Search This Blog

Friday 8 May 2020

மலைகளை பேசவிடுங்கள் 'மௌனத்துக்கு கீழே குமுறல்கள்'

  •                                    நூலதிகாரம்

  • நூல் ; மலைகளை பேசவிடுங்கள்
               'மௌனத்துக்கு கீழே குமுறல்கள்'  

  • ஆசிரியர் ; மல்லியப்புசந்தி திலகர் 

  • ''மனிதர்கள் பண்டங்களைப்போல் மாற்றம் செய்யப்படுவது மன்னர்கள் ஆட்சியில் மட்டுமல்ல மக்களாட்சிலும். இதனால் தான் நாடற்றவர்களை நாடெங்கும் உருவாக்குகிறார்கள்'   - மல்லியப்புசந்தி திலகர் - 


  • நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு கோயில் திருவிழாவில் திரைப்பட பாடல் இசைதட்டு போல் வட்ட தட்டுகளில் படம் வரைந்து அதை சுற்றி விடுவார்கள். அதை சுற்றி நிற்பவர்கள் ஒவ்வொரு படத்திற்கும் ஒருவர் பணம் கட்டி இருப்பார். சுற்றிய தட்டு தானாக நிற்கும் இடத்தில் உள்ள படத்திற்கு பணம் கட்டியவர் வெற்றி பெற்றவராக அறிவிப்பார் இசைத்தட்டை சுற்றியவர்.  பணம் கட்டிவர்கள் பணத்தை மொத்தமாக எடுத்து அதில் ஒரு பங்கினை தட்டினை சுற்றி விடுபவர் வைத்துக்கொண்டு வெற்றி பெற்றவருக்க்கு மீதிப்பணத்தைக்கொடுப்பார். 


  • இவர்களை 'பார்மாகாரங்க'. இங்கிருந்து போய் அங்க பிரச்சனையாகி மறுபடியும் நம்மவூருக்கே வந்துட்டாங்க பிழைப்பு தெரியாமல் இப்படி வேலை பார்க்க அரசாங்க அனுமதிச்சிருக்கு' என சொல்லுவார்கள். பின்னாலில் இந்த விளையாட்டை சூதாட்டம் என தடை செய்தனர்.

  •  ''பிரிட்டீஷார் பர்மா இலங்கை போன்ற நாடுகளுக்கு தமிழர்களையும் மிகக்குறைவாக வடமாநிலத்தவர்களை பிடித்து சென்று காபி, தேயிலை இரப்பர் தோட்டங்களில் பணியாட்களாக குடியமர்த்தினர். 1960 காலங்களில் பர்மாவில் ஏற்பட்ட இரணுவ புரட்சி  காரணமாக தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டு அகதிகளாக தமிழகத்தில் வந்தார்கள். இவர்களில் பொருளாதார பலமில்லாதவர்கள் இப்படியான சூதாட்டங்களில் ஈடுபட்டனர்'' என்ற செய்திகள் அறிந்திருப்பீர்கள். இந்த மக்கள் குடியேற்றறப்பட்ட பகுதி ''பர்மா காலனி'' என்று அழைத்தார்கள். கால ஓட்டத்தில் இப்பெயர்கள் மறைந்து விட்டது. அந்த மக்களும் தங்களது உறவுகளை கண்டறிந்து தமிழ் சாதிகளுடன் கலந்து விட்டனர். பர்மாவிலிருந்து வந்த மக்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் பராசக்தி. ஆனால் இந்தப்படத்தில் பர்மா அகதிகளில் வலியை சொல்லவில்லை. அது வேறு வடிவத்தில் பேசியது. 

  •  அதற்கடுத்து 1970ல் துவங்கி 1980 காலங்களில் இலங்கையிலிருந்த  பெருவாரியாக மக்கள் தமிழகமெங்கும் குடியேற்றப்பட்டார்கள். இவர்கள் குடிறேற்றப்பட்ட இடம் 'சிலோன் காலனி'. இவர்கள் ஏன் வந்தார்கள் என்ற கேள்விகளை பள்ளி,கல்லூரிகளில் பாடத்தில் துணைப்பாடமாக வைத்திருந்தால் தமிழக அரசியல் கட்சிகளை நாம் பார்க்கும் பார்வை வேறு விதமாக இருக்கும். அதனால் தான் என்னவோ வரலாற்றை மறைத்து அம்மக்களின் அழுகுரலாக, அவலமாக காட்டி நம்மிடம் இரக்கத்தை மட்டும் காட்டவைத்துள்ளார்கள்.

