Search This Blog

Sunday 1 December 2019

வெளிநாட்டில் மணல் அள்ளினால் அந்த நாட்டில் சூற்றுச்சூழல் கேடதா?


வெளிநாட்டில் மணல் அள்ளினால் அந்த நாட்டில் சூற்றுச்சூழல் கேடதா

''தமிழகத்தில் அரசு அனுமதிக்கப்பட்ட கட்டிங்களுக்கு ஒரு நாளுக்கு தேவையான மணல் அளவு 25ஆயிரம் லோடு அதாவது 7.5 லட்சம் யூனிட்.
தமிழகம் முழுவதிலும் அரசு அனுமதி வழங்கியுள்ள 220 மணல் குவாரிகளில் நாள் ஒன்றிற்கு குறைந்தது 16 லட்சம் யூனிட் மணல் அள்ளப்படுகிறது.இந்த மணல் எங்கு செல்கிறது.ஒரு நாளுக்கு தலா 30 ஆயிரம் யூனிட் கார்நாடகா,ஆந்திரா,கேரள மாநிலங்களுக்கு செல்கிறது.மாநிலம் விட்டு மாநிலத்திற்கு மணல் கொண்டு செல்ல மணல் அள்ளப்படும் மாவட்டத்தின் கலெகடர் தலைமையில் உள்ள சுற்றுச்சூழல் கமிட்டி அனுமதி வழங்கியதன் அடிப்படையில் அமைச்சரவை ஒப்புதல் தரும்.நேரடியாக அமைச்சரவை மட்டும் அனுமதித்து விட முடியாது.மாநிலம் தாண்டி செல்லும் மணல் அந்த மாநிலத்தின் அரசு பணிக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.தமிழக அரசு கடந்த ஐந்தாண்டுகளாக வெளி மாநிலங்களுக்கு மணல்,கற்கள்,செங்கல் இவைகளை கொண்டு செல்ல அனுமதி வழங்கவில்லை.

ஆனால் மாலத்தீவு, ஆப்கானிஸ்தான்,பலுகிஸ்தான் மற்றும் அரபு நாடுகளுக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்கள் வழியாகவே கப்பல்களில் மணல் செல்கிறது.கிரானைட் குவாரி முறைகேடுகளை ஆய்வு செய்த சகாயம் குழுவினர் தூத்துக்குடி துறைமுகத்தில் மணலும் கடத்தப்படுவதை அப்போது அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.ஆனால் குவாரி பூதம் இருக்க இன்னொரு பூதத்தை அவிழித்து விடுகிறார் சகாயம் என இந்த தகவலை கமுக்கமாக அமுக்கி விட்டனர். அண்டை மாநிலங்களுக்கு மணல் கடத்தலை தடுத்தாலே இறக்குமதி தேவையில்லை

இறக்குமதி என்பது அறிவுலக பூசாரிகள் நம்மை திசை திரும்பி காட்டுக்குள் ஓட்டி விடும் முகாந்தரமே. வெளிநாட்டில் மணல் அள்ளினால் அந்த நாட்டில் சூற்றுச்சூழல் கேடதா? என்ன சிந்தனை? நீதி மன்றங்கள் உலக வங்கிகளின் கிளைகளாக ஆக்கப்பட்டு இருபது ஆண்டுகளாக்கி விட்டது. இந்துவா என்பது உலக வங்கியின் பொருளாதார கிளைதான் அவர்களுக்கு மறைமுகமாக பல 'இந்து'க்கள் ஆடுவார்கள். ஆடுகிறார்கள்.

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...