Search This Blog

Wednesday 3 April 2019

'ஊழல் வதம்' எடுபடுமா?#



                                                           'ஊழல் வதம்' எடுபடுமா?#




         இந்தியா விடுதலை பெற்ற காலத்திற்கு முன்பும் பின்வும் 'ஊழல்' என்ற சொல் புதிதல்ல. 1952 காலத்தில் வளர்ந்து வந்த திமுக ஊழல் என்ற சொல்லாடலை கையில் எடுத்தது. அப்போது நாட்டில் பஞ்சம், மிட்டா, மிராசு, ஜமீன்களாக இருந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் சிலர் மட்டுமே வயிறார சாப்பிட்டு, கலர் கலராக சட்டை போட்டு வர திமுகவின் வாதம் மக்களிடம் எடுபட்டது. 1952 பொது தேர்ந்தலில் படையாச்சியுடனும், ரன்வீல் கட்சியுடனும் கூட்டணி வைத்து, வாக்கு அரசியலில் காலடி வைத்தது திமுக, படிப்படியாக வளர்ந்து 1967 ஆட்சியை பிடித்தது. திமுக அரசியல் கட்சியாக வளர்ந்த போது திமுகவை 'தொண்டு நிறுவன கட்சி (NGO), வெள்ளைகாரனின் கைக்கூலி' என மேடை மேடைக்கு கத்தியவர்கள் தான் 67ல் திமுகவுடன் கூட்டணி வைத்தனர் என்பதை வரலாறு மறைக்கவில்லை. 



        திமுகவின் ஆட்சி அதிகாரம் ஐந்தாண்டுகள் கூட காலம் பொறுத்திருக்கவில்லை. 1972ல் திமுகவின் கணக்கு காட்டும் பொருளாளர் பொறுப்பில் இருந்த எம். ஜி. ஆர் கட்சியின் கணக்கை கேட்டு ஊழல் என குற்றச்சாட்டை சொல்லி அதிமுகவைத் துவக்கினார். இவருக்கு மத்தியில் ஆண்ட காங்கிரசும் தமிழகத்தில் திமுகாவால் தேய்ந்தோம் என கருதிய பொதுவுடமை கட்சியும் ஆதரவு கரம் கொடுத்தது. திண்டுக்கல் பாரளுமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மாயத்தேவர் வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்கு காரணம் 'திமுகவின் ஊழல்' என பொதுவுடமை கட்சி சிலாய்த்தது. இவர்கள் சொல்லுவதில் சுமார் ஐந்து விழுக்காடு உண்மை இருக்கிறது. ஆனால் திமுவின் சாதி மறுப்பு திருமண அங்கீகார சட்டம், அனைவரும் அர்சகர் ஆகாலாம் சட்டம், புறம்போக்கு நிலங்களை பட்டியல், பிற்படுத்தப்பட்ட ஏழைகளுக்கு பட்டா வழங்கும் திட்டம் இவைகளால் பிற்படுத்தப்பட்டோர் மய்யத்தில் திமுக மீது எழுந்த கோபமே எம்.ஜி.ஆர் மீது அனுதாபத்தை ஏற்படுத்தியது. அப்போது திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க போடப்பட்ட சர்காரிய குழு விசாரணை அறிக்கையே 1977ல் எம்.ஜி.ஆரை ஆட்சியில் அமரவைத்தது.                                                                                                                               



     ஆனால் எம்.ஜி.ஆர் செய்த ஊழல் மீது பால் கமிசன் விசாரணையில் 'எம்.ஜி.ஆர் ஊழலில் சொத்து சேர்த்தார். போக் ரோட்டில் அவரது நினைவு இல்லமாக உள்ள வீடு ஊழலில் வாங்கியது' என குழு விசாரணை முடிவில் எட்டியது. இருந்தாலும் பொதுவுடமை கட்சியின் திமுக மிதிருந்த 'காமார' குணத்தாலும், இவர்களுக்கு எம்.ஜி.ஆர், கட்சி நிதி வழங்கிய தாரள குணத்தாலும், காங்கிரஸ் ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க தேவையான மக்களவை, மாநிலவை உறுப்பினர்கள் எண்ணிக்கைக்காக அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி நீடித்தது. எம்.ஜி.ஆரிடம் பொதுவுடமை கட்சியின் எப்படியாவது கூட்டணியமைத்து கேரள மாநிலத்தில் போல் கூட்டணி ஆட்சியை துவக்கி விடலாம் என நம்பினார்கள். ஆனால் இதை நாடகமாக ஒத்துக்கொண்ட எம்.ஜி.ஆர் பொதுவுடமை கட்சியினருக்கு தண்ணீர் காட்டி விட்டார். நீண்ட நெடிய அதிமுக ஆட்சி எம்.ஜி.ஆர் மறைவு, கட்சியின் பிளவால் 1989ல் திமுக ஆட்சிக்கு வந்தது. 

