Search This Blog

Tuesday, 29 March 2022

சுளுந்தீ அனுபவம் (பகடு) sulunthee

                                        சுளுந்தீ அனுபவம் (பகடு)

முதற்கண் தோழர் முத்துநாகு அவா்களின் கடும் உழைப்பை பாராட்டியே ஆகவேண்டும்! தரவுகளுக்காக தேனீயாய் பறந்திருக்கிறார்!

கல்வெட்டுகள் ,கட்டிடங்கள், செப்பேடுகள் , ஆண்ட அரசின் ஆவணங்கள் போன்றவற்றின் மூலம் மட்டுமே வரலாற்றை அறிந்து கொண்டிருந்த நமக்கு, ஏடுஏறாத, மக்களின் வாய்மொழிகளில் இருந்தும் மக்கள் வரலாற்றை வழித்து சுரண்டித் தந்திருக்கிறார்! மக்களின், ஜமீன்களின், மதநிறுவனங்களின் வாய்மொழிகளில் ஒளிந்திருக்கும் வரலாறை பிரித்துத் தருவது என்பது கடுமையான அறிவு உழைப்பை உறிஞ்சும் செயல்! இந்த உழைப்பிற்காக தோழரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

500ஆண்டுகளுக்கு முன் இருந்த பண்டுவம் எனும் மருத்துவத்தீயை, அரசாட்சியை , மக்களின் வாழ்க்கை முறைமையை, சூழலை,தொழில் உறவுகளை இன்றைய இளைஞர்களுக்கு அணையாமல் சுளுந்தீ குச்சியாக கடத்தி தருகிறது தோழர் முத்துநாகுவின் "சுளுந்தீ"!

அவரவர் அனுபவங்களை பொறுத்து, புத்தகங்கள் படிப்பவரை தரதரவென்று இழுத்து செல்வதும், சுமந்து செல்வதும், தோள்மேல் கைபோட்டு அழைத்துச்செல்வதும் நடக்கும்! ஏற்கனவே பழைய மருத்துவமுறைகளில் நம்பிக்கை இருப்பவர்களை தோழானாக தோள்மேல் கைபோட்டு பன்றிமலை சித்தரிடம் அறிமுகப்படுத்துகிறது சுளுந்தீ! இதுதிறனாய்வு அல்ல; சுளுந்தீயின் ரசிகனாக என் பகடுகளோடு தொடர்புடையவையே! முடிந்தவரை தனது சொந்த கருத்துகளை வலிய திணிக்கவில்லை என்பதும் , நளினமான உவமை,உருவக, இயற்கை வா்ணணை போன்ற அழகியல் பூச்சுகள் இவரது படைப்பிற்கு தேவைப்படவேயில்லை என்பதும் சுளுந்தீயின் சிறப்பு! .

' பழங்காலத்தில் என்ன பெரிய அறிவியல் இருந்தது?' என்னும் ஆழ்மன பதிவுகள் உள்ளவர்கள் "டமாஸ்கஸ் ஸ்வோர்டு" தயாரிக்க பயன்பட்ட தமிழக எஃகை பற்றி படித்துவிட்டு "சுளுந்தீ"யில் புகுவது சரியான பார்வையை கொடுக்கும்! 108 தனிமங்களை அறிந்த பின்னும் நவீன அறிவியலால் வணிகரீதியில் செய்யமுடியாத இந்த எஃகு நம் பழையஅறிவியல் நுட்பத்தை பறைசாற்றும்! .

சிப்பிநூல் ஆடைகளை பற்றி தெரிந்து கொள்வதும், பழைய நுட்பங்களை தரும் "சுளுந்தீ"யை பகடிசெய்யாமல் புரிந்து கொள்ள உதவும்! (மஸில் என்றால் சிப்பி; பண்டைய மஸ்லின் ஒருவகை சிப்பியில் இருந்து எடுக்கப்பட்ட நூல்! இன்று இருக்கும் மஸ்லின் வேறு) சிப்பி உமிழும் சிலந்திவலை போன்ற உறுதியான நூலில் ஆடைநெய்ய அறிந்தவர்கள் இன்று உலகத்திலேயே ஓரிருவர்தான்! இந்தவகை ஆடை தொழிலும் நம் கடற்கரையில் செழித்தோங்கிய ஒன்று!

மேற்குலகம் மனித சிறுநீரை துணி துவைக்க பயன்படுத்திக்கொண்டிருந்த போது நாம் வெள்ளாவி வைக்க கற்றுக்கொண்டிருந்தோம்! இன்றைய நீராவி சலவை முறையின் முன்னோடி அது! இப்படி நிறைய தொழில்கள் குறித்த நுணுக்கங்களை குறுகத்தரித்த குறளாக நாவலெங்கும் தெளித்திருக்கிறார்!

 மருத்துவமும் இதற்கு விதிவிலக்கல்ல; அந்தந்த தலைமுறைக்கான சிறந்த மருத்துவ அறிவியல் இருக்கவே செய்யும்!இதையே நாவலிலும் முகநூலிலும் வலியுறுத்திக்கொண்டே இருக்கிறார்!

சுளுந்தீயில் தோழர் திரு.முத்துநாகுவின் உழைப்பை உணர, உள்வாங்க அவர் எடுத்திருக்கும் அத்தனை அவதாரங்களையும் நாமும் எடுக்க வேண்டி இருக்கிறது!

1)காட்டு வாசியாக;

ஆதவன் நுழையாத அடர்காடுகள் என்றாலே நமது படைப்பாளிகளுக்கு எங்கிருந்துதான் குளுமையும், தென்றலும் வந்து தொலையுமோ தெரிவது இல்லை! திரு.முத்துநாகுவின் படைப்பில் கருங்காட்டின் புழுக்கம் உள்ளது உள்ளபடியே பகடுவாக(அனுபவம்) பதிவு செய்யப்பட்டு நமக்கும் வியர்க்கவைக்கிறது!

மலையடிவார கிராமங்களுக்கே உரித்தான வெய்யில்விழும் காலஅளவை சொல்லி நாவலின் உண்மைதன்மையை , அரண்மனை அமைவிடத்தை அழகாக ஒருவரியில் சொல்லுகிறது!

காடுகளில் வெறும் கண்களை நம்பி மட்டும் நடமாடிவிட முடியாது! விலங்குகளின் வீச்சம் (நெடி) , விலங்குகள் நடக்கும்போது இலைகள் எழுப்பும் ஒலியை வைத்து அவை என்ன விலங்குகள், எந்த பருவத்தில் உள்ள விலங்குகள் என்பதை அறிந்து வைத்திருப்பர் கானுறை மக்கள்! அதை சினைப்புலி(மேப்படியானும் இப்படி வாசனையை தரும்) வெளியிடும் புனுகு போன்ற வாசனையை நுகரும் இராமன் மற்றும் பளியரின் மூலமாக அழகாக சொல்லியிருப்பார்! இது போன்ற நுட்பங்கள் ஆசிரியர் காட்டுக்குள் தொல்குடியினரோடு அலைந்த அலைச்சலை நமக்கு உரைக்கிறது!

 2)ஆநிரை மேய்ப்பனாக;

கிடைமாடுகள் வளர்போரிடம் சற்றுநேரம் பேசினால் போதும்! கால்நடை மருத்துவமனைக்கே போகாமல், ஒவ்வொரு இடையருமே டாக்டராக இருப்பதை உணரமுடியும்! மூங்கில் இலை,தும்பைச் சாறு, கற்றாழை, குண்டுமணிச்செடி,துத்தி,மூங்கில் இலை,பூண்டு ,வேம்பு போன்ற தாவரங்கள் மூலம் அவா்கள் கால்நடைகளுக்கு பண்டுவம் பார்ப்பது வியக்க வைக்கும்! வயிறுஉப்பி மேவு எடுக்காத கால்நடைகளின் நாவை இழுத்து குறிப்பிட்ட இரத்தக்குழாயை குத்தி, இரத்தத்தை சிறிது பிதுக்கி எடுத்தபின் கால்நடைகள் இரை எடுப்பது நமக்கு வியப்பளிக்கும்! இன்றும் இத்தகைய தாத்தாக்கள் தமிழகமெங்கும் இருக்கின்றனர்! நாவலில் வரும் இடையர் பாத்திரங்கள் மூலமாகவும், ராமன், சித்தர் மூலமாகவும் இயன்றஅளவு கால்நடை மருத்துவத்தை பதிவு செய்துள்ளார்! எவ்வளவு நாட்கள் இடையர்களுடன் செலவழித்தாரோ ஆசிரியருக்கே வெளிச்சம். கன்றுபோடாமல் மாடில் பால்கறக்கும் முறையாக சித்தர் குரலில் தோழர் சொல்வது பிறருக்கு நம்ப முடியாததாக இருக்கும்; எங்கள் தோட்டத்தில் உண்மையில் நடந்த நிகழ்வு இது; பேறுகாலத்தில் தன்மகளை இரத்தப்போக்கில் இழந்த வயதான பெண்(பாட்டி), தனது பேத்திக்கு தாய் (பாட்டி)பால்கொடுத்து வளர்த்திருக்கிறார்!இது நடந்தது வெறும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு! இப்படி எனக்கு வியப்பாய் இருந்த பலவற்றிற்கு வெளிச்சம் அளித்திருக்கிறார் ஆசிரியர்!

