Search This Blog

Wednesday 23 June 2021

சித்த மருத்துவமும் வனச்சட்டமும்

 

                                                    சித்த மருத்துவமும் வனச்சட்டமும் 

 

வணக்கம் நண்பர்களே தோழர்களே.....

காடுகளில் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பல்லாயிரம் மூலிகள் தானாக முளைத்திருக்கும். இதற்கான காரணம் இங்குள்ள கனகனப்பான வெப்பம், மறைவு,  மறைவான சிறு சிறு குத்துகாடுகளான குதுவல் காடுகள், வறட்சியுடன் மாலை, இரவு வேளைகளில் வீசும் இதமான குளிர்ந்த காற்று. 

 

இம்மலைகளிலிருந்து உணவாகவும் மூலிகையாகவும் பயன்படும் மிளகு, ஏலம், கிராம்பூ, மஞ்சள், கரும்பு, இஞ்சி, லவங்கம் இப்படியானவை ஒரு புறம். கழற்சிக்காய், தெள்ளுக்காய், தேத்தாவிதை, கடுக்காய், மச்சக்காய், மாசிக்காய், தாண்றிக்காய், பேய் பீக்கை, பேப்புடல், காட்டு மாங்கொட்டை, காட்டு நொச்சி, கருநொச்சி, காட்டுப் புளிச்சி, குங்கிலியம், காட்டு மல்லி, யானைத்தந்தம், பனை வேர், பனை இலை, பனைப்பூ, வெப்பாளை அரிசி, மூங்கிலரிசி இப்படியான விதைகள், அதிமதுரம் போன்ற மரக்கிளைகள் மரத்தின் பட்டைகள், பாசம் என பலாயிரம் மூலிகளைகள், மயில், பச்சைக்காடை இறகு, விலங்குகளின் நகம், அதன் மண்டை ஓடுகள், சில விலங்குகளின் ஊண், சாரைப்பாம்பின் கொழுப்பு, நல்லபாம்பின் நஞ்சு எனப்பயன்படுகிறது. 

 விந்திய மலை பனியில் விளையும் தேசாவரம், பறங்கிப்பட்டை, கோஷ்டம், நாபி இவைகளையெல்லாம் பிரிட்டீஜ் ஆட்சி துவங்கிய 1857ல் வனச்சட்டம் கொண்டு வந்து தடுத்து விட்டார்கள். அதன் பின்னர் 1882 வன உயிர் சட்டம் என கடுமையான சட்டம் கொண்டு இந்திய ஒன்றியத்தின் மனித அறிவை அழிக்கத்துவங்கினார்கள். அதன் தொடர்ச்சியாக அறிவு அழிவு என்பது படிப்படியாக அழித்து தொடைத்து வருகிறார்கள் நமது ஆட்சியாளர்கள்.

 சித்த மருத்துவம் என்ற தமிழ் மருத்துவம் மட்டுமே இந்திய ஒன்றியத்தில் தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது. பிறமாநிலங்களில் ஆயுள் வேதம் இருக்க தமிழகத்தில் மட்டுமே தனியான மருத்துவத்தை தமிழ் மொழி காத்து வருகிறது. 

 தமிழ் மொழியின் செழுமையை அறியாத திராவிடர் கழத்தார், பொதுவுடமை கட்சியினர் இம் மருத்துவத்தை இழிவாகப் பேசியும், எழுதியும் வருவது அவர்களின் அறியாமை அல்ல. அறிந்து தெளிந்து காட் (GATTE) ஒபந்தக்கைகூலிகள் என்பதை உறுதி செய்வதாகவே கருத முடிகிறது.

சித்த மருத்துவம் தாது பொருள்களாகவும், மூலிகைகளாகவும் மருத்து செய்யப்படுகிறது. பெரும்பாலும் அந்தந்தத்த பகுதியில் கிடைக்கும் பொருள்களை வைத்தே மருந்து கண்டறிந்துள்ளனர் சித்தர்கள். இதில் மைய பங்கு வகிப்பது மான் கொம்பு, தேன், ஆமை ஓடு, பவளம், பாசிகள், கடல்நுரை, முத்து, விளையாத பலகரை என்ற சோவி, சிப்பியின் ஓடு, சங்கு, கடல் நண்டு மண்ணில் புதைந்து உருவாகும் கல்லானது நண்டுக்கல், இவைகளையெல்லாம் வனச்சட்டம் மூலம் தடை செய்துள்ளனர்.

இந்த மருத்துகள் பெரும்பாலும் பற்பமாக செய்து பயன்படுத்தப்படுகிறது. மனித உடல் உள் உறுப்புகளை சமநிலை கொண்டு வருவதற்கு பயன்பதரக்கூடியது இவை. மூலம், வயிற்றுப்போக்கு, இளப்பு இது போன்ற நோய்களுக்கு பயன்தரக்கூடியது என்பது அனுபமாக அறிந்த ஒன்று.

