Search This Blog

Monday 27 May 2019

விலங்கென்ற மனிதனும் மாடும்




                    விலங்கென்ற மனிதனும் மாடும்



காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த மாட்டுக்கறி தடைச்சட்டத்தை கையில் எடுத்த பா. சில திருத்தங்களோடு புதிய சட்ட வரையரையால் பல கொலைகளை நிகழ்த்தி மீண்டும் ஆட்சியை பிடித்து விட்டது. இந்த மாட்டு அரசியலில் சர்வதேச பின்னனி இருக்கும் தமிழகத்தில் நடத்திய மஞ்சுவிரட்டு போராட்டமும் இதன் அடிவருடியே அரசு அனுமதித்தது. ஆனால் இங்கு அதன் போக்கினை பண்பாடு விழுங்கியதால் அதன் இலக்கு தோல்வியைத் தழுவியது. 

 மாடு தடைசட்டத்தை இந்தியா முழுக்க பரப்பிட சங்பரிவார் குழுக்களுக்கு ஆலோசனை மய்யமான செயல்பட்டது பிரிட்டனை சேர்ந்த பீட்டா அமைப்பு. அதன் இலக்கு இந்தியாவில் பொதுவுடமை சித்தாந்தம் எந்தவடிவத்திலும் முளைத்துவிடக்கூடாது என்பது தான். அதன் பணியை சிறப்பாக செய்து இரண்டாவது முறையாக பா.ஜ அரசை ஆட்சி அமர்த்திட்டார்கள். இனி இந்திய துணைக்கண்டத்தில் துப்பாக்கி சத்தம் மட்டுமே கேட்கும். பிரதமர் அதிபராவார். ஜனாதிபதி மாளிகை சுற்றுளா தளமாக்கும் என்பது ஆருடம் இல்லை. 




மாடு தடை சட்டத்தின் வரலாற்றை பின் நோக்கி பார்ப்போம்.

மன்னர் ஔரங்கசீப் தில்லி சுல்தானாக ஆட்சி செய்த போது போபாலில் உள்ள சைவ மடம் + காசி மடத்தை சேர்ந்த சாமியார்கள் 1000 காசுகளுடன் சென்று சுல்தானை வணங்கி ''மாடுகள் குறைந்து விட்டது ஆகவே மாட்டினை கறிக்காக கொள்ளுவதை குறைக்க ஆவண செய்திட'' வேண்டினார்கள். இவர்களின் கோரிக்கையை ஏற்ற ஔரங்கசீப் மாடுகள் கறிக்காக வெட்டுவதை குறைத்திட ஆணையிட்டார். அதன் பின்பு பிரிட்டீஷ் இந்தியாவில் கறிக்காக மாடுகள் கொல்லைப்படுவது குறித்தது. இது குறித்து  இங்கிலாந்து பாரளுமன்றத்தில் அப்போது விவாதிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை இல்லை. பிரிட்டீஷ் இந்தியாவில் பாலகங்காதரதிலகர் மாடுகளைக் காக்க வேண்டித்தான் முதன் முதலாக கொல்கத்தாவில் போராட்டம் நடத்தினார். இதுவும் விடுதலைப்போராட்ட வரலாறாக பதிவிடப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ்சில் இருந்த சனாதனவாதிகள் மாட்டு அரசியலை தொடர்ந்து கையிலெடுத்து வந்தார்கள். இதன் தொடர்ச்சியாகவே பசுவதை சட்டம் காங்கிரஸ் அரசாங்கத்தால் 1968ல் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் ''மாநில அரசு விருப்பப்பட்டால் நிறைவேற்றலாம்'' என சரத்துடன் நிறைவேற்றப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக விலங்குகள் நல அமைப்பு (பீட்டா) விலங்குகள் வதைக்கப்படுவதாக 1994ல் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் ''யானைகளை வனத்திற்குள் மரங்கள் தூக்கிட, பிச்சை எடுக்க பயன்படுத்தக்கூடாது'' என தீர்ப்பு வழங்கினார்கள். இந்த தீர்ப்பின் பின்னனியில் ''கனரக வாகன உற்பத்தியாளர்கள் இருந்தார்கள்'' என பேச்சு அப்போது இருந்தது. தற்போது யானைகள் தூக்கிய மரக்கட்டைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்படுவதை பார்க்கும் போது தீர்ப்பில் உள் நோக்கம் இல்லை என்பதை நம்பும்படியாக இல்லை. (தீர்ப்பினை உள்நோக்கம் கற்பிக்கும் இலக்கில் மதிப்பீடு செய்தால் குற்றம் எங்கிறது இன்னொரு தீர்ப்பு).

