Search This Blog

Sunday 31 March 2019

அரசியல் மாற்றமும் முதாளித்துவ எதிர்ப்பும்


                                   அரசியல் மாற்றமும் முதாளித்துவ எதிர்ப்பும்



வணக்கம் ,



மதம் / பவுத்தம் தொடர்பான விவாத்தில் பட்டியல் சாதியினர் கருப்பொருளாக்கப்பட்டது பலரது பதிவுகளில் பார்க்க முடிந்தது இதில் பா.ஜாவால் பட்டியல் சாதிகுழுக்கள் இயக்கப்படுவதாக குற்றச்சாட்டும் கடுமையாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக பட்டியல் சாதியினரின் எழுச்சி / குழு ஒருங்கிணைப்பிற்கு பின்புலமாக இருப்பது மைய அரசு. இதில் காங் / பாஜ என பிரித்து பார்க வேண்டிய தேவையில்லை. (முதலாளித்துவத்திற்கு பங்கம் வரக்கூடாது என்பதற்காகவே)

இந்தியா ஒன்றியத்தில் எப்போதெல்லாம் வெகு மக்கள் எழுச்சி எழுகிறதோ அப்போதெல்லாம் சாதிய குழுக்களில் செயல்பாடுகள் ஒருங்கிணைப்பு அதிகரிக்கும் / இதன் நோக்கம் சாதிய பாகுபாடுகளால் ஒடுங்கி இருப்பவர்கள் ''துப்பாக்கி தூக்கும்'' (நக்சல்பாரிகள்) அமைப்பின் பின்னால் சென்று விடக்கூடாது என்பதற்காக கட்டமைக்கப்படுவதே இந்த சாதி / மத குழு அமைப்பு முறை.இவைகள் ஒன்று கூடுவதற்காக பன்னாட்டு நிறுவனங்கள் பணத்தை இந்திய ஐ.பி என்றழைக்கப்படும் உளவு பிரிவு மூலமாக கொட்டுகிறார்கள்.(பட்டியல் சாதியினர் இன்றும் பொது வீதியில் தேநீர் கடை நடத்த முடியாத நிலையில் / பள்ளர் அல்லாத பிற பட்டியல் குழுக்களில் பெரும்பான்மையோருக்கு நிலம் கிடையாது இந்த நிலையில் அவர்களுக்காக நடத்தப்படும் கட்சியின் சொத்து மதிப்பு வியக்கத்தக்கதாக இருக்கிறது.
நக்சல்பாரி அமைப்புகளிடமிருந்து மக்களை காக்க வந்த ரச்சகர்கள் தான் தலித் பேந்தர் / பின்னர் விடுதலை சிறுத்தைகள் /அருந்ததியர் முன்னேற்ற முன்னனியான அம்மி,புதிய தமிழகம், தேவேந்திரர் சமீதி... இன்னும் பல பல ....
இந்த அமைப்புகளை முதலில் கட்டமைப்பு பணியைத் துவக்குபவர்கள் முழுக்க முழுக்க தொண்டு நிறுவனங்களே (இன்றும் மதுரை இறையியல் கல்லூரி இதைத்தானே செய்து வருகிறது)

பழங்குடி மக்களை இன்றளவும் இயக்குபவர்கள் இவர்கள் மட்டுமே இதை உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் தேவையை அரசு செய்திடத்தானே மக்கள் பிரதிநிதிகள் /அரசு எந்திர பணியாளர்கள்,இவர்கள் இருக்க எதற்காக தொண்டு நிறுவன தன்னார்வ அமைப்புகள் இந்த கேள்வியை எந்த வாக்காளனும் கேட்கக்கூடாத அளவுக்கு நம்மை பொதுபுத்தி இயக்க வைக்கிறது இயக்குகிறது.

இதே போலவே தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்களான பிறமலை கள்ளர், வன்னியர் போன்ற குழுக்களை இவர்களை இயக்குவது முழுக்க முழுக்க உளவு அமைப்புகளே. இவர்களுக்காக தலைவர்களாக அறியப்பட்டவர்கள் மீது நேரடி குற்றமும் குற்றப்பின்னனி இருந்தும் அரசு எந்திரம் இவர்களுக்கு சல்யூட் அடிக்கும்!.

