திராவிடர்
- தமிழர் சொல்லாடலில் திக்குமுக்காடும்
மதுரை நாடாளுமன்றத்
தொகுதி;
மதுரைத் தொகுதியில்
திமுக கூட்டணியில் உள்ள பொதுவுடமை கட்சியின் வேட்பாளரான திரு.சு.வெங்கடேசன் அறிவிக்கப்பட்டதிலிருந்து
திராவிடர் - தமிழர் என்ற சொல்லாடல்களுடன் 'வந்து குடியேறியவர்கள்' என்ற எழுத்துக்கள்
முகநூலில் அதிகம் பேசப்படுகிறது.
யார் தமிழர்
தமிழ் தேசியம், மொழி தேசியம் குறித்து மொழி ஞாயிறு பாவணன், மறைமலை அடிகள், ம.பொ.சி,
ஆதித்தனார், பெருஞ்சித்திரன், போன்றவர்கள் எழுத்துகளால் பேசப்பட்டது. குணா, குருசாமி சித்தர் போன்றவர்கள், ''திராவிடத்தால்
வீழ்ந்தோம், திராவிட மாயை'' போன்ற நூல்களை எழுதி வெளியிட்டார்கள். இந்தக்கருத்தாக்கத்தத்தை
முன்னிருத்தி கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், தமிழர் அல்லாத வேட்பாளர்களை எதிர்த்து
பரப்புரை நடத்தினார். இதனால் தமிழர், தமிழர் அல்லாதவர் என்ற கருத்தாக்கம் பொதுவெளியில்
பேசுபொருளாக மாறிவிட்டது. இதன் வீச்சு ஆதித்தனார், ம.பொ.சி போன்றவளைப் போல் நீர்த்து
விடுமா ? அல்லது நீடித்து நிலைக்குமா என்பதை காலம் தான் பதில் சொல்லவேண்டும்.
அதற்கு முன்
திராவிடம் என்ற சொல்லின் தோற்றம் குறித்துப்பார்த்தாக வேண்டியுள்ளது.
திராவிடம்
என்ற சொல் உள்ள கல்வெட்டுகள் இலக்கியங்கள் எவை எவை.
1) பொது ஆண்டுக்கு
முன்பு மன்னன் அசோகனுக்கு அடுத்து ஆண்ட காரவேளன் என்பவன் பெயரில் உள்ள ஹத்திகும்பா
கல்வெட்டு தமிழ்நாட்டை"திரமிகா/Dramica என்று குறிப்பிடுகிறது. (இந்த எழுத்திற்கு
முன்பே பொது ஆண்டு சுமார் 230களில் மதுரை அருகே
உள்ள மீனாட்சிபுரம் மலையில் சமணர்களுக்கு பாண்டிய மன்னர் அமைத்துக்கொடுத்த படுக்கை
குறித்த் தமிழ் எழுத்துக்கள் பொறிகப்பட்டுள்ளது)
2)பொது
ஆண்டுகிற்கு பின்பு 5ம் (கி.பி) நூற்றாண்டில் கங்க மன்னன் துர்வினீதன் கொங்குதேச ராசாக்கள் சரிதத்தில்
"காஞ்சி உள்ளிட்ட திராவிடத்தை வென்றான்" எனக்குறிப்பிடுகிறது.
3) பொ.ஆ.
பி 642 காஞ்சி வந்த சீனயாத்ரீகர் இயூன்சங் (யூவாங்சஸ்சுவாங்) அவரது குறிப்பில் காஞ்சியை
சுற்றியுள்ள பகுதியை திராவிடம் என்று குறிப்பிட்டுள்ளார்.
4) செந்தமிழ்அகராதி.
தமிழ்நாடு,
ஆந்திரம், கர்னாடகம்,மகாராட்டிடம், கூர்சரம் இவைகளை பஞ்ச திராவிட தேசங்கள் என்று குறிக்கிறது.
திராவிடத்திற்கு
சிங்காரவேலு
முதலியார் தரும் விளக்கம்
கன்னடம்,
தெலுங்கு, மகாராஷ்டிரம், கர்நாடகம், கூர்ஜரம் என்னும் தேசத்துப் பிராமணர்களை திராவிடர்
என்கிறார். கன்னடம், மைசூர் முதல் கோகொண்டா வரை; தெலுங்கு, காளகத்தி முதல் கஞ்சம் வரை;
மகராஷ்டிரம், கோல்கொண்டா முதல் மேற்குக் கடல் வரை; கர்நாடகம் (தமிழ்), கன்யாகுமரி முதல்
காளத்தி வரை; கூர்ச்சரம், குசராத், முதல் டில்லி வரையிலுள்ள தேசங்களைக்குறிப்பிடுகிறார்.
