Search This Blog

Thursday 18 April 2019

நூலதிகாரம் நூல் south indian repellion 1800 - 1801




                                             இந்தியாவின் முதல் விடுதலை முழக்கம்





                           
       விடுதலை போராட்ட வரலாற்றை இந்திய விடுதலையை பிரிட்டீஷாரை எதிர்த்த குரல் கொடுத்தவர்களிடமிருந்து மத்திய அரசு அறிதியிட்டு அறிவித்தாலும் இதில் குலம் வந்ததால் பலர் விடுதலை போராட்ட வீரர்களாக இருந்தாலும் அவர்களை பல குலத்தினர் ஏற்பதில்லை. அரசு அறிவித்ததே பிழை என இ. முத்தையா போன்ற பல்கலை பேராசிரிய அறிஞர்கள்  தங்களது வாதத்தை தொடர்ந்து வைக்கிறார்கள். அதே வேளையில் அதே பல்கலைகழக பேராசிரியர்கள் பெரும்பாலனோர் அரசின் அறிவிப்பை ஏற்றார்கள். அதில் இந்தியா அளவில் பேசப்பட்ட நபர் பேராசியர் கே. ராசையன். பிறப்பால் மலையாள தேசத்தவராக இருந்தாலும் தென் இந்திய குறிப்பாக மதுரை மண்டல வரலாற்றை தனது ஆய்வுகளில் கண்டறிந்து பல நூல்களாக எழுதிய பெருமைக்குறியர். அவர் எழுதிய நூலே south indian repellion 1800 - 1801 இந்த நூல் பிரிட்டீஷாரை எதிரத்து அழிந்த வீரர்களை தனது கள ஆய்வில் பட்டிய்ல இடுகிறது. 

இந்த பட்டியலில், பெரும் இடத்தைப் பெருகிறார்கள் மருது சகோதர்களும் அவரது மகன் துரைச்சாமி சேர்வையும். மருது சகோதரர்கள் மடிந்து விட்டதால் அவர்கள் பட்ட வலி நமக்கு தெரியாமல் போய் விட்டது. ஆனால் சிறுவனான துரைச்சாமி சேர்வை வேல்ஸ் தீவுக்கு கடத்தப்பட்டு அவர் பெரியவராகி விடுதலை ஆனது பர்மாவில். அவர் பட்ட கொடுமைகளை பிரிட்டீஷார் குறிப்புகளிலிருந்து கொடுத்துள்ளார் ஆசிரியர். இதனை படித்தபோது கல்நெஞ்சம் படைத்த என் கண்களில் என்னை அறியாமலே கண்ணீர் வந்து விட்டது. 

இவரைப்போல் நாடு கடத்தப்பட்டவர்கள் பட்டியலை கொடுத்துள்ளார் நமக்கே அதிர்ச்சியாக இருந்துள்ளது. இதை வைத்துப்பார்கும் போது மன்னர் ஆசியில் மக்கள் நலமாக இருந்திருப்பார்களோ என்று தோன்றுகிறது. இதில் பலரும் அறியாக செய்திகள் ஜமீதார்களாக அரண்மனையாளர்களாக வலம் வரும் நமக்கு அறிமுகமான பாளையத்தலைவர்களின் முதாயர்கள் பலர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். குறிப்பாக தேவதானப்பட்டி பூசாரி கோடாங்கி நாயக்கன், வீரப்பூர் அரண்மனையாரிகளின் மூதாதையார் பலர் ஊர் மந்தையிலே தூக்கிலப்பட்டது மருது சகோதர்களுக்கு அடைக்கள்ம கொடுத்த குற்றத்திற்காகவே. 

தென் இந்தியா முழுக்க சுற்றி கேரள பலிசிராஜா முதல் கருநாடாக நாயக்கர் வரை சுதந்தரத்திற்கு வித்திட்டு மாண்டவர்களின் வாழ்விடத்தை அவர்கள் படத்தை புகைப்படம், களச்செய்தி, வரலாற்று குறிப்புகளுடன் கொடுத்துள்ள நூல். இந்த நூலாசியருக்கு மருது பேரவையினர் பாராட்டு விழா வைத்தவர்கள் நூலினை எழுத்தாளர் நெய்வேலி பாலு தமிழில் மொழியாக்கம் செய்தூள்ளார். 

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...