 3)பண்டுவனாக;

பண்டுவம் என்பது இயற்கையானது அல்ல; செடிகளை அப்படியே எடுத்து பிழிந்து கொடுப்பது அல்ல!உலோகமும்,அலோகமும் பயன்படுத்தி, அதில் மூலிகைச் சாரமிறங்கி, செயற்கையாக பலபடிநிலைகளை கொண்டவையே பண்டுவ முறை மருந்துகள்! அதுபோலவே, பண்டுவ உலோக,அலோக மருந்துகளின் பெரும்பகுதி வாழ்வாங்கு வாழ்பவர்களுக்கானதும் அல்ல! இரண்டாம் யுத்தகாலத்தில் வீரர்களுக்காக உருவாக்கப்பட்ட நவீன மருந்துகளைப் போன்றது! பக்கவிளைவுகள் உண்டென்றாலும் அது உடனடியாக போர்வீரர்களை களத்தில் நிற்க வைக்கும்! போர்வீரர்களுக்கு வயதாகி சாக வாய்க்காது என்பதால் பக்கவிளைவுகளை கண்டுகொள்ள வேண்டியது இல்லை! பண்டுவம் போர்வீரர்களுக்கான பண்டைய அறிவியல் மருத்துவம் அல்லது இன்றைய ICUவில் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு ஒப்பானது போலும்! தாவரங்கள் , பாறை தாதுக்கள் , உயிரினங்கள் போன்றவற்றை பயன்படுத்தி, அதே சித்தர்கள் தயாரித்த பிற மருந்துகள் பெரும்பாலும்,வயதான காலத்தில் பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத , போர்ச்சாவு அடைய தேவையில்லாத பொதுமக்களுக்கான மருந்துகள் போலும்!

தாவரங்களில் இருந்து குறிப்பிட்ட நோயிற்கான, குறிப்பிட்ட பகுதிப்பொருளை பிரித்துக் கொடுக்கவும் பண்டுவர்கள் அறிந்திருந்தனர்! இன்று "நேச்சுரல் புராடக்ஸ்" என்ற தனி வேதியல் பிரிவே அதற்கு உண்டு! இந்த பிரிவை படித்திருந்ததாலும், என்வீட்டு பெரியவர்கள் மருத்துவதுறையில் இருந்ததாலும், ஆசிரியரின் உழைப்பை, முன்னோர்களின் அறிவியலை சுளுந்தீயில் உணர முடிகிறது! கிராவிமெட்ரிக் , வாலைவடித்தல் போன்ற முறைகளில் தான் சித்தர்களும் அக்காலத்திலேயே செயற்கை மருந்துகளை உருவாக்கி கொடுத்துள்ளனர் என்பதை சுளுந்தீயில் காணமுடிகிறது! நேரடியாக உண்டால் கடும் விளைவுகளை உண்டாக்கும் கந்தகம் ,பாதரசம்(பூதம்) மற்றும், இதர கன உலோகங்கள் போன்றவற்றை மூலிகைகளின் சாறில் இருக்கும் அமிலங்கள், காரங்கள், அல்கலாய்டுகள் , பீனால் டிரைவேட்டிவ்கள் மூலம் உண்ணத்தகுந்த மருந்தாக பக்குவப்படுத்தி தந்துள்ளனர் என்பதை நாவலில் உணர முடிகிறது! இன்றும் zincக்கும், அயோடினும் , வெள்ளி, குரோமியமும் நோயெதிர்ப்பு மருந்துகளில் ஆற்றும் பணியை நாம் கணலாம்! அதனால் சித்தர்களை ஏதோ முட்டாள்களாக பார்க்காமல், அக்காலத்தில் இருந்த சட்டி, பானை , துணிகளைக் கொண்டே வாலைவடித்தல், பஸ்பமாக்கள் (கிராவிமெட்ரிக்), நேனோ டெக்னாலஜி (பல முறை நுணுக்கி சலித்தல்) போன்றவற்றின் மூலம் மருந்துகளை தயாரித்த "chemist"களாக பார்ப்பதே பொருந்தும்! அதையே தோழரும் வலியுறுத்துகிறார்! பண்டுவத்தை ஏற்றுக்கொண்டு ,அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பதே நமது அவாவும்! பிரண்டைஉப்பு , சீந்தில் சர்க்கரை , கடல்பாசி பஸ்பம்( இது அயோடின் கொண்டது! ஆண்டிபயாடிக் குணமுள்ள புண்ணாற்றி! டின்ஞ்சர் அயோடினே!) போன்ற மருந்துகள் எல்லாம் சாதாரண கத்துக்குட்டிகள் செய்வதென்றால் சித்தர்களின் பிரமாண்டத்தை உணர முடிகிறதல்லவா? ஒப்பீட்டளவில் அன்றைய சித்தன் இன்றைய நவீன விஞ்ஞானியாவான்! பழங்கால புரட்சியாளர்கள் மொத்தமும் இன்றைய மதவாதிகளின் கைகளில் தேவதூதர்களாக சிக்கி கதறுவதைப் போல, வெற்றுக் கூச்சல் பழமை விரும்பிகளாலும் , அரைகுறை அறிவியலை தெரிந்து கொண்டு மொத்த மரபையும் புறந்தள்ளும் நவீன விஞ்ஞானிகளாலும் புரிந்து கொள்ள முடியாதவர்கள் பண்டுவ சித்தர்கள்! சுளுந்தீயில் இராமன் பண்டுவன் மூலம் சித்தர் வெளிப்படுத்தும் மருந்துதயாரிப்புகள் மீட்டுஎடுக்கப்பட்டு, தேவைக்கு வளர்க்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவேண்டும்! வழக்கொழிந்த பண்டுவத்தை, ஆசிரியர் நாவலில் அறிமுகபடுத்துவதற்கே எத்தனை உழைத்திருக்கிறார் என்பதை நாவலை படித்துப்பார்த்தால் உணர முடிகிறது!

ஆனால், தோழர் எழுதியிருக்கும் மருந்துகள் விவரணைகள், செய்முறைகள், நுணுக்கங்கள் நோயாளிகளின் நேரடி பயன்பாட்டிற்கு போதுமானவையா என்பது ஐயமே. இதற்கே பல ஆண்டுகள் உழைப்பை அவர் செலுத்தியிருப்பார் என்றால், நாம் இன்னும் காலத்தில் பின்னோக்கி சென்று முழுமைக்காக ஆராய எத்தனை ஆண்டுகள் வேண்டும்? அத்தகைய ஆய்வுகள் தனிமனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டது! ஆனால், காலத்தின் தேவையிது! பண்டுவத்தை மீட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரும் மொத்த பொறுப்பையும் தோழர்.முத்துநாகு அவர்களின் தோள்மேல் ஏற்றுவது பொறுப்பற்ற செயல்! மருத்துவ மரபை மீட்க , அறிவியல் நிரூபணம் செய்ய மரபின் மேல் மையலுள்ள தொழில்முறை வல்லுநர்களின் பெரும் கூட்டுஉழைப்பும், அரசின் ஆதரவும், பெரும் பொருளுதவியும் தேவை! இந்த அவா ஆசிரியரின் அடிமனதில் உறைந்திருப்பதை உணரமுடிகிறது!.

கஞ்சா, சாராயம் போன்றவற்றை வெறும் போதைப்பொருளாக தள்ளி வைத்து இருப்பவர்களுக்கு, நமது பாட்டிகளின் மகப்பேறின் போது வலிநிவாரணியாகவும் , தூய்மைபடுத்தியாகவும் (சானிட்டைசர்) பயன்பட்டது பலருக்கும் தெரியாது!

4) வேதியல் மாணவனாக;

சோடியம் குளோரைடு எனும் உப்பை வறுத்து சமையலுக்கு பயன்படுத்தச் சொல்வார் என் தாத்தா!(எனக்கு அந்த உப்பும் கிடையாது)! உப்பானது அதிக நேரம் அதிக சூட்டில் இருக்கும் போது அதிலிருந்து குளோரின் வாயு வெடித்து விடுபட்டு வாயுவாக போய்விடும்! மீதமிருப்பது சோடியம்! இது மக்னீசியம் போல விசித்திரமான ஒரு தனிமம்! நீரினுள் போட்டால் வெடிக்கும்! எப்பொழுதும் ஏதாவது ஹைட்ரோகார்பனான எண்ணெய்யின் உள்ளேயே இருக்க வேண்டும்! சோடியத்தை துளியூண்டு பஞ்சினுள் அல்லது, பன்னாடையினுள் எடுத்து சொட்டுநீரை விட்டு தீப்பற்ற வைக்க முடியும்! வெடியாகவும் , தீப்பெட்டி போலவும் பயன்பட்டதால் உப்பை காய்ச்சுவது பன்னெடுங்காலம் முன்பே தடை செய்யப்பட்டு விட்டது அரசர்களால்! சோடியத்தை இன்றைய "டைம்" பாம் போல பயன்படுத்தி எதிராளிகளின் வைக்கோல், தட்டு ,கடலை பொட்டு போர்களை, குடிசைகளை, விளைந்து காய்ந்த பயிர்களை எரித்து சேதம் உண்டாக்கியதால் சோடியத்திற்கு இந்த தடை! ஏனென்னால், அரசனுக்கும் இது வரிவசூலை பாதிக்கும்! இந்த பழங்காலமுறையை தோழர் முத்துநாகு அழகாக தன் கதைமாந்தர்கள் மூலம் விவரிப்பார்! மீதியை நாவலில் படியுங்கள்! இப்படிப்பட்ட தரவுகள் எக்கச்சக்கமாக இருக்கின்றன உள்ளே! கிணற்று ஆசாரிகளுக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த உப்புக்காய்ச்சும் முறை தெரிந்தே வந்திருக்கிறது!

