Search This Blog

Monday 9 December 2019

சமூகமும் அரசியலும்


                                                             சகிப்பு தன்மை


               இந்த நாட்டில் பறப்பய, பள்ளப்பய, சக்கிலிசய பய என அடிமைகளை உருவாக்கி வைத்து விட்டு அவர்கள் கொஞ்சம் படித்து பதவிகளில் வந்தவுடன் 'பாருடா இவங்கள் ஆடுற அட்டத்தை' என சொல்லுவதை நாம் சகிப்பு தன்மையாக எடுத்துக் கொண்டோம்,ஏன் என்றால் சொன்னாவன் பிற்படுத்தப்பட்டவன். கேட்ட நாமும் பிற்படுத்தப்பட்டவனர்கள். அறிவு சமூகத்தை சார்ந்த நபர்களாக காட்டிக் கொள்ளும் நாம் முதலாளித்துவ இந்துத்துவ சிந்தனையாளர்களுக்கு எதிர்ப்பை காட்டி இருந்தால் அவர்கள் மட்டுமல்லாது அல்லா, ஏசு, நானக், இராமன் பெயரால் ஆடும் நபர்கள் அடங்கி இருப்பார்கள்.

ஏதோ இஸ்லாமியர்கள் மட்டும் இந்திய துணை கண்டத்தில் அச்சத்தில் இருப்பதாக அறிவு சார் வட்டம் கொதிக்கிது.அவர்கள் கொதிப்பை ஏற்றுக் கொள்வோம். அவர்களுட்ம கைகோர்ப்போம்.அதற்கு முன்பு சிறிய கேள்வி

01. இந்த நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது இன்று நாம் காட்டும் அடக்கு முறைக்கு அவர்கள் எழுச்சி காட்டாமல் இருப்பதற்கு சகிப்பு தன்மை என்று பொருள் கொள்வோமா? .இதை நாம் ஏற்றுக்கொள்வதாக இருந்தால் இஸ்லாமியர்களோ அல்லது அறிவு சார் வட்டம் சொல்லும் 'சகிப்பு தன்மை அற்ற நாடு ' என்பது வெற்று கூச்சல் தானா.

02. பணம் இருப்பவனுக்கு ஒரு கல்வி பணம் அற்றவனுக்கு ஒரு கல்வி இதை ஏற்றுக் கொள்கிறோம் இதற்கு பெயர் சகிப்பு தன்மையா ?
03. நில உச்ச வரம்பு சட்டத்தில் தனி மனிதன் 12.5 ஸடாண்டர்டு ஏக்கர் நிலம் மட்டும் தான் வைத்திருக்க வேண்டும் இதை இன்று வரை நடை முறை படுத்தவில்லையே இதை ஏற்றுக் கொள்வதும் சகிப்பு தன்மை ? இப்படியே எத்தனையை பட்டியல் இடுவது.

இஸ்லாமும் கிறித்துவமும் இந்துவும் சீக்கியனும் கத்தும் சகிப்பு தன்மை என்பது முதலாளித்துவத்துக்கு அதாவது அவரவர் நம்பிக்கைகளை சமூக சட்டங்களாக இருப்பது சிதைந்து விடக்கூடாது என்பதற்காக மத சாயத்துடன் கத்தும் வெற்று கூச்சல்.

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...