     # 'ஊழலின் ஊற்றுக்கண் அடைக்கப்பட்டது' என மீண்டும் அதே 'ஊழல்' சொல் சட்டமன்றத்தில் ஒலித்தது. சட்ட மன்றத்தில் ஜெயலலிதா அமலில் ஈடுபட்டு, அவர் நடித்த 'தலைவிரி நாடகம்' மக்களிடம் எடுபட்டது. இந்த நிலையில் ஈழத்தின் நடத்த போராட்ட குழுவான விடுதலை புலிகளுக்கு திமுக ஆதரவு கொடுத்ததால் ஆட்சி கலைக்கக்பட்டது. இதே காலகட்டத்தில் திரு. ராசீவ்காந்தி புலிகளால் கொல்லப்பட்டார்?. அப்போது 'திமுகவின் புலிகள் ஆதரவு கொள்கையால் 'திமுக தான் ராசீவை குண்டு வைத்து கொன்றது' என்ற கொச்சைத்தனமாக வெற்றிலைப்பொட்டி  வாழப்பாடி ராமமூர்த்தியின் குற்றச்சாட்டு மக்களிடம் எடுபட்டது. 

     # 1991 பெரும்பலத்துலன் ஆட்சிக்கு வந்த செல்வி ஜெயலலிதா செய்யாத ஊழலே இல்லை. ஆடாத ஆட்டமே இல்லை. சாலை போடாமல் போட்டதாக கணக்கெழுதினார்கள். வளர்ப்பு மகன் திருமணம், விசாகன் மருத்துவமனை ஊழல் என அதிர்ந்தது. தில்லி அரசு ஜெயலலிதா அரசை கலைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கண்களை மூடிக்கொண்டது. இந்த கால கட்ட ஊழலே ஜெ அவர்களை சிறையில் தள்ளி கொன்றது. தற்போது 'ஜெ செய்த குற்றத்திற்காக' அவரது தோழி சசிகலா அவர்கள் சிறையில் இருக்கிறார். ஊழல் வீதிக்கு வந்தது. இந்த கால கடத்தில் 1996 தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற வெறியில் இருந்த ஜெ, உடைந்த திமுகவின் திரு.வைகோ அவர்களை மறைமுகமாக ஆதரித்தார். 

     1996ல் மீண்டும் ஓலிபெருக்கி வைக்காமலே அதிமுகவின் ஊழல் வீதிகளில் கேட்க, திமுகவின் பலமான கூட்டணி ஆட்சியைp பிடித்தது. இந்த காலகட்டத்தில் செல்லிடை பேசிக்கான பெருநகர சேவை ஒப்பந்தத்தை மாறன் குழுமத்தினர் பெற்றனர். இந்த ஒப்பந்தத்தைப் பெற்றிட டாடா, அதானி குழுமத்தினர் இந்த டெண்டர் கிடைக்காததால் திமுகமீது ஊழல் குற்றச்சாட்டை வீசினார்கள். கிராமங்களில் சிமிண்ட் சாலை அமைப்பதில் கூட மாறன் குழுமம் சிமிண்ட் ஆலை வைத்துள்ளது என்று பேசவைத்தார்கள். இந்த இந்தியன் எக்ஸ்பெரஸ் அறிவு சார் வட்டத்தில் உள்ள பெரும் உலக தரத்துள்ள முதலாளிகள் பத்திரிக்கை மூலம் திமுகவை வீழ்த்த முடிவு கட்டியது. 

      தமிழகத்தில் இருக்கும் சமூக இடைவெளியான குல (ஜாதி) வேறுபாட்டை நீக்கிட கொண்டு வந்த மாதிரி திட்டமான (மினியேச்சர்) சமத்துவபுரத் திட்டத்தை பிற்படுத்தப்பட்டோருடன் சேர்ந்து பட்டியல் குழுக்களுக்கும் எதிர்த்தார்கள். இதனால் காரணம் இல்லாமல் 2001ல் அதிமுக ஆட்சிக்கு வந்தது. இந்த கால கட்டத்தில் மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இந்த காலகட்டத்தில் அதிமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பெரிதாக பேசப்பட்டதால் 2003 பாரளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி ம100% வெற்றியை ஈட்டியது. காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சியில் ஊழல் உலகளவில் பேசப்பட்டது. இதனால் புரட்சிகர மாற்றம் தேவை அது ஆயுதமே தீர்வு என என தில்லி சவர்கர்லால் நேரு பல்கழக பேராசிரியர்கள் பொதுவுடமை சித்தாந்தத்தை மாணவர்கள் மத்தியில் பேசினார்கள். இதன் வீச்சினை அறிந்த உலக முதலாளிகள், பொதுவுடமை தீவிரவாதத்தை அழிக்க இரண்டாம் தலைமுறை ஊழல் என்ற இமேஜ்சினை சித்தரித்தனர். ஊழலை ஒழிக்க பொய்யன் ஹசாரே என்ற இமேஜினை முன்னிலை படுத்தினார்கள். இதனால் மத்தியில் பா.ஜவும் தில்லியில் திரு. கெஜிர்வாலும் ஆட்சி அமைத்தனர். 2006ல் தட்டு தடுமாறி ஆட்சிக்கு வந்த திமுக மீது நில மோசடி ஊழல் குற்றச்சாட்டுகளை வீசினாலும் ஆதரப் பூர்வமாக இல்லை. 

