Search This Blog

Tuesday 2 April 2019

போடுங்கம்மா ஓட்டு ..... போடுங்கய்யா ஓட்டு

               
                                      'மக்களாட்சி' என்ற  மந்திரச்சொல்
                                     
                           போடுங்கம்மா ஓட்டு ..... போடுங்கய்யா ஓட்டு            


வணக்கம் 
                                         
தில்லி பாரளுமன்றம்


             
 மக்களாட்சி தத்துவம் என்ற மந்திரச்சொல்லால் ''ஓட்டுப்போடலேன்னா செத்ததுக்கு அர்த்தமாப்பா'' என்று சொல்லி ஆன்மீக வாக்காக பரவியிட, வாக்கு சாவடியில் வரிசை நின்று வாக்களித்தார்கள் மக்கள். ஒரு கட்டத்தில் வாக்கு போடுவதால் எதுவும் நடக்கவில்லை என்ற கசப்பு & வெறுப்பாக மாற பலரையும் ஓட்டுச்சாவடியை குட்டிச்சுராகப் பார்க்க வைத்தது. இதனால் அரசியல் கட்சியும் முதலாளிகளும் சேர்ந்து ''வாக்கு சாவடிக்கு வராத மக்களை புரட்சியாளர்கள் அதாவது நக்சல்பாரிகள் கையில் எடுத்தார்கள் என்றால் அனைவருக்கும் சிக்கல் வரும்' என்ற ஆலோசனையை சொன்னார்கள். முதலாளிகளுக்கு பயம் வந்தால் முதலில் அவர்கள் எடுக்கும் ஆயுதம், சாப்பாடு. அதற்கும் மயங்கவில்லை என்றால் பணமாக கொடுப்பது, அதற்கும் அசரவில்லை என்றால் நேரடியாக பேச்சுவார்த்தைக்கு போவது. இதில் பெரும்பாலான மக்கள் அசைந்து விடுவார்கள். பணம் காசுக்கு ஆசைப்படாத மக்களும் 'சரி நாட்டுக்கு வந்தது நமக்கும் ஓட்டப்போடுவோம்' என முடிவெடுத்து வாக்களித்து வந்தார்கள். இதில் மக்கள் பழக்க அடிமையானர்கள் என்பதை விட காவல்துறை இன்னும் பல துறைகளின் நெருக்கடியால் வாக்கு சதவிகிதத்தை தக்கவைத்து மக்களாட்சி தத்துவம் என்ற மானை விரட்டி வந்தார்கள். இந்த மான் மாயமான் என பல்லித்தது. இந்த இடைவெளியில் அரசு எந்திரத்தில் மாற்றம் கொண்டுவர நினைக்கும் குழுக்கள் ஓட்டுப்போடாதே புரட்சி செய் ஆயுதம் ஏந்து எனப்பிரச்சாரம் செய்தனர். இதன் பலன் இந்திய துணைக்கண்டத்தில் வடபகுதியில் எடுப்பட்டது. 

வாக்களிக்க விளம்பரம்

        இந்த காலகட்டத்தில் அண்டை நாடு என்பதை விட ஆன்மீக நாடாகவும் இந்து நாடாகவு அறிப்பட்ட நேபாளத்தில் மன்னர் ஆட்சியை எதிர்த்து மாவோ பொதுவுடமை சிந்தனையாளர்கள் பல்நெடுங்காலமாக போராடி வந்தவர்கள். கைக்கு ஓரளவு வெற்றி கிடைத்தது. (இதில் இந்திய அரசும், இந்தியாவில் இயங்கும் பொதுவுடமைக்கட்சியின் உள்குத்துக்கள் தனி கதை). இந்த மாவோ குழுக்களின் வெற்றி இந்தியாவில் பரவிடக்கூடாது என்பதற்காக ஆலோசனையில் மூழ்கி கண்டுபிடித்தது தான் வாக்கு பெட்டியில் ஒட்டி வந்த நோட்டா. 