பச்சஓந்தி தைலம்; சன்னி, வாதம், கைகால் முடக்குதல் இவைகளுக்கு மேல் பூச்சு மருத்தாகப்பயன்படும் பச்ச ஓந்தி தைலம் மிக முக்கியமானது. இந்த நோய்க்கு நவீன மருத்துவத்தில் பெரிதான மருந்துகள் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் பஞ்ச ஓந்தியை தடை செய்ததால் இம்மருந்து செய்வது தடைபட்டுப்போனது. பூமியில் உயிரினங்கள் தோன்றிய போது தோன்றியது பஞ்ச ஓந்தி என உயிரியலர் கருதுகின்றனர். இதனால் இந்திய மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இந்த விலங்கை பிடிக்க, கொல்ல தடை  போட்டுள்ளனர். இவ்விலங்கினை யாரும் உணவிற்காக வேட்டையாடுவதில்லை. ஆண்டிற்கு 150க்கும் மேல்பட்ட முட்டைகளை இட்டு மூன்று முதல் நான்கு மாதம் வரை கற்குவியல், குளிர்ச்சியான இடங்களில் உள்ளே தங்கி தனது இனத்தை விருத்தி செய்கிறது. இதன் மருத்துவப்பயன்பாடு என்பது மிகமிகக்குறைவே. ஆனால் தடை போட்டதன் விளைவாக இம்மருந்து ஏட்டளவிலே உள்ளது.சிலர் ஓந்திய வறண்ட பகுதி கரடுகளில் வாழும் கரட்டான் என அறியப்படும் ஓணாணை தைலமாக செய்து வழங்கி வருகிறார்கள்.

மான் கொம்பு பற்பம் + மான் தோல் ; இரத்த அழுத்த அதிகரித்தல், மாரடைப்பு, ஆறாத வயிற்றுப்புண், தோல் நோய்களுக்கு மான் கொம்பு பற்பம் பயன்படுகிறது.

மானின் கொம்பு முற்றினால் தானாக உதிர்ந்து விடும். இக்கொம்பு மண்ணோடு மக்கிட பலநூறு ஆண்டுகள் ஆகும் என்பது விலங்கியல். ஆனால் இதனை தடை செய்ததன் மூலம் இவர்களின்  நோக்கம் என்ன ? என்னபதை நாம் விளங்கிக்கொள்ள இயலவில்லை. கடந்த நூற்றாண்டில் உலகமே கண்டு அச்சப்பட்ட அம்மை நோய் என சூரிக்கு மான் தோல் மஞ்சள் தான் மருத்து என்பதை, பிரிட்டீஷார் ஆட்சியில் கூட்டு வைத்த கூட்டத்தின் வழி வந்த கூட்டத்திற்கு புரியாது ஏனென்றால் இவர்களின் கூட்டு GATTE என்பது அறிந்ததே.

 பவளம்; இது கடலில் உள்ள ஒருவகை மீன் போன்ற பூச்சி கருவுரும் போது வெளியேற்றும் மாசு கடலில் முளைத்துள்ள தாவரங்களில் படியும். இந்தபடிமம் பல்லாண்டுகள் காலம் விளைந்து வருவதே பவளம், இந்த மாசுகள் படிந்துள்ளது பவளப்புற்று. இதுவும் மருத்திற்கு பயன்படும். இதனை தடை செய்து விட்டனர். 

கொரோரோ என்ற காய்ச்சல் உலகளவில் அச்சப்பட்டுள்ளதற்கு காரணம், ''காய்ச்சல் கண்ட 36 மணி நேரத்தில் மூச்சு இரைச்சல், கடும் உடல் வலியை ஏற்படுத்தி, உடல் குளிர்ந்து நளிர் (சன்னி) உடன் காய்ச்சலை உண்டாக்கும். அதன் பின்னர் மூளைக்கும் முகுலத்திற்குமான செயல்பாடு குறைந்து அறுந்து விடும்''. இந்த நோயிற்கு நவீன மருத்துவத்தில் மருந்தில்லை என்று அறிந்தும் உடல் அறுவை சிசிக்கைக்கு மட்டுமே பயன்பத்தப்படும் டீராய்டு மருந்தினை கொடுக்கிறார்கள். இம்மருந்து நவீன மருத்துவத்துறையினர் ஏற்க மறுத்தது என்பது அவர்கள் அறிவித்ததே. மருந்தில்லாததால்  டீராய்டு கொடுக்கப்படும் நோயாளிகளுக்கு மேக நோய் என்ற தோல் புற்று  (பூஞ்சான்) வருகிறது. பலர் காய்ச்சலிலிருந்து மீண்டாலும் உள்ளுறுப்புகள் பாதிப்பால் மாண்டு விடுகிறார்கள்.