இந்த அமைப்புகளையே அரசு பெரும் திட்டங்கள் செயல்படுத்தும் போது (நியூட்ரினோ/கூடாங்குளம் / தோல் /சாயம் /மற்றும் கழிவுகளால் பாதிப்படையும் இதர திட்டங்கள் ....) இவர்களைப் போராட்டத்திற்கு அரசே தூண்டுவார்கள். மக்களோடு இவர்கள் போராடி கொண்டிருக்கும் போது திடீரென போராட்டத்திலிருந்து வீடு திரும்புவார்கள். இந்த நிகழ்வுகளை போராட்டத்திற்கு சென்ற தோழர்கள் அறிந்திருப்பார்கள்.

இந்தியாவில் சாருமசூம்தார் ... மற்றும் சிலர் துவக்கிய நக்சல்பாரி இயக்கத்தில் சாமானிய மக்கள் சேருவதை தடுக்க சாதிய குழுக்களின் செயல்பாடுகளை அதிகரிக்க மைய அரசு கோடிக்கணக்கில் கொடுத்து மைய உளவு அமைப்புகளையும் தொண்டு நிறுவனங்களையும் முடுக்கி விட்டது. இதில் நல்ல வெற்றி கிடைத்தால் இன்றும் அந்த நடைமுறை தொடர்கிறது.
பா.ம.க ,வி.சி துவக்கப்பட்ட காலத்தில் தமிழகத்தில் தமிழ் தேசிய வாதமும் / நக்சல்பாரி தீவிரவாதம் எழுச்சி் இருந்தது. இதை ஒடுக்க / மக்களிடமிருந்து இந்த தீவிர வாத குழுக்களை அப்புறப்படுத்த 'நக்சல்பாரிகள் என்ன முழக்கங்களை வைத்தார்களோ அதே முழக்கங்களை இந்த சாதிய குழுக்கள் வைத்தது. நக்சல்பாரிகள் பக்கம் ஒடுக்கப்பட்ட / பாதிக்கப்பட்ட / கொள்கை ஏற்புடைய மக்கள் செல்வதை தடுத்து விட்டதற்கான சமிஞ்சை கிடைத்தவுடன் இந்த சாதியக் குழுக்கள் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தார்கள். இவர்கள் யாருக்காக முதலில் புரட்சிகர வசனம் பேசி, சுவர் எழுத்துக்களை எழுதினார்கள் , தற்போது யாருக்காக வாக்கு அரசியலுக்குள் தாவினார்கள் என்பதற்கு அவர்கள் கொடுத்த விளக்கத்தை கூட அவ்வமைச்சில் இருப்பவர்களோ அரசியல் நோக்கர்களோ பார்ப்பதில்லை. இவர்களிடமிருந்து விடையைப் பெற்றுதர வேண்டிய முதலாளித்துவ பத்திரிக்கைகள் இடதுசாரி சாயத்தோடு நடமாடும். காரணம் மக்கள் எப்படியோ நக்சல்பாரிகளாக மாறாமல் இருந்தால் நாட்டுக்கும் / நமக்கும் நல்லது முதலாளித்துவத்தை காத்து விடலாம்'' என சாதிய குழு அரசியலை விமர்சனம் இல்லாமல் பொதுவெளியில் முன்னிருத்தும் நிறுத்தியுள்ளது.

சாதி குழுக்கள் /சாதிய கட்சிகளாக அடையாளம் காணப்பட்ட பா.ம.க,விசி,அருந்ததியர் / பு.தமிழகம் .. பாரதீய பார்வர்டு பிளாக் .. இன்னும் பல இவர்களால் அந்த சாதிகளுக்கு என்ன பயன் கிடைத்துள்ளது. இதை அவர்களே ''பேக் பைண்டிங்'' செய்து அறிக்கை கொடுக்க சொல்லுங்கள். / இவர்களால் ஏற்கனவே இருந்த சமூக பாகுபாடு மேலும் மேலும் அதிகரித்தது.பட்டியல் சாதிகுழுக்கள் மீது அடக்கு முறை / பொருளாதர மாற்றம் கிட்டியதா ? மோதல்களும் இட ஒதுக்கீடு தொடர்பான எதிர்வினைகள் அதிகரித்துள்ளன. (இந்த அலசல் இசுலாமிய குழுக்களுக்கு பொறுந்தும்)

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...