Search This Blog

Saturday 16 May 2020

தென் கொங்கு நாட்டில் முதல் விடுதலைப்போர்


                                                          நூலதிகாரம்


***********************************************************************************
நூல்; தென் கொங்கு நாட்டில் முதல் விடுதலைப்போர்
ஆசிரியர் ; பேராசிரியர், முனைவர்.மதியழகன்
வெளியீடு ; உடுமலை வரலாற்று மையம்
விலை; 250 உரூ, தொ.எண்; 9944066681
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


உள்ளூர் வரலாறு உலகவராலாற்றோடு இணைந்திருக்கும். உலக வரலாறு உள்ளூர் வரலாற்றோடு இணைந்தால் பல மாற்றங்களுக்கும் புரட்சிக்கு அடிப்படை காரணியாக இருக்கும். அந்தவகையில் வரலாற்று ஆய்வாளர்களால் பொதுவாக அழைக்கப்படும் 'கொங்குநாடு' என அறியப்படும் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், கோவை, திருப்பூர், திண்டுகல் கேரள எல்லையில் உள்ள பாலக்காடு இவைகளே. இந்த நிலப்பரப்பினை நொய்யல் நதியே பிரிக்கிறது. இதனால் வடகொங்கு, தென்கொங்கு என நிலத்தின் வாயிலாக பிரிந்து வரலாற்று ரீதிகாகவும் தனித்துள்ளது. 

தென் கொங்கு நாட்டில் வியஜநகர ஆட்சியாளர்கள் பாளையப்பட்டுகள் அமைத்தனர். இதில் வளம்கொண்டுள்ள பகுதியாக இருப்பவற்றில் தளி பாளையமும் ஒன்று. கொடைக்கானல், திருமூர்த்தி மலையில் உற்பத்தியாகும் சின்னாறு, ஆம்புருனை (அமராவதி) நதிக்கரையில் அமைந்திருந்தது இந்த பாளையம். 

        சுமார் 1770ல் துவங்கிய முதல் விடுதலைப்போராகக் கருத்தப்படும் பாஞ்சாலங்குறிச்சி, நெற்கட்டும்சேவல் போருக்கு அடுத்து பிரிட்டீஷாருக்கு அடிபணியாது அழிவை சந்தித்தது தளி பாளையப்பட்டு. அதன் வரலாற்றை கோயில்களாக, கல்வெட்டாக, செப்பேடாக, மக்கள் வழிப்பாட்டு சடங்காக, பிரிட்டீஷ் ஆவணங்களில் இப்பாளையம் தனது பெருமையான வீரசெயல்களின் இருப்பைத் தக்கவைத்துள்ளது. ஆனால் பளையத்தின் கோட்டை கொத்தளத்தை இருந்த இடம் கூட தெரியாமல் பிரிட்டீஷ் பிரங்கிகள் தகர்த்து விட்டது.

மூன்று ஆனை முதுகின் அகளத்தை விட பெரியதான கோட்டை சுவரின் அடிப்பாகம் மட்டுமே சாட்சியாக பார்க்கலாம். இந்த நூலாசிரியர் இவ்வரலாற்றை கடும் சிரத்தை எடுத்து கள ஆய்வில் தொகுத்துள்ளார் என்பதை வாசிப்பாளன் உணர்ந்து கொள்வான்.

  குறிப்பாக திருநெல்வேலி பகுதியில் கரையாளர் என்பது சமூக தகுதியாக பட்டமாக இன்றும் பார்க்கப்படுகிறது. 'ஆற்றை விட சிறியதாகவும், கால்வாயினை விட சற்று பெரியதாகவும்'' உள்ளதே கரை என்பதற்கான பொருள் என்பதற்கான விளக்கம் மிகசரியானது. இக்கரையை வைத்து எல்லை பிரித்து ஆளும் நபராக இருப்பவனே கரையாளர்.

அடுத்து மன்றாடியார் இது சேர அரசர்கள் கொங்கு நாட்டை ஆண்ட போது நிலத்தை உழுதவர்களின் தலைவனுக்கு மன்றாடியார் என்று பொருள். இந்த மன்றாடியார் பட்டம் குடும்பன் என்ற பள்ளர், கோனார், பறையர், வேட்டுவர், குறவர், ப்பிராமணர் போன்ற குலத்தினர் மன்றாடியார்களாக இருந்துள்ளனர் என்பதை சான்றுரைத்து துவக்குகிறது நூல்.

தென் கொங்கு நாட்டில் நாடுகளை குறிப்பிட்டுள்ளதில் கோயம்புத்தூர் என்பது போரூர் நாடாக இருந்ததையும், ஆனைமலையை உப்பற்காடு என்பதை சொல்லுகிறது நூல். அங்கு வசிக்கும் பழங்குடிமக்கள் ஆனைமலையை இன்றும் உப்பற்காடு என்றும், இது சேர நாடு என்றும் சொல்லுவதை கேட்கலாம். ஆனைகள் நிறைந்த மலைப்பகுதிகளை  சங்க இலக்கியத்தில் உப்பற்காடு, கடம்மலை என்று குறிப்புள்ளது. இச்சொல் இன்றும் புழக்கத்தில் உள்ளது வியப்பாக உள்ளது.

