செவல்ப்பட்டி வைணவக்குடவரை
**************************************
சோழ அரசர்களைப்போல் சைவம் மட்டுமே என, பாண்டிய அரசர்கள் ஒர்நெறிக்கோட்பாட்டில் நிலையாக நிற்கவில்லை. சமணர்களாக, வைணவர்களாக, சைவர்களாக மாறி மாறி தங்களது சமூக கோட்பாட்டு நெறியை மாற்றியுள்ளார்கள்.
ஒன்பதாம் நூற்றாண்டில் வைணவத்திற்காக பாண்டிய அரசர்களால் குடையப்பட்ட மிகப்பெரிய குடைவரை செவிலிப்பட்டி என்ற செவல்பட்டி குடவரை. சுமார் 12 அடி அகலம் 40 அடி நீளம் கொண்ட குடவரை. கருவரையில் பிரிட்டீஷ் அரசாங்க பதிவு, அதன்பின்னர் எழுதப்பட்ட தமிழக குடவரைகள் நூல்களில் கருவரையில் தெய்வம் இல்லை என்றே குறிப்பு உள்ளது. ஆனால் 2021ம் ஆண்டில் சில மாதங்களுக்கு முன்பு பெண் தெய்வத்தை வைத்து வணங்குகிறார்கள்.
இந்தக்குடவரையில் எந்த கல்வெட்டும் இல்லை. ஆனால் வெளிப்புறத்தில் உள்ள எழுத்து படிக்க முடியாதளவிற்கு சிதைந்துள்ளது,புடைச்சிற்பங்களின் உள்ள ஆடை அணிகலங்களை வைத்து ஒன்பதாம் நூற்றாண்டு பாண்டியர் காலச்சிற்பம் என்ற குறிப்பை பதிவிட்டுள்ளார்கள் ஆய்வாளர்கள்.
நடனமிடும் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள சிவன் புடைப்பு சிற்பத்தில் ஒரு கையில் உடுக்கை, மற்றொருகையில் ஓலைச்சுவடி, கோவணத்தை இருக்ககட்டிய விதம் அக்கோவணத்திற்கு மேல் அரைஞாங்கயிறுக்குபதிலாக துண்டு போல் இருக்க முறுக்கிக்கட்டிய துணி, கால்களில் சலங்கை (தண்டை இல்லை) இவைகளை வைத்துப்பார்க்கும் போது அன்றைய காலகட்ட தொழில் நுட்பம் கவனிக்கப்படவேண்டிதாக உள்ளது. ஆனால் காதோலை மட்டும் பனை ஓலை வடிவத்தில் உள்ளதும் ஆய்விற்குறியதே.
பிள்ளையார் வலம்புரியாக புடைப்பாக இருந்தாலும் அதன் கால்கள் அமைத்த விதமும் வேறுஎங்கும் இல்லாதது போல் உள்ளது. அனைத்துச் சிலைகளிலும் கைத்தண்டையுள்ள இலட்சினைகள் முழுக்க முழுக்க மாறுபட்ட குறியீடுகள் உள்ளது பெருத்த ஆய்வுகள் நிகழ்த்த வேண்டியுள்ளது. இக்குடவரை அமைந்துள்ள அருணகிரி மலை முழுவதிலும் மருத்துவத்திற்கு தேவையாக நூற்றிற்கு மேல்பட்ட அரியவகை மூலிகைகள் செழித்துக்கிடக்கிறது.
விஜயநகர ஆட்சியாளர்களுடன் பாண்டியர்கள் பெரும் போர் மூண்ட இடங்களில் செவல்பட்டியும் ஒன்று. இவ்வூரில் பாளையம் அமைத்தனர் விஜயநகர ஆட்சியாளர்கள். இம்மலையின் பின்புறம் சமணம் அல்லது ஆசீவக புடைப்பு சிற்பம் இருந்த இடம் தெரியாமல் சிதைக்கப்பட்டுள்ளது.
இக்குடவரைக்கு போய்வர உதவிய சிவகாசி சீர்திருத்த கிறித்தவ ஆவ்வாளர் பாஸ்டர் சேவியர் மற்றும் என்னுடன் வந்த சமூக அக்கரையாளர் துள்ளுக்குட்டி ஆகியோருக்கு நன்றி.


















No comments:
Post a Comment