நளிர் காய்ச்சலுக்கு சித்த மருத்துவத்தில் பவளப்பற்பமும் அருமருந்து. பேர்கால சன்னி கண்டால் நாக்கில் இம்மருந்தினை தடவினால் நின்று விடும். உதிரப் போக்கினை உடனே கட்டுக்கொண்டு வந்து பக்கவிளைவுகளற்றதாக செயல்படும். இந்தப்பவளத்தை தடை செய்துள்ளார்கள், ஆனால் பவளம் இந்தோநேசியா, ஐப்பான் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதியாகியது. பவளப்புற்று பூத்துக்கிடைக்கும் நமது மன்னார் வளைகுடாவில் பவளம் எடுக்க தடை என்பதே கேலிக்குறியது.

தேன்;  வனத்தில் புற்றுத்தேன், அடைத்தேன்,கொம்பந்தேன் இவைகளே சித்த மருத்துவத்திற்காக பயன்படுவது. வனத்திற்கு சிறு மகசூல் எடுக்க குத்தகைதாரர்கள் தவிர வனக்குடிகளான பளியர், புலயர், முதுவா, காடர் குடிகள் கூட வனத்திற்குள் அனுமதில்லை. இம்மக்களை 2004 சட்டத்தின் மூலம் அப்புறப்படுத்த வேண்டும். இதனால் மலைத்தேன் என்பது குதிரைக்கொம்பான விசயமே. தாது மருத்துகளான பற்பம் செந்தூரம் இவைகளுக்கு பெரும்பாலும் அனுப்பானம் தேனில் தான் கொடுக்க முடியும். லேகியம், தைலத்திற்கும் கூட்டு மருத்து தேன் தான். இதை விட முக்கியமானது தீ காயத்திற்கு முதலில் தடவ வேண்டிய மருத்து தேன். அடுத்து சுண்ணாம்பின்இளநீரில் விளக்கெண்ணை தேன் கலந்து மேல் பூச்சாக போட வேண்டும். இதனை போட்டால் வடு இல்லாமல் காயம் ஆறும்.

மண்டை ஒடுகள்; மனபிறழ்வு என்ற பைத்தியத்திற்கு நவீன மருத்துவத்தும் மட்டுமல்ல உலகத்திலுள்ள எந்த மருத்துவத்திலும் இன்று வரை மருந்து கண்டுப்பிடிக்கவில்லை. ஆனால் சித்த மருத்துவத்தில் மருந்து உண்டு. கழுதை, மனிதன், நாய் மண்டை ஓடுகளை கொண்டு வீரம் பூரம் போன்ற தாதுப்பொருள்களைச் சேர்த்து பற்பம் செய்து கொடுக்கும் மருத்துவம் பிரிட்டீஷ் ஆட்சியிலே தடை செய்தார்கள். இந்த மருத்துவம் முழுக்க முழுக்க வைணன ஆன்மீக தளங்களிலும், இசுலாமிய மார்க்கத்தளங்களிலும் மருத்தாக கொடுத்தார்கள். இதை தடை செய்ததால் மன நோயாளிகள் சாலைகளில் திரிகிறார்கள்.   

கஞ்சா அபின்; தடைகள் பல நோய்களுக்கான காரணம் என்பது மருத்துவம் அறிந்தவர்கள் ஒத்துக்கொள்வார்கள். இவை இரண்டும் பல மருத்துவத்தின் மூலப்பொருள்கள் என்பது அறிவியலர்கள் ஒத்துக்கொண்டது. தற்போது அதன் தடையை நீக்க ஐக்கிய நாடுகள் சபையில் மூலம் இந்திய ஒன்றியம் ஒப்பதல் தந்துள்ளது பாரட்டத்தக்கது.  

பிரிட்டீஜ் ஆட்சியில் துவக்கி வைத்த சித்தமருத்துவ அறிவின் அழிவு, பிரிட்டீஷாருடன் கூட்டு வைத்த நீதிகட்சி, திமுக, மறைமுக கூட்டு வைத்த  காங்கிரஸ் கட்சி என அனைத்து தரப்பும் சேர்ந்து அழித்து ஒழித்து விட்டார்கள்.  

 

பெயரளவிற்கு கைத்தறி இருப்பது போல சித்த மருத்துவ அறிவை ஆங்காங்கு கண்காட்சியாக வைத்துள்ளது அரசும் அதை நம்பும் மக்களும்.  

     



 

 

     

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...