இன்று திருப்பூர் நகரமாக அறியப்படும் நல்லூர்நாடு கொங்கு நாட்டின் தலைமையிடமாக அன்று இருந்தது. பொது ஆண்டிற்கு பின்பு 12ம் நூற்றாண்டில் பாண்டியர்கள் ஆட்சியின் போது கம்மாளர்கள் செருப்பு போட, குடை பிடிக்க போராடியும், வேண்டுகோள் விடுத்தும் உரிமையைப் பெற்றுள்ளனர். இதற்கான அரசஆணை திருப்பூர் மேற்கே இருபதாவது கிலோமீட்டர் தூரத்திலுள்ள கொங்கீஸ்வரர் கோயிலில் கல்வெட்டு பதிவிடப்பட்டுள்ளது. இச்செய்தியை தேடி பதிவிட்டுள்ளார். இச்செய்தி ஒவ்வொரு குலங்களும் தங்களது உரிமையை பெற போராட வேண்டுயுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

 ஹைதர் அலி காலத்தில் அதன் பின்னர் அவரது மகன் திப்புசுல்தான் காலத்தில் மைசூர் அரசுக்கு கீழ் கொங்கு இருந்துள்ளது. மைசூர் உடையார் பிரிட்டீஷாருடன் இணக்கமான பின்பு திப்புவின் தனி அரசாங்கத்தின் பிடியிலும் கொங்கு மண்டலம் முழுழுவதும் இருந்துள்ளது. கொங்கு நாடு ஹைதர் அலி ஆதிக்கத்தின் கீழிருந்தபோது நிலங்கள் அளவை செய்யப்பட்டது. அவர்கள் காலத்திலே பியூன் என்ற பதவி வந்துள்ளது. பியூன் பதவி இன்று இழிவாக பார்க்கப்படுகிறது. ஆனால் அன்று துப்பாக்கி ஏந்தி வரி வசூல் செய்திடும் அதிகாரம் படைத்தவர்கள் என்பதை தெளிவாக பதிவிட்டுள்ளது நூல். நில வசூல் தமிழ் சாதிகள் இருந்த இடத்தில் பூல் பாண்டி, அம்பலம் என்ற பதிவியினரே வசூல் செய்துள்ளனர். இவர்கள் தமிழர்கள். தெலுங்கு மக்கள் வாழும் இடத்தில் கோடாங்கி நாயக்கர், பூசாரி கோடாங்கி நாயக்கர்கள் வரி வசூல் செய்துள்ளனர். அரிகாரர்கள் என்ற பதவி ஒற்றர்களுக்கானது, இன்றும் புழகத்திலுள்ள கட்டுக்குத்தகை, கட்டுபடி போன்ற செய்திகள், கம்பளம் என்பது சபை தர்பார் என நூலாசிரியரின் தேடி பொருள் தந்தவிதம் மெச்சும்படியாக உள்ளது.

ஹைதர் அலி கொங்கு நாட்டை பிடித்த போது திண்டுக்கல் தான் தலையிடமாக இருந்துள்ளது. அதன் பின்னர் பிரிட்டீஷார் பிடிக்கு வந்த போது மதுரைக்கும் சேர்த்து திண்டுக்கல் தலைமையிடமாக இருந்துள்ளது.

பிரிட்டீஷாரை எதிர்த்த கன்னிவாடி பாளையக்காரர் அப்பயநாயக்கர், அவரது துணைப்படைத்தளபதி தேவதானப்பட்டி பூசாரி கோடாங்கிநாயக்கர் தனது ஆனையூர் கள்ளர் படையுடன் சேர்ந்து பிரிட்டீஷாருடன், ஆனையூர் கண்மாயில் போர் நடந்தது. அங்கு கைது செய்யப்பட்ட கோடாங்கி பூசாரி நாயக்கர், அப்பயநாயக்கர், கள்ளர் படையினர் பலரும் தூக்கில் போடப்பட்டனர். மதுரை மாவட்ட மேலூர், ஆனையூர் கள்ளர்கள் திருநெல்வேலி மாப்பிள்ளை வன்னியன், இராமநாதபுரம் கலியாணித்தேவன், மேலப்பன், சென்னப்ப செட்டி, ரங்கப்ப முதலி, முமகது மண்ஹான், அப்துல்காதார், சோடா முகமது, சுப்பாராவ், பீர் முகமது, போன்ற 160 விடுதலை வீரர்கள் கோவை, தாராபுரம் வீதிகளில் 160 பேர் தூக்கில் போடப்பட்டுள்ளனர்.  இப்படியாக பல நூறு பாத்திரங்கள் விடுதலைக்காக உயிரை மாய்த்த தகவல்களை தேடிதேடி பதிவிட்டுள்ளது நூல்.

