Search This Blog

Friday 8 November 2019

மெக்லாயா (Macaulay) கல்வி முறை எதிர்ப்பவர்களுக்கு;


                                         மெக்லாயா (Macaulay) கல்வி முறை எதிர்ப்பவர்களுக்கு;

                                   ****************************************************************


01.மெக்லாயா கல்வி முறை வருவதற்கு முன்பு தமிழகத்தில் அல்லது இந்திய துணைக்கண்டத்தில் என்ன மாதிரியான கல்வி முறை நடைமுறையில் இருந்தது.


02. தமிழகத்தில் பாண்டியர் ஆட்சியில் சைவ மடங்கள் மட்டுமே கல்வியை போதித்தது. சைவ மடங்கள் நாயக்கர் ஆட்சியை எதிர்க்கிறார்கள் என்பதற்காக மடங்களுக்கு வழங்கப்பட்ட இறயிலி நிலங்கள் (தேவதானம் - கோவில் நிலங்கள்) ரத்து செய்யப்பட்டது. (சான்று - நாயக்கர் கால செப்பேடுகள், கல்வெட்டுகள் மதுரை தொல்லியல் துறை வெளியீடு. பாண்டியர் கால கல்வெட்டுகள் தொகுதி மூன்று)


03. நாயக்கர் ஆட்சியின் இறுதி காலமான விஜய சொக்கநாதன் ஆட்சியில் மீண்டும் சைவமடங்களுக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டு மாணாக்கர் சேர்க்கப்பட்டது. இதன் விளைவாக சிற்றிலக்கியங்கள் நாயக்கர் காலத்தில் எழுதப்பட்டன. அக்காலத்திலே விதவிதமான பள்ளுப்பாடல், குறவஞ்சி, காவடி சிந்து, நாடகங்கள் உருவானது.


04.. ஆகம கோயில்களில் உள்ள மடங்கள் ஆகம கல்வியை பார்ப்பனர்களுக்கு மட்டுமே வழங்கியது. (பாண்டியர் சோழ வரலாறு ஆசிரியர் பரந்தாமனார்) தமிழகத்தில் மெக்கலாயா கல்வி முறைக்கு முன்பு ஆண்ட நாயக்கர் அரசு வரை இந்த நடைமுறை அமுலில் இருந்தது.


05. மெக்கலாயா கல்வி அல்லது கல்வி பரவலாக்கத்தித்தின் தேவை என்ன. பிரிட்டீஷ் ஆட்சியில் ஏற்பட்ட உலகமயமாக்கத்தின் விளைவாக வந்திறங்கிய அல்லது இந்தியாவை நுகர்வு காலச்சாரத்தின் உற்பத்தி கேந்திரமாக ஆக்கியன் விளைவாக படித்தவர்கள் தேவைப்பட்டார்கள். அதனால் கல்விக்கூடங்கள் திறக்கப்பட்டன.


06. அரச மரபில் அல்லது பிரிட்டீஷ் ஆட்சிக்கு முன்பு குடியானவன், குயவன், கம்மாளன் நாவிதன், ஏகாலி என்பவர்கள் தத்தமது வேலையை செய்தது போல் படிப்பினை புலவர், பறையர், வள்ளுவர் , பார்ப்பனர் , சில பகுதிகளில் பிள்ளை வகுப்பினரும், சில பகுதியில் தற்போது பிற்படுத்தப்பட்டோராக அறியப்படும் யாதவர், முதலி பிரிவினரும் படித்து குடியானவன் மற்றும் இதற குடிதொழிலாளர்களின் கல்வி தேவையை பூர்த்தி செய்து வந்தனர். இவர்கள் சைவ மடங்களில் குலகல்வியை பெற்றனர் என்பது ஆய்வின் திண்ணம்.


07. மெக்லாயா கல்வி முறையில் பஞ்சமனும், சூத்திரனும் படிக்க வைக்க வேண்டிய தேவை பிரிட்டீஷாருக்கு இருந்தது. அதனால் படிக்க வைத்தான். தற்போது இதை மாற்றுவதால் என்ன மாதிரி கல்வி திட்டம் வகுத்துள்ளார்கள் என்பதை எதிர்ப்பவர்களின் இருப்பிடம் அறிந்து நாம் எதிர்ப்பதையும், ஆதரிப்பதையும் செய்தாக வேண்டியுள்ளது.


08. பிரிட்டீஷார் கொண்டு வந்த கல்வி முறையை மாகாத்த காந்தி அவர்கள் ''சுயமுன்னேற்ற திட்டத்துடனுடான கல்வி தேவை'' என்றுதானே வழியுறுத்தினார். அதே போல் சமூக சீர்திருத்தவாதியான திரு. இராசாராம்மோகன் ராய் போன்வர்கள் பிரிட்டீஷார் கல்வி முறையை ஆதாரித்தனர். 1930 பின் பிரிட்டீஷாரை நார்நாராக கிழித்து எழுதிய பேராசிரியர் தாதாபாய் நௌராஜி, இராதே கந்தா போன்றவர்கள் இக்கல்வி முறையை ஆதரித்தனர் என்பதை நாம் மறந்து விட்டோம்.

09. பிரிட்டீஷாரின் கல்வி முறையால் ஒவ்வொரு இந்தியனும் ஆங்கிலேயனாக இருப்பான் என்று மெக்கலாயா குறிப்பை மட்டும் பார்ப்பவர்கள் தற்போது வகுப்பட்டுள்ள கல்வி முறையால் ஒவ்வொரு இந்தியனும் பார்ப்பன அல்லது இந்து வெறியாள்களின் அடிவருடியாக மாறமாட்டான் என சொல்ல மறுப்பதில் உள்ளது நமது எதிர்ப்பு.

10. பிரிட்டீஷார் கல்வி பொருளாதார திட்டம் குறித்து ஆய்வு நூல்களை எழுதிய பேராசிரியர் பிபின் சந்திரா ''இந்தியா முதலாளித்துவத்தை சுவைக்காமலே உலக முதலாளித்துவத்திற்குள் தங்களின் உற்பத்தி கேந்திரமாக மாற்றிய பிரிட்டீஷார் இந்தியர்களை கூலிகளாக்கி விட்டனர்'' என குறிப்பிடுவதை உற்றுக்கவனித்தால் உலகமயமாக்கல் சிக்கலுக்கு பிரிட்டீஷ் இந்தியா எந்தளவுக்கு இழுத்து சென்றது புரிந்து கொள்ள முடியும்.



No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...