அபிதான சிந்தாமணி வழங்கும்
விளக்கம்.
அ.,
திராவிடாசாரி என்பவர்
வேதாந்த சூத்திரத்துக்குப் உரை எழுதினார். இவர் ஆதி சங்கரருக்கும் முன்னதாக அத்வைத
கொள்கையைப் பரப்பியவர். இவர் பார்ப்பனர். திராவிடபூபதி என்பவன் அகத்தியர் கால திராவிட
அரசன். திரவிடன் என்பவன் சூர்ய வம்சத்து அரசன். திவ்யப் ப்ரபந்தத்தை திராவிட வேதம் என்று சொல்லுகிறது இந் நூல்.
ஆ.
தெலுங்கு பார்ப்பனர்களின்
ஒரு பிரிவினருக்கு ''திராவிட'' என்ற ஜாதிப் பெயர் உண்டு.
ஆக திராவிட என்பது பூகோளப்
பெயரும் அதில் வாழும் மனிதர்களை குறிக்கும். தெற்கே பேசிய மொழியை திராவிட மொழி என்று
அழைத்தனர். அது தமிழாகவும் இருக்கலாம், தெலுங்காகவும் இருக்கலாம் எனச்சொல்லுகிறது.
5) பொ.ஆ.பி.
1246-1279 மூன்றாம் ராசராசன் மகன் இராசேந்திரன் "திராவிட மண்டலத்து (பல்லவநாடு)
குலோத்துங்க ராசேந்திரனை வென்று கப்பம் வாங்கினான். (Epind
volm. 27 no35. நயனப்பள்ளி கல்வெட்டு. (காகதீய அரசன் கணபதி இந்த
அரசனே ஹம்பி கோட்டை முகப்பில் மிக பெரிய பிள்ளையார் சிலையை விஜய நகரத்து அரசுக்கு காணிக்கையாக
அதாவது அன்பளிப்பாக செழுத்தினான்)
6)ஆந்திரதேசத்து
பித்தர்புரத்தில் உள்ள மல்லப்பதேவனின் கல்வெட்டு (E.i.i V எண் 33;செ.22-4 "அபூர்வ
புருஷனான குலோத்துங்கன் ஆந்திரநாடு உட்பட ஐந்து திராவிடப் பகுதிகளையும் ஐம்பது ஆண்டுகள்
ஆண்டான்" என்கிறது.
7) வரலாற்று
ஆய்வாளர் பி.வி.ஜகதீஸ் அய்யங்கார் "பழங்கால
பாரததேசத்தில் 56 தேசங்கள். "கிருஷ்னாநதியின் தென்பகுதியும் ;காவிரியாற்றின் வடபகுதியும்
;கருநாடகமும் ;இணைந்த பகுதியே திராவிட நாடு." என தனது தேச வரலாறு நூலில் எழுதியுள்ளார்.
8) பல்லவ
செப்பேடுகள் 30 நூலின் ஆசிரியர் குழு.
"திராவிட
(அல்லது) திரமிள என்ற சொல் காஞ்சியை தலைநகராகக்கொண்ட தொண்டைமண்டலத்தையே குறித்தது என
குறிப்புகிறார்கள்.
9) திருவாய்மொழி-
நாதமுனி தனியன்கள். "நமாம யஹம் த்ராவிடவேத சாகரம்"--
10சபாபதிநாவலர்
எழுதிய நூலின் பெயர் "திராவிட பிரகாசிகை.
(1845 -1903)
11) தாயுமான
சுவாமிகள் தம் பாடலில் "வல்லான் ஒருவன் வரவுந்திராவிடத்திலே" என்கிறார்.
13)கவிமணி
தேசியவினாயகம்பிள்ளை தமிழ் நாட்டை "திராவிடநல் திருநாடு"என்கிறார்
14) ரவீந்திரநாத்தாகூர்
தமது தேசியகீதத்தில்"திராவிடநாடு"என்கிறார்.
