Search This Blog

Thursday, 9 May 2019

நீ ....... தி துறை




                                                                                         நீ ....... தி துறை


இந்திய ஒன்றிய நீதித்துறை குறித்து பலரும் பலவாறு கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். இந்திய ஒன்றியத்தின் நீதிபதிகள் சமூகத்தில் பேசப்பட்ட வழக்குகளில், சட்டங்களை மதிக்காது மக்களின் எண்ணங்களின் பிரதிபளிப்பாகவும், மநுநீதியை காப்பதுமாகவே தீர்ப்புகள் வழங்கியதை பலரும் அறிந்ததே. இவைகளை தங்களது நினைவுக்காக சிறு பட்டியலாகவும் நீதி துறைக்கு படையலாக்கிறோம்.
 
நீதிபதி டாவே மற்றும் பலர் சொன்ன தீர்ப்புகளில் உள்ள சில.....
01.நான் பிரதமராக இருந்தால் பள்ளிகளில் மகாபாரத்தையும் ,ராமயாணத்தையும் பாடமாக வைத்திடுவேன்.
 -
02. 'ஞானியாக இருக்க வேண்டியவனாக மன்னர் இருப்பினும் அவன் பாவிகளை தண்டித்தாக வேண்டும் '' மனு தர்மம் சொல்லுகிறது ஆகவே நீங்கள் யாகூப் மேனன் வழக்கில் வாதடுவதற்கு வெக்கப்பட வேண்டும்  வழக்கறிஞர்களே. நீதி பதி டாவே
 
03. ராமர் பாலத்தை பாதிக்காத வண்ணம் திட்டதை மாற்றுபாதையில் அமுல் செய்திட வேண்டும். (காலை மாலையில் நடைபயிற்சி செய்திடும் பாலமாக நினைத்திருக்கிறார்கள்)


04.எவ்வளவு மதிப்பெண் வேண்டுமானும் வாங்கலாம் / எங்களுக்கு கிராமம் நகரம் எல்லாம் ஒன்றுதான் நாங்கள் முனிவர்களை போன்றவர்கள். சட்டமன்ற சட்டங்களை இயற்றலாம் அவையெல்லாம் தேவையில்லாதது .நாங்கள் சொல்லும் (உயர்குடி) தகுதி (நீட்) தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இது நீட் தேர்வு குறித்த தீர்ப்பில் உள்ள வரிகள்.

05.விலங்கினங்களை வளர்ப்பவர்களுக்கு இல்லாத அக்கறை எங்களுக்கு உண்டு. யானை கடினப்படுவதை எங்களால் பார்க்கச் சகிக்கவில்லை அதனால் மரம் தூக்க பயன்படுத்த கூடாது. அதற்கு பதிலாக பொக்லைன் எந்திரம் பயன்படுத்துங்கள். இதே போல் விந்தை + வித்தைக் கூடரங்களில் (சர்கஸ்) விலங்குகளை மக்கள் பார்த்து ரசிப்பது எங்களுக்கு அறுவறுப்பாக இருப்பதால் அவைகளை தடை செய்கிறோம். இனிமேல் குழந்தைகள் தொலகாட்சிகளில் மட்டுமே விலங்கினங்களை பார்த்து ரசிக்கலாம். அதே போல் காப்பு காட்டுக்குள் போக எங்கள் தலைமையிலான குழு மட்டுமே அனுமதிக்கும். சாமானியர்கள் போகக்கூடாது. மனிதர்களால் விலங்குகளுக்கு நோய் பரவிடும்.

06. இந்து மதத்தில் தீண்டாமை ஏற்புடையதாக இருப்பதால் அனைவரும் அர்சகராகலாம் சட்டத்தை ரத்து செய்கிறோம்.

07.கூடங்குளம் அனு உலை பெரிய தீங்கு விளைப்பதாக இல்லை. மக்களுக்கு அறிவை புகட்டி பாதுகாப்பாக இயக்க வேண்டும். இந்த தீர்ப்பிற்கு முன்பே மறைந்த சனதிபதி மா? மேதை திரு. அப்துல்கலாம் அவர்கள் இத்திட்டத்தை ஆதரித்து பெரும் அறிக்கை விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

08. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஆயிரம் இருக்கலாம் குறிப்பாக மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போது பத்தாயிரம் அவமதிப்பு இருக்கும். அதெல்லாம் எங்களுக்கு தெரியாது ஆனால் சீமைக்கருவேல் மரங்கள் மட்டுமே மூச்சு விடும் போது கார்பண்டை ஆக்ஸைடை விடுவதால் எந்த சீமையில் இருந்தாலும் அகற்றிட நாங்களே அருவாள் கம்புடன் அகற்றுவோம். அதுக்கு நிதிவசூல் செய்திடுவோம்.

