Search This Blog

Monday, 1 April 2019

இந்திய விண்வெளி ஆய்வு மையமும் கல்வியும்

        



இந்திய விண்வெளி ஆய்வு மையமும் கல்வியும்




அனைவருக்கும் வணக்கம்,
  
படங்கள் உதவி இந்திய ஆய்வு மைய மின்னுலகம்

இந்திய விண்வெளி ஆய்வு மையம் என்ற  ISRO - Indian Space Research Organisation, Bangalore, இது குறித்து அறிந்திருப்பீர்கள். ஆனால் இங்கு படிக்கும் வாய்ப்பு உள்ளது தெரியாதவர்கள் இதைத்தெரிந்து கல்வி நிறுவனங்களில் இச்செய்தியை பரப்புரை செய்திடுங்கள்.

 பள்ளியில் படிக்கும் நம் மாணவர்களை குறிப்பாக +1 படிக்கும் மாணவர்களை ISRO-விற்கு அழைத்துச் செல்ல ஒரு பாரளுமன்ற உறுப்பினருக்கு (MP) ஐந்தாண்டு காலத்திற்கு  RS.2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. அவ்வாறு செல்லும் மாணவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சியளிக்கிறார்கள்.

        பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் இயற்பியல் வேதியியல் மற்றும் கணக்கில் தலா 65% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் இந்திய விண்வெளி ஆய்வு மையம் நடத்தும்  நுழைவுத்தேர்வு எழுதலாம். இந்த விண்வெளி மையத்திற்கு படிக்கும் போதே சென்றிருந்தால் தேர்ச்சி பெறுவதற்குகான ஆர்வம் அதிகரிக்கும். அதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கட்டணமின்றி நான்கு வருடங்கள் விண்வெளி மையத்தில் பொறியாளர் பட்டப் படிப்பை படிப்பது மட்டுமல்ல அவர்கள் தேர்ச்சி பெற்றவுடன் இளநிலைப் பொறியாளராக விண்வெளி மையத்தில் பணிநியமணம் பெறுவார்கள்.

இது குறித்த தகவல் தேவைப்படுவோம் திரு. பாலமோகன். ISRO SCHOOL EDUCATIONAL DIRECTOR அவர்களை
7892898919,94814 22237  எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

     கடந்த காலத்தில் ISRO-விற்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள், மய்ய அரசு நடத்தும் கேந்திர வித்யாலயம், மற்றும் அதை ஒத்த தனியார் பள்ளி மாணவர்களே என்பதை கருத்தில் கொண்டு மற்ற பள்ளிகளும் இந்த திட்டத்தை பயண்படுத்த வேண்டும் .

No comments:

Post a Comment

முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு

  நூலதிகாரம் நூல் முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு ஆசிரியர் ; தி. சுப்பிரமணியன் வெளியீடு ; அடையாளம்   ‘முந்தி பிறந்தவன் நா...