Search This Blog

Thursday 25 April 2019

நூறு விழுக்காடு வாக்கு


                                                


                                                                          நூறு விழுக்காடு வாக்கு 





படம் உதவி - விகடன் வெப்



பிரிட்டீஷ் இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து அரச குடும்பம் இங்கு தனது ஆளுனர்களை நியமித்து அரசாட்சி செய்தாலும் நாங்கள் மக்கள் விருப்பத்திற்கு இணங்கவே அரசாட்சி செய்கிறோம் என்பதை நிறுபிக்கவும், சமஸ்தானங்கள், சிற்றரசர்கள், பாளையப்பட்டு, மிட்டா மிராசுகள் இருக்கவே தேர்தலை நடத்தினார்கள்.

பிரிட்டீஸ் ஆட்சியில் பெண்களுக்கு, நிலமற்றவர்களுக்கு வாக்குரிமை இல்லை. முதலாளிகள் தங்களுக்கு தேவையான முதலாளிகளைத் தேர்வு செய்யும் முறையே இருந்தது. அப்போதும் பிரிட்டீசாரை ஏற்ற அரசு சிவப்பு பெட்டி காங்கிரஸ் கட்சிக்கு மஞ்சள் பெட்டி என்ற வாக்கு போட்டார்கள். அப்போதும் கூட அனைத்து தரப்பு வாக்களிக்க வரவில்லை. இதை அறிந்த பிரிட்டீசார் நிலம் இருந்தவர்களில் நஞ்சை நிலம் வைத்திருக்கும் தங்களது அனுதாபிகள் மூலம் நெல்லுச்சோற்றினை ஆக்கி அதை கட்ட வண்டிகளில் கட்டி வந்து புஞ்சை மானாவாரி நிலவுடமை வாக்காளர்களுக்கு வழங்கினார்கள். இதை சாப்பிட்டு விட்டு வாக்களித்தார்கள் என்றே பிரிட்டீசார் குறிப்பு சொல்லுகிறது. ஆக வாக்கு முறை வந்த காலத்திலே வாக்களிக்க மக்களுக்கு விருப்பம் இல்லை அல்லது வாக்களிப்பதால் எதுவும் நடந்து விடாது என்ற மனநிலை வளர்ந்திருந்தது என்பதை உள்வாங்கிக்கொள்ள முடிகிறது.


இதேநிலை விடுதலை இந்தியாவிலும் நீடித்ததாக மூத்தவர்களிடம் பேசிய போது புரிந்து கொள்ள முடிகிறது. பேராயக்கட்சி (காங்கிரஸ்), பொதுவுடமை கட்சி, பார்வர்டு பிளாக் கட்சி போட்டியின் போது பேராயக்கட்சியினர் வாக்காளர்களுக்கு முக்காத்துட்டு வரை கொடுத்ததாக சொல்லுகிறார்கள். பணம் கொடுக்கவில்லை என்றால் 1962 வரை பதிவான சுமார் 55 விழுக்காடு வாக்குகளையும் கட்சிகள் பெற்றிருக்க முடியாது என்பதாகவே மூத்தவர்களின் பேச்சிலிருந்து தெரிகிறது. அந்தக்காலத்தில் வாக்களிக்கா விட்டால் செத்ததுக்கு அர்த்தம் என்ற செண்டிமெண்ட்டும் இருந்தால் வயதானவர்கள் வாக்களித்தார்கள் என்றும் சொல்லுகிறார்கள்.

பேராயக்கட்சியிலிருந்த சோசலிஸ்ட் பேராய அமைப்பினர் அக்கட்சியிலிருந்து பொதுவுடமை கட்சி துவங்கியவுடன், பொதுவுடமை கட்சி தடை செய்யப்பட்டது. உலக யுத்தத்தை காரணம் காட்டி இந்த தடையை பிரிட்டீசார் செய்தனர். இத்தடையை பேராயகட்சி ஆதரித்தது. இந்த காலத்தில் திராவிடர் கழகம் பொதுவுடமை அனுதாபிகளின் நம்பிக்கையை பெற்றது. பொதுவுடமை கட்சியினர் மீது பேராய கட்சி தொடுத்த கடும் நெருக்கடியை திமுக பயன்படுத்திக்கொண்டது என்ற பார்வையும் உண்டு.