எங்களுக்கு இந்தமுறையில் பாறைஉடைத்து, வற்றாத கிணறுவெட்டிய கிணத்துஆசாரியின் சொத்துப்பிரச்சனையில் தலையிட்டு, அது இரட்டை கொலையில் முடிந்தது!.

 5)சூழலியலாளராக;

இருவேறு இனங்களுக்கு இடையில் நெகிழ்வு நிலம் தேவைப்படுவது போலவே(ஒசூர்,பாலக்காடு..) , வனங்களுக்கும்,விவசாய நிலங்களுக்கும் கூட ஒரு நெகிழ்வு நிலம்( buffer zone) பேணப்பட்டு வந்திருக்கிறது! இது கானுயிர்களுக்கும் , கால்நடைகளுக்கும் பொதுவான பகுதி! இந்த buffer zone பகுதியின் இன்றியமையாமையை தோழரைப் போல விவரித்தவர் யாருமில்லை! இன்னும் தெரிய சுளுந்தீயில் நோக்குக!

6)வரலாற்று ஆய்வாளராக;

விஜயநகரமன்னர்களை ஏதோ இந்துமத காவலர்களைப் போலவும், வேதிமதத்தவரை அண்டவிடாத எல்லைச்சாமிகள் போலவும் பீற்றி திரிபவர்களை கையறுநிலையில் நிறுத்துகிறது நாவல்! நாவலின் காலகட்டத்தில் எப்படி, எதற்காக புறமதங்கள் உள்ளே நுழைந்தன என்பதை பட்டவர்த்தனமாக தோலுரிக்கும் அதேவேளையில் புத்தமும் சமணமும் அழிக்கப்பட்ட விதத்தையும் பேசுகிறது! கோடங்கி, பூம்பூம் மாட்டுக்காரன் போன்றோர் எப்படி மன்னர்களுக்கு வேவுஊழியம் செய்தனர் என்பதையும் நாசூக்காக சொல்லிச்செல்கிறது சுளுந்தீ! நான் சொல்லி இருப்பது கொசுறே!

7)தாவரவியல் மாணவனாக, விலங்கியல் மாணவனாக;

தாவரங்களையும், விலங்குகளையும் வெறுமனே மனப்பாடம் செய்வதல்ல படிப்பு! அவற்றை அன்றாட வாழ்வில் உணவுக்காகவும், மருந்துக்காகவும் எப்படி பயன்படுத்துவது, அவற்றில் ஏற்படும் நோய்களை எப்படி போக்குவது என்பதை அறிவதே படிப்பு என நாவலை படிக்கும்போது உரைக்கிறது! மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் ,தாவரங்களுக்கும், பறவைகளுக்கும் இடையே ஒரு உள்ளார்ந்த பன்னெடுங்கால உறவு இருப்பதை படிக்கும் போது உணர முடிகிறது!,

😎நிலத்தடி நீரை கண்டுபிடிக்கும் நீரோட்டக்காரனாக, மடாதிபதியாகராவுத்தனாக, முனைவனாக, நாத்திகனாக ,ஆத்திகனாக, வெட்டியானாக, வேர்சொல் காணும் அறிஞராக, பண்டுவனாக, சலவை தொழிலாளியாக, நாவிதராக, பஞ்ச காலம் போன்ற கடினமான சூழ்நிலையிலும் உயிர் பிழைக்கும் வித்தை(Man vs wild) தெரிந்த வித்தகராக நாவலில் வரும் அத்தனை பேரும் அண்ணன் முத்துநாகுவே எனும் போது வியப்பாக இருக்கிறது.

சுடுகாட்டுக்கு தீச்சட்டி சுமக்கும் பழக்கம் கூட தீப்பெட்டி இல்லாத காரணத்தால் வந்தது தான்! காரணம் தெரியாமல் இன்னமும் இழவு வீட்டு வாசலில் தீ போட்டு , சுடுகாடு வரையிலும் தீச்சட்டி தூக்குறோம் பொணத்த எரிக்க சாங்கியம் என்ற பெயரில்.

எங்கள் கோவை பக்கம் சில வில்லங்கமான ஆட்களை முசுடு அல்லது முசுறு என்பர்! முசுறு என்றால் மரத்தின் இலையில் கூடு கட்டி வாழும் சுளுக்கை செவ்வெறும்பு என்பது இந்த நாவலை படித்த பின்புதான் தெரிந்தது! அதேபோல "வெங்கம் பய " என்பதின் பொருளும் இந்த நாவலை படித்த பின்பு தான் தெரிந்தது. கிளியோபாட்ரா இறந்தபின் அவரது பிணத்தை புணர்ந்தனர் என்ற அதிர்ச்சியின் நீட்சி நம் நிலத்திலும் நடந்திருப்பது ஆச்சரியமே.

சில புத்தகங்கள் நம்விரலை நமக்கு தெரியாமலே பக்கங்களை திருப்ப வைக்கும். மரபு வழியில் தீப்பெட்டியோ , லைட்டரோ இல்லாத காலத்தில், கோயில் குண்ட குழியிலிருந்தோ, மடம் அல்லது, அரண்மனையிலிருந்தோ, அடுப்பெரிக்க வீடுவரை அணையாமல் பந்தம் போல கொண்டுவர சுளுந்தீ குச்சியை பயன்படுத்துவார்கள். சுளுந்தீ குச்சியில் இருக்கும் எண்ணெய்பசை தீயை அணையவிடாது. அய்யகோ! தமிழனுக்கு தீயை உண்டாக்க தெரியலையா? என குமுறக்கூடாது . கடசக்கட்டை (கடைசல் கட்டை), உப்புக்கசடு (சோடியம்) , ஆடி(லென்ஸ்)னுதீயை உற்பத்தி செய்ய முடிஞ்சாலும் செய்வது ராஜகுற்றம்! ஏனா, இரவில் ஒருகுலத்துக்காரன், மறுகுலத்துக்காரனோட விளைஞ்ச (காய்ஞ்ச) வெள்ளாமையிலும், போர்களிலும் (வைக்கோல், சோளத்தட்டு, பயிறு, கடலத்தொலி) வீடுகளிலும் தீயை வச்சுடுவாங்க பழி தீர்க்க! பறிகொடுத்தவனுக்கு மட்டுமில்ல; அரசனுக்கும் வரிவருமானம் போயிடும் இதனால்! அதனால , காலையில கஞ்சி வச்சா பொழுதுழுக கங்குவை சுத்தமா அணைச்சிடணும்! பொழுது விழுந்ததும் யாருக்கும் தீயின் கங்கை இரவல் தரமாட்டார்கள். அந்த பழக்கம் அண்மைகாலம் வரை காரணம் தெரியாமலே, கிராமங்களில் கடைபிடிக்கப்பட்டு இருந்தது. மிகைபடக் கூறல் எதுவும் இல்லையென்றாலும் கூறியது கூறல் இந்த நாவலில் வருகிறது; அதை தவிர்த்திருக்கலாமோ? சுளுந்தி நாவல் என்ற வரையறையில் வருகிறதா இல்லையா என்பது எனது சிற்றறிவுக்கு புலப்படவில்லை. ஆனால் அருமையான படைப்பு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

ம் (பகடு)

Monday, 21 February 2022

தமிழர் வீட்டிலும் கட்டாயம் வைத்துக் கொள்ள வேண்டிய மருத்துவ நூல். ; குப்பமுனி

 தமிழர் வீட்டிலும் கட்டாயம் வைத்துக் கொள்ள வேண்டிய மருத்துவ நூல். ;                                                      குப்பமுனி ; லட்சுமி கோபிநாத்
 
" குப்பமுனி அனுபவ வைத்திய முறை" நூல் கைக்கு வந்து விட்டது. கையோடு எல்லா குறிப்புகளையும் வாசித்து விட்டேன். "சுளுந்தீ ", சித்தர் குறிப்பு எழுதி கையில் குடுத்தது போல இருக்கிறது. அதிகம் குழப்பாமல் நேரடியாகவும் எளிமையாகவும் விவரிக்கப் பட்டுள்ள ஒவ்வொரு நோய்க் குறிகளுக்கான சித்த வைத்திய முறைகள். பெரும்பாலும் முறையான சித்த மருத்துவர்கள் பயன் படுத்தும் வகையிலான மருத்துவ குறிப்புகள் என்றாலும், நம் அன்றாட சிக்கல்களான வாய்வு, ஒற்றை தலைவலி, குழந்தைகளுக்கு வாந்தி நிற்க, இளைப்பு போன்ற சிறிய சிக்கல்களுக்கான எளிய வைத்திய முறைகளை நறுக்கு தெறித்தாற் போல எழுதியிருக்கிறார். பெரும்பாட்டிற்கு ஆர்.எஸ் பதி மருந்தில் தீர்வு சொல்வதெல்லாம் அமர்க்களம். சித்தமருத்துவத்திற்கான என்சைக்ளோபீடியா போல இருக்கிறது. கொரோனா காலங்களில் சித்த மருத்துவத்தில் சில முறைகளை துணிந்து கையாளும் படி அண்ணன் சித்த மருத்துவர்களிடமே தொடர் கோரிக்கைகள் வைத்துக் கொண்டே இருந்தார். அப்போது பசு மஞ்சள் செய்த மாயங்களை நான் நேரடியாக உணர்ந்தேன். இந்த நூல் மிக எளிமையாகவும் அருமையாகவும் வந்திருக்கிறது. ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் கட்டாயம் வைத்துக் கொள்ள வேண்டிய மருத்துவ நூல்.