  • ''இந்திய விடுதலைப்போராட்டமாக 1760ல் பிரிட்டீஷாரை எதிர்த்து துப்பாக்கியை தூக்கி மண் தமிழகம். அதில் குறிப்பாக தென் தமிழகத்து பாளையப்பட்டுகள். பிரிட்டீஷார் இப்பாளையங்களை அழித்தனர். பாளையப்பட்டு தலைவர்களை தூக்கில் போட்டாலும் மக்களின் எழுச்சி குறையாமல் இருந்தது. இம்மக்கள் 'மீண்டும் பாளையம் கட்டுவார்கள்' என கணக்கிட்டனர் பிரிட்டீஷார்.
    இந்த மக்களை கைது செய்து அல்லது அதற்கான சூழலை உருவாக்கி பஞ்சம் என்ற பித்தலாட்ட வரலாற்றை கட்டமைத்து தனது ஆட்சி அதிகாரத்திற்குள்பட்ட கடல் தாண்டிய தேசங்களுக்கு பண்டங்களைப்போல் ஏற்றுமதி செய்யப்பட்டனர். 1806 துவங்கிய மனித பண்டமாற்று ஏற்றுமதி 1932 வரை தொடர்ந்தது. இப்படி பண்டமாக ஏற்றுமதியானவர்கள் தான் இந்த சிலோன் காலனி மக்கள். இவர்களுக்கு பின்னால் இந்திய விடுதலை வரலாற்று புதைக்கப்பட்டுள்ளது'' என பதிவிட்டுள்ளது (Subaltern Lives) சப்பால்டன் லைவ் இன் கலோனியல் பிரிடு, மற்றும் சவுத் இந்தியன் ரிபெல்லியன் (South Indian Rebellion - The First War of Independence) என்ற நூல்கள். 
    பிரிட்டீஷ் ஆட்சியில் இலங்கை தேயிலை தோட்ட பணியாளர்களான மலையக தமிழர்களின் வலியை 'மலைகளை பேசவிடுங்கள்' எனற தலைப்பில் மக்களின் வலியை பேசியிருக்கிறார் நூலாசிரியர். இவர் இலங்கை தமிழர்கள் பகுதியின் பாரளுமன்ற உறுப்பினர் என்பதை விட தேயிலை தோட்ட தொழிலாளியின் மகன் என்பதை நூலில் பதிவிட்டுள்ளார்.  
    இலங்கை தமிழர்கள் தனி ஈழம் கேட்டு போராடி மாய்ந்தார்கள். இவர்கள் வலி, துயரம் தமிழக மக்களிடம் நீங்காத வடுவை ஏற்படுத்தி விட்டது. இதனுள் காலனி ஆட்சியில் தமிழகத்திலிருந்து கொண்டு சென்று தேயிலை தோட்டத்தில் குடியேற்றப்பட்ட தமிழர்களின் வலியை நாம் பேசியிருந்தாலும் 'அரசியல் கட்சிகளின் விவாதப்பொருளாகலாக்கபடாதால் நாடற்றவர்களாக அகதிலாக்கப்பட்டனர். காலனி ஆட்சி முடிந்தாலும் 'காலனி' மக்களாக அறியப்படுகிறார்கள்'  என்பதை அடித்துப்பேசுகிறது நூல்.
    இலங்கையில் வளம் தேயிலை, காப்பியால் ஆனது. இந்த செல்வத்தை தங்களது வேர்வையால் உதிரத்தால் கொட்டிக்கொடுத்தவர்கள் இந்திய தமிழகர்கள். இவர்களின் வலியினை மலையகப்பாடல்கள் என்ற தொகுப்பு பல்கலைகழக ஏடுகளாக, ஆய்வாக மட்டுமே உலா வருகிறது. அதே போல் பேராசியர் இரவீந்திரனின்  சாதி தேசம், கோல்டன் டீ என்ற ஆங்கில நூல்கள், நாடற்றவர்கள் என புதினம் போன்வவைகள் பேசினாலும் பொதுவெளியில் பெரிதாக விவாதிக்கப்படவில்லை. இதற்கு பல அரசியல் காரணங்கள் உள்ளன.
    ''தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அரசின் குடிகள் கிடையாது அவர்கள் கம்பெனின் ஆட்கள். அவர்கள் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்தும் கம்பெனி கோப்புகளே (RECORD) பேசும். இவர்களின் கோரிக்கைகள் நேரடியாக அரசிடம் சொல்லமுடியாது. நமது அருகாமையில் இருக்கும் கொடைக்கானல், நிலகரி, மூணாறு பகுதி தேயிலை தோட்டத்தின் அழுகுரல்கள் தற்போது தான் வெளிவந்துள்ளது. ''மலைக்குள் கத்துபவன் குரல் மலைக்கு அவனுக்கு மட்டுமே கேட்கும்' என்பார்கள். இதில் கடல் கடந்தவர்களின் குரல் மலைகளை பேசவிடுங்கள் என்பதால் கேட்கிறதோ என்று தோன்றுகிறது.
    1800ல் இலங்கை மலைக்குள் குடியேற்றப்பட்டவர்களின் குரல், இந்தியாவிலிருந்து  1900ல் போன நடேசஅய்யர் மீனாட்சியம்மாள் தம்பதியார் புண்ணியத்தில் தொழில் சங்கம் கட்டமைக்கப்பட்டு மெல்ல மெல்ல வெளியுலகத்திற்கு கேட்டுள்ளது. காலனி ஆட்சியின் போது  இலங்கையில் நடந்த தேர்தல்களில் குடியுரிமை நிராகரிக்கப்பட்டதால் மலையக மக்கள் வாக்களிக்க முடியாமல் இருந்தனர். நடேசஅய்யரின் தலைமையிலான தொழில்சங்கத்தின் கோரிக்கையால் வாக்களிக்கும் உரிமை கிடைத்துள்ளது ''.
    இலங்கையில் உருவான இந்திய இலங்கை காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாக ஜவர்கர்லால் நேரு அவர்கள் தலைமையில் நடந்த கூட்டத்தில் மலையக மக்களுக்கு குடியுரிமை வழங்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தக்கோரிக்கையை இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழர்கள் எதிரிப்பு தெரிவித்துள்ளனர். அதையும் மீறி பிரிட்டீஷார் இம்மக்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளனர்.
    இந்த குடியுரிமை இலங்கை விடுதலை அடைந்தவுடன் பரிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் திரு. நேருவின் விடா முயற்சியால் கோரிக்கையாக பதிவாகியுள்ளது. ஆனால் குடியுரிமை கிடைக்கவில்லை. நேரு அவர்கள் இறந்த பின்னர் பிரதமராக பதவியேற்ற திரு.லால்பகதூர் சாஸ்திரி - சிறீமா  ஒப்பந்தமே மலையக தமிழர்கள் வாழ்க்கையை அடியோடு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதில் சுமார் பத்து லட்சம் மக்கள் இந்தியாவிற்கு கட்டாயமாக நாடு கடத்தப்பட்டனர்.

