Search This Blog

Thursday 4 April 2019

காசுமீர்கள் உருவாக வேண்டுமா ?


                                      காசுமீர்கள் உருவாக வேண்டுமா ? 





                       


காசுமீர் பிரச்சனையை பேராயக்க கட்சி (காங்கிரஸ்) + பா.ஜ இருவரும் 'சமூக' அரசியலாக பார்க்கமால் 'மத' கண்ணோட்டதில் கையாண்டது / கையாள்கிறது. காசுமீர் பிரச்சனையில் இந்திய ஒன்றிய அரசு தொடர்ந்து பிழை செய்து கொண்டே செல்கிறது. 

              இந்திய ஒன்றியம் விடுதலை அடைந்தவுடன் சம்ஸ்தானங்களை இணைத்தார்கள். தனி நாடுகளாக இருந்த  சுனேகர், காசுமீர்  'விருப்ப படி இந்தியாவிடனோ / தனி நாடாகவோ வாழ இரு நாட்டிலும் வாக்கெடுப்பு நடத்திட ஐக்கிய நாடுகள் மன்றத்தில் ஒத்துக்கொண்டது இந்தியஒன்றியம். இந்தியாவுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்பதால் 'பெரும்பான்மை இந்து மக்களும் இசுலாமிய அரசரும்' இருந்த சுனேகரில் மட்டும் லாவகமாக வாக்கெடுப்பு நடத்தினார்கள். இந்தியா எதிர்ப்பார்ப்பும் பூர்த்தியானது. ஆனால் காசுமீரில்.... 
 
நிலைமை தலைகீழ் ''அரசர் இந்து, பெரும்பான்மை மக்கள் இசுலாமியர்கள். இதனால் அங்கு வாக்கெடுப்பு நடத்தினால் காசுமீர் இந்திய ஒன்றியத்திற்குள் வராது / வரவைக்க முடியாது என கணக்கிட்டு வாக்கெடுப்பு நடத்தவில்லை.

 
            இப்போது... இதுவல்ல செய்தி 'இந்தியா ஒன்றியத்தில் குழு வாழ்க்கை முறை இன்றும் சிந்தாமல் சிதறாமல் இன்றும் கட்டமைத்து இருப்பதற்கு மையக்காரணம் சிறு தெயவ வழிபாடுகள். எவ்வளவோ கால மாற்றம் நடந்தும் இந்த குழு வாழ்க்கை முறை தனது புனிதத்தை தகவமைத்துக்கொண்டே விஞ்ஞானத்தோடு போட்டி போட்டு நகர்கிறது. இந்த குழு / சிறு தெய்வ வழிப்பாட்டு முறை, பிரிட்டீஷ் இந்தியாவிற்கு எதிரான கிளர்ச்சியில் பின்னடவு நிகழ்த்தியது என்பது வரலாற்று உண்மை. இந்த சிறுதெயவ / வழிபாடு / மொழி / இன / கலாசார சிக்கல் இவைகளை புரிந்து கொண்ட விடுதலை போராட்டத் தலைவர்கள் பெருந்தெய் வழிபாடான சைவம் / வைணவத்தை முன்னிலைப்படுத்தினார்கள். சுதந்திரத்திற்கு பின்பு இந்த பெரும் தெயவ வழிப்பாட்டு முறையை மக்கள் பெயரளவுக்கு ஏற்றாலும், இவர்களை வழி நடத்தியது சிறு தெய்வ பாண்பாட்டு கலாச்சாரங்களே. இதனால் இந்திய ஒன்றியத்துடன் பல மாநிலங்கள் இணைய மறுத்தது. ஆனால் பலாத்கார 'கருத்து' சிதைவால் ஒருங்கிணைத்தார்கள்.

            தற்போது இந்த சிறு தெய்வ புனிதம் காய்ந்து காணப்படும் புத்துக்கள் திடீரென வளர்வதை போல் 'மீட்டுருவாக்கம்' அடைந்து வருகிறது. பா.ஜ இந்த மீட்டுவாக்கத்திற்கு பக்கபலமாக இருப்பதை உணர முடிகிறது. ஆனால் இந்திய ஒன்றியத்தை காக்க வேண்டுமென கருதுபவர்கள் பா.ஜவின் செயலை அப்பட்டமாக எதிக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் சுனேகர் போல் வாக்கெடுப்பு நடத்தவும் வேண்டும் என்ற விவாதங்களை முன்னெடுக்க சிந்திக்க வேண்டிய காலம் இதுவே.

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...