15) வேதாந்த
தேசிகர் "திராவிடோஉபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி"நூல் யாத்தார்.
16,
ராமாயணத்திலும் பார்ப்பன வேதங்களிலும் 'திராவிட்'' என்ற சொல் உள்ளது.
17. ரிக் வேத காலத்திலேயே 'திராவிடாச்சார்யா' என்ற நூல் குறித்து மாண்டூக்கிய
உபநிடதம் மற்றும் ப்ரு பாஷ்யமும் குறிப்பிடுகிறது.
18. திராவிட சிசு
திருஞான சம்பந்தரை திராவிட சிசு என அழைக்கப்பட்டதன்
காரணம் என்ன. திராவிட சிசு என்பது “தென்பகுதியின் குழந்தை” எனப் பொருளாகும். தெற்கை
திராவிட தேசம் என்பது போன்று வடக்கே உத்திர (வடக்கு) பிரதேசம் இருக்கிறது.தெற்கே இருப்பவர்கள்
திராவிட இனத்தவர் என்றால் இந்தியாவின் வடபகுதியில் இருப்பவர்கள் எல்லாம் ஆரிய இனத்தவர்களா?
என்ற கேள்வியும் உள்ளது. ஸெளந்தர்ய லஹரி என்ற சுலோகத்தில் ''த்ரவிட சிசு' என்னும் வார்த்தை
காணப்படுகிறது. மலையாள மொழியின் வரலாறு கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டதே. அதன்
முன்னர் சேர, சோழ, பாண்டியர் காலங்களில் சேர நாட்டிலும் தமிழே மொழியாக இருந்தது புலனாகிறது.
ஆதிசங்கரரும் தமிழ்க்குடும்பத்தைச் சேர்ந்தவராகவே கருதலாமா? என்ற கேள்வியும் எழுகிறது.
''தவ ஸ்தன்யம் மன்யே தரணிதரகன்யே ஹ்ருதயத:
பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வத மிவ:
தயாவத்யா தத்தம் ''த்ரவிடசிசு'' -ராஸ்வாத்ய தவ யத்
கவீனாம் ப்ரெளடானா-மஜனீ கமனீய: கவயிதா''
பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வத மிவ:
தயாவத்யா தத்தம் ''த்ரவிடசிசு'' -ராஸ்வாத்ய தவ யத்
கவீனாம் ப்ரெளடானா-மஜனீ கமனீய: கவயிதா''
19. சமூக வரலாற்று ஆய்கே.கே.பிள்ளை
“பூச்சிய பாதர் என்பவரின் மாணவரான வச்சிர
நந்தி என்பவர் மதுரையில் திராவிடச் சங்கம் ஒன்றை நிறுவினார் (கி.பி-470) நீலகேசி, குண்டலகேசி,
யசோதர காபியம், சீவக சிந்தாமணி ஆகிய காவியங்கள் தமிழில் தோன்றுவதற்கு இந்த திராவிடச்
சங்கத்தின் தொண்டே காரணமாகும்" என்று கூறுகிறார்.
20. வரலாற்று அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி
வச்சிர நந்தி கி.பி. 470 –ல் தக்கிண மதுரையில் (பாண்டிய
நாட்டு மதுரையில்) திரமிள சங்கத்தை (திராவிடச்சங்கத்தை) நிறுவினார் என்றே அறுதியிடுகின்றார்.
எனவே திராவிடம் என்ற சொல்லாட்சி தமிழுக்கு புதிதன்று. இங்கே திராவிடம் என்ற சொல்லாட்சி
விளிம்புநிலை தமிழ் மக்களைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் இச்சங்கங்கள்
அமைக்கப்பட்ட காலத்தில் தமிழகத்தில் களப்பிரர் ஆட்சி எனப்படும் சமண சமயத்தாரின் ஆட்சி
நடைபெற்றது. திராவிடர்களின் ஒரு பிரிவினர் தங்களை நிலவுடைமையாளர்களாகவும் பார்ப்பனர்களின்
துணையுடன் சாதி மேல்நிலையாக்கமும் செய்து கொண்டனர். இவர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த
சிறு சாகுபடி செய்யும் மக்களே களப்பிரர்கள் ஆவார்கள். அவர்கள் பின்பற்றிய சமயம் சமணம்
ஆகும். ஏனெனில் சமண பௌத்த சமயங்களே அன்று நால்வருண பாகுபாடுகளுக்கு எதிராக கடுமையாக
போராடியவை என தனது சமணம் குறித்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.