    வாக்களிக்காதவர்கள் அரசு எந்திரத்தின் மீது கொண்ட கோபமே இவர்கள் மாவோ குழுக்கள் பக்கள் போய்விடுவார்கள் என்பதால் இவர்கள் கோபத்தை தனிக்க நோட்டோ என்பதை கண்டறிந்து நடைமுறைப்படுத்தினார்கள். ஒரு தொகுதியில் நோட்டோ வெற்றி பெற்றால்  அந்தப்பகுதியில் ஐ.ஏ.எஸ் அதிகாரி தான் சட்ட மன்ற, பாரளுமன்ற உறுப்பினர் என அறியாத கூட்டம்  அதிலும் வாக்களித்து தனது அதிமேதாவிதனத்தை நிறுவியது நிறுவி வருகிறது.   

       

                 மன்னர் ஆட்சியை மக்களாட்சியாக கட்டமைத்த பிரிட்டீஷாரும் இந்திய முதலாளிகளும்


பிரிட்டீஷார் ஆட்சியில் 1920ல் பொது தேர்தல் நடந்தது. அப்போது இங்கிலாந்தை ஆண்ட அரச பிரதிநிதிகளே இந்திய பாரளுமன்றத்திற்கு தலைவர். இந்தியாவில் தேர்தெடுக்கப்பட்ட பாரளுமன்ற, சட்டசபை உறுப்பினர்கள் விவாதத்தை தீர்மானிப்பதும், அவர்களின் தீர்மானத்தை அரச மாளிகையே தீர்மானித்தது. இதை மக்களாட்சி என்று இந்திய மக்களிடம் விதைத்தார்கள்.

         பிரிட்டீஷ் ஆட்சியில் பெரும்பாலான நிலங்கள் பாளையக்காரர்கள், ஜமீன், மிட்டா, மிராஷ்களுக்கு மட்டுமே சொந்தம். சில பகுதியில் உழுபவனுக்கு வழங்கப்பட்ட நிலம் இனாம், ஜாரி என்ற வகைப்பாட்டில் பிரித்தளித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அப்போது நடந்த ஆட்சியை பிரிட்டீஷ் ஆட்சி என்றும் வரலாறு சொல்லுகிறது. சரியாகச் சொன்னால் பிரிட்டீஷ் மன்னருக்கு இயக்கிய இங்கிலாந்து பிரிவியூ கவுன்சிலுக்கு கீழ் நடந்த நாயக்கர் ஆட்சியின் எச்சம் என்றே சொல்ல வேண்டும். ஆனால் அந்த ஆட்சியை மக்களாட்சி என்று வரலாறு பதிவிட்டுள்ளது.

             மன்னர் அவர்களுக்கு கீழ் இயங்கும் பாரளுமன்றம், அவர்களுக்கு கீழ் நாயக்கர், மறவர், வன்னியர், கவுண்டர் ஜமீன்கள், இதர சாதிகளில் குறிப்பாக முதலியார், பிள்ளை, சில இடங்களில் சொற்ப எண்ணிக்கையில் பார்ப்பனர்கள், நாடார்கள் மிட்டா, மிராசு, பட்டக்காரர் என மூன்றடுக்கு ஆட்சி முறையை மக்களாட்சி என்று இன்றும் நம்புவோர்கள் உண்டு. இந்த திரைமறை பொம்மலாட்ட மக்களாட்சியில் எல்லோரும் வாக்களிக்க தகுதியானவர்கள் இல்லை. பட்டாதாரிகள் அதாவது நில உடமையாளர்கள் மட்டுமே. இன்னும் கொச்சையாகச் சொன்னால் அரசுக்கு வரி செலுத்துபவர் மட்டுமே. இதில் பெண்களுக்கு வாக்குரிமை கிடையாது.

