*********************************************
நூல்; தில்லை கோயிலும் தீப்புகளும்
ஆசிரியர் வழக்கறிஞர் ; சிகரம். செந்தில்நாதன்
சந்தியா பதிப்பகம். விலை 110
''மொழி ஒரு ஆயுதம், முதலீடு, பணம் கொட்டும் வட்டிக்கடை (வங்கி), இனத்தின் அடையாளம், அறிவியல் பண்பாடு இவைகளை அழியாமல் காத்திடும் பெட்டகம். ஒரு மொழி அழிந்தால் இனமே அழியும் என்றார் மொழி அறிஞன் தேவநேயபாவணர் இதை தெளிவாக இந்தியாவில் அறிந்து தெரிந்தவர்கள் பார்ப்பனர்கள், அடுத்து ஆங்கிலேயர்கள். (தமிழன் மொழி வெறி பிடித்தவன் என துக்களக் சோ. இராமசாமி போன்றவர்கள் சொன்னதை பலரும் தொடர்ந்து பிதற்றி வருகிறார்கள்)
இந்தியாவில் மொழியை காத்திட 'சம,தண்ட,பேத' நடைவடிக்கைகளை இரண்டாயிரம் ஆண்டுகளாக எடுத்து வருபபர்கள் பார்பனர்களே.
தில்லை கோயிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு ஆறுமுகம் என்ற சிவனடியார் தேவாரம் திருவாசகம் பாட போனப்போபோது அவரை அடித்து விரட்டி தங்களது மொழி ஆதிக்கத்தை காட்டிய போது மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் முயற்சியால் (மற்றவர்களும் உண்டு) இந்த நிகழ்வு பொதுவெளியில் பேசுபொருளாது. தில்லை கருவரையில் இல்லை ஓரத்தில் அல்லது அட்டவாக்கில் படலாம் என இந்து அறநிலையத்துறையின் அதிகாரி திரு. பிச்சாண்டி இ.ஆ.ப அறிவிப்பு அறிவுசார் மக்களிடம் இருந்த வரவேற்ப்பு சாமானிய மக்களிடன் இல்லை என்பதே கசப்பான உண்மை.
(ஏன் தமிழில் பாடக்கூடாது ? சமற்கிருதத்தில் மந்திரம் பாடினால் என்ன. எதாவது மொழியில் இருக்கட்டுமே. கடவுள் என்பது ஒரு பிம்பம், குறியீடு தானே. அந்தக் கல்லுக்கு எந்த மொழியில் பாடினால் என்ன?, இப்படி கேட்டு, எழுதிய பொதுவுடமை சிந்தனையாளர்களும் இருக்கத்தானே செய்தார்கள்)
தில்லை கோயிலில் இருக்கும் பானர்களான தீட்ஷிதர்கள் தனிக்குழுவா? அல்லது அவர்கள் சைவர்களா? இவர்களின் பூர்வீகம் எது? (வானத்திலிருந்து தொப்பென விழுந்தவர்கள் என்பது நம்பிக்கை அதாவது கீதையை இன்றைய வானோலி(ளி) மூலம் கேட்டு எழுதியது போல்).
''1882ல் தில்லை கோயில் தில்லை வாழ் தீட்ஷிதர்களின் தனி சொத்து. பொது சொத்து அல்ல'' என இவர்கள் பிரிட்டீஷ் இந்தியாவில் வழக்குப்போட்டதில் துவங்கி, தமிழில் அர்சனை செய்யலாம் என்பதில் கதறி அழுத ஆறுமுகசாமி வழக்கு வரை எத்தனை ஆயிரம் வழக்குகளை தில்லை தீட்சிதர்கள் தொட்டுத்துள்ளனர். இவர்கள் வாதமெல்லாம் சமற்கிருத மொழியை காத்திடுவதை தவிர வேறு இல்லை என்பதை என்பதை முழு நூலாக தொகுத்துள்ளார். இவர் ஆறுமுகசாமி வழக்கில் வழக்கறிஞராக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தில்லை பார்ப்பனர்கள் சொல்லுவது போல் அது சைவ மடம் மட்டும் அல்ல அது வைணவத்தளமும் கூட என்பதை தெளிவாக பதிவிட்டுள்ளது நூல். அதே போல் நீதி மன்றம் தீட்ஷிதர்கள் மடாதிபதிகள் போன்றவர்கள் என நீதிமன்றம் மூலம் தீர்ப்பு வாங்கி வைத்துள்ள செய்தி, கோயில் சொத்துக்கள் எங்களது தனி சொத்துக்கள் என தீப்பு பெற்ற தகவல்கள், கடைசியாக தமிழில் அர்சனை செய்திடக்கூடாது என தீர்ப்புகளைப் பார்க்கும் போது இந்த விவகாரத்தில் ''மக்கள் புரட்சி'' மட்டுமே தீர்வு என்பதை மீண்டும் மீண்டும் சிந்திக்கவைக்கிறது. காரணம் ''மொழி என்பது அதிகாரத்தின் பிறப்பிடம்'' என்பார்கள் மொழி அறிஞர்கள்.
சிற்றம்பலம் என்றால் என்ன, தில்லையில் உள்ள காளி கோயில் வரலாறு, நீதி கட்சியையும், திராவிட கட்சியும் தமிழை வழிப்பாட்டு மொழியாக்கிட எவையெல்லாம் தடையாக உள்ளது என்பதை தெளிவாக விளக்கியுள்ளார் நூலாசிரியர்.
இந்த நூலிலிருந்து ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது சோழன் காலத்தில் கோயிலில் வழிப்பாட்டு மொழியாக இருந்த தமிழை அப்புறப்படுத்தினார்கள் என்பதை யூகிக்க வைக்கிறது.
இந்தக்கோவில் சொத்துக்களை தீட்ஷிதர்கள் எப்படியெல்லாம் கொள்ளையடிக்கிறார்கள் என்பதை வழக்குகளே தெளிவுபடுத்தியுள்ளார். ஆனாலும் நீதிமன்றம் அவர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டுள்ளதைப் பார்க்கும் போது, பார்பனர்களிடம் மட்டும் தமிழ்தாய் வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளதைப்போல வழக்கொழிந்த சமற்கிருந்தம் போல் இந்தியாவிலிருந்து அப்புறப்படுத்த வழிபாட்டில் தமிழில் நடந்தால் போதும் அது தானாக அழிந்தொழிந்து விடும். இதை இந்திய ஒன்றிய பாரளுமன்றமோ, நீதிமன்றமோ செய்யாது, மக்கள் மன்றமே செய்யவேண்டும் என்பதை தெளிவாக உள்வாங்கி நூலினை முடித்துள்ளார் நூலாசிரியர் 'தோழர்' செந்தில்நாதன்.
மொழி என்பது பேராயுதம் என்பதை தமிழர்கள் உணர உணர்த்தியுள்ளார் ஆசிரியர். அதே வேளையில் சைவக்கோயிலுக்குள் பெருமாளும் வைணவக் கோயிலுக்குள் சிவனும் அரசுக்குள் அடங்கி விடும் என்பதை புரியவைக்கிறார். மொழி என்பது பணம் காய்ச்சிடும் மரம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார் ஆசிரியர்.

No comments:
Post a Comment