Search This Blog

Monday 27 May 2019

கொள்கை மனிதர்கள்



Isai Inban

 Tha Mu 

 **************************
பள்ளிக்கரணையில் வசித்து வரும் திரு அச்சுதானந்தம் பெரியார் பற்றாளர், தனது மகளுக்கு மூதேவி என்று பெயர் வைத்துள்ளார். இவர் தையல் கடைக்கு விளம்பர லேபிள் அச்சடிக்கும் போது கடவுள் இல்லை என்று அடிக்கச் சொல்ல அவர் NO GOD என்று ஆங்கிலத்தில் அடிக்க அதை தமிழ் படுத்தி திருப்பி படிக்கும் போது ஏது சாமி என்று பொருள் வருகிறது ! இப்படி ஏதுசாமி என்று அனைவரும் அழைக்க அதுவே அவரது பெயராகி விட்டதாம் ..!

ஒரு முறை நகரப் பேருந்தில் பயணிக்கும் போது ஒருவரின் காலை இவர் தெரியாமல் மிதித்து விட அவர் இவரை கண்டபடி திட்டி விடுகிறார் ! பதிலுக்கு இவர் அந்நபரை லட்டு சிலேபி என்று திட்டுகிறார். இதைக் கேட்டவருக்கு புரியாமல் கோபப்பட காவல்நிலையத்தில் பஞ்சாயத்து, இவர் சொல்கிறார் அவர் என்னை கெட்ட வார்த்தையில் திட்டினார் பதிலுக்கு நான் அவரை இனிப்பான சொற்களால் திட்டினேன் என்றாராம் ! காவல் அதிகாரி தன் தலையில் அடித்துக் கொண்டு இருவரையும் அனுப்பி வைத்திருக்கிறார் !!

இவர் கடவுள் படங்களை தலைகீழாக மாட்டி வைப்பாராம் யாராவது கேட்டால், சாமிக்கு சக்தி இருக்கு தானாக அது திரும்பி விடும் என்பாராம்.
குழந்தைகள் அது படம் எப்படி திரும்பும்என்று கேட்டால் அவர்களுக்கு சாக்லெட் தருவாராம் ! 

தனது படத்தை மாட்டி அதற்கு மாலை போட்டு வைக்க, பார்ப்பவர்கள் இறந்தவர் படத்திற்குத் தானே மாலை போடுவார்கள் ? என்று கேடடால் அப்ப தெய்வங்கள் இறந்து விட்டது தானே என்று திருப்பிக்கேட்பாராம். சங்கராச்சாரியார் படத்தை தலைகீழாகத்தான் மாட்டி வைப்பாராம், ஆனால் நடிகை சில்க்சுமிதா படத்தை ஒழுங்காக மாட்டி வைப்பாராம்.

இவர் தமிழறிஞர் திரு பாவாணன் அவர்களை மிகவும் போற்றுகிறார். இவர் சில நண்பர்களுடன் இணைந்து தமிழ் தொடக்கப்பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார் ! 72 வயதான இவர் ஒரு இளைஞனைப்போல் பெரியார் வழியில் நடப்பதுடன் பலர் செய்யத் தயங்கும் பல செயல்களை மக்கள் சிந்திக்கும்படி மிகவும் துணிச்சலாக செய்கிறார் ...! 

பொதுவாக நம் பக்கத்தில் தையல் கடைக் காரர்கள் மாலை நேரம் விளக்கு வைத்த நேரம் துணி தைக்க மாட்டார்கள், ஆனால் இவர் விளக்கு வைத்த பின்னும் துணி தைக்கப்படும் என்று அறிவிப்பு பலகையே வைத்துள்ளாராம்.
வாழ்க திரு ஏதுசாமியின் பெரியார் தொண்டறம்...!!

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...