    300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக சொந்தங்களை இழந்து நாடு கடத்தப்பட்டவர்கள் இங்கு வந்து தனது சொந்தங்களை தேடுவதைப்பார்த்தவர்கள் மட்டுமே அவர்களின் வேதனையை உணர்ந்து கொள்ள முடியும்.

    இப்படி வந்தவர்கள் தமிழகமெங்கும் சிலோன் காலனி என்ற பெயரில் இருக்கிறார்கள். செங்கல்பட்டு முகாமில் இருந்தவர்கள் ''நாங்கள் குளிர் பிரதேசத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். இந்த வெயில் தாங்க முடியவில்லை' என அரசிடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை வைத்த போது வயதில் மூத்தவர்கள் வெயில் தாங்காமல் பலர் மாண்டனர் இச்செய்திகளைக்கூட பத்திரிக்கைகள் பதிவு செய்யவில்லை. இம்மக்களின் கோரிக்கையை ஏற்ற அரசு பிரிட்டீஷார் போல் மீண்டும் தோட்ட முதலாளிக்கு பண்டமாற்றம் செய்தனர். கொடைக்கானல் நீலகரி மலையில் உள்ள தோட்ட முதலாளிகள் இவர்களை வாங்கினார்கள். இவர்கள் குடியமர்த்தப்பட்ட இடத்திற்கு கொத்தடிமைகள் கூடாரம் (BONDED LABOUR SHED) என பொதுவெளியில் தைரியமாக பெயர் பலகை வைத்திருந்தனர். இச்செய்திகளை 1984 காலங்களில் வெளி வந்த ஜூவி , இந்து ஆங்கிலம் பத்திரிக்கை படித்தவர்கள் அறிந்திருப்பார்கள்.