திமுக ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபோது ''பகலில் பொதுவுடமை கட்சியினராகவும் இரவில் தீவிர பொதுவுடமையாளராகவும் (நக்சல்பாரி) மாறுகிறார்கள் பொதுவுடமை கட்சியினர் என்று பேராயக்கட்சியின் தொணியிலே தஞ்சை மண்ணில் பொதுவுடமை கட்சியினர் மீது நெருக்கடியை ஏவியது. அதே வேளையில் நிலமற்றவர்கள் பக்கம் பொதுவுடமை அமைப்பினர் இருக்க திராவிடர் கழகம் நிலமற்றவர்களுக்கு நிலம் என்ற கோரிக்கை வைத்து மக்களை அணி திரட்டினார்கள். இதனால் திமுகவின் வளர்ச்சியை தடுக்க முடியாதததாக அமைந்தது.


1967ல் ஆட்சிக்கு வந்த திமுகவை 1970திற்குள் இரண்டு முறை உடைத்தது பேராயக்கட்சி. 1972ல் ம.கோ.இரா. (எம்.ஜி.ஆர்) திமுகவிலிருந்து உடைத்து எடுக்கப்பட்டார். இந்த பிளவை பொதுவுடமை கட்சியினர் ரசித்தனர் என்ற பார்வையும் உண்டு.

1972ல் நடந்த இடைதேர்தலில் அதிமுக திண்டுக்கல்லில் களத்தில் இறங்கியது. அப்போது வாக்காளர்களுக்கு ஐம்பது பைசா முதல் ஒரு ரூபாய் வரை கொடுத்தார்கள். திமுகவினர் ஆட்சியில் இருந்த போது நிறைவேற்றப்பட்ட 'அனைவரும் பூசகர் ஆகலாம், சாதி மறுப்பு அங்கீகாரச் சட்டம்' இவைகளால் திமுக மீது கடும் வெறுப்பிலிருந்த பிற்படுத்தப்பட்ட சூத்திர குலத்தினர் கண்களை மூடிக்கொண்டு அதிமுகவை ஆதரித்தனர். இந்த ஆதரவை தக்க வைக்க அதிமுகவினர் வாக்காளர், வாக்களர் அல்லாதவர்களுக்கும் கொடுத்த பணம் வள்ளல்  ம.கோ.இரா, மக்கள் செல்லவர் என அறிவிக்க வைத்தது.

'எம்.ஜி.ஆர் ஃபார்முலா'    

 1984ஆம் ஆண்டு தேர்தலில் தான் முதல் முதலாக பாகுபாடின்றி வாக்களர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. ம.கோ.இரா அவர்கள் அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்தபடி தேர்தலைச் சந்தித்தது அக்கட்சி.  தேர்தலை வழி நடத்தியவர் முன்னால் அமைச்சர் திரு. வீரப்பன். இந்தத்தேர்தலில் தற்போதைய தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி தொகுதியில் திரு. ம.கோ.இரா நிறுத்தப்பட்டார். ஆண் வாக்காளர்களுக்கு தலா ஒரு உரூபாயும் பெண் வாக்களர்களுக்கு இரண்டு உருபாயும் வாரி வழங்கினார்கள். இதனால் அத்தொகுதியில் ம.கோ.இரா அவர்கள் சுமார் 65ஆயிரம் வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி பெற்றார்.

''திருமதி இந்திரா காந்தி அவர்களின் படுகொலை, ம.கோ.இராவின் மருத்துவமனை காட்சிகளால் கூடுதல் வெற்றி பெற்றார்'' என்று ஆய்வுகள் வெளிப்படுத்தின. ஆனால் உண்மை பெண்களுக்கு வழங்கிய இரண்டு உரூபாயினால் நடக்க முடியாத பெண்களையும் வாக்கு சாவடிக்கு கம்பு ஊண்டி வரவழைத்தது.  இதை 'எம்.ஜி.ஆர் ஃபார்முலா' என மக்கள் பேசினார்கள். ஆனால் திருமங்குலம் பார்மலா மட்டுமே பேச்சுப் பொருளாக்கியது, தங்கம் வென்றவருக்கு சிறிய படமும் வெங்கலம் வென்றவருக்கு மிகப்பெரிய படமும் போட்டது போல் எழுதி மக்களை நம்ப வைத்ததே பத்திரிக்கைகளின் தர்மம் காலம் காலமாக நீடிக்கிறது.

அடுத்து நடந்த தேர்தலில்களில் பெண்களுக்கு லட்டு, மிக்சரரும், ஆண்டுகளுக்கு லட்டு மிக்சர் தேனீரும் புகைபிடிப்பவர்களுக்கு பீடி, பாசிங்சோ, சிசர் சிகரட் வழங்கி, கட்ட வண்டியில் ஏற்றி வந்து வாக்களிக்க வைத்தார்கள். இதில் திமுக அதிமுக என்ற வேறுபாடில்லாமல் நடந்து கொண்டார்கள்.

