Search This Blog

Sunday, 12 May 2019

சுளுந்(து)தீ தாவரம் Sulunthu tree (Ixora parviflora)




                                   சுளுந்(து) தீ 

                           Sulunthu tree (Ixora parviflora)

 
சுளுந்து மரம்



சுளுந்து மரத்தில் பிடித்திடும் (பச்சை மரத்திலும்) தீயினை கிராமங்களில் சுளுந்தீ என்றே சொல்லுவது வழக்கம். படத்தில் உள்ள இந்த மரம் தான் சுளுந்து (Ixora parviflora) . இம்மரம் கடல் தீவுகளிலும் குறிப்பாக பவளப்பாறைகள் உள்ள தீவுகளிலும், மலைகளில் காக்காபொன் நிறமுள்ள பொக்குப்பாறைகளிலும் வளரும். இந்த மரத்தில் தீ பிடித்தால் மழை பெய்தாலும் எரிந்துகொண்டே இருக்கும். இதன் வேர் முண்டுகள் நீரினை சேமித்து வைக்கும் தன்மை கொண்டது. காக்காபொன் பொக்குப்பாறைகளும் மழை நீரினை சேமித்து வைக்கும். இந்தப்பாறைகளில் முளைக்கும் தன்மை கொண்ட இந்த மரம் நார்தசைளுடன் எண்ணை பசை தன்மை உள்ளதாக இருக்கும். ஒரு முழம் உள்ள தடியின் எடை சுமார் 1.5 கிலோ கிராம் எடை கொண்டதாக இருக்கும். காய்ந்தாலும் இதன் எடை வெகுவாக குறையாது. கோடை காலத்தில் பட்டுபோன மரம் போல் தெரியும் ஆனால் மழை பெய்த மூன்றாம் நாள் தளைத்து விடும். இதன் பூ, பிச்சிப்பூ போல் இருக்கும். சுளுந்து மரங்களே கடந்த தலைமுறையின் வெளிச்சத்திற்காக விளக்காகப் பயன்பட்டது. விளக்கு போல் தீ நின்று எரிவதால் சுளுந்தீ என மகளின் புழக்கச்சொல்லானது. இம்மரம் மேற்குத்தொடர்ச்சி மலையில் அதிகமாக உள்ளது. மன்னார் வளைகுடா தீவுகளிலும் படர்ந்து கிடக்கிறது. 
 
தற்போதும் கடலில் மீனவர்களின் வெளிச்சத்திற்கு இந்த மரமே பயன்பாடு. இந்தத்தடியில் தீயை வைத்து கடல் நீரில் போட்டாலும் எரிந்து கொண்டே மிதக்கும். இதனால் தீ கட்டுப்படாமல் தீவுகளில் பரவியிடுவதால் மீனவர்கள் சுளுந்தீ தடியை பயன்படுத்த வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.  இருப்பினும் செலவில்லாத பயன்பாடு என்பதால் தடையை மீறி மீனவர்கள் பயன்படுத்துகிறார்கள். கடலுக்குள் செல்லும் வனத்துறையினருக்கும் இதைப்பயன்படுத்தியே ஆகவேண்டிய சூழல் என்பதால் மீனவர்கள் சுளுந்து பயன்படுத்த தடைவிதித்திருந்தாலும் மனிதபிமான அடிப்படையில் அரசு கண்டுகொளவதில்லை.  
 
சுளுந்து மரம் குறித்து மதுரை மவட்ட விவசுவடி (THE MADURA COUNTRY A MANUAL) நூலை 1898ல் எழுதிய ஜெ,கெச். நெல்சன் (J.H.NELSON  ICS)  விரிவாகவும்  வியப்பாகவும் பதிவிட்டுள்ளார்.  
கடலில் உள்ள சுளுந்தீ மரம்



தீ பற்றவைக்கும் போது
மதுரை மாவட்ட விவரச்சுவடியில் உள்ள பதிவு




 சுளுந்தீ மரம் இடம் வருசநாடு அருகே உள்ள வாலிப்பாறை


சிறு செடியாக உள்ள சுளுந்தீ மரம் மரத்தின் அருகில் இருப்பவர் வாலிப்பாறை சடையன்.


1 comment:

  1. ஒரு புத்தகத்திற்கு அதன் பெயர்தான் வாங்கி வாசிக்கும் தூண்டில் .அது எனக்குத் தேவையில்லை ஒரு சமூகத்தின் கண்ணீர் எத்தனை அவலமானது என்பதற்காக விற்பனையின் முக்கியத்துவத்தை எறிந்து விட்டு விதியின் விளையாட்டை பதிவு செய்தமைக்கு விலையில்லை .இதை வாசிக்க தூண்டிய முகநூலின் - அம்மு ராகவுக்கு நன்றி.

    ReplyDelete

முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு

  நூலதிகாரம் நூல் முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு ஆசிரியர் ; தி. சுப்பிரமணியன் வெளியீடு ; அடையாளம்   ‘முந்தி பிறந்தவன் நா...