Search This Blog

Thursday 4 April 2019

நூலதிகாரம் ; நூல் ; இந்திய பழக்க வழக்கங்களும் பண்பாடும்


                     
                                                                                         நூலதிகாரம்
                           

                         இந்திய பழக்க வழக்கங்களும் பண்பாடும்

ஆசிரியர் ; ஜெசூட் பாதிரியார் அபே துபே
 அலைகள் வெளியீடு தமிழில்



பரந்து விரிந்து நாடுகளில் அரசானால் சட்ட ஒழுங்கை காக்க இயலாது சட்டங்களை நம்பிக்கையாக்கினால் அவை ஆண்டாண்டுகாலத்திற்கு நிலைத்து நிற்கும் என்பதற்கு எளிய எடுத்துகாட்டு இந்தியாவில் உள்ள சமூக சட்டங்கள் என முத்தாய்பாக துவங்குகிறது இந்த நூல்.

                    இந்து மதம் அது தொடர்பான விளக்கம் இன்றைய நிலையில் நாம் எப்படி இருக்கிறோம். இந்து மதத்தின் தாக்கத்தின் விளைவு. குலம் (சாதி) தோன்ற காரணம் என்னவாக இருக்கலாம்?. நம்மிடம் உள்ள பழக்க வழக்கங்கள் எதார்தமானவையா அல்ல ஏற்படுத்தப்பட்டதா? திணித்தது என்றால் யார் ?. இப்படியான கேள்விகளுக்கு 1743ல் கிறித்தவ பாதிரியாராக தென் தமிழகம் வந்து சுமார் 40 ஆண்டுகள் தங்கிய அபே துபே ஜெர்மன் மொழியில் எழுதிய hindu manars and customs என்ற நூலை 1984ல் ஆங்கிலத்தில் வந்தது. அதை 2008 வாக்கில் அலைகள் வெளியீட்டகம் வி.என். ராகவன் மூலம் சிறப்பாக மொழி பெயர்த்து அறிஞர் வீ.அரசு அவர்கள் மதிப்புரையுடனும் 1800 காலங்களில் தமிழ் இலக்கியத்தை மொழி பெயர்த்த ஜி.யு .போப் அவர்களின் அணி துறையில் இந்திய மக்கள் பழக்க வழக்கங்கள் சடங்குகள் நிறுவனங்கள் என்ற தலைப்பில் நூல் வெளியிட்டுள்ளனர். 

           ''தென்னகத்தில் உப்பு காய்ச்சியவர்கள் குறவர்கள் அவர்கள் வியாபாரியாக இருந்தனர். சாதிகள் இந்தியாவில் மட்டும் இல்லை ஏதென்ஸ் நாட்டிலும் நம்ம நாடுபோல் இருக்கிறது, நமது நாட்டில் குலத்தொழில் இருந்தது போல் எகிப்த்தில் இன்றும் தொடர்கிறது. சாதியை கட்டமைப்பது குடும்பங்களே, சர்வ வல்லமை படைத்த அரசு மக்களை ஒடுக்கும் போது அதை எதிக்க குழு தேவைப்படுகிறது. அந்த குழுக்களே சாதிய அமைப்பாக உள்ளது. (இன்றும் அரசியல் கட்சிகள் போராடாத விசயத்தை குலகுழுக்கள் போராடுகிறது என்பதை அன்றே தெளிவாக சொல்லியுள்ளாரோ)    

              இந்துக்களின் பெருமையை பறைசாட்டும் பத்து புராணங்களையும் (விஷ்ணு, பத்ம ராமயாண மகாபாரத, நாங்கு வேதம் ஆனந்த புராணம்.....) படித்து அதை ஐரோப்பி இலக்கியங்களுடனும் அந்த மக்களின் நம்பிக்கைகளுடனும் ஒப்பிட்டு இந்த நூலை தயாரித்துள்ளார். பெருந்தெயவ வழிபாடு சிறுதெய்வ வழிபாடு பழக்கம் என்பதெல்லாம் இல்லை. பெரும்பாலான பழக்கங்கள் பார்ப்பர்கள் மூலமே திராவிட தமிழ் குடிகளுக்கு வந்துள்ளது என்பதை மாவு, சாணி, மண்ணில் பிள்ளையார் பிடிப்பது, பொங்கல் வைப்பது ஏன் அதில் நெய் ஊற்றி சமைப்பது முதல், பெண்கள் மாதவிடாய் ஆனால் வீட்டிற்கு வெளியிலோ அல்லது தனியாக தங்க வைக்கும் பழக்கம், இலையில் சாப்பிடுவது, காளான் கிழங்குகளை பார்ப்பனர்கள் ஏன் சாப்பிடுவது இல்லை. இவர்களைப்போலவே யூதர்களும் சாப்பிடுவதில்லை, இந்துக்கள் ஓம் என சொல்லுவது போல் யூதர்கள், ஜெகவோ என சொல்லும் பழக்கம் ஏன் இந்த பழக்கங்கள் மேல்குடிகளாக அடையாளப்படும் பார்ப்பனர்களிடமே வந்தது என்பதை தனது கள மற்றும் படிப்பு மூலம் தரவுகளோடு நிறுவியுள்ளார். அதே போல் அக்ரகாரங்கள் என்பவை பார்ப்பனர் குடியிருப்பு மட்டும் அல்ல பார்னர்களுக்கு அரசர்கள் வழங்கிய நிலத்துடன் சேர்ந்த குடியிருப்பு,  ஏன் அக்ரகாரங்கள் உருவாக்கப்பட்டன. அவை பக்திக்காக மட்டும் அல்ல சமூக பழக்க வழக்கங்களை பார்பனர்கள் மூலம் பரப்பிட அரசர்கள் அக்ரகாரங்களை உருவாக்கினார்கள் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். 