1989 தேர்தலில் அதிமுக பிளவில் திருமதி ஜானகி அணியினர் 'எம்.ஜி.ஆர் ஃபார்முலா'வினைக் கடைபிடிப்பது போல் நடித்து நிர்வாகிகள் பணத்தை சுருட்டினார்கள். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் நின்ற செல்வி ஜெயலலிதா அவர்கள் பணத்தை வாரி வழங்கினார். 1984ல் ஒரு உரூபாயிலிருந்து உயர்ந்து இரண்டு உரூபாயாக வழங்கினார்கள். நிர்வாகிகளுக்கு தினமும் பத்து உரூபாய் வரை செலவுக்கு கொடுத்தனர். அப்போது ஒரு நாள் நிமிர்ந்த ஆள் (ஆண்) கூலி ஏழு உரூபாய் என்பது கவனிக்க வேண்டியது. தேர்தல் நாளன்று வீடு வீடாக சென்ற கட்சி நிர்வாகிகள்  பணத்தைக்கொடுத்து வாக்கு சாவடிக்கு அனுப்பி வைத்து செல்வி ஜெயலலிதா அவர்களை பெருவாரியான வாக்கு வேறுபாட்டில் வெற்றி பெறவைத்து சட்டமன்றத்திற்கு அனுப்பினார்கள்.

1991ல் நடந்த தேர்தலில் வாக்களர்களுக்கு கட்ட வண்டிகளுக்கு பதிலாக ஈ(ஜீ)ப், மெட்டட்டோ வாகனங்களில் ஏற்றி வந்து லட்டு மிக்சர் தேனீர் வழங்கி வாக்களிக்க வைத்தார்கள் அஇஅதிமுகவினர். செல்வி ஜெயலலிதாவின் சட்டசபை சட்டை கிழிப்பு திரு. ராஜீவ் காந்தி அவர்களின் கோரமான கொலை காரணமாக அதிக வாக்குகள் பதிவாகியது என கருத்துக்கள் வெளிப்பட்டன. ஆனால்  ஈ(ஜீ)ப், மெட்டட்டோ, ஸ்டாண்டார்டு வேன்களால்தான் வாக்கு சாவடியை வாக்காளர்கள் படிஏறினார்கள் என்பது களத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

அடுத்த தேர்தலில் ஈ(ஜீ)ப், மெட்டட்டோ ஸ்டாண்டார்டு வேன்கள் தடை போட்டார்கள் கூட்டணி + செல்வி ஜெயலலிதா அவர்களின் குத்தாட்டம் இவைகளால் திமுக வெற்றி பெற்றாலும் அந்த தேர்தலில் பதிவான வாக்கு விழுக்காடு 52 என்பதை கவனித்தால் அந்த தேர்தலில் வாக்களர்கள் வாக்கு சாவடிக்கு அழைத்து வர கிரியாயூக்கிளாக செயல்பட்டவை இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம். 2001 நடந்த தேர்தலில் ஈ(ஜீ)ப், மெட்டட்டோ ஸ்டாண்டார்டு வாகங்களுக்கு கொஞ்சம் லெகு காட்டினார்கள் இதனால் வாக்கு விழுக்காடு கூடியது.

இந்த காலத்தில் தீவிர பொதுவுடமை கட்சியினரின் செயல்பாடு அதிகரித்ததால் வாக்கு சதவிகிதம் சரிந்தது என்ற பார்வையை எடுத்துக்கொண்டது மய்ய அரசு. இதனால் வாக்களிக்காதவர்களின் மன நிலைக்கு ஏற்ப நோட்டா (None of the Above - NOTA ) என்ற வாக்குப் பொத்தானை அறிமுகப்படுத்தியது. டெல்லி, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் உள்பட ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் முதன் முறையாக இம்முறை பயன்படுத்தப்பட்டது. இதற்கு காரணம் அங்கு தான் தீவிர பொதுவுடமை சிந்தனையின் வீச்சு அதிகமாக இருந்தது என்று பார்வையாளர்கள் சொல்லுகிறார்கள். 


இப்படி வாக்கு அழிக்க விருப்பாதவர்களையும் மக்களாட்சி தத்துவத்திற்குள் கொண்டுவர படாதபாடுபட்டாளும் வாக்கு சாவடிக்கு வாக்காளர்கள் வந்தது கட்சியினரின் உந்துதல் (பணம் மற்றும் இதர மோட்டிவ்) மட்டுமே பெரிதாக பயன்பட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற அரசியல் பார்வையாளர்களின்  கட்டுரைகளை புறம் தள்ளிவிட முடியவில்லை.