     இதன் பின்னர் இந்த மக்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளை சிறிதளவு உருவாக்கி கொடுத்தது. அம்மக்களின் கடுமையான உழைப்பால் தற்காத்துக்கொண்டுள்ளனர். இது இந்தியாவிற்கு நாடுகடத்தப்பட்டவர்களின் நிலை. ஆனால் இலங்கையில் உள்ளவர்களின் நிலை என்னவாக இருக்கிறது என்பதை படம் பிடித்து காட்டியுள்ளார் நூலாசிரியர்.

  • 'மலையகத்தமிழர்களை இந்திய தமிழர்கள் என்றும், பூர்வீக தமிழர்களை இலங்கை தமிழர்கள் என்றும் சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்டனர். அதே போல் இந்த வேறுபாட்டை பத்து எடுத்துக்காட்டுகளில் பதிவு செய்து விளக்கி, ஈழ இலக்கியம் , மலையக இலக்கியம் என்ற பதிவுகளை குறிப்பிட்டுள்ளது நூல். 

  • மலையத்தில் பூர்வீகத்தமிழர்கள் எப்படி குடியேறினார்கல். பிரிட்டீஷார் போன பின்பு தேயிலை தோட்டங்கள் கூட்டுறவு ஸ்தாபன மாறியது. அதிலிம் மலையகத்தமிழர்கள் ஏமாற்றப்பட்ட விதம். புகையிலையும் சுருட்டுக்கும் எப்படி? மலையக மக்களின் அங்கமாக மாறியது. இந்த வியாபாரத்தில் குடியேறியவர்கள் யார்?. இந்தியாவில் சாதி கட்டமைக்கப்பட்டது போல் இலங்கையில் இனம் கட்டமைக்கப்பட்ட வரலாறு. அதில் மலையகத்தமிழர்கள் தனி இனமாக பார்க்கப்பட்டது, தனி ஈழம் பேசியவர்கள் மலையக மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காதது. இது குறித்த பாரளுமன்றப் பதிவுகள். ஈழப்போருக்கு முன் மலையக மக்கள்  வன்னிப்பகுதிக்கு வந்த விதம். போரில் நாடற்றவர்களானவர்கள், விடு அற்வர்களாக வன்னியில் இன்னும் பல்லாயிரம் பேர் உள்ளவை, போன்றவற்றை தொப்புள் கொடி உறவான நம்மை கேள்வி கேள்வி கேட்கிறது நூல்.

  • இலங்கை - இந்தியா விடுதலை பெற்ற போது 'மலையகத்தமிழர்களை இந்தியாவுக்கும் அனுப்பலாம் நாங்கள் ஏற்போம்' என ஒற்றை சரத்தை மட்டுமே வைத்து விளையாட்டை துவக்கியது இலங்கை அரசு. இது குறித்த சிறிமா அரசின் அறிக்கை போன்றவை நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளாக உள்ளது.

  • பாகிஸ்தான் பிரிந்த போது குடியுரிமை விசயத்தில் கவனம் செலுத்திய இந்திய அரசியல் கட்சிகள் இலங்கை மலையகத்தமிழர்கள் விசயதில் கணக்கில் எடுத்துக்கொள்ளாதன் விளைவு என்ன ?,. பாகிஸ்தானை சேர்ந்தவர் இலங்கையில் அதுவும் தமிழர் பகுதியில் பாரளுமன்ற உறுப்பினராக இருந்தது போன்ற செய்திகள் நாம் அறியாதவை.
    சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தந்தத்தின் 'மலையகத்தமிழர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தியாவிற்கு நாடுகடத்தப்படுவார்கள்' என்கிறது சரத்து. 'இருப்பினும் மலையகத்தில் வாழலாம்' என்ற கோரிக்கையும் இலங்கை அரசு ஒப்புதல் கொடுத்து விண்னப்பங்களை வாங்கியது. அதில் பலஆயிரம் நிகாரிக்கப்பட்டலும் ஏற்றவைகள் கிடப்பில் உள்ளது. போர் சூழலில் இலங்கை தமிழர்கள், மலையகத்தமிழர்கள் பலரும் தமிழகத்தில் உள்ளனர் போன்ற செய்திகளை விரிவாக பேசியுள்ளது நூல். அண்டை நாடு மட்டுமல்ல நமது உணர்வோடும் தமிழக அரசிலோடும் கலந்தவர்கள் இலங்கை தமிழர்கள். அவர்கள் குறித்த தகவல்களை அம்மண்ணின் மைந்தனே திரட்டியுள்ளார்.

      
           
    ­

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...