21.சி.பா.ஆதித்தனார் பார்வையில்
திராவிடர்கள் யார்? - ''திராவிடர்கள் என்போர்
தெலுங்கர்கள். (தமிழர்கள் திராவிடர்கள் அல்ல) ஆந்திரம், கலிங்கம், தெலுங்கானம் ஆகிய
மூன்று தெலுங்கு நாடுகளில் வாழ்ந்தவர்களான "திரி- வடுகர்களே" திராவிடர்கள்.
திராவிடர் என்ற சொல்லை தமிழர்களுக்குப் பயன்படுத்துவது பொருந்தவே பொருந்தாது. 1875ஆம்ஆண்டிற்கு
முன் திராவிடர் என்ற சொல் தெலுங்கர்களை மட்டுமே குறித்து வந்தது. அந்த ஆண்டில் கால்டுவெல்
என்ற வெள்ளைக்காரர் அவர் எழுதிய புத்தகத்தில் அதுவரை ஆந்திரர்களை மட்டுமே குறிப்பிட்டு
வந்த திராவிடர் என்ற சொல்லைத் தமிழர்களைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப் போவதாகத் முட்டாள்தனமாக
தெரிவித்து அதன்படியும் எழுதினார். குழப்பமும் செய்தார்.'' என ஆதித்தனார் சொல்லுகிறார்.
22. பண்டிதர் அயோத்திதாசனார் பார்வையில்
1882 ஆம் ஆண்டு “திராவிடர் கழகம்'' என்ற
பெயரில் ஒரு அமைப்பை நடத்தி வந்த ஜான் ரத்தினம், 1885 ஆம் ஆண்டு “திராவிட பாண்டியன்''
என்ற இதழைத் தொடங்கினார். அயோத்திதாசர் அந்த இதழின் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.
ஆதித்தமிழர்கள் இம்மண்ணின் மைந்தர்கள், அவர்கள் இந்துக்கள் அல்ல என பிரகடனப்படுத்தி
எழுதினார். 1890 ஆம் ஆண்டு “திராவிட மகாஜன சபை'' என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கி,
அதில் பட்டியல் குலத்தினரை ஒருங்கிணைத்தார். பிரம்ம ஞான சபையின் ஆல்காட் உதவியுடன்
சென்னையில் 5 பள்ளிக் கூடங்களை நிறுவி பட்டியல் குலத்தினரை கல்வி கற்க வழிவகுத்தார்.
1902 ஆம் ஆண்டு தென்னிந்திய பவுத்த சாக்கி சங்கத்தை ஏற்படுத்தியவர், 1907 ஆம் ஆண்டு
ஜுன் திங்கள் 19 ஆம் நாள் “ஒரு பைசாத் தமிழன்'' என்ற வார இதழை நடத்தினார். 1908 ஆம்
ஆண்டு இதழின் பெயரைத்”தமிழன்'' என்று பெயர் மாற்றம் செய்தார். தமிழகத்தில் தமிழர்களுக்கென்று
எந்த இயக்கமும் தோன்றாத காலத்தில் ''தமிழன்'' இதழ் மூலம் பார்பன எதிர்ப்பு, சாதி ஒழிப்பு,
பகுத்தறிவு, மூடநம்பிக்கை, மொழிப்பற்று, இன உணர்வு, சமூக நீதி மற்றும் சுயமரியாதை இவற்றை
மையமாகக் கொண்டு இதழை நடத்தினார். குறிப்பாக மண்ணின் மைந்தர்களே இம்மண்ணை ஆள வேண்டும்
என்று எழுதினார்.
23. தமிழர்கள் திராவிடர்கள் என்ற குழப்பத்திற்கு
மானுடவியல் ஆய்வாளரான முனைவர் பக்தவச்சலபாரதி பண்பாட்டு ரீதியாக தமிழர்களுக்கும் தெலுங்கு
கன்னட மொழியினருக்கும் உள்ள ஒற்றுமைகளை வகைப்படுத்தியுள்ளார்.