உயிர் பதிப்பகம் வெளியீடு.
விலை ரூ.200.
அலைபேசி 9840364783. 

பண்டுவம் ; தமிழரின் அடையாளம் , பாவலர் வையவன்

 பாவலர் வையவன்

தமிழரின் தனித்த அடையாளங்களாக பலவற்றைச் சொல்லமுடியும். அதில் நான் முதன்மையானதாக மூன்றைக் கருதுகிறேன். தமிழரின் மொழி, மருத்துவம், வானியல் முடிவுகள். எந்த அறிவையும் மொழிவழியாகத்தான் சொல்லமுடியும் என்பதால் மொழி முதன்மையாகிறது. 
 
அதற்கடுத்து மருத்துவத்தைச் சொல்கிறேனென்றால்... மனிதரின் முக்கியத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடத்தில் உணவே முதன்மையானதாகும். உணவின் மாற்றத்தாலும், உணவுச் சிதைவாலுமே நோய்கள் ஏற்படுகின்ற காரணத்தால் நோய்களைத் தீர்க்கும் வைத்தியத்தை வரிசையில் அடுத்து வைக்கிறேன். வைத்தியத்துக்கும் வானியலுக்கும் தொடர்பிருப்பதால் வானியலின் தேவை அதனோடு அவசியமாகிறது. வானியல் தெரியாதவனும் நாடி பார்க்கத் தெரியாதவனும் சிறந்த வைத்தியன் அல்ல.
 
இன்றைய நிலைமை உங்களுக்கே தெரியும் . நாம் நமது எல்லா அடிப்படை அறிவையும் தொலைத்துவிட்டு ‘வெஸ்டர்ன் அறிவில்’ வெந்துகொண்டிருக்கிறோம். அந்நிய ஆட்சிகளால் நமது அத்தனை பண்பாட்டு மரபுகளையும் இழந்து அவற்றை குற்றுயிரும் குலையுயிருமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். நமது மருத்துவத்தைக் கூட நாம் செய்துகொள்ள அரசின் தடைகள் பல உள்ளன. பான்னாட்டு வணிக அடிப்படையிலேயே நம் மருத்துவம் நடைபெற்றுவருகிறது. இந்திய அளவில் இன்று மருத்துவம் என்பது வாணிபமே ஒழிய வைத்தியம் அல்ல.
 
“கடல்நுரை, பாசி, பாசம், பவளம், பவளப் புற்று, சங்கு, சிப்பி, ஆமை ஓடு வனத்தில் மட்டுமே விளையும் குங்குலியம், கடுக்காய், தன்றிக்காய், மாசிக்காய், கழாற்சிக்காய், பேப்பீர்க்கை, முயல், பச்சோந்தி, மான்கொம்பு, யானையின் கடைவாய்ப் பல், பச்சக்காடை இறகு, மயிலிறகு போன்ற நூற்றுக்கணக்கான மருந்துகளை நாம் எளிதாகப் பயன்படுத்தக் கூடாத வகையில் இருநூறு ஆண்டுகளுக்குமுன் பிரிட்டிஷார் போட்ட வனச்சட்டம் இன்றும் அப்படியே உள்ளதே சித்த மருத்துவ சிதைவுக்குக் காரணம்” என்னும் முத்துநாகுவின் கவலையில் நியாயம் இருக்கிறது. எல்லாவற்றிலும் தமிழ் மரபையும், பண்பாட்டையும் மீட்க முனைவோர் முதலில் மருத்துவத்தைதான் மீட்கவேண்டும் என்னும் உண்மையை விளங்கிக்கொள்ளவேண்டும்.
 
தொகுப்பாசிரியர் முத்துநாகுவின் தாத்தா பண்டுவர் குப்புசாமியின் தந்தை நாகப்பன். அவருக்கு ஒரு இயற்கை வைத்திய சாமியார் அறிமுகமாகிறார். நாகப்பனின் கோரிக்கையை ஏற்று அந்த சாமியார் அந்த ஊரிலேயே தங்கி பண்டுவம் பார்க்கிறார். அவருக்கு உதவியாக நாகப்பனின் மகன் ரங்கப்பன் பணிக்கப்படுகிறார். ரங்கப்பன் மருத்துவத்தில் நல்ல தேர்ச்சிபெற்றதால் சாமியார் அவனை அகத்தியரின் பெயர்களுள் ஒன்றான ‘குப்பன்’ என்னும் பெயரால் அழைக்கிறார். அவரும் ‘குப்ப முனி’ என்னும் சிறப்புப் பெயர் பெறுகிறார். அவர் எழுதிவைத்த அனுபவ மருத்துவக் குறிப்புகளைத்தான் அவரது மரபுவழிப் பெயரனான தோழர் முத்துநாகு அற்புதமான நூலாகக் கொண்டுவந்திருக்கிறார். இதில் குப்பமுனி எழுதிவைத்த 481 நோய்களுக்கான மருந்துசெய்யும் முறைகளும், பத்தியமும், நாடியும், சொல்லப்பட்டிருக்கிறது. சில செய்முறை படங்களும் உள்ளன.
தோழர் முத்துநாகு ‘சுளுந்தீ’ என்னும் அற்புதமான மருத்துவ நாவலை தமிழ்ச் சமூகத்துக்கு முன்னமே அளித்துள்ளார். இது சித்த மருத்துவத்திற்கான அவரின் இரண்டாவது கொடை. இதன் தொடர்ச்சியாக அவர் இன்னும் பல பணிகளைச் செய்தாகவேண்டும். அவருக்கு என் தமிழார்ந்த
வாழ்த்துகள்

குப்பமுனி அனுபவ வைத்திய முறை

குப்பமுனி அனுபவ வைத்திய முறை       
           
  சித்த மருத்துவர் மு.அருண் B.S.M.S.,

தமிழர்தம் உணவிலும் உணர்விலும் இன்றுவரை சித்த மருத்துவம் கலந்து நிற்பதற்கு பெரும் பங்குவகிப்பது பரம்பரை சித்த மருத்துவர்களுக்கு உண்டு என்று உறுதிபடக் கூறலாம். சித்த மருத்துவத்திற்கென்று கல்லூரி அமைத்து பட்டதாரி சித்த மருத்துவர்கள் வரத்தொடங்கி அறுபதாண்டு காலம் கடந்து விட்டாலும் பரம்பரை சித்த மருத்துவர்களின் பங்களிப்பு இன்று வரை தொடர்கிறது. இன்னும் உண்மையை உடைத்துக் கூறினால் இன்றளவும் பெருவாரியான மக்களின் நம்பகத்தன்மையைப் பெற்று இருப்பதில் பரம்பரை மருத்துவர்களுக்கே முதலிடம்!. இதற்கான காரணம் என்னவெனில் சித்த மருத்துவத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள ஆழமான நம்பிக்கையும், தொடர்ச்சியான வாசிப்பும் ஆகும்.  சித்த மருத்துவ கல்லூரியில் படித்துவரும் பட்டதாரிகளில் பெரும்பாலானோருக்கு  பாடத்திட்டத்தில் உள்ள குழப்பங்களும், கல்வி கற்றுக்கொடுப்பதில் உள்ள சுணக்கமும் சித்த  மருத்துவத்தின் மீது உள்ள பற்று குறையக்காரணமாகின்றன!. கல்லூரியில் படித்து முடித்த பின் அவர்களது சித்த மருத்துவ நூற்கள் வாசிப்பும், தேடலும்  அறவே குறைந்து விடுவதும் கூடுதல் காரணமாகிறது.பரம்பரை மருத்துவர்கள் அவர்கள் மருத்துவப் பயிற்சிக்கான மருந்துகளை அவர்களே செய்வதால் மருந்து தயாரிப்பில் ஏற்படும் ஐயங்களை களைவதற்கும் புதிதாக மருந்துகள் தயாரிக்கவும் தொடர்ச்சியான வாசிப்பில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரியில் படித்து முடித்து பயிற்சிக்கு வரும் பட்டதாரி சித்த மருத்துவர்கள் பலரும்  மருந்துகளை மருந்துச்சீட்டில் எழுதியே பழகிவிட்டனர்!. தங்களுக்கு வேண்டிய மருந்துகளை தயாரிக்கும் முறையை கல்லூரியில் கற்றிருப்பினும் மருந்து செய்து நோயருக்கு வழங்கும் பழக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. பரம்பரை மருத்துவர்கள் பெரும்பாலும் மருந்து தாமே தயாரித்து வழங்கி வருகின்றனர்.