                   வீட்டில் சாணி மொழுக மட்டுமே பல குலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. சுண்ணாம்பு அடித்தால் அரச குற்றமாக இருந்தது என்ற பதிவு இன்று சாணிக்கும் மாட்டுகும் சண்டை போடுபவர்களை என்ன வென்று சொல்லுவது. இதில் எருமை மாட்டுக்கும் எதிர்ப்பு கிளம்பியது அதை விட கொடுமை. 

                  இந்து மதத்தில் வைணவம், சைவமும் சண்டையிட்டாலும் இரண்டும் சூரியனை மையப்பட்டு ஒன்றாகி விடுகிறது என்பதை தெளிவுற கூறும் இந்த நூல் பார்ப்பன பழக்க வழக்கங்களை எதிர்த்த கவிஞர்களில் வள்ளுவன், பட்டினத்துப்பிள்ளை (பட்டினத்தார்) தெலுங்கு தத்துவ கவிஞர் வேமனா (இவரின் சீடராக அறிவித்து கொண்டவர் தான் பெரியாரையும் காந்தியத்தையும் ஏற்றுக்கொண்ட ஆந்திர சீர்திருத்தவாதி கோரா) போன்றர்கள் கவிதையை அடையாளப்படுத்துகிறார் அபே துபே. அதேபோல் ஐரோப்பியர்கள் வருகைக்கும் முன்பு வரை இலக்கியங்கள் கவிதை நடையிலே இருந்தது என்பதை நமக்கு சொல்லாமல்  சொல்லுகிறார். ஐரோப்பியர் வருகைக்கு பின்னரே வசன நடையில் இலக்கியம் பிறந்தது என்ற தகவல் சிறப்பு.
          திருவிதாங்கூர் (கேரளா) சமசுதானத்தில் சாணார்கள் மட்டுமே மேலாடை அணிய தடை என சட்டம் இருந்ததாகவே நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் அங்கு பார்பனர்கள் உள்பட அனைவருமே மேலாடையில்லாமல் இருந்தனர் என்பதை தெளிவுபடுத்துகிறார். 

            இறந்தவர்களுக்கு மாரட்டிப்பது கூலிக்கு அமர்த்தி அழும் பழக்கம் தென் இந்தியா முழுவதும் இருந்தது . இப்பழக்கம் ரோமானியாவில் இருக்கிறது என்பதை உலக பழக்கம் வழக்கங்களை திராவிட பகுதியோடு ஒப்பிட்டுள்ளார். இந்துக்கள் பெண்களை அடிமையாக நடத்துவதாகவே கருதும் நூல் ஆசிரியர் ஆர்மேனிய நாட்டிலும் பெண்களை இந்துக்கள் போலவே நடத்துகிறார்கள் என ஒப்பீடு செய்துள்ளார். பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என மநு நூலும், பத்மபுராணமும் சொல்லுவது போல் அர்மேனிய நாட்டு இலக்கிங்கள் சொல்லுகின்றவாம்.

            உடன்கட்டை ஏறும் பழக்கம் இந்தியாவில் மட்டும் இல்லை கிஸ்டோயஸ் தைரேசியா, வெணஸ், ஜெருளி, ஸ்காண்டிநேவியா போன்ற நாடுகளில் இருந்தது. இந்தியாவில் இசுலாமியர்கள் ஆண்ட பகுதியில் தடை சட்டம் போட்ட பின்னரே இந்த நாடுகளில் தடை போட்டார்கள். கிரேக்கதில் இன்னிஸ் தீ கடவுளாக வணக்குங்குவதில் போல் இந்துக்கள் நெருப்பை வணங்குகிறார்கள். மொட்டை போட்டு கடவுளுக்கு காணிக்கை செழுத்துவது போல் 200 ஆண்டுகளுக்கு முன்பு நகமும் காணிக்கை செழுத்தப்பட்டது என்ற வியப்பான செய்தி. பட்டக்கல் பதாமியில் (வட கருநாடாகவில் புலிகேசி ஆண்டபகுதி) உள்ள கோயிலில் சிலைவடிவமாக செதுக்கி சொல்லப்பட்ட பஞ்சதந்திர கதைகள் உலகம் முழுவதும் இங்கிருந்தான் பரவியது என்பதற்கான காலங்களை அறுதியிட்டு பதிவிட்டுள்ளார். 

            சிறந்த எழுத்தாளன் உண்மையை வெளிக்கொண்டு வர சிரமப்படவேண்டிவரும் என்பார்கள் அதை இந்த நூல் நிறுவியதாக தெரிகிறது. மானுடவியல் குறித்து படிக்க விரும்புபவர்கள் படித்திட வேண்டிய நூலாகவே பார்க்கிறேன்.

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...