    2011ல் திமுகவினர் மீது வீசப்பட்ட அல்லது உண்மையான நில மோசடி ஊழலைளே அதிமுகவை ஆட்சியில் அமர வைத்தது. நில மோசடிக்கெனவும், வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்தனர் திமுகவினர் மீது போடப்பட்ட வழக்குகள் பலவற்றில் பலருக்கும் சாதமாகவே தீர்ப்பு வந்தது. நில மோசடி குறித்த தனி நீதிமன்றத்தை நீதி மன்றமே கலைத்தது கூர்ந்து கவனிக்க வேண்டியதாக உள்ளது. இருப்பினும் ஜெ மீது 91 - 96 சொத்து குவிப்பு வழக்கு அவருக்கு எதிராக தீர்ப்பு வந்தாலும் அவரை 2016ல் மீண்டும் ஆட்சியில் அமர வைத்தனர். அந்த காலகட்டத்தில் 'திராவிட கட்சிகளுக்கு மாற்று என ஊழலுக்கு எதிரானவர்கள் நாங்கள்' என மக்களை சந்தித்த 'மக்கள் நல கூட்டணி'யினரை மக்கள் நிராகரித்தனர். திமுகவிற்கு எதிராக அதே ஊழல் குற்றச்சாடை முன்னால் நீதிபதியெல்லாம் 'கருணாநிதியின் சொத்து கணக்கை காட்டத்தயாரா' என சென்னைக்கு பறந்து பறந்து வந்து பேட்டி கொடுத்தார். 

    மக்கள் நல கூட்டணியில் அங்கமான பொதுவுடமை கட்சியில் மார்சிஸ்ட் கட்சி திரு. கமலஹாசன் அவர்கள் துவக்கிய மக்கள் நீதி மய்யத்தை துவக்கி களத்தில் உள்ளார். இவர் அரசியல் கட்சி துவக்குவதற்கு முன்பு ஊழல் என்ற சொல்லாடலை கையில் எடுத்தார் என்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது. ம.நீ.ம தலைவருக்கு நேரலையாக வாழ்த்து சொல்லி தனது ஊழல் பிரச்சார கூட்டமைப்பை நிலை நிறுத்தியுள்ளது பொதுவுடமை கட்சி. ஆனால் திமுக காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் 2019 தேர்தலில் உள்ளது.  

         கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு ஊழல் என்ற வெற்று வார்த்தைகளால் வட நாட்டு மக்களை ஏமாற்றி தில்லியில் ஆட்சியை பிடித்து மத்தியிலும் ஆட்சியை பிடித்தனர். தற்போது விமான ஊழல் என்ற சொல்லாடலை பிரச்சாரமாக வைக்கிறார்கள். 2ஜி அலைக்கற்றை துறையின் முதலீட்டில் ஐந்து மடங்கு தொகையை ஊழலாக காட்டி மக்களிடம் ஊழல் என்ற சொல்லை சிறுபிள்ளைகளின் விளையாட்டு பொம்மையாக்கி விட்டார்கள். இனி ஊழல் என்ற வித்தை மக்களிடம் எடுபட இதை விட மிகப்பெரிய ஊழல் செய்தாகவேண்டும். அல்லது இந்தியாவை ஆட்டிய அல்லது உழுக்கிய ஊழல்கள் என ஆங்கிலத்தில் பிற மொழிகளில் நூல் போட்டுள்ளது போல் ஊழல்கள் வெற்றுக்காயிதமாகவே நூலக அறைகளில் வாழும். 
'காட் ஒப்பந்த உலக முதலாளிகள் நடத்தும் நாடக மேடைகளே தேர்தல்'' என ஆயுதபாணிகளின் கூற்று ஆய்வுக்குறியதே.


No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...