Search This Blog

Tuesday 30 March 2021

சைலண்ட் சசிக்கலா !? காரணம் என்ன

 

                சைலண்ட் சசிக்கலா !? காரணம் என்ன 

 

        அஇஅதிமுகவை தோற்றுவித்த திரு. எம்.ஜி.ஆர் மறைந்த பின்னர் அக்கட்சி அழிந்துவிடும் என்றார்கள். திமுக என்ற எதிர்ப்பு உணர்வால் கட்டமைக்கப்பட்ட கட்சி அஇஅதிமுக. திமுக உள்ளவரை இதன் ஆயுள் இருக்கும் என்பார்கள். 

  

        ''செல்வி ஜெயலலிதா மறைவிற்கு பின் கட்சி இருக்காது, உடையும், கரையும் அதுவும் சில காலம் மட்டுமே'' என்றார்கள். இதன் மெய்த்தன்மையை உனர்ந்தததால் ''ஜெ -ன், தோழியனா சசிக்கலா, நிழல் தலைவி இருந்தவர் நிஜ தலைவியாக கட்சியினாராளே ஆக்கப்பட்டார்.  


         ஜெ - தமிழக முதல்வராக இருந்த காலத்தில் ''சட்டத்திற்கு புறம்பாக சொத்துக்களை சேர்த்த குற்றச்சாட்டு'' நிருபிக்கப்பட்டது. இதில் ஜெ - இறந்து விட்டதால் அவரது தோழியான இரண்டாம் குற்றவாளியான சசிக்கலா தண்டனை பெற்று விடுதலையானார்.

 

          இவர் சிறை செல்லும் போது ஜெ - ன் கல்லறையில் அவர் சபதம் எடுத்ததாக செய்த பாவனை? அல்லது மெய்யாகவும் இருக்கலாம். இந்த செயல் பலரையும் பலவிதமாக பேச, யூகிக்க வைத்தது. இந்த நிலையில்           சிறைக்கு போன சசிக்கலா அவர்களால் அடையாளம் காணப்பட்ட திரு. பழனிசாமி அவர்களே முதல்வராக நீடித்தார். 

      ஜெ.-குற்றசெயலுக்காக தண்டனை பெற்ற காலங்களில் முதல்வர் பதவியை ஜெ.- மூலம் பெற்ற திரு. பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகள் கட்சியை கைப்பற்றும் முகாந்தரமாக இருந்தது என்பது  அனைவரும் அறிந்ததே. அவரது நடவடிக்கைக்கு முதலாளிகள் அரசியல் கட்சிகள், பக்கபலமாக இல்லாமல் போனது அவருக்கு அதிஷ்டம் இல்லை என்றே சொல்லாம்.  


          ''சசிக்கலா தண்டனை காலம் முடிந்து விடுதலை பெற்று தமிழகம் வந்த போது அஇஅதிமுகவிற்குள் இவரை உள்ளே விட்ககூடாது'' என திட்டமிடப்பட்டது. இதற்கு முன்னேற்பாடாக ''நமது எம்.ஜி.ஆர் பத்திரிக்கை, ஜெ - டிரஸ்ட், ஜெ- எம்.ஜி.ஆர் டிரஸ்ட், ஜெயா தொலைக்காட்சி இவைகளை அஇஅதிமுகவின் கட்சி சொத்தாக்கப்படும்'' எனத்தீர்மானம் நிறைவேற்றினார்கள். வழக்கு தொடுக்கப்படும் என தீர்மான சரத்தும் சொன்னது. ஆனால் தற்போதுவரை வழக்கும் தொடுக்கவில்லை அது குறித்து வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக கட்சிக்காக புதிய தொலை காட்சி, பத்திரிக்கைகளை அஇஅதிமுக தலைமை கொண்டு வந்தது, என்றாலும் இதன் சொத்துக்கள் திரு.பன்னீசெல்வத்தின் மகன்கள் பெயரிலும் முதல்வரான திரு.பழனிசாமி பெயரிலும் உள்ளது என சொல்லுகிறார்கள்.