                         பருத்தி உற்பத்தியை பெருக்க கிடைத்த நிலம்  வாக்குரிமையை தந்தது

            பிரிட்டீஷ் ஆட்சியில் காலத்தில் ஏற்பட்ட தொழில் மயமாக்கத்திற்கு குறிப்பாக துணி உற்பத்திக்கு தேவையான பஞ்சினை உலகத்திற்கே உற்பத்தி செய்திட நெருக்கடி என்பதை விட வியாபாரத்தில் லாபம் சம்பாதிக்க முடிவெடுத்தது பிரிட்டீஷ் அரசு, பஞ்சுக்கொள்கையை விரிவுபடுத்தியது. ஆனால் நில குத்தகைதாரர்களான பாளையக்காரர்கள், மிட்டா மிராசுகள் உழுபவனிடம் நில குத்தகையை வாங்குவதில் கவனம் செலுத்தினார்களே தவிர உற்பத்தியை பெருக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பாளையக்காரர்கள், மிட்டா மிராசுகளிடமிருந்த நிலங்களை கையகப்படுத்தி நிலத்தில் கூலிகளாக குத்தகைதாரர்களாக இருந்த வேளாண் குடிகளுக்கு பஞ்சமி ஜாரி நிலம், கள்ளர் ஜாரி நிலம் என பிரித்து வழங்கினார்கள். இதன் மூலம் வாக்களிக்கும் உரிமையை பல குலதினர் பெற்றனர். இதன் மூலம் சில பட்டியல் குலத்தினரும், பிற குலத்தினரும் வாக்குரிமை பெற்று தங்களது வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை நிலை நாட்டினார்கள்.

                   ஒருவழியாக இந்தியா சுதந்தரம் அடைந்ததாக அறிவிக்கப்பட்ட 1952ல் நடந்த தேர்தலில் 18 வயதிலிருந்த வாக்களிக்கும் வயதை 21 ஆக உயர்த்தி ஆண் பெண் இருவருக்கும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். வாக்களிக்கும் உரிமை என்பது நெல்லுச்சோறு சாப்பிட்டால் பெருமை என்பது போல தங்களது பிறவிப்பயனாக கருதிய மக்கள் அனைவரும் மௌன மகிழ்சியாக வாக்களித்து இன்புற்றார்கள். எதற்காக...., வரும் காலத்தில் எல்லோருக்கும் நிலம் கிடைக்கும் என்ற நட்பாசையால்.
இந்தியா சுதந்தரம் அடைந்து 1974 வரை பெருவாரியான நிலங்கள் மிட்டா மிராசு, பாளையக்காரர், ஜமீன்தார்களிடமே இருந்தது. நிலத்தின் மேல் மக்கள் போர் தொடுத்தார்கள் வட இந்தியாவில். வேறு வழியில்லாமல் நில உச்சரவம்பு மற்றும் மன்னர் மானியம் ஒழிப்பு சட்டம் கொண்டு வந்தார்கள். (இந்த சட்ட முன் வடிவத்திற்கு வாக்களிக்காமல் கழிப்பறையில் பம்மிய திராவிட முன்னேற்ற கட்சி உறுப்பினரின் வீர ?வரலாறு உண்டு.)  

நில உச்ச வரம்பு சட்டம் கடும் எதிர்ப்பிற்கிடையில் நிறைவேற்றினார்கள். இச்சட்டத்தை கடுமையாக எதிர்த்தவர்கள் இன்றை பாரதீய ஜனதா கட்சியாக அறிப்படும் அன்றைய ஜன சங்கத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சட்டம் கேரள மாநிலத்தில் ஓரளவிற்கு ஒரளவிற்கு பரவலாக்கப்பட்டது. தமிழகத்தில் பரவாயில்லை என்று சொல்லாம்.