இன்றைய நவீன மருத்துவ உலகம் தனிநபர் சார் மருத்துவம் (personalised medicine) நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது! சித்த மருத்துவம் இதனை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்பாட்டில் கொண்டுள்ளது!. ஆம் சித்த மருத்துவத்தில் ஒவ்வொரு நபருக்கும் அவரது பாதிப்பைப் பொறுத்து மருந்துகள் மாறுபடும். காய்ச்சலாக இருந்தாலும் கழிச்சலாக இருந்தாலும் அனைவருக்கும் ஒரே வகையான மருந்துகள் வழங்கப்படுவதில்லை. அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப மருந்துகள் வழங்கப்படும். ஆகையால்தான் சித்த மருத்துவத்தில் ஒரே நோய்க்கு பல மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. எனவே மருந்துகள் தயாரிப்பு முறைகளும் ஏராளம், அந்தந்த நிலத்திற்கு ஏற்ப கிடைக்கும் மூலிகைகள், மருந்துப் பொருட்களுக்கு ஏற்ப, வரும் நோய்களின் உடல் திடத்தை பொறுத்து மருந்து தயாரிக்கும் முறைகள் மாறுபடும். நோயாளிகளுக்கு ஏற்ப மருந்துகளும் மாறுபாடுவதால் ஒவ்வொருவருடமிருந்தும் தனி அனுபவம் மருத்துவர்களுக்கு கிட்டும். அதனை மருத்துவர் குறிப்புகளாக பதிவு செய்யத் தொடங்கினால்  பிற்காலத்தில் அஃது நூலாக மாறும் அளவிற்கு வளர்ந்து நிற்கும். அவ்வாறு தாம் கற்ற, பெற்ற, அனுபவங்களை குறிப்புகளாக எழுதி வைத்த  சித்த மருத்துவர்  குப்பமுனி அவர்களின் மருத்துவ முறைகளை அவர்தம் வழிவந்த முத்துநாகு தமிழ்ச் சமூகத்திற்கு பயன்படும் வகையில் நூலாக்கி இருப்பது அரும்பணி ஆகும்.

இந்நூலில் கருத்தரிப்பு முதல் (அதிலும் ஆண் குழந்தை வேண்டுமா பெண்குழந்தை வேண்டுமா என்று முடிவு செய்யும் அளவிற்கு) முதியோர் நலம் வரை அனைத்துக்கும் மருந்துகள் தயாரிப்பு முறையோடு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். மனிதருக்கு மட்டுமல்ல மனிதருடன் ஒன்றாக வாழும் மாடுகளுக்கு வரும் நோய்களுக்கும் பண்டுவம் இந்நூலில் உள்ளது தனிச்சிறப்பு. சித்த மருத்துவத்தின் சிறப்பு மருந்துகளான தாது மருந்துகள் தயாரிப்பு முறைகள் எளிமையாக அனைவருக்கும் புரியும் வகையில் அதேவேளையில் தனித்துவமாக உள்ளன என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். பெரு மருந்துகளுக்கான துணை மருந்துகளும் அனுபானமும் விரிவாக வழங்க நூலின் தொகுப்பு ஆசிரியர் எடுத்த முயற்சி நூலில் வெளிப்படுகிறது.

மருத்துவம் படித்தவர்களுக்கு மட்டுமின்றி மருத்துவ ஆர்வலர்கள் விரும்பும் மூலிகைகளின் பயன்பாடுகள், சிற்சில நோய்களுக்கு தாமே செய்துகொள்ளக்கூடிய மருத்துவ வழக்குகள் போன்ற பகுதிகளும் நூலில் இடம்பெற்றுள்ளது சிறப்பு. நாய்க்கடி முதல் தேள்கடி பாம்புக்கடி வரை அனைத்து விடக்கடிகளுக்கும் மருத்துவக் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. கண், காது, முடி உதிரல் என அனைத்து விதமான நோய்களுக்கும் தெளிவாக மருந்து செய்முறையுடன் விளக்கப்பட்டுள்ளது. இந்நூலை ஒருவர்  படித்து  உள்வாங்கி, அதனை பின்பற்றி மருந்து தயாரித்து வழங்கவே ஒரு ஆயுள் போதாது என்னும் அளவிற்கு தகவல்கள் நிரம்பி வழிகின்றன! சித்த மருத்துவர் இல்லத்தில்  மட்டுமல்ல  தமிழர் ஒவ்வொருவர் இல்லங்களிலும் இருக்க வேண்டிய நூல் என்றால் அது மிகை இல்லை. நோய்களைப் பற்றிய பார்வை குறித்து முத்துநாகு அடுத்த நூலினைப் படைக்க வேண்டும் என்று வேண்டுகோளையும்  இங்கணம் வைக்கிறேன்.           வாழ்க தமிழ் மருத்துவம்!

                                                                                                                                    இவண்

                                                                                                                சித்த மருத்துவர் மு.அருண் B.S.M.S.,

மொழி என்ற அறிவு

                                                            மொழி  என்ற அறிவு

மொழி என்பது மனிதர்களை இணைக்கும் ஒலிப்பு மட்டுமல்ல, பண்பாடு, கலாச்சாரம், அறிவியல், அழகியல்களை உள்ளடக்கியது. ஒரு மொழியை உலகவளவில் பேச்சு எழுத்து வடிவமாக கொண்டு செல்லும் போது அதில் வியாபாரம் அடங்கி விடும். எ.கா - ஜப்பானில் பிறந்த நடிகர் ஜாக்கிஜான் படங்கள் ஆங்கிலத்தில் வெளியாகும் போது அந்த மொழி பரவலாக்கப்பட்டதால் படத்தின் குறுந்தகடுகள் விற்பனையாகும் அல்லது இணையத்தில் வெளியானால் விளம்பரம் அதிகமாக கிடைக்கும். இதே போல் ஒரு நூலினை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து விட்டால் அதன் விற்பனை அதிகரிக்கும். இன்றைய மருத்துவ நூல்கள் ஆங்கிலத்தில் தானே கிடைக்கிறது. இதன் கிரிடிட் யாருக்கு போகிறது என பார்த்தீர்களா?.

ஒரு மொழி அழியும் போது அதில் உள்ள விஞ்ஞானம் அழிந்து விடும். எளிதாக சொல்லுவதென்றால் தமிழில் உள்ள மருத்துவம் பண்டுவம். பண்டுவம் (வைத்தியம் - சமற்கிருதம்) அழிந்து விட்டது. அதே போல் பொறியியல், இசை அறிவு.

பொறியியல்

 உலகிலே முதன் முதலாக கட்டப்பட்ட அணை கல்லணை என பிரிட்டீஷ் இந்தியாவில் பொறியியல் தந்தை என அழைக்கப்படும் பிரிகேடியர் ஆதர்குட்டன் சொல்லி அந்த கல்லணையின் தொழில் நுட்பத்தைதே கண்டறிந்து அத்தொழில் நுட்பத்தில் பிரிட்டீஷ் அரசு ஆண்ட பகுதியில் கட்டிய அணைகளிலும் பயன்படுத்தப்பட்டது. (கடுக்காய் காசிகட்டி, சுண்ணாம்பு, பதனீர், மணல், கல்,) என ஆதர்குட்டன் பெருமையாக தனது "இந்தியன் இர்கேசன் சிஸ்டம்' என்ற நூலில் பதிவிட்டுள்ளார். ஆனால் தமிழ் பின்னுக்கு போனதால் அதன் நுட்பம் பின்னுக்கும் போகவில்லை அழிந்தே விட்டது சொல்ல வேண்டும். 

விஜய நகர அரசர்கள் அவர்கள் வழி வந்த நாயக்கர் மன்னர்கள் கட்டிய கட்டிடங்கள் அனைத்தும் மேலுள்ள பொறியலியல் தொழில் நுட்பத்திலே. இவர்கள் காலத்தில் மேல் பூச்சிற்காக கடலில் கிடைக்கும் பவளப்புற்றுகள், முத்து சிற்பிகள், சங்குகள் , கோழி முட்டையும் கலவையில் சேர்க்கப்பட்டு வழவழப்பான மேல்பூச்சிற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொழில் நுட்பங்கள் நாயக்கர் கால அம்மானை பாடல்களிலும் பிள்ளைத்தமிழில் பாடல்களிலும் தனிப்பாடல்களிலும் கிடைக்கிறது. இவைகள் மொழியின் உள் புதைந்துள்ள நுட்பம் என்பதை அறிந்திட நமது பகுத்தறிவுக்கு எட்டாததால் வெள்ளைக்காரன் வியாபாரத்திற்கு இளகுவாக கண்டுபிடித்தவைகளை நாம் கொண்டாடிக்கொண்டுள்ளது நமது பகுத்தறிவின் அளவுகோலாக பார்க்கமோ ? என நினைக்கிறேன். 

இந்த கட்டிடங்கள் இன்னும் திடமாகவும் அழியா புகழை கொண்டுள்ளது தமிழ் மொழியில் அறிவு என்பது பகுத்தறிவாளர்கள் மூளை (லை)க்குள் எட்டாதது திட்டமிட்ட செயலே என்பதை நாம் உணர வேண்டியுள்ளது.  