அதே போல் வேட்டையாடுவது மனித குலத்தின் பண்பு இதை ஒற்றைச் சட்டத்தால் தடுத்து விட்டார்கள். இங்கிருந்து தான் பசுவதை சட்டம் அமுலுக்கு வந்தது என்பதை இன்று பிரதமர் திரு.மோடிக்கு கண்டனம் தெரிவிக்கும் அரசியல் கட்சிகளும், கட்சி அங்கீகாரத்தை இழந்த கட்சிகளும் பார்க்கவே மறுத்தவை. வனத்திற்குள் சென்று விலங்குகளை துப்பாக்கியால் சுட்டு கொன்று, சிரித்து, ரசிப்பது என்பது வேறு, பாரம்பரிய வேட்டை கருவிகளை கொண்டு வேட்டையாடிய விலங்குகளை உணவுக்காக வேட்டையாடுவது வேறு. துப்பாக்கியால் சுட்டு எக்காலமிடுவதற்கும் உணவிற்கு வேட்டையாடுதற்கும் உள்ள வேறுபாடுகள் அறியாத ''சமூக'' ? அறிஞர்களிடம் என்ன பேசிட இயலும். உணவுக்கு விலங்குகளை கொலை செய்வதும், கொலை வெறியை வளர்ப்பதற்கு விலங்குகளை கொல்வதற்கு வேறுபாடு தெரியாத கூட்டமாகவே இன்றைய சுற்றுச்சூழல் பார்வையாளர்கள் இருக்கிறார்கள். 

2004ம் ஆண்டு கொண்டு வந்த இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி, ''பிள்ளையார் அதாவது விநாயகர் மீது உச்சா விட்டதாக நினைத்து கரட்டானை (ஓணான்) கூட அடித்தால் கூட 2000ரூ தண்டம் / கட்டத்தவறினால் ஆறு மாத காலம் சிறைத்தண்டணை. கரட்டானுக்கே தண்டத்தொகை இவ்வளவு என்றால் மற்ற விலங்குகளுக்கு சொத்தை விற்று கட்ட வேண்டும், இல்லை எனில் வாழ்நாள் முழுக்க சிறையில் கழிக்க வேண்டும் இது தான் சட்டத்தால் வந்த நமது நிலை.

அரசின் கமுக்கக் கூட்டாளிகளான விலங்கு நலவாரியத்தினர் தொடுத்த வழக்கில் ''வித்தைக் கூடாரங்களில் (சர்கஸ்) வன விலங்குகளை வித்தை காட்டவும், விளையாட்டுக்காகவும் பயன்படுத்தக்கூடாது'' எனத்தீர்ப்பு வழங்கினார்கள். கட்டுக்குள் பார்த்த தலைமுறை போய் வித்தை கூடாரங்களில் சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலங்குகளை கண்டு இரசித்த இந்தத் தலைமுறை தொலைகாட்சி பெட்டியில் மட்டுமே பார்க்க மட்டுமே முடியும். 