             இச்சட்டத்தில் நில உச்ச வரம்புக்கு உள் சட்ட வழி வகை செய்தது. கம்பெனி, மற்றும் டிரஸ்ட், சொசைட்டி பிரிவுகள் மூலம் 240 ஏர்ஸ் (2.40) வரை வைத்துக்கொள்ளலாம். தனி நபர் 12.4 ஏர்ஸ் நிலம் வைத்திருக்க சட்டம் வகை செய்தாலும் கரும்பு பயிறிட்டிருந்தால் 25 ஏக்கர் வரை தனி நபர் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கியது. இதை பொதுவுடமைக் கட்சியினரே ஆதரித்தது கூர்ந்து கவனிக்கத்தக்கது. இன்றும் நில உச்சவரம்பு சட்டம் நடைமுறையில் உள்ளது. வருமான வரி கணக்கிற்கு மட்டும் ரைடு வரும் மய்ய அரசு அதிகாரிகள் நில உச்சவரம்பிற்கு ஏன் வரமறுக்கிறார்கள் என்பதை கேட்டால் நமக்கு அறிவு உண்டு எனப்பொருள். 

             இந்தியாளவில் நில உச்சவரம்புச் சட்டம் முழுமையாக அமுல் படுத்தவில்லை என இந்திய அரசால் இயக்கப்படும் ஏக்தா பரிசத் போன்ற அமைப்புகள் ஒடிசா, பீகார், இன்றைய சட்டீசுக்கர், மகாராசுட்டம் போன்ற மாநிலத்தில் நிலமற்ற மக்களை ஒன்று திரட்டி தில்லி வரை 500 மைல் நடைபயணம் மேற்கொண்டது. ஆனால் இதையெல்லாம் கருத்தில் கொள்ளாத மய்ய அரசு சத்தமில்லாமல் கடந்த ஆண்டும் இந்தியா முழுவதும் உள்ள நில உச்சவரம்பு சட்ட அமுலாக்க அலுவலங்களை மூட உத்தரவிட அனைத்து மாநில அரசுகள் இதனை நைசாக மூடிவிட்டது. 

            அனைத்து உழுகுடி அல்லது வேளாண்மை கூலிகளாக உள்ள அனைவருக்கும் குறைந்தபட்டம் இரண்டு ஏக்கர் நிலமாவது கிடைத்த பின்னர் இந்த அலுவலங்களை மூடி இருக்கலாம் எனக்கோரிக்கை வைக்கக்கூட அரசியல் கட்சிகளில் குறிப்பாக பொதுவுடமை கட்சியினர் கூட கோரிக்கை வைக்கவில்லை என்பதே வியப்பிலும் வியப்பு. இந்த ஏக்தா பரிசத் அமைப்பு மக்களைத்திரட்ட கோரிக்கை பேரணி நடத்த அரசே உதவியது. காரணம் மக்கள் சட்டத்தை கையில் எடுத்து முதலாளிகள் நிலத்தை கையக்கப்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவும், இந்த மக்களை மவோ பொதுவுடமை அமைப்பினரிடமிருந்து அன்னிப்படுத்தவுமே என்ற பார்வையை மறுதளித்த இயலாது.   

                                                       
                                                                             வாக்களிப்பது எதற்காக    




                     இந்தியாவில் நேரடியாக வாக்களிக்கும் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரளுமன்ற சட்டமன்ற உறுப்பினர் இருக்க, இவர்கள் வாக்களித்து குடியரசு தலைவர், குடியரசுத் துணைத்தலைவர் என்ற பதவியினரை தேர்ந்தெடுக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுத்த அரசு சரியாக செயல்படுகிறதா என கண்காணிக்க உருவாக்கப்பட்டதே இந்த இந்த சட்டம். அப்படியானால் மாநில ஆளுனரை ஏன் தேர்ந்தெடுக்காம்ல நியமிக்கிறார்கள் ஏன் என யாராது சிந்தித்து கேட்டதுண்டா. கேட்க மறுக்கும் ஒவ்வொரு வாக்காளனும் இந்த அரசமைப்பு சரி என ஒத்துக்கொண்டவன் அல்லது 'ஊருக்கானது நமக்கு' என ஆளோட்டாளாக வரிசையில் நின்று வாக்களிப்பவன் என்று தானே பொருள் கொள்ள முடிகிறது. இதில் நாம் எந்த ரகம் என்பது என்பதை நாமே தெளிந்து கொள்ளவேண்டிய காலம் கட்டாயம்.   

               இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட இந்திய சட்டங்கள் சுதரந்தரம் வாங்கிய குறைந்தது 25 ஆண்டுகள் கழித்தாவது முழுமையாக நடைமுறைப்படுத்தி உள்ளார்களா? என கேள்வி கேட்க வேண்டாம், நாம் யாரிடமாவது விவாதித்தது உண்டா?. காரணம் இந்திய அமைப்பு முறை சரியாக இருக்கிறது என நம்பி அல்லது பொதுப்புத்தியில் வாக்களிக்கிறோம் என்றே பொருள் கொள்ளவேண்டியதாகவுள்ளது.   

பண்ணையாளாக கஞ்சிக்கு வேலை செய்திடும் கூலி தொழிலாளி
            இந்தியா விடுதலை அடைந்து 1974 வரையிலும் பெருவாரியான நிலங்கள் மிட்டா மிராஷ் பாளையக்காரர்கள் வசமிருந்தது. கோயில் மடங்களும் இதில் அடக்கம். இந்த நிலத்தில் உழுது கப்பம் கட்டிய வரும் மக்களுக்கு இதுநாள் வரை இந்திய அரசு நிலம் கொடுக்க முன்வரவில்லையே. மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் தனிப்பட்ட முயற்சியால் நிலமற்றவர்களுக்கு இரண்டு ஏக்கர் நிலத்தை வழங்க முயற்சி எடுக்கப்பட்டது. அரசு அலுவர்களின் சாதி ஆதிக்கத்தாலும், உள்ளூர் ஆதிக்க சாதியினரின் தலையீட்டாலும் உரிய பயனாளிகளுக்கு போய் சேரவில்லை, அப்படியே பயனாளியாக இருந்தவகள் பெரும்பாலனாவர்களின் பெயர் பொய்யானவை என இந்திய அரசின் ஆடிட்டிங் ரிப்போர்ட் அறிக்கை சொல்லுகிறது. 

     சுதந்தரம் அடைந்தவுடன் வேளாண் கூலிகளுக்கு நிலம் கிடைக்க அன்னாதான திட்டமாக தனிப்பட்ட முயற்சியாக பூதான இயக்கம் மூலம் கிடைத்த நிலங்கள் இன்று ஆதிக்க சாதிகளின் கைகளில் உள்ளது என்பது வெட்டவெளிச்சம். நிலத்தில் கூலியாளாக தலைமுறை தலைமுறையாக பணிசெய்திடும் நபர்களுக்கு நிலம் கிடைக்கும் என ஒவ்வொரு ஐந்தாண்டும் வாக்களிக்கும் மனநிலையை நம்மிடம் விதைத்தவர்கள் யார் ? என்ற சிந்தனை நமக்கு வரவில்லையே ஏன். 

                                                       தேர்தல் அலுவர்கள் யார் ?          

நேற்று வரை நம்மிடம் கையூட்டு வாங்கிய விஏஓ, ஆர் ஐ, தாசிதார், நமது கண்ணுக்கு தெரியாமல் கமிசனை மட்டும் வாங்கும் ஆர்டிஓ, டிஆஒ ,கலெக்டர், (இதில் விதிவிலக்கான அலுவர்களும் இருக்கிறார்கள்) இவர்கள் தேர்தல் விதிமுறை வந்தவுடன் எப்படி உத்தமராகப் பார்க்கப்படுகிறார்கள். இந்த உத்தமர்கள், 'சட்டத்தை மீறும் நபர்கள் என கைகாட்டினால் அவர்களை சுட்டுத்தள்ள, மொட்டியில் தட்ட நேற்று வரை லஞ்சத்தைத் தவிர வேறு எதுவும் வாழ்க்கையில் அறிந்திடாத சாலையில் உன்னையும் என்னையும் வழி மறிக்கும் இவர்களை உத்தமர்கள் என பார்க்க வைக்கும் மந்திரசக்தி எது என என்றாது நாம் யோசித்தது உண்டா ? இந்த அதிகாரிகளை ஆளுனர்களாக நியமிக்கும் கூத்து தனிக்கதை. 

லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட அரசு அலுவலர்கள்


                  இந்தியாவில் சாதிகளின் இருப்பு என்பது நேற்று இன்று தோன்றியதல்ல. அதன் பெருமை சிறுமைகளை பேசுவது ஆய்விற்காக இருக்கவேண்டுமே தவிர பொதுவெளியில் பேச அனுமதித்தது யார். இப்படி பெருமை பேசி மற்ற இனக்குழுக்களை இழிவு செய்திட வேண்டிய தேவை என்ன இருக்கிறது. தேர்தலுக்கும் இதற்கும் தொடர்பு இல்லாதது போல் தோற்றமளிக்கும். ஆனால் ஆழத்தொடர்புடையது என்பதை நாம் உள்வாங்க மறுக்கும் வசியமை வைத்தவர்கள் யார். 

             உழுவபவனுக்கு நிலம் சொந்தம் என்ற கோரிக்கை கோட்பாடாக மாறும் போது இக்கோரிக்கையைத் திசை திருப்பி தொழில் மயக்கொள்கைக்குள் நம்மை இழுத்து சென்ற சக்தி எனது என்பதை நாம் ஏன் சிந்திக்கவில்லை.

             வனத்தின் உள்ள கனிம வளங்களை, மரத்தையும் கொள்ளையடிக்க வனத்திற்கும் மக்களுக்குமான உறவினை முறித்து 1883ல் பிரிட்டீஷ் இந்திய வனச் சட்டம் கொண்டு வந்தார்கள். இன்னும் இச்சட்டத்தை இன்னும் அப்படியே கடைபிடிக்கிறோம். 
காட்டுக்குள் வாழும் குடிகள் இடம் கொடைக்கானல்

         தற்போது முளைத்துள்ள புதிய ரக சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளின் பிரச்சாரத்தால் ''பட்டா இல்லாமல் வனத்திற்குள் வாழும் மக்களை அப்புறப்படுத்தலாம்'' என்று நீதி மன்றம்  கொழுத்துப்போன தீர்ப்பை வழங்கியுள்ளது. வனத்திற்கும் மக்களுக்கான உறவால் பாதிக்கப்படுவது யார்?  வனநிலங்களை 999 ஆண்டுகளுக்கு குத்தைக்கு எடுத்து வனத்தை அழித்து இரண்டாம் தர உற்பத்தியான தேயிலை, பாக்கு, பயிட்டதை இன்னும் அழிக்காமல் காக்கும் சக்தி எது என நாம் என்றாவது சிந்தித்தது உண்டா?.


நுகர்வின் வெளிப்பாடு


              தனிநபர்களின் தேவையை விட வாங்கிக்குவிக்கும் நுகர்வு கலாச்சாரத்தை நம்மூலைக்குள் திணித்து அது மரபுக்கூறாக மாறிவிட்டது என்பதை உணர்த்தாக சுற்றுச்சூழல் காவலர்கள் யாருக்காக குரல் கொடுக்கிறார்கள் இவர்களை இயக்குவது யார் ?. என்பதை நாம் யோசிக்கவே இல்லையே. வண்ண வண்ண நிறத்தில் ஆடை அணியும் நுகர்வு கலாச்சாரத்தால் தானே வனம் அழித்து சாயம் காய்ச்ச மரம் வளர்த்து அதையும் வெட்டினார்கள். இதனால் தானே சாயப்பட்டரை வளர்ந்தது. இந்தச் சாயப்பட்டரையும் உலகத்திற்கே உற்பத்தி கேந்திரமாக இந்தியாவின் தமிழகத்தில் மட்டும் உள்ளது ஏனென நம்மை பேசாமல் இருக்க வைக்கும் சதி எது?.  
பயிற்சியில் ஈடுபடும் மாவோ பொதுவுடமை கட்சியினர்
 