  பண்டுவம்

ஒரு மொழியின் வளத்தை அதன் அறிவியல் தொழில் நுட்பத்திலிருந்தே கணக்கிட முடியும். ''இந்திய மொழிகளில் தமிழுக்கு மட்டுமே தனியான மருத்துவ அறிவு இருக்கிறது. அதனால் தான் தமிழகத்தில் பல அரசுகள் நிலைத்து இருந்துள்ளது. உலக அரங்கில் தமிழ் மொழிக்கான தனி மதிப்பு உள்ளதை உலகப்பயணிகள் பனுவல்களில் அறிய முடிகிறது. இப்படிப்பட்ட நமது அறிவை இழந்தோம் என்பதை விட இழக்க வைத்திட பிரிட்டீஷாருடன் சேர்ந்த அரசியல் சமூக இயக்கங்கள் செயல்பட்டன. இந்திய மொழிகளில் தமிழ் இலக்கியத்தில் கஞ்சங்குல்லைபூ என்று அறிப்பட்டும் கஞ்சா, அரபு தேசத்தில் விளைந்திடும் போஸ்தக்காய் அதன் பிசினான அபின், தமிழகத்தின் பானமான தோப்பிக்கள், பனங்கள் இவைகள் மருந்தாக பயன்பட்டவை பயன்படுபவை. அதே போல் கடலில் விளைந்திடும் கடல்நுரை, கடல்பாசம், பவளம், பவளப்புற்று, முத்துச்சிப்பி, சங்கு இதே போல் வனத்தில் மட்டுமே விளைந்திடும் குங்கிலியம், கடுக்காய், தான்றிக்காய், மாச்சக்காய், மாசிக்காய், கழற்சிக்காய், முயல், பச்சோந்தி, மான்கொம்பு, யானையின் கடைவாய்ப்பல், பச்சக்காடை இறகு, மயில் இறகு போன்ற நூற்றுக்கு மேல்பட்ட மருந்துகளை எளிதாக பயன்படுத்த கூடாத வகையில் பிரிட்டீஷார் போட்ட வனச்சட்டம் இருநூறு ஆண்டுகாலமாக சித்த மருத்துவத்தை ஒதுக்கி வைத்தாலும் மக்கள் மருத்துவமாக இருப்பதால் இன்றும் சாகாமல் உள்ளது. இருப்பினும் மொழி குறித்த அறிதல் அதன் பார்வை குறைபாடுகள் இருப்பதாக ஆளும் அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவாக இருப்பதால் தமிழின் வளம் பின்னுக்கு தள்ளப்பட்டது / படுகிறது. ஆனால் இன்று ஆங்கில மருத்துவத்தில் மயக்க இயல் மருந்தாக நமது ஊரில் மட்டும் விளைந்திடும் கஞ்சம்குல்லையும், ஊமத்தம் இலையின் சாறு, அதன் விதை, அரபு தேசத்தில் விளைந்திடும் அபினிகள் மாற்று வடிவமாக மாற்றப்பட்டு கொடுப்படுவதை பகுத்தறியா நிலையிலே நமது கல்வி முறை உள்ளது. 

 வனச்சட்டத்தின் விளைவாக தமிழின் பெருமையாக விலங்கின வைத்திய நூல்களான யானை குதிரை, மாடு, ஆடு வாகட அறிவினை இழந்திருக்கிறோம். இதைப்பற்றிப்பேசவேண்டிய பகுத்தறிவு விஞ்ஞான கட்சிகளுக்கு இவை குறித்த புலப்பாட்டு குறைவு என்பதால் அல்லது திட்டமிட்டு பலருக்கு பயன்பட்டார்களா? என்பது ஆய்விற்குறியதே.

ஆச்சாரக்கோவை என்ற தமிழ் நூலில் சமைப்பது முதல் பல் துளக்குதல், கைகழுவுதல், குளித்தல், வாய் கொப்பளிக்கும் முறை, பழைய கஞ்சி எத்தனை நாள்களுக்கு வைத்திருக்க வேண்டும் என தெளிவு படுத்தி இருப்பார்கள். அரசுகளின் செயல்பாட்டால் தமிழன் "காட்டுமிரண்டி பல் துளக்காத நாற்றமெடுத்தவன்" என வெள்ளைக்காரன் குறிப்புகளை படித்துக்கொண்டிருக்கிறோம்.

இசை

 இசை அறிவு தமிழில் அற்று விட்டது. மக்கள் தூக்கிபிடிக்கும் இராமாயாணம், காபாரத்தை விட சிலப்பதிகாரத்தில் அனைத்து இராகங்களுக்கும் குறிப்புகள் உள்ளது என இசை நூல் எழுதிய அப்ராம்பண்டிதர் தனது *கருணாமிதர்தசாகரம்* நூலில் குறிப்பிடுகிறார். மொழியை இழந்ததால் தமிழர்களின் இசை மரபு அழிந்தது என உறுதியாக நம்பலாம்.

 கேரளத்தில் உள்ள பழங்குடி மக்களான முதுவா, புலயர், பளியர் குல மக்கள் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள். இவர்கள் படிக்க தாய் மொழி கல்வி இல்லாத்தால் மலையாளத்தில் படிக்கிறார்கள். இந்த தலைமுறையினர் தங்களது மொழியை இழப்பார்கள் என்பதில் திண்ணம். இது போலவே உலகம் முழுவதிலும் இருக்கும்.

இந்தி

பனராஸ் இந்து பல்கலையை உருவாக்கிய *மதன் மோகன் மாளவியா* *ஹிந்தி சாகித்திய சம்மேளனத்தை* நிறுவினார். இதன் நோக்கம் இந்து மதம், அதன் நூல்கள் ஆகியவற்றைப் பிரபலப்படுத்தும் நோக்கம் ஒருபுறம் என்றால், பாரசீகம் -அரேபிய மொழிகளால் அசுத்தமானதாகக் கருதி இந்தியை சமற்கிருதமயத்தின் மூலம் தூய்மைப்படுத்தினர். இதனால் இந்தி - உருது சிக்கல் இந்து - முஸ்லீம் பிரச்சனையாக வடக்கில் கட்டமைக்கப்பட்டது.

 தமிழகத்தில் திராவிடர் கழகத்தின் முயற்சியால் நிலைமை வேறாக இருந்தது. இந்தியை திணித்தவர்களை அந்நியர்கள் என அடையாளப்படுத்தினோம். ஆனால் பேராயக்கட்சியினர் ‘ஒரு மொழியை ஒருவர் வெறுக்கிறேன் என்று சொன்னால் அதைப் பேசுகிறவர்களை வெறுப்பதாகவே பொருள்' என பிரச்சாரம் செய்தனர் ஆனால் அது மக்களிடன் எடுபடவில்லை.

 காந்தியின் மொழிக்கொள்கை

பிரிட்டீஷ் இந்தியாவில் மொழி கொள்கை உருவாக்கப்பட்டது. அப்போது காந்தி அவர்கள் இந்திக்கு பதிலாக இசுலாமியர்களையும் இந்து மக்களையும் இணைக்க *உருதும்* இந்தியும் கலந்த *இந்துஸ்தானி* மொழியை பரிந்துரைத்தார். அதை பேராயக் (காங்கிரஸ்) கட்சியில் இருந்த தலைவர்கள் பலர் ஏற்கவில்லை. இந்த நிலையில் இந்திய துணைக்கண்டம் முழுக்க இந்தி மொழி என ஒற்றை மொழி கொள்கை அமுலாக்கம் செய்யப்பட்டது. இதற்கு தென் இந்தியாவிலும் வங்காலத்திலும் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது. இந்த போராட்டத்தால் பிரிட்டீஷ் அரசுக்கு சிக்கல் இல்லை என்பதால் போராட்டத்தை அரசு வேடிக்கை பார்த்தது. 'சமற்கிருத கலாசாரம் அந்நியமானது என்று போராட்டவாதிகளால் அடையாளப்படுத்தப்பட்டது' இன்று வரை தொடர்கிறது.

 இந்தியா அளவில் மொழி 2004ல் கொள்கை உருவாக்க திட்டமிட்டார்கள். அதில் தமிழிக்கு பள்ளி முதல் கல்லூரி வரை மட்டும் அல்லாமல் கணிணி வரை என திட்டமிட்டார்கள். ஆனால் அதன் முயற்சியை ஆங்கிலம் தடுத்து விட்டது. இந்த நிலையிலே ஆளும் அரசு வழக்கொழிந்த மொழியான, எழுத்து வடிவத்தை நகரி மொழியிடம் கடன் வாங்கிய சமற்கிருத மொழியை வழக்காற்று மொழியாக்கிட முயற்சித்து வருகிறது. (சமற்கிருதம் போலவே ஆங்கிலம் ரோமன் மொழியிடம் எழுத்து வடிவத்தை கடனாக பெற்றது என மொழி அறிஞர்கள் பதிவிட்டுள்ளனர்.) ஏற்கனவே இந்தி மொழியை இந்திய தலைவர்களில் சர்தார் வல்லபாய் படேல் போன்றவர்களும் தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் பக்தவச்சலம் போன்ற தலைவர்களும் முன்மொழிந்தனர். சுதந்திர இந்திய துணைக்கண்டத்தில் இந்தியை மீண்டும் எதிர்த்தனர். இதனால் மும்மொழி கொள்கை கொண்டு வரப்பட்டது. ஆனால் மைய்ய அரசின் வழக்காற்று மொழியாக இந்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தி மொழியை பரப்பிட மதன்மோகன் மாளாவிய நிறுவிய இந்தி வாரியத்திற்கு (தன்னாட்சி குழுமம்) மைய்ய அரசு பல கோடிகளை வழங்கி வருகிறது. இந்த நிதியை பெற்றுள்ள சுய நிதி தனியார் பள்ளிகள் இந்தியை கட்டணம் இல்லாமல் சொல்லித்தரவேண்டும். ஆனால் மாணவர்களிடம் பணம் வசூலித்தே இந்தியை சொல்லித்தருகிறார்கள்.