தளி பாளைப்பட்டில் பள்ளர்களும், மாதாரிகளும், கம்பளத்து நாயக்கர்களும், வேட்டுவகுல (கவுண்டர்) பெரும்பாலும் படை வீரர்களாக இருந்துள்ளர். போன்ற செய்திகளுக்கு சான்றுகளை தொகுத்துள்ள விதத்தை பாராட்டாமல் இருக்க முடியாது.

முதல் விடுதலைப்போரில் பாஞ்சாலங்குறிச்சிக்கு தளியிலிருந்தே பெரும்படை போனது. பாஞ்சாலங்குறிச்சி அழிவிற்கு பின்பு, சிவகங்கை வேலு நாச்சியார், மருது சகோதரர்களின், திப்பு இவர்களின் கூட்டின் முக்கியமான நிகழ்வுகள் பெரும்பாலும் தளி பாளையப்பட்டு எல்லையில் உள்ள ஆனைமலை காடுகளிலே நடந்தேறியுள்ளதை பிரிட்டீஷார் குறிப்புகள் மூலம் தெளிவுபடுத்துகிறார் ஆசிரியர்.

திப்பு மறைவிற்கு பின் வடகொங்கு நாட்டு பிரிட்டீஷார் வசம் போனது. பேரூர் நாட்டில் பிரிட்டீஷார் பிரிட்டீஷார் ஸ்காட்லாந்த் அதிகாரிகளை வைத்து அளவை செய்துள்ளனர். இவர்களின் முறைக்கு தங்கொவ் ஆகும். இதுவே பின்னாலில் வருவாய்துறை மூலம் இனாம் நிலங்களுக்கு  தர்காஸ் என்று குறிப்பிட்டார்கள் என்ற செய்திகள் வியப்பை ஏற்படுத்துகிறது. கோவையில் நூற்பு தொழிலில் ஏற்பட்ட மாற்றத்திற்கான வித்து இங்கிருந்து தான் துவங்கியது என தெளிவுபடுத்துகிறது நூல்.

                                      ஜம்பு தீவு பிரகடனம்

 பிரிட்டீஷார் எதிர்ப்பினை பலமான கூட்டமைப்பு எந்தளவுக்கு இருந்தது என்பதை இதுவரை எந்த நூலுல் சொல்லாத தரவுகளை சொல்லுகிறது. திப்பு நான்காம் கருநாடகப்போரில் இறந்த பின்பு அவரது படைப்பிரிவினர் பலர் பிரிட்டீஷ் மற்றும் பிரஞ்சுக்காரர் படைகளில் சேர்ந்தார்கள். இதில் விருப்பம் இல்லாத சிலர் குறு நிலப்பரப்பை ஆண்டனர். அவர்களின் மையமானவர்  துண்டாஜிவாக். இவர் திப்புவின் குதிரைப்படை தளபதியாகவும் மெய்காப்பாளனாவும் இருந்தவர். இவர் பிரிட்டீஷாரை எதித்துவந்தார். இவரை கூட்டணியில் சேர்க்க தூது அனுப்பப்பட்டது. அவரது உதவி ஒருமுறை கிடைத்தது. ஆனால் கோவையிலிருந்த பிரிட்டீஷ் படை முகாமினை தாக்க திட்டமிட்ட தகவல் கசிய படைத்தலைவர்கள் பலரும் சிறைப்பட்டனர். படை வீரர்கள் சிதறி ஓடினார்கள்.

இதனால் தளிப்பாளையத்தில் பதுங்கியிருந்து படைக்கு வழிநடத்திய ஊமத்துரை போன்றோர் தளிகாட்டுக்குள் இருப்பதை ஒற்றர்கள் மூலம் அறிந்தனர் பிரிட்டீஷார். இவர்கள் படைகள் தழிஞ்சி மலைக்குள் வழி அறிந்து வருவதாலும் பீரங்கி தாக்குதலை எதிர் கொள்ளும் அளவிற்கு இவர்களிடம் பீரங்கி எண்ணிக்கை குறைவானதாலும் படைகள் சிதரியது. பிரிட்டீஷாரின்  பாளைக்காரர்களின் படையிலிருந்தவர்களுக்கு நிலம் கொடுப்பதாக அறிவித்தனர். இதனால் காவல்காரர்கள், அரிகார்கள் கூட்டம் கூட்டமாக பிரிட்டீஷ் படையில் சேர்ந்தனர். இந்தப்பணியை துரிதமாக செய்து கொடுத்தவர் தளியில் பாளையப்பட்டு அனுமதியுடன் தங்கியிருந்த க்ஷ்இதை அறிந்த தளி பாளையத்தலைவர் எத்தலப்பநாயக்கர் பாதிரியாரை தூக்கி தொங்கவிட்டார். இதனால் கடும் கோபமான பிரிட்டிடீஷார் கோட்டை கொத்தளம் அனைத்தையும் பீரங்கியால் நொறுக்கி சாம்பளக்கி ஆனைமலை காடுகளை தீயிட்டனர்.

ஒரு ஆய்வு நூல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முழு தகுதியுள்ள நூல் என்பதைத்தாண்டி பல்கலை கழகத்தில் பாடமாக வைக்க வேண்டிய நூலாகவே நான் நினைக்கிறேன்.



1 comment:

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...