Search This Blog

Wednesday 17 March 2021

திருக்கோயில் பூசாரி ஆகமுடியாது என்றால் பரிசாக்கர் மட்டும் எப்படி கிடைக்கும்

  

*திருக்கோயில் பூசாரி ஆகமுடியாது ! 

கஞ்சி காய்ச்சும் (பரிசாக்கர்) பணி மட்டும் கிடைக்குமா?- நீதி மன்ற விளையாட்டு

****************************************************************************************

               

              இந்திய அரசியல் சாசனம் குலங்களை (ஜாதி) ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் அடிப்படையிலே திமுக அரசால் கொண்டு வரப்பட்ட 'அனைவரும் அர்சர்களாகலாம்' என்ற சட்டத்தை எதிர்த்து சைவத்தின் அடையாளமான தில்லை திருக்கோயில் பூசாரிகளின் கூட்டமைப்பு வழக்கு தொடுத்தது. சுமார் 30 ஆண்டுகள் நடந்த வழக்கில் தில்லி உச்ச நீதிமன்றம் 'இந்தியாவில் சாதிய அடுக்குநிலை ஏற்புடையதே. அதனடிப்படையிலும், சைவ ஆகம விதிகளின்படியும் ஆகம விதிகளை கற்றறிந்த பார்ப்னர்கள் மட்டுமே பூசை செய்திட முடியும்' எனத் தீர்ப்புச்சொல்லி வழக்கினை முடித்து வைத்தது. இந்தத் தீர்ப்பே சட்ட வடிவமாக மாறிது. இதை மாற்ற மக்கள் மன்றங்களால் மட்டுமே இயலும்.

 

                 வைணவ சைவ மடப்பள்ளிகளில் மந்திரம் ஓதி கடவுளுக்கு சமைத்து கடவுள் உண்பதற்கான உணவை (நைவத்தியம்) சமைத்திடும் மடப்பள்ளிப் பணியாளர்களுக்கு திருக்கோயில்களில் அவர்களுக்கு பெயர் பரிசாக்கர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பணியுடன், நைவைத்திய உணவினை எடுப்பவர், உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க கல்வி தகுதியுடன் குலத்தகுதியாக பொதுவெளியில் அழைக்கப்படும் ஐயர் என்ற 'பார்ப்பனர்' மட்டுமே என தமிழக அரசின் கீழ் இயங்கும் இந்து அறநிலைத்துறை அறிவித்திருந்திருந்தது.

 

                      இந்தப்பதவிகள் கடந்த காலங்களில் தலைமுறை தலைமுறையாக மடப்பள்ளியில் பணியாற்றும் பூசாரிகளே (ஐயர்) சமையல் செய்து வந்தனர். இவர்களது சமையளான நைவைத்தியம் மட்டுமே கடவுளுக்கு உணவாகப்படைக்கப்படும். இந்த உணவினை பட்டுத்துணியால் மூடி, பிறர் பார்க்காதவாறு பூசாரி எடுத்து போவார். அவருக்கு முன் கோடாங்கி, அல்லது சிறிய பம்பை போன்ற இசைக்கருவியை ஒரு ஐயர் இசைத்து செல்ல திருக்கோயில் திருமேனி இருக்கும் கருவரைக்கு இந்த உணவு எடுத்து செல்லப்படும். திரையால் மூடி இருக்கும் திருமேனிக்கடவுள் திருச்சிலைக்கு இந்த உணவு படைக்கப்படும். இது தான் ஒரு கால பூசை முதல் இராக்கால பூசை எனச்சொல்லும் செயல்கள். 

 

              இந்தச்சமையல் வைணவ, சைவ திருக்கோயில்களுக்கும் வேறுபாடு உண்டு. கோயிலுக்கு கோயில் வேறுபாடும் உண்டு. *வெஞ்சணம்* என்ற சொல் தென் தமிழகத்தில் புழக்கசொல். இந்த வெஞ்சணம் வைணவ திருக்கோயில்களில் கடவுளுக்காக நைவத்தியமாக படைக்கப்படும் உணவு. இதை தயாரிக்க இதற்கு மந்திரம் சொல்ல தனியான ஐயர் இருப்பார்.

                                                   (நன்றி தினத்தந்தி)



 

                    திருக்கடவுள்களுக்கு படைக்கும் நைவைத்திய உணவினை சமைக்கப் பயன்படும் அடுப்பு, விறகு, தண்ணீர் அனைத்தும் ஒவ்வொரு முறை சமைக்கும் போதும் ஆச்சார விதிகள் கடைபிடிக்கப்படும். கடவுள் அருகே நின்று பூசை செய்திடும் பூசாரியை விட மடப்பள்ளி சமையலர் (பூசாரி) பதவி உயர்ந்ததாகக் கருத்தப்படுகிறது. இதனால் திருக்கோயில் பூசாரிகளுக்குள் போட்டி பொறாமைகள் பலவேளைகளில் சண்டை அடிதடி ஏற்படும். இக்குழப்பத்தால் இந்து அறநிலையத்துறை திருக்கோயில் பணியாளர்கள் பரம்பரை பரம்பரையாக இருந்த பூசாரி பதவிகள் தவிர, மற்ற பணியிடங்களை அறிவிப்பு ஆணை வெளியிட்டு பூர்த்தி செய்துவருகிறது. இருப்பினும் இந்திய நீதிமன்ற ஆணை சட்ட வடிவம் பெற்றதால் அனைவரும் பூசாரியாக முடியாமல் போய்விட்டது.

 

                தற்போது மடப்பள்ளி சமையளர் பதவிக்கு பார்ப்பனர் குலத்தினர் மட்டுமே விண்ணபிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டதை  எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கினை ஏற்றுக்கொண்ட நீதிமன்றத்திடம், 'பணியிட பூர்த்திடு செய்திடும் ஆணையை திருப்ப பெற்றுக்கொண்ட' தாக இந்து அறநிலையத்துறையினர் உறுதிமொழிப்பத்திரம் (அபிடாவிட்) தாக்கல் செய்தனர். ஆனால் வழக்கில் குறிப்பிட்டுள்ள குலம் தொடபாக எதுவும் குறிப்பிடவில்லை. இதையும் நீதி சொல்லும் பணியாளர் (நீதி அரசர்) எந்த கேள்வியும் கேட்காமல் வழக்கை முடித்து வைப்பதாக அறிவிக்கிறார். இனி ஓசையில்லாமல் அந்தப்பணி பூர்த்தி செய்திட வாய்ப்புள்ளது. இதில் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியது 'சில திருக்கோயில் மடப்பள்ளிகளில் கோயிலுக்கு திருநீர் (தண்ணீர்) சுமக்கும் பணியாளர் பதவியான மஞ்சனக்காரர்கள் சமையல் செய்ததாக பிரிட்டீஷ் மிலிட்டரி கேப்டனாக இருந்து சென்னை மாகான தலைமை நில அளவை அதிகாரியாக இருந்த மெக்கன்சி தொகுத்த தென்னிந்திய திருக்கோயிற்_சாசனங்கள்  என்ற நூல் தெரிவிக்கிறது.

 

                                                        படம் உதவி வினவு


 

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...