        அஇஅதிமுகவின் கட்சி நெருக்கடியால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை திரு. டி.டி.வி.தினகரன் துவகவேண்டிய தேவை ஏற்பட்டது. தினகரன் துவக்கியுள்ள கட்சியில் சசிக்கலா இணைந்து செயல்பட்டாக வேண்டிய சூழலை வந்தது. அமமுகவில் சசிக்கலா செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

 

      ''இவர் விடுதலையாகி வந்தவுடன் ஜெ -ன் நினைவிடம் திறக்க அனுமதி மறுப்பு, அவர் கருநாடாவிலிருந்து வருவதற்கு அனுமதி சிக்கல். கொரோனோ வைத்து உயிரை எடுக்க திட்டம் என பல தொல்லைகள் வந்தும் சசிக்கலா துணிந்து அரசியல் செய்திட திட்டமிட்டார்'' என்றே அவருடன் தற்போதும் அரசியல் ஆலோசகர்களாக உள்ளவர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் பொசுக்கென இவர் அரசியலில் மௌனமானது பலருக்கு காரணம் புரியாத வியப்பு. நடுநிலையானவர்களாக காட்டிக்கொள்ளும் அரசியல் வித்தகர்கள்  ஜெ - நல்லவர் என சொல்ல ஒருவரை கெட்டவர் என சொல்ல ஆள் வேண்டுமே. அதனால் ''அப்பாடா சாமி'' என சொல்லிக்கொண்டார்கள் அப்படியே பேசுகிறார்கள் எழுதுகிறார்கள்.

 

ஏன் சசிக்கலா மௌனமானார்

****************************

       சசிக்கலா அரசியலில் இறங்கினால் ''நான் எதற்காக குற்றவாளியானேன். யாரால் குற்றவாளியாக்கப்பட்டேன். எனக்கு பிள்ளையா குட்டியா நான் ஏன் சொத்து சேர்க்கவேண்டும்.'' என விளக்கும் உரையில் ''அம்மாவிற்காகவே நான் குற்றவாளியாக்கப்பட்டேன்'' என்றும் சொல்லியாக வேண்டிய கட்டாயத்தேவை ஏற்படும்.

     கடந்த ஓராண்டிற்கு முன்பு திரு.டி.டி.வி தினகரன் ''நாங்கள் அம்மாவிற்காக (ஜெ) சிறை சென்றோம்'' என பேட்டி கொடுத்தது நினைவில் வைத்து பார்க்க வேண்டியுள்ளது. இந்தப்பேட்டியை ஆங்கில இதழ்கள் தவிர தமிழ் இதழ்கள் சீந்திக்கூடப்பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது இருக்கவே தேர்தல் களத்தில் எதிரணியாக யாரை முன்னிருத்துவார் சசிக்கலா?. திமுகவையா அஇஅதிமுகவையா என்றால் அஇஅதிமுகவில் உள்ள பன்னீர்செல்வமே முதல் டார்கெட்டாக இருப்பார். அடுத்து எடப்பாடி. 

         சசிக்கலா வாய் திறந்தால் என்ன நடக்கும் ? ! . அதற்கு இவர்கள் என்ன பதில் சொல்லுவார்கள். இப்படி கூத்தடித்தால் அஇஅதிமுக என்ற கட்சியின் டோட்டல் இமேஜ் மொத்தமாக சிதைந்து சின்னாபின்னமாக மாறும். ''குற்றவாளியான ஜெ -ன் இமேஜ்  - னை தற்போது வரை சசிக்கலாவே சுமந்து வருகிறார். இந்த பிம்பம் உடைபட்டால் அஇஅதிமுக என்ற ஒன்று இருக்காது என்பதில் ஐயமில்லை. ஆகவே ஒரு தேர்தல் பொறுத்தால் திமுக ஆட்சிக்கு வந்து விடும். நமது மீதுள்ள அனைத்தும் மறைந்து மறைந்து விடும்''. என ஆலோசகப் பெருமக்கள் ஆலோசனையை கொட்டியுள்ளார்கள்.இதை திரு.பழனிசாமி, திரு. பன்னீர்செல்வம் தரப்பும் அப்படியே நெடுஞ்சானாக ஏற்றுக்கொண்டதால் சசிக்கலா சைலண்ட் ஆனார்'' என்கிறது தமிழக அரசியல் களம்.

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...