Search This Blog

Wednesday 17 February 2021

வனச்சட்டமும் மேய்ச்சல் தரிசும்

 

                        வனச்சட்டமும் மேய்ச்சல் தரிசும்

                                                *********************************************************************

 

    இந்திய துணைக்கண்டம் பிரிட்டீஷ் இராணியின் பரம்பரை ஆட்சிக்கு உள்படுவதற்கு முன்பு கிழக்கிந்திய கம்பெனியாக இருந்தார்கள். இவர்கள் மனதிற்குள் அடங்காத புரியாத புதிராக இருந்தது மலைகள் மட்டுமே.

           

                  இந்திய துணைக்கண்டத்தில் வடகிழக்கு, தென் இந்தியப் நிலபரப்பைத் தவிர நடுஇந்தியாவை கைக்குள் கொண்டுவந்தனர். ''வடகிழக்கு, தென் இந்தியப் நிலப்பரப்பில்லுள்ள சிறு, சிறு மன்னர்களாக இருப்பவர்களிடம் துப்பாக்கி என்ற வெடிகட்டைகளைத்தவிர பீரங்கிகள் இல்லை. ஆனால் இவர்கள் படையில் பலத்தை பீரங்கி வைத்திருக்கும் நம்மால் வெற்றிகொள்ள முடியவில்லை'' என ஆராய்ந்தார்கள். ''இந்தமன்னர்களின் படைப்பலத்திற்கு மையமான பயிற்ச்சித்தளம் மலைகள். இதிலிருந்து இவர்களை அப்புறப்படுத்தினால் இந்திய துணைக்கண்டம் முழுவதும் நமது கையில்'' என முடிவெடுத்தார்கள். இதனால் பிரிட்டீஷ் ஆட்சி துவங்கியவுடன் 1857ல் வனச்சட்டம் கொண்டுவந்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.

 

               இச்சட்டம் மூலம் 'வனத்தை காப்பவர்கள்' என்ற பம்மாத்தைக் (இன்றும் இவர்களைப்போலவே பசுமை, சுற்றுச்சுழல் என பேசுகிறார்கள் பேசுவார்கள்) காட்டிக்காட்டி உணவுக்கு வேட்டையாடிய நம்மவர்களை நர(மனித)வேட்டை விலங்குகளை வேட்டையாட வைத்து அவர்களும் வேட்டியாடி கொன்று மகிழ்ந்தார்கள். 

 

          மலைக்களுக்குள் தானாக முளைத்த மரங்களுக்குள் இஞ்சி, ஏலம், மிளகு, கிராம்பு பயிட்டவர்களை  நம்மவர்களை மரங்களை அப்புறப்படுத்தி காபி, தேயிலை பயிரிட்ட வைத்தனர் பயிரிட்டனர்.

 


                வனவிலங்கு சட்டத்தை காட்டி மலைகளுக்குள் மாடுகள் வளப்பு ஆய்வு மையம் போல் செயல்பட்டிருந்த தொழுவத்திற்கு தடைபோட்டார்கள். 1872ல் வனவிலங்கு சட்டம் கொண்டு வந்தவர்கள், வனத்தை தியாலாஜிக்கல் (நிதானமாக குருட்டு மதிப்பாக அல்லது கண் அளவை) சர்வே மூலம் அளவு செய்தார்கள். 

 

             ஜமீன்தார்களின் மாட்டு தொழுவங்கள் வனத்திற்குள்ளே இருந்ததால் மாடுகள் மேய்த்திட மேய்ச்சல் நிலத்தை அவர்களுக்கு மட்டும் ஒதுக்கினார்கள். இந்த மேய்ச்சல் காடுகளை மேய்ச்சல் தரிசு (தரிசு என்பது எதுவும் முளைக்காத இடம் உவர், உப்பு தரிசு அல்லது களர் நிலம்) என பதிவிட்டார்கள். ஜமீன்தார்களுக்கு வேண்டப்பட்ட தொட்டிய நாயக்கர் தொழுவம் மட்டுமே பல்லாண்டுகள் வனத்திற்கு அனுமதிகப்பட்டது. 

 

           மாடு தொழு, ஆடு கிடை அமர்த்த இடையர்கள், பள்ளர், கன்னடத்தை தாய் மொழியாகக் கொண்ட குறும்பக்கவுன்டர், முத்திரையர்களாக அடையாளப்படும் மூப்பர், வலையர் போன்ற குலங்களில் ஆடுமாடுகள் நிராகரிக்கப்பட்டது. இவர்கள் ஆடு மாடுகள் தோட்டம் காடுளுக்குள் நுழைந்து தொல்லை கொடுத்தது. இதனால் தரைப்பகுதியில் மேய்ச்சல் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலங்களை ஜமீன், மிட்டா மிராஸ், மணியம், நாட்டாமை போன்றோர்கள் ஆக்கிரமிப்பிற்குள்ளானது. ஆடு, மாடு மேய்ப்பவர்கள் தொழிலை இழந்தனர். (சிலர் மட்டுமே விதிவிலக்கு)

 

             ஆக்கிரமிக்க இயலாத கரடு, குட்டம் குதுவல்களாக இந்த மேய்ச்சல் நிலம் மட்டும் ஆக்கிரமிக்க முடியாமல் இருந்தது. இதிலும் பிரிட்டீஷ் இராணுவ முகாம் தங்கும் இடமாகவும்  மாற்றப்பட்டது. இதுவே விடுதலை இந்தியாவிலும் தொடர்ந்தது. வனத்தினை ஒட்டி ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் நிலம் வருவாய்த்துறையின் கீழிருந்தாலும் விடுதலை இந்தியாவில் வனத்துறை மூலம் நெருக்கடி கொடுத்து அந்த நிலங்கள் அதை வனத்துறை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். 

        

            நூற்றி ஐம்பது ஆண்டு கழித்து திடீரென தரைப்பகுதியிலிருக்கும் மேய்ச்சல் நிலத்தை கால்நடைத்துறை மூலம் புல் வளர்க்கும் திட்டமிட்டுள்ளது அரசு. அரசு துறைகளை தனியார்களுக்கு விற்பனை செய்திடும் அரசின் இத்திட்டத்தில் ஏதாவது உள் நோக்கம் இருக்குமா ? என்ற அச்சம் எழுகிறது. 

 

 

                    

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...