24. சென்னை, மதுரை போன்ற பெரு நகரங்களிலும்
வடுக தெரு என்ற பெயரில் தெருக்கள் உள்ளதை கூர்ந்து கவனித்தாக வேண்டும்.
25. ஆக திராவிடம் என்ற சொல் ''மாயை மொழி''
எனச்சொல்ல முடியாது. அதே நேரத்தில் தமிழர்கள் தமிழகத்தை ஆளவேண்டும் என்ற கோரிக்கையையும்
மறுத்திடவும் கூடாது என்பதை விட, முடியாது என்பதே நமது வாதமும்.
இந்தியாவை ஆண்ட பிரிட்டீசாரை 'அன்னியர்'
என்ற ஒற்றைச்சொல்லால் நமது தலைவர்கள் இந்தியர்களை ஒன்று திரட்டினார்கள். அன்னியர் என்ற
சொல் சுதந்தரப்போராட்டத்திற்கு இனித்தது.
''விஜயநகர + நாயக்கர் ஆட்சியில் பெருவாரியாக
வந்து குடியேறியுள்ள தெலுங்கு கன்னடம் பேசும் மக்களை தமிழகத்தில் துள்ளிதமாக 306 ஆண்டுகள்
ஆண்டவர்கள் தமிழர்களின் நிலபுலங்களை பறித்துள்ளது வரலாறு. இவர்களால் பாதிக்கப்பட்டதாக
நினைக்கும் தமிழ் குடிகள் அவர்களை அன்னியர் என்ற சொல்லில் அழைப்பதை எப்படி நிராகரிக்க
முடியும். இப்படி பேசுபவர்களை தமிழ் பாசிசவாதிகள் அழைப்பது சரியாக இருக்குமா?.
தெலுங்கு கன்னடம் பேசும் மக்கள் தங்களது
வேர்களை இழந்து இம்மண்ணின் குடிகளாக மாறிவிட்டார்கள். இவர்களால் மொழி சிதை மொழி தேசியம்
என்பது இவர்களுக்கு எதிரானதாகப் பார்க்கப்படுவதான் கருத்தாக்கம் தான் சிக்கலை உருவாக்குகிறது.
இறைமறுப்பு கொள்கை பிற மாநிலத்தை விட தமிழகத்தில் பரந்து விரிந்தது. இறை மறுப்பை
ஏற்காத மக்கள் கூட இறைமறுப்புக்கொள்கை கொண்டத் தலைவர்களை ஏற்றார்கள் என்பதை கூர்ந்து
கவனித்தாகவேண்டும். இப்படிப்பட்ட தலைவர்கள் மொழியால் இனத்தால் குலத்தால் கன்னடம் தெலுங்கு
பேசுபவர்களாக இருந்தாலும் அவர்களை தமிழை தாய்மொழியாகக்கொண்ட மக்கள் தூக்கி கொண்டாடி
தங்களது தலைவர்களாக ஏற்றுக்கொண்டதில் அவர்களின் நேர்மை வெளிச்சப்படுகிறது. இது போன்ற
வெளிச்சக்குறைபாடு இருக்கும் இடத்தில்தான், மொழி இன குலப் பாகுபாட்டுப் பார்வை வருகிறது.
இதைக் கவனிக்காது ''மொழி பாசிசம்'' என்ற ஒற்றைச்சொல்லில் நிராகரிப்பது என்பது மொழி
தீவிரத்தை அதிகரிக்குமே தவிர குறுகிவிடாது என்ற வாதத்தையும் மறுதளித்திட முடியவில்லை.
பிறமாநிலங்கள் மொழியின் தாக்கம் எப்படி
தமிழகம் அல்லாது திராவிட இனக்குழுக்கள்
நிறம்பியுள்ள ஆந்திரம் கர்நாடகம், கேரளத்தில் அவர்களின் மொழிக்கே ஆட்சி மொழியில், பள்ளிப்
பாடத்திட்டத்தில் முன்னுரிமை கொடுக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக
இல்லை என்பதை விட தமிழை கற்காத ஒருவர் தமிழகத்தில் அரசுப்பணியில் இருக்க முடியும் என்ற
நிலைதான் உள்ளது. இதனால் தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்கள் இரண்டாம் தர மக்களாக கருத்தப்படும்
நிலையுள்ளது.