சாயக்கழிவாக ஓடும் நொய்யல் ஆறு
 தனியார் மயத்தாலே நாட்டிற்கு தீர்வு என சொல்லி அதை நம்ப வைத்தவர்கள் யார்? அப்படியானால் அரசு நிறுவனங்கள் புழுத்து போய் விட்டது என்பது தானே பொருள். அதனாலே அரசு துறையை விட தனியாரை மக்கள் நம்புகிறார்கள். இதை விடுதலை பெற்றதிலிருந்து அரசுப்பணியாளர்களை திருத்தம் செய்திட முயற்சிக்காத அரசு ஊழியர் சங்கத்தை கட்டிக்காக்கும் அல்லது மறைமுக ஆதரவு கரம் நீட்டும் பொதுவுடமை கட்சியினரே மிக முக்கிய குற்றவாளி. இவர்கள் லஞ்சம் வாங்கும், வாங்கிய அரசு பணியாளர்கள் மீதும், பணிக்கு செல்லாத பணியாளர்கள் மீது சங்க நடவடிக்கை எடுத்த வரலாறு உண்டா என்ற கேள்விக்கு இல்லை என்ற பதிலே மிஞ்சுகிறது. இப்படியெல்லாம் இல்லை இல்லையென்று சொல்லி ஐந்தாண்டுக்கு ஒரு முறை தேர்தலில் வாக்களித்தால் குறைகள் அனைத்தும் மாறி விடும் என நம்மவைத்த சாமியாடிகளை அம்பலப்படுத்த முடியாமல் தடுக்கும் சக்தி எது?. அப்படியே அம்பலப்படுத்தினால் அவர்களை சமூக குற்றவாளிகளாக முதலில் பிரச்சாரம் செய்திடும் அறிவு(சீ)ஜீவிகள் யார்?  

                                                               
                                                                       முடிவு தான் என்ன

சட்டத்தை இயற்றியவர்கள் நாம் தேர்த்தெடுத்த அரசியல்வாதிகள். அதை நிறைவேற்றுவது அரசு எந்திரத்தில் உள்ள அதிகாரிகள் என நாம் ஒருபோதும் சிந்தித்தது இல்லை. நம் கண்கள் மோடி வித்தையால் கட்டப்பட்டுள்ளது. அது தானாக அவிழ்த்தாலும் விழித்துப் பார்க்க மறுக்கிறோம். இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் தேர்தல்கள் நடந்துள்ளது. இந்தியப் பாரளுமன்றம் இயற்றிய சட்டத்தில் பத்து விழுக்காடு சட்ட, திட்டத்தைக்கூட ஆண்ட அரசு செய்யவில்லை. ஆளும் அரசு செய்யாது !,
எதுவுமே நடக்காது எனத்தெரிந்தும் ஏன் வாக்களிக்கிறீர்கள். உனக்கும் எனக்கும் மாற்று சக்தி எது என தெரியாத ஒரே காரணமே. அநீதியை கண்டால் கீதையின் கண்ணன் கிளம்புவான் என நம்பும் நம அதே கண்ணனாக வருபர்களை நம்ப மறுப்பது உங்கள் மூலைக்குள் இருக்கும் முதலாளித்துவ ஆன்மீக சிந்தனை மட்டுமே. 

                                            போடுங்கம்மா ஓடு... போடுங்கைய்யா ஓட்டு.

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...