 திராவிட ஆட்சியில் தமிழ் தேய்ந்தது என்ற குற்றசாட்டை அளந்து பார்க்கத்தேவையில்லை. ஆனால் இந்திய துணைக்கண்டத்தின் அயல் உறவு கொள்கையில் இருக்கும் சிக்கலே ஆங்கில மோகம் உருவாக தேவையான கருவியாக இருந்தது. அதை விட இந்தியை எதிர்ப்பு நிகழ்ந்த காலத்தில் வெள்ளைக்காரனுக்கு தொண்டூழியம் செய்தவர்கள் ஆங்கில மொழி அறிவை வைத்தே தங்களை பொருளாதரத்தை மேம்பாடு செய்து கொண்டனர். ''பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் ஆங்கிலம் கற்பதன் மூலமே முன்னேற முடியும்'' என்று அவர்கள் ஆங்கிலத்தை தேடினார்கள். இதன் தாக்கமே ஆங்கிலம் கற்ற வேண்டிய தேவை கட்டாயம் என்ற நிலை உருவாக்கி விட்டது. இதை தமிழ் தேசியம் பேசும் அறிஞர்கள் ஏற்க மறுப்பது ஏற்புடையதாக இல்லை. விஜயநகர படையெடுப்பால் மேலோங்கிய சமற்கிருத தெலுங்கு மொழியால் தமிழ் பின்னுக்கு தள்ளப்பட்டாலும் அவர்களால் தமிழுக்கு கேடு இல்லை என்பது ஆய்விற்குறியது.

பிரிட்டீஷ் ஆட்சியில் மொழிக்கொள்கை

இவர்களுக்கு மொழி கொள்கை எல்லாம் கிடையாது. காங்கிரஸாரும், நிர்வாக்கதிலிருந்த பார்ப்பன, பிற்படுத்தப்பட்ட, மநு நீதியை ஏற்ற படித்த சூத்திர பஞ்சமர்கள் பரிந்துரைத்த மொழி கொள்கையே கடைபிடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியால் தமிழ் மட்டும் அல்ல இந்திய மொழி அழிந்து அதில் உள்ள விஞ்ஞானம் அழிந்தது. இலக்கியம் பின்னுக்கு போனது. 

தமிழை தூக்கிப்பிடிக்கும் அல்லது கொண்டாடும் நபர்கள் அதன் அறிவியலை பேசமறுப்பதில் ஐயப்பாடுகள் இருப்பதை நாம் இத்தனை ஆண்டுகள் பார்க்க மறுத்ததில் நமது அறிவினை பரிசோதிக்க வேண்டிய காலம் இது தான் என நம்புகிறேன். 

Friday, 12 November 2021

ஜெய் பீம் சொல்லுவது என்ன?

                                     ஜெய் பீம் சொல்லுவது என்ன?
 
                      (இந்துதமிழில் வந்த கட்டுரை Published : 09 Nov 2021 03:08 am)

பழங்குடி இருளர் மக்களின் அவலத்தைச் சொன்ன ‘ஜெய் பீம்’ திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இக்கதைபோல் பல நூறு விளிம்புநிலைக் குழுக்கள் சமூகச் சட்டங்களாலும், அரசின் அலட்சியத்தாலும் அன்றாடம் பந்தாடப்படுவது நிதர்சனம். இம்மக்களின் கோரிக்கைகளைச் சட்டமன்றத்தில் ஒலித்திட முடியாத நிலையிலே இவர்களின் மக்கள்தொகை உள்ளது.

தமிழகத்தில் சொற்ப எண்ணிக்கையில் உள்ள ஆங்கிலோ-இந்தியர்களுக்கு வழங்கப்படும் சட்டமன்ற நியமனப் பிரதிநிதித்துவம்போல் இந்தக் குழுக்களுக்கும் கொடுத்திட சட்ட வழிவகை செய்திட வேண்டிய காலக் கட்டாயத்தை ‘ஜெய் பீம்’ திரைப்படம் வலியுறுத்துவதாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
 
 ‘பல்லாண்டு காலமாக எஸ்.சி./ எஸ்.டி. ஒதுக்கீடு உள்ளது. இதன் மூலம் பிரதிநிதித்துவம் பெறுகிறார்களே’ என்ற பதில் போதுமானதாக இல்லை என்பதற்கு ‘ஜெய் பீம்’ திரைப்படம் மூலம் நடக்கும் விவாதமே சாட்சி.
மேற்குத்தொடர்ச்சி மலையில் வாழும் பளியர், முதுவர், காடர், மலசர், இரவாளர், மலை மலைசர், காணி போன்ற சாதியினர் அரசின் கணக்குப்படி 25 ஆயிரம் பேர்தான். இவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்வதால் பஞ்சாயத்தில் வார்டு உறுப்பினர் பதவிக்குக்கூட போட்டியிட முடியாத நிலை. இந்தச் சாதியினருக்கான ஒதுக்கீடுகூட நிரப்பப்படாமல் விடுபட்டதற்கான பதிவுகள் உள்ளன. கோத்தர், குறும்பர், இருளர், பனியர், வேட்டுவநாயகர், சேலம் மாவட்டத்தில் ஊராளி, சோளகர் போன்ற குழுக்கள் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களாகவும், இரண்டு பஞ்சாயத்துகளில் பஞ்சாயத்துத் தலைவர்களாகவும் மட்டுமே வந்துள்ளனர். அதுவும் இவர்கள் ஒரு இடத்தில் மொத்தமாக வாழ்வதால் கிடைத்தது. தரைப் பகுதியில் குறவர், நாவிதர், வண்ணார், பூப்பண்டாரம், வில்லியர் என்ற இருளர், காட்டுநாயக்கர், ஜோகி, தொம்பர், ஒட்டார், புதிரை வண்ணார் போன்றோர் பஞ்சாயத்து உறுப்பினர் பதவியை எந்தத் தலைமுறையிலும் பெற முடியாத நிலையில் அங்கொருவரும் இங்கொருவருமாக வாழ்கின்றனர்.

சேலம் மாவட்டத்தில் மலையாளி சாதியினர் பெரும்பான்மையாக இருப்பதால் இவர்கள் மட்டுமே சட்டமன்ற உறுப்பினர் பிரதிநிதித்துவத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்கிறார்கள். இதே போல் மீனவக் குழுக்களில் பட்டினவர், பரதவர் சாதியினர் பரவலாக உள்ளதால் இவர்களும் தொடர்ந்து சட்டமன்றத்தில் கால்பதித்துவருகிறார்கள். ஆனால், கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள கடற்கரையில் முக்குவர், கடையர் போன்ற மீனவர்கள் சொற்ப எண்ணிக்கையில் சிதறிக்கிடப்பதால் இவர்களுக்கான பிரதிநிதித்துவம் கனவில்கூடக் காண இயலாத ஒன்று. இதில் விதிவிலக்காக காமராசர் ஆட்சியில் முக்குவர் சமூகத்தைச் சேர்ந்த லூர்தம்மாள் சைமன் மீன்வளத் துறை அமைச்சராக இருந்தார்.

‘‘வாகனப் போக்குவரத்து குறைவாக இருந்த காலத்தில் மீன்பிடித் தொழில் என்பது கருவாட்டுக்கு மட்டுமே. பவளம், சங்கு, பாசி, கடல் நுரை, சிப்பி போன்றவை சித்த மருத்துவத்தில் ரத்த அழுத்தம், சன்னி, விடாத காய்ச்சல், குளிர் காய்ச்சல் போன்றவற்றுக்கு மருந்துகளாகப் பெரிய அளவில் பயன்பட்டன. சேங்கொட்டை மரம் கடல் பரப்பிலும் தீவுகளுக்குள்ளும் வளர்வதால் இதன் கொட்டைகளைச் சேகரித்து, மருத்துவத்துக்கும் சாயம் ஏற்றவும் பயன்படும் வகையில் விற்றுவந்தனர். சங்கு வளையல் செய்தும், பவளம் போன்றவை மாலையாக அழகு சாதனமாகவும் பயன் பட்டவை. இவற்றையெல்லாம் தடைசெய்ததால் கடல் என்பது மீன்பிடித்தலுக்கு மட்டுமே என்று மாறிவிட்டது. 

தமிழ்நாட்டுக் கடல் எல்லை சிக்கலைத் தீர்ப்பதற்கு அரசிடம் தீர்க்கமான செயல்திட்டம் இல்லை. எங்கள் கோரிக்கைகளைப் பேசும் சட்டமன்றப் பிரதிநிதிகள் மீன்கள் தொடர்பாக மட்டுமே பேசுகிறார்களே தவிர, கடல் வளம் சார்ந்த கோரிக்கைகள் குறித்து இதுநாள் வரையில் யாரும் பேசவில்லை’’ என்று மீனவர்கள் கொதிப்புடன் பேசுகிறார்கள்.

‘‘மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள நாவிதர், சலவைத் தொழிலாளர்கள்,எஸ்.சி பட்டியயலில் உள்ள புதிரை வண்ணார், போன்றோரைப் பொதுச் சமூகம் கீழ்நிலையில் வைத்தே பார்க்கிறது. இவர்களின் கோரிக்கை, தனி ஒதுக்கீடு அல்லது உள் ஒதுக்கீடுதான். நகரங்களில் அமைந்துள்ள உயர்தர அழகு நிலையங்களில் நாவிதர்களும், புதிரை வண்ணார்களுமே பெரும்பான்மையாகப் பணியில் உள்ளார்கள். ஆனால், அவற்றின் உரிமையாளர்களில் பெரும்பாலானோர் முன்னேறிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள். இத்தொழில் மீது சுமத்தப்படும் சமூக இழிவைக் கடை உரிமையாளர் சுமப்பதில்லை. இது போலவே சலவைக் கடைகள். இவர்கள் மேல் சுமத்தப்பட்ட இழிநிலையைப் போக்குவதற்காகச் சட்டமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டிய மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து சென்ற பிரதிநிதிகள் குரல் எழுப்பவில்லை’’ என்ற இம்மக்களின் ஆதங்கம் கூர்ந்து கவனிக்க வேண்டியதாக உள்ளது.