ஒரு மொழி பின்னுக்கு தள்ளும் போது அதில்
உள்ள வளம், விஞ்ஞானம் தானாக மறைந்து விடும். உலகத்திலே முதன் முதலாக காவிரி ஆற்றில்
கல்லனை என்ற தடுப்பு அணை கட்டியது தமிழகத்திலே. இதை ஆய்வு செய்த ஆதர்குட்டன் என்ற ஆங்கிலப்பொறியாளர்
சுண்ணாம்பு, காசிக்கட்டி, கருப்பட்டி, கடல்பாசிகள் போட்டு ஆட்டி சாந்துப்பூசியுள்ளார்கள்.
இதை கட்டி சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலிருக்கும் என தனது ஆய்வறிக்கையில் கொடுத்தார்.
இந்த ஆய்வறிக்கையின் அடிப்படியயிலே பிரிட்டீசார் ஆண்ட பகுதிகளில் அணைகள் கட்டப்பட்டது.
இந்த தொழில் நுட்பத்தில் கட்டப்பட்ட அணைகள் ஆயுள் இன்னும் திடமாக உள்ளது என்பதை முல்லைப்பெரியாறு
ஆய்வறிக்கை அறுதியிட்டுள்ளது. ஆனால் முல்லை பெரியாறு ஆய்வரிக்கையை நிராகரித்து பேசும்
பொதுவுடமை கட்சியின சுண்ணாம்பு சுதை என கேலி கிண்டல் செய்ததை நினைத்துப்பார்க்க வேண்டும்
என தமிழ் தேசியவாதிகள் சொல்லுவதை நாம் கேட்டாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இப்படி
மொழி என்பது விஞ்ஞானத்தை, அறிவை கலையை கட்டிக்காத்தது என்பதை உள்வாங்கிட மறுப்பதே பாசிசமாகும்.
அதே போல் பண்டுவம் என்ற சித்தமருத்துவம்
அதன் நுணுக்கத்தை எள்ளி நகையாடியே அன்னியப்படுத்தி விட்டோம். இது போன்று பல நூறு ஆயிரம்
எடுத்துக்காட்டுக்களை அடுக்கலாம்.
இப்படி மொழியின் திடத்தை தேவையை இந்திய
தேசிய, திராவிடத் தலைவர்கள் நிராகரிப்பதால் அவர்களின் குலம் இனம் மொழி குறித்த குற்றச்சாட்டுகள்
எழுகிறது என்பதை பார்ப்ப மறுப்பதே பாசிசமாகும்.
மொழி இனத்தை வைத்து அரசியல் செய்வது தமிழ்நாடு
மட்டுமா?
இந்திய சுதந்திரத்திற்கான முழக்கம் மொழி,
இன அடிப்படையில் மகாராசுட்ராவில் துவங்கியது என்பது வரலாறு. அங்கு மொழி இன, குல வாததத்தை
முன் வைத்தே அங்கு பல்நெடுங்காலமாக ஆட்சி நடக்கிறது. இதே போல் கருநாடகாவில் கடந்த
20 ஆண்டுகளாக மொழி தேசியத்தைக் கட்டமைத்தார்கள். இதை எதிர்க்க இயலாத இந்திய தேசிய கட்சிகளே
அவர்கள் பின்னால் சென்று விட்டது அனைவரும் அறிந்த செய்தியே. இதன் வெளிப்பாடாகவே முல்லை
பெரியாறு, காவிரியில் தண்ணீர் தரமறுக்கும் கோரிக்கைக்கும் இந்திய தேசியத்தை ஆதிரிக்கும்
கட்சிகளே முன்மொழிவதை எப்படிப் பார்ப்பது. ''புழுத்த இந்திய தேசியம்'' பேசுபவர்கள்
என்ற தமிழ் தேசியவாதிகளின் வாதத்தை புறம் தள்ளமுடியாத சூழல் உருவாக்கியுள்ளதை மறுக்க
முடியவில்லை.
