காப்பிடங்களுக்கு
போகத்தானே செய்திடும். இந்த நூலின் கூற்றுப்படியே வைத்தால் காட்டு பன்றி, காட்டுப்பூனை,
காட்டு நாயான ஓநாய் செந்நாய் இவைகள் காப்பிடங்களுக்கு வருமே இதை தடுக்க சொல்லுவார்களா.
அதே போல் பூச்சிக்கொள்ளி மருந்திற்கு எதிர் கருத்துருவாக்கம் உருவகப்பட்டுள்ளது. எதிர்
கருத்துவருவாக்கம் அறிவியல் பூர்வமாக நிருபனம் ஆகவில்லை. அதுவரை இவர்கள் காத்திருப்பது
நியாயம் என்பதை நூலாசிரியர்கள் உணர்ந்து சூழலியர்கள் மனித குலத்திற்கு விஞ்ஞனத்தொடு
இசைந்து கொடுத்திட முன்வரவேண்டும். இல்லையென்றால் இவை வெற்று முழக்கமாகிவிடும் என்பதை
கருத்தில் கொள்ளப்படும் என்பதை வேண்டுகிறோம்.
அயல் இயல் என்ற சொல்லாடல்கள்
''நாட்டு மாடு'' கொள்கை போன்றதே. இவையெல்லாம் 'சாதி புனிதம்' குலதெய்வ வழிப்பாடுகளை
காப்பதை போன்ற கொள்கைக்கும் இதற்கும் என்ன வேறுபாடு உள்ளதை விஞ்ஞானப்பூர்வமாக விளக்கம்
சொல்ல காரணிகள் இல்லாமல் மரபு என்ற ஒற்றைச்சொல்லை துணைக்கு இழுக்கிறார்கள் ஆசிரியர்கள்.
மனிதன் நேற்று தோன்று விலங்கல்ல. அவன் வேட்டை சமூகமாக இருந்து அதிலிருந்து பரிணமித்தவன்.
அவன் வேட்டை சமூகமாக இருந்த உற்பத்தி சமூகமாக நிலைத்து நிற்க காடுகளிலிருந்து தனக்கு
பழக்கப்படும் விலங்குகளை கண்டறிந்து அதிலிருந்தே வளர்ப்பு விலங்குகளை
(domestic) இனம் கண்டு அவன் வளர்தான். காட்டுக்கோழி
இருக்கவே கோழி வரஆடு - கேளை ஆடு - வெள்ளாடு செம்பறி ஆடு, காட்டு மாடு - உழவு மாடு,
செந்நாய் ஓநாய் - நாய் இப்படி விலங்குகளை கண்டறிந்து வளர்த்தான் என்பது இந்த நூலாசிரியர்கள்
அறியாது அல்ல. தெரிந்தும் ஏதோ காரணத்திற்காக இப்படியான சொற்களை பயன்படுத்தி இருப்பது
விஞ்ஞானத்திலிருந்து விளகி நிற்பது வருத்தமளிக்கிறது.
மனித குலம் இன்னும் வியப்பாக
பார்ப்பது இயற்கையான மரபியல் கூறுகள் மட்டுமே (jenitic engenreing). இதற்குள் மனிதன்
நுழைந்து விட்டால் அனைத்தும் மானுடன் கைவசப்படும் என்பதை சூழலியல் என்ற போர்வையில்
விஞ்ஞானத்திற்கு எதிராக களமாடுவர்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும் என
கோரிக்கையை முன்வைக்கிறோம்.

No comments:
Post a Comment