Search This Blog

Friday 31 May 2019

மொழி காத்த மூலவனார்


     


தமிழ் உரிமை வேட்கை பாடல் - எழுதியவர் வேதாந்தி சுவாமி அருணகிரிநாதர் (1937 ல் இந்தி எதிர்ப்பு போராட்ட கால கட்டத்தில் எழுதப்பட்டது. இன்றைய அரசியல் தலைவர்களுக்கு அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பாடல்.

தண்டமிழ் நாட்டின் தலைவர்களேதமிழ்த்
தாய்படும் இன்னல் தவீர்ப்பீர்களேஉங்கள்
பெண்டுபிள் ளைக்கிடை யூறு நேர்ந்தால்நீங்கள்
பேசாதி ருப்பீரோ சொல்வீர்களே
அப்பனும் அம்மையும் பேசுந்தமிழ்மகவும்
அம்மா அம் மாவென் றழைக்குந் தமிழ்- என்றும்
ஒப்புயர் வில்லாதே ஓங்கு தமிழ்பூ
வுலகின் முதன்முதற் றொன்று தமிழ்
சித்தர்கள் தேடிய செல்வத்தமிழ்பாண்டி
சேர சோழ மன்னர் காத்த தமிழ்நம்
முத்தமிழ் சங்கப் புலவர்முனிவர்கள்
முற்று துறந்தோர் வளர்த்த தமிழ்
குறுமுனி வாரிக் குடித்த தமிழ்இளங்
கோவள்ளுவ வரள்ளிக் கொண்ட தமிழ்-கண்ணிற்
கருமணி போன்றெளிர் கன்னித் தமிழ்கம்பர்
காளமே கம்பொழி கவிதை தமிழ்
நால்வர்கள் ஆழ்வார்கள் நாயன்மார்கள்திரு
நாவினில் நின்று நடித்த தமிழ்நாம்
பாலுண்ணுல் போதே பருகுந் தமிழ்நூலின்
பயனொரு நான்கும் அளிக்கும் தமிழ்
சிலம்பு வளைமணி மேகலையும்குழை
சிந்தா மணியணி தெய்வத் தமிழ்-இன்று
புலம்பி தவித்துடல் புண்படப்பார்த்து நாம்
பூமியில் வாழ்தல் புகழுடைத்தோ
நாவிற்கினிய தமிழ் மொழியிற்பிற
நச்சு மொழிசொற் புகுத்தி விட்டுநாம்
சாவியாய்ப் போன பதர்களைப் போல்வீட்டிற்
சாம்பிக் கிடத்தல் தகுதி கொலொ.
ஆங்கில பல்கலை சொற்களுக்குச்சரி
யான தமிழ்ச் சொல் லமைப்பதற்குமிக
ஆங்கில முந்தமிழும்படித்தோர்பிறர்
அன்றி தமிழர்கள் யாருமின்றே
தமிழிற்பல கலைச்சொல் லாக்குங்குழுவில்
தமிழர்யா ரேனும் ஒருவருண்டோநம்
அமிழ்தத தமிழை அருவருப்- பாய்ப்பேசும்
அயல்மொழி யார்க்கிதிலென்ன வேலை.
இந்திநம் நாட்டிற் பொ துமொழியாகிடின்
எத்துணை தீமையுண் த்துணையும்- இன்று
நந்தமி ழிற்கலைச் சொல்லாக்கமுன்வந்தோர்
நயவஞ்சச் சூழ்ச்சியி னாலேயுண்டாம்
ஊர்களின் பேர்களை மாற்றினர்கள்மக்கட்
குள்ள தமிழ்ப்பேரையும் மாற்றினார்கள்- தெய்வப்
பேர்களைக் கூடப்பு ரட்டினாரின்றுநாம்
பேசுந்த மிழ்க்கேஉ லைவக்கின்றார்.
பைந்தமிழ் மாணவர் பல்கலையைப்பிற
பாடையின் மூலம் பயில்வாரானால்நம்
செந்தமி ழிற்கலை சொல்லேயிலையென்று
தீண்டவு மாட்டார் தெரிவீர்களே
புற்றினிற் பாம்பு புகுந்ததக்கறையான்
புற்றினைப் பாம்புபுற் றென்பது போல்அந்தோ
மற்றவர் புக்க இடந் தந்ததாற்றமிழ்
மாநிலங் கூடத தாமென்கிறார்.
இன்னமும் நீங்கள் விழிப்படையாதையோ
ஏமாந் திருந்தா லெதிர்காலத்தில்உங்கள்
பன்னலம் பைந்தமிழ் நாடுமுழுவதும்
பார்ப்பன மயமாம் கண்டு கொள்வீர்.

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...