கடந்த 2006 தேர்தல் என்பதை விட 2002 இடைத் தேர்தலில் செல்வி ஜெயலலிதா அவர்கள் நின்ற ஆண்டிபட்டி தொகுதியில் வாக்காளர்களுக்கு தலா பத்து உருபாய் கொடுத்தார்கள். இதனால் அவர் வாங்கிய வாக்கு விழுக்காடு பெருவாரியாக அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த தேர்தல் செலவு பணம் அஇஅதிமுக தனது கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கியது. இதனால் கட்சியினர் அரசியல்வாதிகள் மய்யத்திலிருந்த ஊழல் என்ற வார்த்தை வாக்காளர்களை சுற்றி வளைத்தது. 2017ல் தீபாவளிக்காக தனது கட்சியின் கீழ்நிலை உறுப்பினர்களுக்கு தலா அய்ம்பது முதல் நூறு வரை தீபாவளி போனஸ் என்றே வழங்கினார் செல்வி ஜெயலலிதா. அவர் மறைந்த பின்பு 2018 தீபாவளிக்கு கட்சியில் கரை வேட்டி கட்டி சாலைக்கு வரும் அனைத்து தரப்பிரனருக்கும் விருப்பு வெறுப்பு இல்லாமல் தலா உரூபாய் 500 வரை வழங்கி கட்சியை கம்பெனி போலாக்கினார்கள்.

கடந்த மூன்று தேர்தல்களில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். நூறு விழுக்காடு இலக்கு என்ற பரப்புரையை பல வடிவத்தில் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்த தேர்தல்களில் வாக்களர்களுக்கு பணம் வழங்கப்பட்டதால் தான் வாக்கு சாவடிக்கு வந்தார்கள் என்பது நிதர்சனம் என்பதை இந்தியாவில் உள்ள வடநாட்டு பத்திரிக்கைகள் தெளிவுபடுத்தியுள்ளது.

2009,2014 தேர்தலில் அஇஅதிமுக உரூபாய் 50 முதல் 100 வரை கொடுக்க அதை ஈடுகொடுக்க 20 முதல் 50 வரை திமுக கொடுத்தது. கடந்த 2019 ஏப்ரல் மாதம் நடந்த பாரளுமன்றத் தேர்தலில்  அஇஅதிமுக ஒரு வாக்களனுக்கு 1000ம் திமுக தலா 500ம் கொடுத்தது. பல பகுதிகளில் பணம் கொடுப்பது கட்சியினரின் போட்டியால் அஇஅதிமுகவினரால் கொடுக்க இயலவில்லை. இந்தப்பகுதியில் மதியம் வரை வாக்கு சதவிகிதம் 30 தைத்தாண்டவில்லை. ''பணத்திற்கு நாங்கள் பொறுப்பு'' என உள்ளூர் நிர்வாகிகள் வாக்குறுதி கொடுத்த பின்பு மலையில் வாக்கு சதவிகிதம் கூடியது என்பதை மக்களோடு மக்களாக நின்றவர்கள் அறிவார்கள்.


ஏற்ற தாழ்வான பொருளாதார சூழலில் உள்ள நாட்டில் நூறு சதவிகித வாக்கு என்பது எப்பவும் சாத்தியப்படாது. அதே வேளையில் வாக்களிப்பவர்கள் அனைவரும் மக்களாட்சியை மனமுவந்து ஏற்று வாக்களிக்கிறார்கள் என்பது மஞ்சுவிரட்டு போராட்டம் மக்களால் நடத்தப்பட்டது என நம்புவது போலவே.   

இந்த மக்களாட்சி தத்துவத்தினை மக்கள் எப்போதும் ஏற்கவில்லை. புழுத்துப்போன அரசு எந்திரத்தில்
மக்களின் கண்களுக்கு  புரட்சியாளர்கள் தெரியவில்லை. ஆலை இல்லாத ஊருக்கு இழுப்பூ சக்கரை போல வேறு வழி தெரியாமல் வாக்களிக்கிறார்கள். மக்கள் கண்களில் உண்மையான புரட்சியாளர்கள் புலப்பட்டால்......, ''ஜனநாயகத்தை காப்போம்'' என முழங்குபவர்களை முதலில் விரட்டி அடிப்பார்கள் என்பது மட்டும் மெயாகும் என ஜெர்மன் இதழியர் பதிவிட்டதை நினைத்துப்பார்க்க வேண்டியுள்ளது.

     

     

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...