“வன நில உரிமை அங்கீகாரச் சட்டம்-2006-ன்படி வனத்தைச் சார்ந்த மக்களுக்கு வழங்க வேண்டிய 10 ஏக்கர் நிலம், மேய்ச்சல் தரிசு, குடியிருப்பு, வனத்தினுள் விளையும் சிறு மகசூல்களை அனுபவிக்கும் உரிமை, மருத்துவ மூலிகை சேகரிக்க போன்றவற்றிக்கு வரையறுத்துக் கொடுக்க வேண்டிய அரசு இன்றுவரை வழங்கவில்லை. ஆனால், இம்மக்களைக் காட்டை விட்டு வெளியேற்றும் முகாந்திரமாக வனத் துறை, காவல்துறையினர் ஏற்படுத்தும் நெருக்கடியால் காட்டுக்குள் வாழும் இம்மக்களின் வாழ்க்கை மிகுந்த போராட்டமாக மாறிவிட்டது. குறிப்பாக சொன்னால் இவர்கள் காட்டுக்குள் வாழும் மிருககாட்சி சாலையில் வசிக்கும் காட்சிபொருள் மனிதர்களாக்கி விட்டதால் இவர்களின் மக்கள்தொகை நாளுக்கு நாள் குறைந்து வருவது இதற்குச் சான்று. இவர்களது வேதனையைக் வெளிப்படுத்தும் வகையில் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்களின் குரல் இல்லை’’ என்பது பழங்குடி மக்களின் அழுகுரல்.

வியாபாரக் குழுக்களாக இருந்த குறவர் சமூகம் குற்றப்பரம்பரை சட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்டதால் அவர்களில் கணிசமானோர் பல மாவட்டங்களில் மலம் அள்ளும் துப்புரவுத் தொழிலாளர்களாக உள்ளனர்.
விளிம்புநிலை மக்களின் உணர்வுகளையும் சமூகத் தேவைகளையும் அந்தந்தப் பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் பேசுவதற்கு நியமன உறுப்பினர்களை நியமிக்கப் புதிய சட்டம் கொண்டுவர வேண்டிய காலத் தேவை இருப்பதை இந்த அரசு புரிந்துகொண்டு செயல்படும் என்று நம்புவோம்.
 
இரா.முத்துநாகு, ‘சுளுந்தீ’ நாவலின் ஆசிரியர்.

Monday, 19 July 2021

டங்கள் குழு = #சாதி அமைப்பு #புரட்சி + #பசப்பல்.

''தேர்தல் பாதை திருடர் பாதை''  
_______________________________________________________________________________
 
பா.ம.கட்சி உருவான தினத்தை மய்யாமாக வைத்து கடும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. இதில் பட்டியல் குழு செயல்பாட்டாளர்கள் குறிப்பாக ஆதிதிராவிடர் என்று அறியப்படும் பறையர் குலத்தினர் கடும் விமர்சனத்தை வைத்து வருகிறார்கள். 
 
''பா.ம.க ஏன் துவக்கப்பட்டது என்பது என்பதை புரிந்தால் இந்த விமர்சனம் இருக்காது'' என முடிவுக்கு வரலாம். 
 
வட இந்தியாவில் பொதுவுடமையை நிலைநாட்ட பொதுவுடமை புரட்சிக்கான தாக்கம் கிளம்பி மெல்ல மெல்ல தமிழகத்தில் தாக்கியது. வாக்கு அரசியலில் இருந்த பொதுவுடமை கட்சியினர் திராவிடர் கழகத்தினர் புரட்சிகர கூட்டத்தை கட்டமைத்தனர். தஞ்சை, விழுப்புரம், தருமபுரி, கோவை பகுதிகளில் இந்தக்குழுவினர் பரவலாக பரவியிருந்தனர். இவர்களின் செயல்பாடுகள் மக்களிடன் வெகுவான பாராட்டைப் பெற்றது. புரட்சிகர அமைப்பில் மக்கள் நேரடியாக சேராவிட்டாலும் மானசீகமாக ஆதரவு பெருகியது. 
 
வட இந்தியாவில் இருந்த இந்த புரட்சியாளர்களின் தாக்கம் தென் இந்தியாவில் ஆந்திரத்தில் நிலை கொண்டது. கேரள மாநிலத்தில் மழம்புலா, காஷர்கோடு மாவட்டங்களில் பரவலாக பரவியது. அமைப்பில் சேர்ந்த பொதுமக்களே நேரடியாக களத்தில் இயங்கினார்கள். அரசை தீர்மானிக்கும் அளவுக்கு துப்பாக்கிப் பயிற்சிகளை மக்கள் பெற்றார்கள். இதன் தாக்கம் கடந்த பதினைந்து ஆண்டுவரை நீடித்ததை அறிந்திருப்பீர்கள்.
 
தமிழகத்தில் புரட்சிக்கான தாக்கம் வட மாவட்டங்களில் பரவத்துவங்கியது. 1974 வாக்கில் புரட்சி பேசும் மக்களை மக்களிடமிருந்து தூரப்படுத்த அரசு எந்திரம் திட்டமிட்டது. மக்கள் நலத்திட்டங்களில் தி.மு.க, இதில் வெற்றியும் கண்டது. அடுத்து ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க புரட்சிகர சிந்தினையாளர்களை ஆயுதத்தால் கையாண்டது. இதனால் தருமபுரி கோவை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பலர் அழித்தொழிக்கப்பட்டனர். மக்கள் செல்வாக்கு அல்லது மானசீக ஆதரவு பெற்றவர்களை மக்களிடமிருந்து பிரிக்க இராஜதந்திர நடவடிக்கையால் அரசு வெற்றியும் பெற்றது. இருப்பினும் மக்கள் ஆதரவு இந்த புரட்சிகர அமைப்பினருகு தொடர்ந்து இருந்தது. இவர்களிடமிருந்து மக்களை தூரப்படுத்துவதை விட உள்ளிழுத்து அழித்தல் திட்டம் துவக்கப்பட்டது. 
 
அதன் தொடர்ச்சியாக காரல் மார்க்ஸ், அம்பேத்கார், பெரியார் படங்களை அச்சிட்ட சுவரொட்டிகளை கொண்ட புதிய அரசியல் கட்சி வட மாவட்டத்தில் உருவானது என்பதை விட உருவாக்கப்பட்டது. அதுதான் பா.ம.க.
பா.ம.க போன்றவர்களுக்கு நோக்கம், இலக்கெல்லாம் கிடையாது. பெயரளவுக்கு புரட்சி சிர்த்திருத்தம் பேசிய தலைவர்களை மக்களிடம் கொண்டு சென்று புரட்சிகர சிந்தனையாளர்களை இவர்கள் மழுங்கடிக்க, மக்களே இந்த புரட்சியாளர்களிடம் எதிர்கேள்வி கேட்க முதலாளித்துவம் சொன்னதை செய்திடும் அமைப்புதான் இவைகள். இந்த அமைப்பினர் கட்சி அல்லது இயக்கம் துவங்கிய காலத்தில் ''தேர்தல் பாதை திருடர் பாதை'' என புரட்சி முழக்கமிட்டார்கள். 
 
புரட்சி பேசியவர்களிடமிருந்த மக்களை இந்த அமைப்புகள் வசப்படுத்தியது. மக்களும் வசப்பட்டார்கள். கொஞ்சநஞ்சமுள்ள புரட்சிகர சிந்தனையை முழுக்க மழுங்கடிக்க குல (சாதி) வாதத்தை முன் வைத்தார்கள். அதுவும் நன்றாக எடுப்பட்டது. அதன் பின்னர் புரட்சி பேசிய இந்த அமைப்பினர் மக்களை தேர்தல் பாதைக்கு மெல்ல இழுத்துப்போனார்கள். ஆக இவர்களின் இலக்கு 1948ல் துவக்கப்பட்ட டக்கள் குழு பரிந்துரையின் மூல கருத்தான முதலாளித்துவ எதிர்ப்பை மக்களிடமிருந்து அப்புரப்படுத்துவதே. இதை இந்த அமைப்பினர் நிறைவேற்றினார்கள், நிறைவேற்றி வருகிறார்கள்.
 
''பா.ம.க இப்படி இருக்க புரட்சிகர சிந்தனையில் பட்டியல் குழுக்கள் அதிகமாக சேருகிறார்கள்'' என்பதை அறிந்த டங்கள் குழு உறுப்பினர்களான இந்தியாவை ஆளும் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பட்டியல் குழுக்களை பா.ம.க போன்று கிளம்பி விட்டார்கள். இதில் முளைத்தது தான் தலித் பேந்தர். அதன் பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஜான் பாண்டியனின் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு. இவரை தொடர்ந்து மருத்துவர். கிருட்டிணசாமி இன்னும் பலர்.
இவர்களின் நோக்கம் டங்கள் குழுவின் பரிந்துரையை நிறைவேற்றும் பொறுப்பு மட்டுமே கொடுத்துள்ளது இந்திய அரசு. இது போன்ற அமைப்புகளை கட்டிக்காக்கும் வேலையைத்தான் இந்தியாவில் அச்சிடும் ஏடுகள் செய்திடும். ஆக இந்து நாளேடு தனது கொள்கை (முதலாளித்துவ) அடிப்படையிலே தனது பணியை நழுவாமல் செய்துள்ளது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.

முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு

  நூலதிகாரம் நூல் முரசுப்பறையர்; வரலாறு, சமூகம், பண்பாடு ஆசிரியர் ; தி. சுப்பிரமணியன் வெளியீடு ; அடையாளம்   ‘முந்தி பிறந்தவன் நா...