அடுத்த வழக்கு மிக முக்கியமானது ''இந்தியாவில் 27 % குறைவாக வனம் இருக்கிறது வனம் & சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும் வனத்தை மேம்பாடு செய்ய வேண்டும்'' என வழக்கு தொடர்ந்தார்கள் என்பதை விட வழக்கு தொடுக்க வைத்தார்கள் என்றே சொல்ல வேண்டும். ''வனத்தில் 99 ஆண்டு குத்தகை நிலங்கள் மற்றும் வருடாந்தர குத்தகை நிலங்களை, குத்தகை காலம் முடிந்த பின்பு குத்தகைக்கு விடக்கூடாது. அந்த நிலங்களை வனங்களாக மாற்ற வேண்டும். காட்டுக்குள் வாழும் பழங்குடி மக்களை அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப வெளியேற்ற வேண்டும்'' என தீர்ப்பு சொன்னார்கள். அன்மையில் வனத்தில் பட்டா இல்லாத அனைவரையும்  வெளிய்ற்ற வேண்டும் என தங்களது மெய்யான கொடூர முகத்தைக் காட்டி தீர்த்துக்கட்டும் தீர்ப்பு எழுதியது நீதிமன்றம். 

காடுகளை வனமாக்கிட சொன்ன தீப்பில் டாடா மற்றும் .வி.தாமஸ் நிறுவனங்களுக்கு 999 ஆண்டுகால குத்தகைக்கு விடப்பட்டுள்ள தேயிலை,காபி பயிரடப்பட்ட சுமார் 5லட்சம் ஹெக்டர் நிலங்கள் குறித்து நீதி மன்றமும் வழக்கு தொடுத்தவர்களும் கொட்டாவிக்கூட வாய் திறக்கவில்லை. இந்த வழக்கில் வனத்தை மேம்பாடு செய்து விலங்குகளை வாழும் இடமாக மாற்ற வேண்டும் என்பதே தீர்ப்பில் சாரம்சம். இந்த தீர்ப்பை வைத்து தான் சுற்றுச்சூழலை மேம்படுத்துங்கள் என்று  வளர்ந்த நாட்டுகள் நமக்கு ஆண்டு தோறும் கோடி கோடியாக அள்ளிக் கொடுக்கிறார்கள். காரணம் அம்மக்களின் மீத்தேன் பயன்பாடுக்கு  ஈடாக அவர்கள் நமக்கு வழங்கும் மானியம்.

பசுவதைக்கு வருவோம்....... வேட்டை சமூகமாக இருந்த மனிதன் உற்பத்தி சமூகமாக மாறியதும், வேளாண்மை உற்பத்திக்கு பயன்படுத்த முடியும் என கணித்த விலங்குகளை காட்டுக்குளே தேர்வு செய்தான். அவை நாய் ,(ஓநாய்) மாடு (காட்டு மாடு), புள்ளி மான், (சருகு மான், சம்பார் மான், கவுரி மான்), கோழி (கானக்கோழி) முதலியன. மனிதன் வேளாண்மைக்கு தகுந்தது என பலநூறாண்டுகள் ஆய்வில் தேர்தெடுத்த விலங்குகள் மீது தான், வளர்ந்த சமூகம் எனச் சொல்லிக்கொள்ளும் நாம் தொடர்ந்து தனது ஆளுமை என்ற பெயரில் தாக்குதல் நடத்துகிறோம். (அடைப்புக்குள் இருக்கும் விலங்குகள் மனிதன் அன்பிற்கு கட்டுபடாதவை) பண்டை சமூகம் கண்டெடுத்தை போல் ஏதாவது ஒரு விலங்கையாவது வளர்ந்த சமூகமான இன்று அறிமுகம் செய்யவில்லையே.

வேட்டையாட ஓடி திரிந்த சமூகம் இன்று குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டாலும் பரவயில்லை நோயாளி சமூகமாக மாற்றி விட்டனர். பசுவதை என்பது நேற்று இன்றல்ல பல் நெடுங்காலமாக செய்த முயற்சியால் இன்று வெற்றி பெற்றுள்ளார்கள். மாடு விசயத்தில் சனதானவாதிகள் தொடர்ந்து முயற்சித்து வருவார்கள் வந்தார்கள் அதநால் வெற்றி பெற்றார்கள் அவர்கள் வெற்றி அசாதரமானது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...