09. தனிமனிதர்களின் உயிரை காக்க நீதி மன்றத்திற்கு 'அக்கரை' உள்ளது ஆகவே கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும். தலைகவசம் போட்டு வாகனத்தில் செத்தால் நாங்கள் பொறுப்பல்ல. (என் தாத்தன் வெயிலுக்கு துண்டை தலையில் போட்டு நடந்து வந்த போது முக்காடு வழக்கு (கேஸ்) என போட்டார்கள். என் அப்பன் இரு சக்கர மிதி வண்டியில் வந்த போது இருவர் ஒரு மிதி வண்டியை (டபுள்ஸ்) ஓட்டினார்கள் எனக் கேஸ் போட்டார்கள். இப்படிப்பட்ட பரம்பரையில் வந்த கூட்டம் இப்ப இருசக்கர தானூர்தி (டூ வீலரில்) வருகிறார்கள். இவர்களுக்கு தலைக்கவசம் (ஹெல் மெட்) போட சட்டம் போடுவோம், என போட்டார்கள். தலைக்கவசம் மட்டுமே இந்த நாட்டில் சட்ட ஒழுங்கை காப்பதால் அதை தீவீ...ரப் படுத்த போலீஸ்க்கு கசையடி கொடுத்து (மக்களை ஒடுக்க) மக்களை ஒடுக்க ஆணை இடுவோம்.

10. கீழமை நீதி மன்றங்களில் கொலை வழக்கை போலீஸார் உப்பு சப்புமில்லாமல் பதிவு செய்திருந்தாலும் தூக்கு / வாழ்நாள் சிறைத்தண்டனை கொடுத்து சட்ட ஒழுங்கை காப்பாற்றுவோம்.
மேலமை நீதி மன்றங்களில் இந்த வழக்கு கீழமை நீதிபதி கொடுத்த தீர்ப்பைக் கண்டித்து (நாடகம்) குற்றவாளி விடுதலை செய்யப்படுவார்.
11. மக்களுக்கு போராட்ட / அரசியல் சிந்தனை வருகிறது அதனால் கல்லூரிகளில் மாணவர் தேர்வுகளை ரத்து செய்கிறோம்.

12. சமூக இயக்கங்கள் பொது / மற்றும் தனியார் சுவர் / பாலம் மக்களுக்கான விழிப்புணர்வை எழுத்துக்களை எழுதுவதால் மக்களுக்கு அறிவு வந்து புரட்சியாளர்களாகி விடுவார்கள் என்ற நல் நோக்கத்தில் சுவர் / பாலம் இவைகளில் பிரச்சாரம் செய்வதை தடை செய்திடுகிறோம்.

13.அரசியல் கட்சிகள் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில் மாநாடுகளை நடத்திட வேண்டும். தேர்தலில் போது தலைவர்கள் சிலைகளை கொள்ளைக்காரர்களைப்போல் முகத்தை  மூட வேண்டும். கொடிக்கம்பங்கள் கொடியதாக இருப்பதால் அதை அப்புறப்படுத்த வேண்டும். இந்த சட்டத்தையும் ஏற்ற அரசியல் கட்சிகளை புரட்சிகர கட்சி என நம்பிட வைக்க அரசியல் கட்சிகளுக்கு இன்கேமராவாக அறிவுரை சொல்லி அனுப்புவோம்.
இப்படியான வீர தீர சாரம்சம் இருக்கும் எங்களது நீதித்துறை, ஆண்டே / விஜநகர / நாயக்க / ஜமீன்கள் தீ......ர்ப்புகளுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்பதை தெள்ளத்தெளிவாக தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு

  நூலதிகாரம் நூல் முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு ஆசிரியர் ; தி. சுப்பிரமணியன் வெளியீடு ; அடையாளம்   ‘முந்தி பிறந்தவன் நா...