கேரள மாநிலத்தில் பொதுவுடமைக் கட்சியின்
கூட்டணி ஆட்சியே பல்நெடுங்காலம் இருந்தது. இடுக்கி, திருவனந்தபுரம், மலப்புரம், காசர்கோடு,
கொல்லம் மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் தமிழர்களை மொழி சிறுபான்மையார் என்ற
அடிப்படையில் உருவான தமிழ் பள்ளிகளை மூடி வருகிறது. மலையாளம் படித்தால் மட்டுமே முன்னுரிமை
எனச் சட்டம் இயற்றி தனது மொழி பிடிப்பை காட்டி விட்டது. இது போன்றவற்றை கவனிக்க மறுத்து
விட்டு தமிழ் மொழியை தூக்கிப்பிடிப்பவர்கள் மீது பாசிசப்பார்வையை வீசுவதை, முனியாண்டி
விலாஸ் கடை இருக்க புதிய முனியாண்டி விலாஸ் வைப்பவர்கள் ''ஒரிசினல் முனியாண்டி விலாஸ்''
என் பெயர் வைப்பது போல் உள்ளது என்ற விமர்சனப்பார்வையும் உள்ளதை புறம் தள்ள இயலாது.
மொழியால் உருவான நாடு
வங்கதேசம் எப்படி உருவானது என்ற வரலாற்றை
திருப்பிப் பாருங்கள். பாகிசுதான் தனது மொழியை வங்கதேசத்தின் மீது திணித்தது. இதை எதிர்த்தவகளை
ஒடுக்கி அழித்தொழித்தது. இந்தக்கோரிக்கை ஐக்கிய நாடுகள் சபைக்கு போனது வங்கமொழி காக்கப்பட்டு,
வங்காளம் என்ற நாடு உருவானது. வங்க மொழியை எதிர்த்த தலைவர்களை வங்கத்தில் உருவான அரசு
தூக்கிலிட்டது. இந்த வரலாற்றை மூடி மறைத்து தமிழ் மொழிக்காக போராடுபவர்களை பாசிஸ்டுகள்
எனச்சொன்னால் உங்களை ''பொதுவுடமை பாசிசவாதிகள், திராவிட பாசிசவாதிகள்'' என அவர்கள்
திரும்பச் சொல்ல எவ்வளவு நேரமாகும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. வங்கம்போலவே திபெத்தும்
அங்கு மத ஆட்சிக்கு எதிராக சீன பொதுவுடமை கட்சி நடவடிக்கை எடுத்தது போர் தொடுத்தது
என்பது பொதுவான வரலாறு. திபெத்தியர்களின் பவுத்த கோட்டாட்டை விட எங்களது மொழியை சீனம்
அழிக்கிறது என்ற கூப்பாட்டை யாரும் செவி சாய்க்கவில்லை என்பதை கவனப்படுத்த வேண்டும்.
ஆக மொழி என்பது பேசுபொருள் மட்டுமல்ல அதில்
ஒரு இனத்தின் வரலாறு. அந்த வரலாற்றை தூக்கிப்பிடிக்க அந்தந்த மொழிக்காரனுக்கு உரிமையுள்ளது.
இதை மறுப்பவர்கள் அனைவரும் பாசிசவாதிகளே என்று சொல்ல தூண்டுகிறது என்ற வாதத்தை புறம்
தள்ள முடியவில்லை.
சரி இதற்கும் மதுரை நாடளுமன்ற வேட்பாளரான
திரு.சு.வெங்கடேசனுக்கும் என்ன தொடர்பு. இவர் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர் பொதுவுடமை
கட்சியின் முழுநேரப்பணியாளர். மொழியை மய்யமாக வைத்து ஆட்சி அதிகாரத்திற்கு வந்த திராவிட
கட்சிகளின் ஆட்சி ஐம்பதாண்டு காலத்தில் பள்ளிகளில் தமிழ் தவிர்த்து பிறமொழியே ஆட்சி
மொழியாகவும் பயிற்று மொழியாக்கப்பட்டுள்ளது. பொதுவுடமிய கட்சியினர் ஆளும் மாநிலமான
கேரளத்தில் மொழி சிறுபான்மையிருக்கான உரிய பிரதிநிதித்துவங்களை செய்திடவில்லை. மொழிவாரி
சிறுபான்மையினருக்கான அரசு நடத்தப்படும் கூட்டங்கள் கமுக்கமாக நடந்து வருகிறது. அதில்
விவாதித்து நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் புறம் தள்ளப்படுகிறது. இந்த அடிப்படையில்
பொதுவுடமை கட்சி வேட்பாளரை கனல் கொண்டு பார்ப்பது தமிழ் தேசியவாதிகளின் பார்வை பாசிமாகத்தெரிகிறது.



No comments:
Post a Comment